Wednesday, 24 September 2014

மெல்லக் கற்போருக்கே ஆசிரியரின் அன்பும், கவனிப்பும், உறுதுணையும் தேவை

           

நன்கு கற்கும் பிள்ளைகளை விட ஒன்றுமே படிக்க தெரியாத பிள்ளைகளே நம்மை அதிகம் நேசிக்கின்றனர் .
நாம் அவர்களுடன் செலவிட்ட பொழுதுகளை எண்ணிப்பார்த்து நம்மை காணும் தோறும் இதயம் மலர புன்னகைக்கின்றனர் ,
நம் வருகைக்காக ,நம் வாய் வார்த்தைக்காக தடதடக்கும் இதயத்துடன் காத்திருக்கின்றனர் .
தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று விட்டதும் வெட்கச் சிரிப்புடன் நம்மை எதிர்க்கொள்கின்றனர். .
அதே பள்ளியில் மேல் வகுப்பை தொடர்ந்து படிக்கும் போது நம்மை காணும் போதெல்லாம் அகம் மகிழ்ந்து சிரிக்கின்றனர் .
அதில் பெருமளவு நன்றியறிதலையும் நம் இதயம் இனம் காணும் .அனுவித்துப் பாருங்கள் நண்பர்களே !
அதை விட பேரானந்தம் வேறென்ன இருந்து விடப்போகிறது இப்பிறவியில் !
தினம் தினம் ஹரிஹரனும் ,ப்ரியாவும் .பத்மாவும் என்னை பார்க்கும் பார்வையில் இனம் கண்டவை !
நன்கு படிக்கும் மாணவர்களை விட மெல்லக் கற்போருக்கே ஆசிரியரின் அன்பும், கவனிப்பும், உறுதுணையும் தேவை. அவர்களை தட்டிக் கொடுத்தால் அவர்கள் வாழ்வு சிறக்கும். ஆசிரியர்களுக்கும் மனநிறைவும், அந்த புண்ணியமும் கிடைக்கும்.

திருமதி .விஜயலட்சுமி ராஜா

No comments:

Post a Comment