இலவச, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25 சதவீத இடஒதுக்கீட்டு இடங்களில் சேர்க்கப் பட்ட குழந்தைகளுக்கு புத்தகக் கட்டணம் வசூல் செய்வதற்கு தடை விதிக்கக்கோரிய மனுவுக்கு பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மதுரை கரும்பாலையைச் சேர்ந்த சி.பேரறிவாளன், உயர் நீதி மன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு விவரம்:
கட்டாய மற்றும் இலவச கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் அரசு உதவி பெறும் பள்ளிகள், அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகளில் சமூக, பொருளாதார பின்தங்கியவர்கள் மற்றும் நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த 6 முதல் 14 வயதுள்ள குழந்தைகளுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வேண்டும். அந்த இடங்களில் சேரும் குழந்தை களுக்கு இலவச கட்டாயக் கல்வி வழங்க வேண்டும். இந்தச் சட்டப் படி பள்ளி அமைந்திருக்கும் பகுதியை சேர்ந்தவர்களின் குழந் தைகளை இடஒதுக்கீட்டு இடங் களில் சேர்க்க வேண்டும்.
இந்த 25 சதவீத இடங்க ளில் குழந்தைகளை சேர்க்க தனியார் பள்ளிகளில் விண்ணப்பங் கள் வழங்க மறுத்து வருகின்றனர். மதுரை கரும்பாலை பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளை 25 சதவீத இடஒதுக் கீட்டு இடங்களில் சேர்க்க தனி யார் பள்ளியில் விண்ணப்பம் கேட்டு கடந்த 4 ஆண்டுகளாக போராடிய தன் விளைவாக, நிகழாண்டில் 18 பேரை மதுரை கே.கே. நகரில் உள்ள இரு தனியார் பள்ளி களில் சேர்த்தோம்.
இடஒதுக்கீட்டு இடங்களில் சேர்க் கப்பட்ட குழந்தைகளின் கல்விக்கு எந்தக்கட்டணமும் வசூலிக்கக் கூடாது, பாகுபாடும் பார்க்கக்கூடாது என சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
இதற்கு மாறாக புத்தகக் கட்டண மாக ரூ.2500 வீதம் கட்ட வேண்டும் என பள்ளி நிர்வாகம் மாணவர்களின் பெற்றோர்களிடம் கூறியது. இந்தக் கட்டணத்துக்கு பயந்து சிலர் படிப்பை நிறுத்திவிட்டனர். கட்ட ணம் செலுத்தாத மாணவ, மாணவி களுக்கு பள்ளிப்புத்தகம் வழங்கப் படவில்லை.
எனவே இந்த மாணவர்க ளுக்கு புத்தகம் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்க உத்தர விட்டு, புத்தக கட்டணம் மற்றும் பிற கட்டணம் வசூலிக்கவும் தடை விதிக்க வேண்டும். மேலும், இலவசக் கட்டாய கல்வி சட்டத் துக்கு விரோதமாக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தர விட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் வி.ராம சுப்பிரமணியன், வி.எம்.வேலுமணி ஆகியோர் கொண்ட அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பு வழக்கறி ஞர் ஆர்.அழகுமணி வாதிடுகையில், 25 சதவீத இட ஒதுக்கீட்டு இடங் களில் சேரும் மாணவர்களிடம் கல்விக் கட்டணம் உள்பட எந்தக் கட்டணமும் வசூலிக்கக்கூடாது. கட்டணம் வசூலிப்பது இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் நோக்கத்தை பாழ்படுத்தும் என்றார்.
இதுதொடர்பாக பதிலளிக்க மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர், மத் திய மனிதவள மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலர், மதுரை மெட்ரிக் பள்ளிகள் ஆய் வாளர், மதுரை மாவட்ட ஆட்சியர், முதன்மைக் கல்வி அதிகாரி மற்றும் பள்ளிகளின் முதல்வருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். அடுத்த விசாரணை ஜூலை 17-க்கு ஒத்தி வைக்கப்பட்டது.
No comments:
Post a Comment