Tuesday, 22 July 2014

TNTET:சான்றிதழ் சரிபார்ப்பில் பி.லிட்., படித்தவர்களுக்கு சிக்கல் - தினமலர்


ஆசிரியர் கல்வி டிப்ளமோ முடித்தவுடன், பி.லிட்., படிப்பில் சேர்ந்து படித்தவர்களை, சான்றிதழ் சரிபார்ப்பில், 'தகுதியில்லை' என, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்ததால், ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில், இடைநிலை ஆசிரியர்களாக, ஆசிரியர் கல்வி டிப்ளமோவும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு பி.எட்., படிப்பும், தகுதியாக நியமிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 முடித்துவிட்டு, இரு ஆண்டுகள் ஆசிரியர் கல்வி டிப்ளமோ படிக்கும் மாணவ, மாணவியர், மூன்று ஆண்டு படிப்பான பி.லிட்., முடித்தால், பட்டதாரி ஆசிரியர்களாகவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஆசிரியர் கல்வி டிப்ளமோவை, மாநில ஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம் வழங்கி வருகிறது. இதில், சில ஆண்டுகளுக்கு முன், ஏராளமான தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளிகளுக்கு, அனுமதி அளிக்கப்பட்டது. அதனால், ஆசிரியர் கல்வி டிப்ளமோ தேர்வு எழுதுவதில், தாமதம் ஏற்பட்டது.
உதாரணமாக, 2007--08 கல்வியாண்டில், இரண்டாமாண்டு தேர்வெழுதும் மாணவர்களுக்கு, 2008ம் ஆண்டு மே மாதத்துக்குள் தேர்வு நடத்தி, தேர்வு முடிவுகளை தருவது வழக்கம். ஆனால், ஆசிரியர் கல்வி டிப்ளமோ படித்தவர்களுக்கு, பல்வேறு குளறுபடிகளால், கல்வியாண்டுக்கான தேர்வு, செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடத்தப்பட்டது.

No comments:

Post a Comment