Monday, 11 August 2014

எச்ஐவி குழந்தைகளை ஒதுக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை


தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்பு உரிமை ஆணையம், திருச்சி மாவட்ட எச்ஐவி யுடன் வாழ்வோர் உரிமை கூட்டமைப்பு சார்பில் ரக்ஷா பந்தன் விழா கலையரங்கம் மாடியில் உள்ள கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. இதில், தேசிய குழந்தைகள் பாதுகாப்பு உரிமை ஆணைய தலைவர் குசால்சிங் பேசுகையில், ‘‘எச்ஐவி பாதித்தோரை சமூக ரீதியாக ஒதுக்குதல் உள்ளது. எச்ஐவி பாதித்தோர் முன்னேற்றம் அடைய வேண்டும் என்றால் கல்வி ஒன்றே உயர்த்தும். எச்ஐவி குழந்தைகளை ஒரு சில பள்ளிகள் புறக்கணிப்பதாக புகார் உள்ளது. அப்படியிருந்தால் கலெக்டர் அல்லது மாநில ஆணையத்திடம் புகார் அளிக்கலாம். தேசிய ஆணையம் புகார் மீது நடவடிக்கை எடுக்க உறுதுணையாக இருக்கும்‘‘ என்று கூறினார்.

அதைத்தொடர்ந்து, திருச்சி மாவட்ட கலெக்டர் ஜெயஸ்ரீ பேசும்போது, ‘திருச்சி மாவட்டத்தில் எச்.ஐ.வி பாதித்தோர் மற்றும் குழந்தை களுக்கு அரசு சார்பில் பல்வேறு நல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் குழந்தைகள் படிக்க ஊக்கத் தொகை, விதவைகளுக்கு உதவி தொகை உள்ளிட்டவை சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் குறைகள் இருந்தால் இந்த அமைப்பின் மேலாளரை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்‘ என்று சொன்னார்.

No comments:

Post a Comment