Wednesday, 10 September 2014

இடைநிலை பணியிடத்தில் நியமனம்; பட்டதாரி ஆசிரியர்களுக்கு சம்பளம்.

சிவகங்கையில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரி யர் கூட்டணி,காளையார்கோவில் வட்டார பொதுக் குழு கூட்டம், தலைவர் ஆரோக்கியசாமி தலை மையில் நடந்தது.
மாவட்ட தலைவர் அந்தோணிசாமி, பொன்ராஜ் முன்னிலை வகித்தனர்.மாநில நிர்வாகி ஜோசப் சேவியர் பேசியதாவது: ஒன்றியங்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு சேமநல நிதி இருப்பு சீட்டு 8 ஆண்டுக்கு மேலாக வழங்காததால் முன்பணம் வாங்க தாமதம் ஏற்படுகிறது. 1995 முதல் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணியிடத்தில் நியமனம் பெற்று பணியாற்றிய பட்ட தாரி ஆசிரியர்களுக்கு8 ஆண்டுக்கான சம்பள நிர்ணயம் ரத்து செய்யப்பட்டது. இதற்கு எதிரான அரசாணை 155ஐ எதிர்த்து பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.<
ஐகோர்ட் டிவிஷன் பெஞ்ச் அரசாணை 155ஐ, அரசு செய்த மேல் முறையீட்டை ரத்து செய்து ஆசிரியர்களின் நியமன நாளான 1995 முதல் மொத்த பணிக்காலத்தை கணக்கில் எடுத்து சம்பளம் வழங்க உத்தரவிட்டுள்ளது. சம்பந்தப் பட்ட ஆசிரியர்களும் இதுபோன்று நிவாரணம் தேடலாம்,இவ்வாறு பேசினார்.

No comments:

Post a Comment