கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டம் நடத்திய சத்துணவு ஊழியர்களிடம் விளக்கம் கேட்க சமூக நலத்துறை உத்தரவிட்டுள்ளது.
அங்கன்வாடி குழந்தைகளுக்கும், மாணவர்களுக்கும் வழங்கப்படும் உணவை மேலும் தரமானதாக தயாரித்து வழங்கிட அரசு மானியத் தொகையை உயர்த்தி வழங்கிடவும், 32 ஆண்டுகளாக பணியாற்றும் சத்துணவுஅமைப்பாளர்கள், சமையலர், உதவியாளர், அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் அனைவரையும் முழு நேர அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர் சங்கத்தினர் மறியல் போராட்டம் நடத்தினர்.
அவர்கள் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில், மறியலில் ஈடுபட்ட பணியாளர்களுக்கு வழக்கம் போல் ஒரு நாள் ஊதியம் பிடித்தம் செய்யவும், துறைரீதியாக விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்கவும் சமூக நலத்துறையின் அனைத்து மாவட்ட அலுவலகங்களுக்கும் அரசு உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment