Monday, 4 August 2014

குஜராத் பள்ளிகள் பற்றிய சில தகவல்கள்


குஜராத் பள்ளிகள் அமைப்பு முறை:
1 முதல் 8 வகுப்பு வரை தொடக்கப் பள்ளிகள்/ 9-10 வகுப்புகள் இடைநிலை பள்ளிகள்/ 11-12 வகுப்புகள் மேல்நிலைப் பள்ளிகள் என்ற அமைப்பு முறையில் செயல்படுகின்றன.
(1-5 வகுப்புகள் கொண்ட பள்ளிகள் என்ற அமைப்பு முறை அங்கு இல்லை)

பள்ளிகளின் வேலை நேரம் முற்பகல் 11.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை. குஜராத்தில் மாலை 7.30 மணிக்கு தான் இருட்டுகிறது. 

குஜராத்தில் ஆசிரியர்களுக்கு முதல் 5 ஆண்டுகள் தொகுப்பூதியம் மட்டுமே. 

5 ஆண்டுகள் பணி நிறைவு செய்த பின்பு முறையான ஊதிய விகிதம். 

பட்டதாரி ஆசிரியர்களுக்கு 9300-3480+4200 என்ற ஊதிய விகிதம் நடை முறையில் இருந்தாலும், தொகுப்பு ஊதியத்தின் போது 9300 மட்டுமே ஊதியமாக தரப்படுவதாக கூறப் படுகிறது. 

5 ஆண்டுகள் பணிநிறைவு செய்த பின்பே முறையான ஊதிய விகிதம், அகவிலைப்படி மற்றும் இதர படிகள் வழங்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

குஜராத் பள்ளிகளில் 4 மொழிகள் கற்பிக்கப் படுகின்றன. குஜராத்தி, ஹிந்தி, ஆங்கிலம், சமஸ்கிருதம். இத்துடன் கணிதம், அறிவியல், சமூக அறிவியல், கணினி பாடங்களும் கற்பிக்கப் படுகின்றன. ஆக மொத்தம் 8 பாடங்கள் கற்பிக்கப் படுகின்றன.

No comments:

Post a Comment