பள்ளி செல்லும் மாணவர்களுக்கு தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடுமதுரை மாவட்டத்தில் தற்போது தொடங்கியுள்ளது. இந்த மாநாட்டில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், பள்ளிகள் பங்கேற்க வேண்டுமாறு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கேட்டுக்கொண்டுள்ளது.இதுகுறித்த ு மதுரை மாவட்ட அறிவியல் இயக்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கடந்த 1993ம் ஆண்டு முதல் நடந்து வரும் இந்த மாநாட்டில் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்கிறார்கள். மாணவர்கள் மத்தியில் அறிவியல் கண்ணோட்டத்தை வளர்க்கவும், ஆய்வு மனப்பான்மையை மேம்படுத்தவும் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடத்தப்படுகிறது. மத்திய அரசின் தேசிய அறிவியல் தொழில் நுட்பத்துறை ஏற்பாட்டில் நடைபெறும் இந்த மாநாட்டில் இரண்டாண்டிற்கு ஒரு முறை பிரதான கருப்பொருள் முன்வைக்கப்படுகிறது. அந்த கருப்பொருளைச் சார்ந்து மாணவர்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் நிலவும் ஏதேனும் ஒரு பிரச்சனையை தேர்வு செய்து ஆய்வை மேற்கொள்ளலாம்.பிரச்சனைக்கான காரணங்களை அறிவியல் பூர்வமாக அணுகி தீர்வைக் கண்டறியும் வகையில் மாணவர்களின் ஆய்வுப் பணி அமையும். 6,7,8 வகுப்பு மாணவர்கள் கீழ்நிலைப் பிரிவிலும், 9,10,11,12 ஆகிய வகுப்பு மாணவர்கள் மேல்நிலைப் பிரிவிலும் சேர்ந்து ஆய்வினை மேற்கொள்ளலாம். மாணவர்கள் குழுவாக மட்டுமே ஆய்வினை செய்ய வேண்டும். குழுவில் 3முதல் 5 உறுப்பினர்கள் இருக்கலாம். குழுவிற்கு வழிகாட்ட வழிகாட்டி ஆசிரியர் ஒருவர் செயல்படுவார். இந்த ஆண்டு தட்ப வெப்ப நிலைமற்றும் காலநிலையை புரிந்து கொள்ளுதல் என்ற கருப்பொருளின் கீழ்மாநாடு நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் ஆய்வுப் பணியில் பங்கேற்கும் வழி காட்டு ஆசிரியர்களுக்கான பயிற்சிப் பட்டறை அடுத்த வாரத்தில் நடைபெற இருக்கிறது. அதன் பிறகு ஆய்வுசெய்யும் மாணவர்கள் அக்டோபர்இறுதியில் மாவட்ட அளவிலானமாநாட்டில் தங்களது ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். அங்குதேர்ந்தெடுக்கப்படும் ஆய்வறிக்கைகள் நவம்பர் மாதம் நடைபெறும் மாநில அளவிலான மாநாட்டில் பங்கேற்க வேண்டும். அங்கு மாநிலம் முழுவதும் 30 ஆய்வறிக்கைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு டிசம்பர் 27 முதல் 31ம் தேதிவரை பெங்களுரில் நடைபெறும் தேசிய மாநாட்டில் தமிழ்நாட்டின் சார்பில் பங்கேற்கலாம்.ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் தேர்ந்தெடுக்கப்படும் இரண்டு சிறந்த ஆய்வறிக்கைகள் ஜனவரி முதல் வாரத்தில் இந்திய நாட்டின் பிரதமரால் தொடங்கிவைக்கப்படும் அறிவியலாளர்கள் மாநாட்டில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும். தமிழ்நாட்டில் இந்த மாநாட்டு நிகழ்வினை தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஒருங்கிணைத்து நடத்தி வருகிறது. மதுரையில் மதுரை மாவட்ட அறிவியல் இயக்கம் இதற்கான ஏற்பாட்டை செய்துவருகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், பள்ளிகள் மேலும் விவரங்களை அறிந்துகொள்ள 9952531679 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment