Tuesday, 19 August 2014

மத்திய அரசு ஊழியர்கள் வலியுறுத்தல் குறைந்தபட்சம் 26 ஆயிரம் சம்பளம்


ஏழாவது சம்பள கமிஷன்படி ஊதிய உயர்வை விரைவில் அறிவித்து, குறைந்தபட்ச சம்பளமாக 26 ஆயிரம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசு ஊழியர்கள் 7வது சம்பள கமிஷன் தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.மாத்தூரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். மத்திய அரசு ஊழியர்களுக்கான 7வது ஊதியக்குழு முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் அமைக்கப்பட்டு, இதன் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.மாத்தூர் நியமிக்கப்பட்டார். 
இந்நிலையில், 7வது சம்பள கமிஷன் படி, ஊதிய உயர்வை விரைவில் அறிவித்து, குறைந்தபட்ச சம்பளமாக 26 ஆயிரம் வழங்க வேண்டும் என்று அகில இந்திய மத்திய அரசு ஊழியர்கள் சம்மேளனக்குழு ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.மாத்தூரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளது. 

அதில் கூறியிருப்பதாவது: அதிகரித்து வரும் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப, மத்திய அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச சம்பளமாக 26 ஆயிரம் வழங்க வேண்டும். தற்போது 3 முறை பதவி உயர்வு வழங்கப்படுகிறது. இதனை முதல்நிலை அதிகாரிகளுக்கு வழங்கப்படுவதை போல 5 முறையாக மாற்ற வேண்டும். கருணை அடிப்படையிலான பணியை 3 மாதத்துக்குள் வழங்க வேண்டும். குரூப் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு முழு வருமான வரி விலக்கு அளிக்க வேண்டும். 50 சதவீதமாக இருக்கும் ஓய்வூதியத்தை 67 சதவீதமாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய அரசு ஊழியர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

No comments:

Post a Comment