சக மனிதரின் இன்ப,துன்பங்களை பகிர்தலைஅரசுப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகள்தான் கற்கின்றன. அதற்கான கற்றல் அரசுப் பள்ளிகளில்தான் நடக்கின்றன என்று பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறினார்.
திருப்பூர், பாண்டியன் நகர், மனவளக்கலை யோகா தவ மையத்தின் ஏழாம்ஆண்டு தொடக்க விழா ஞாயிறன்று நடைபெற்றது.இவ்விழாவில் பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் பொது செயலாளரும் கல்வியாளருமான பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு கலந்து கொண்டுவிழாப்பேருரை ஆற்றினார். அவர் பேசியதாவது: மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே வாழ்க்கையில் கற்றுக்கொண்டே வந்திருக்கிறான். எழுத்தறிவு என்பதே இல்லாத காலத்திலும் மனிதன் பயிர் செய்யவும், ஆடை நெய்யவும் கற்றிருந்தான். வாழ்க்கையில் உயரியநெறிகளைக் கற்றிருந்தான். உடல் கூறுகளைப் பற்றியெல்லாம் கற்றிருந்தான்.
குறிப்பாக சொல்வதென்றால் வாழ்க்கையை எப்படி சிறப்பாக வாழ வேண்டும் என்பதைக் கற்றிருந்தான்.ஆனால் இன்றைக்கு நாம் இலட்சம் இலட்சமாய் செலவு செய்து குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புகிறோம். தனியார் பள்ளிகள் இன்றைக்குநமது குழந்தைகளுக்கு வாழக் கற்றுக் கொடுக்கவில்லை. மதிப்பெண்வாங்க மட்டுமேஉதவுகின்றன. அரசுப் பள்ளிக் குழந்தைகளாவது சகமனிதனின் இன்பதுன்பங்களை பகிர்ந்துகொள்ளும். புரிந்துகொள்ளும் கற்றலை அரசுப் பள்ளிகளில் மட்டும் நடக்கிறது.
தன்னைப்பணம் கட்டிப்படிக்கவைக்கும் பெற்றோர்களின் துன்பங்களைதனியார் பள்ளிக் குழந்தைகள் புரிந்து கொள்ள வாய்ப்பே இல்லை. காரணம் பணம் கட்டும் பெற்றோர்கள் குழந்தைகளிடம் மதிப்பெண்களை மட்டும் எதிர்பார்க்கிறார்கள். இந்த நிலை மாறவேண்டும். குழந்தைகள் நல்ல மனிதர்களாக வளரபள்ளிகள் கற்றுக்கொடுக்கின்றதா என்பதை பெற்றோர்கள் கவனிக்க வேண்டும் என்றுகுறிப்பிட்டார்.
No comments:
Post a Comment