தமிழகம் முழுவதும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கான பணிநியமனம் வழங்கும் கவுன்சலிங் நேற்று நடைபெற்றது. தமிழகம் முழுவதும் உள்ள அரசு, நகராட்சி உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்களும், அரசு மற்றும் நகராட்சி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, தொடக்கப் பள்ளிகளில் காலியான பட்டதாரி, ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் பணியிடங்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வை கடந்த ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தியது.
இதில், சுமார் 45 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கு சான்று சரிபார்ப்பு நடத்தப்பட்டது. கடந்த மாதம் பட்டியல் வௌ�யிடப்பட்டது. அதன்படி, 14,700 பேர் ஆசிரியர் பணிக்கு தகுதி பெற்றுள்ளனர். தவிர, முதுநிலைப் பட்டதாரிகளின் பட்டியலில் இடம்பெற்றவர்களுக்கும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியர் பணி வழங்கப்பட உள்ளது.
இதற்கான கவுன்சலிங் நேற்றுமுன்தினம் காலை மயிலாப்பூர், டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள சிஎஸ்ஐ செயின்ட் எப்பாஸ் பெண்கள் மேனிலைப் பள்ளியில் தொடங்கியது. கவுன்சலிங் வரும் 5ம் தேதி வரை இணையதளம் மூலம் நடக்கிறது.
1,649 இடைநிலை ஆசிரியர்களும், 167 பட்டதாரி அறிவியல் ஆசிரியர்களும் தொடக்க கல்வி துறையில் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் நியமிக்கப்பட உள்ளனர். இவர்களுக்கான கவுன்சலிங் நேற்று காலை தொடங்கியது. இதில், 795 பேர் தங்களுக்குரிய விருப்ப இடங்களை தெரிவு செய்து பணியிட ஒதுக்கீட்டை பெற்றுக்கொண்டனர்.
நேற்றைய கலந்தாய்வில் ஒதுக்கீடு பெறாதவர்களுக்கு, வேறு மாவட்டத்தில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான இடைநிலை ஆசிரியர் பணியிட ஒதுக்கீடு கலந்தாய்வு இன்று காலை 9 மணிக்கு தொடங்கி நடைபெறும்
No comments:
Post a Comment