Tuesday, 5 August 2014

கூடுதலாக 508 பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்: மாலை மலர்


அரசு நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 10,726 பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் அவர்களை நியமிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் முழு முயற்சி மேற்கொண்டு வருகிறது.தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் ஜூலை 31–ந்தேதிக்குள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இதுவரை ஆசிரியர் பணிக்கு தேர்வானவர்கள் பட்டியல் வெளியிடப்படவில்லை. தமிழகம் முழுவதும் தேர்வு முடிவுக்காக ஆசிரியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

இறுதி தேர்வுப்பட்டியல் இந்த வாரத்திற்குள் எப்படியும் வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலர் வசுந்தராதேவி தெரிவித்தார். 

அவர் மேலும் கூறியதாவது:–

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 10,726 பட்டதாரி ஆசிரியர் காலியிடங்களுடன் புதிதாக 508 காலி இடங்கள் சேர்க்கப்படுகிறது. காலி இடங்கள் அதிகரித்து உள்ள நிலையில் கல்வி அதிகாரிகள் ஒப்புதலுடன் இந்த பட்டியலில் மேலும் 508 பேரை தேர்வு செய்கிறோம். இந்த பட்டியல் ஓரிரு நாட்களில் வெளியாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.

பின்குறிப்பு 

இதுவரை அவர் கூறினார்,இவர் கூறினார்,வட்டாரம் கூறியது என்று மட்டுமே செய்தி வெளியானது.அநேகமாக "ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலர் வசுந்தராதேவி தெரிவித்தார்" என்று பெயர் குறிப்பிடப் பட்டிருப்பது இதுதான் முதல் முறையாக இருக்கும்.

No comments:

Post a Comment