சென்னை நீதிமன்றத்தில் நீதியரசர்கள்அக்னிஹோத்ரி எம்.எம் சுந்தரேஸ் ஆகியோரடங்கிய அமர்வுக்குமுன் TET வழக்குகள் மீது வாதம் தொடர்ந்து நடைபெற்றது துவங்கியது.வாதிகளின் சார்பாக மூத்த வழக்கறிஞர்கள் வாதிட்டனர்அரசு சார்பாக அட்வகெட் ஜெனரல் சோமயாஜி. வாதாடினார்
மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள்.5% தளர்வினால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது,வெயிட்டேஜ் முறையினால் பாதிப்பு ஏற்பட்ட நிலை,பல்வேறு மாநிலங்களில் நடைமுறையில் உள்ள ஆசிரியர் தேர்வு முறைகள், வேலைவாய்ப்பக பதிவுக்கு ,பணி அனுபவத்துக்கு வெயிட்டேஜ் கொடுக்கப்படவேண்டும்.ஆசிரியர் தகுதி தேர்வுக்கான வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்து, தகுதி மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டும் பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் போன்ற வெவ்வேறு விதமான வாதங்களை முன்வைத்தனர். அனைவரும் ஒரே விதமான வாதங்களை முன்வக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அரசு தரப்பில் ஆஜரான அட்வகெட் ஜெனரல் சோமயாஜி.5% தளர்வினை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. தற்போதைய வெயிட்டேஜ் முறை நீதிமன்றத்தின் பரிந்துரைப்பட்யே நடைமுறைப்படுதப்பட்டுள்ளது. அதிகம்பேர் தேர்ச்சிபெற்று காலிப்பணியிடங்கள் குறைவாக உள்ளநிலையில் பணிநியமனத்துக்கு வெயிட்டேஜ் முறை கடைபிடிக்கவேண்டியது அவசியம் என தெரிவித்தார்.
ஆரம்பம் முதலே 5% தளர்வு மதிப்பெண்ணுக்கு எதிராக உறுதியான வாதங்கள் எடுத்து வைக்கப்பட்டன. ஆனால் இதை ஏற்றுக்கொள்ளவில்லை ஏனெனில் இது அரசின் கொள்கை முடிவும், மேலும் தேசிய தாழ்த்தப்பட்ட ஆணையத்தின் அறிவுறுத்தலின் படியே கொடுக்கப்பட்டது என அரசு தரப்பு வழக்கறிஞர் பதிலுரைத்தார்...
பின்பு அரசாணை 71 வழக்கு சூடுபிடிக்க ஆரம்பித்தது..
வழக்கறிஞர் திரு சங்கரன் அவர்கள் கூறியதாவது "தமிழகத்தில் ஆறு வகையான போர்டில் மாணவர்கள் படித்து வெளியேறுகின்றனர் பின் அனைவருக்கும் எவ்வாறு ஒரே வகையான அளவுகோலை(weightage) நிர்ணயிப்பது சரியாகும்; என வாதாடினார்.
அதற்கு அரசு தரப்பு வழக்குரைஞர் கூறியதாவது ",இது போட்டி நிறைந்த உலகம் மேலும் திறமையான ஆசிரியர்களை உருவாக்கவே இந்த வெய்ட்டேஜ் முறை கொண்டுவரப்பட்டது என கூறி மழுப்பி விட்டர்..
மதிய நேரத்தில் வழக்கறிஞர் திருமதி தாட்சாயினி ரெட்டி அவர்கள் 5%தளர்வானது, அரசியல் உள்நோக்கத்திற்காக கொடுக்கப்பட்டது என கடுமையாக எதிர்த்தார் ...
இதற்கு நீதியரசரோ மாநில கல்வித்துறையில் நீதிமன்றம் தலையிட முடியாதென உச்சநீதிமன்றம் கூறிய அறிவுரையை சுட்டிக்காட்டினார்....
பின் அரசாணை 71க்கு எதிராக தாட்சியாயினி ரெட்டி அவர்கள் "+2வில் தொழிற்கல்வி பாடப்பிரிவில் 400மதிப்பெண்கள் செய்முறைத்தேர்வு வழங்கப்படுகின்றன அதேபோல் கலைப்பிரிவு(வரலாறு) பாடத்தில் ஒரு மதிப்பென்னும் வழங்கப்படவில்லை...
பின் எவ்வாறு வெய்ட்டேஜ் முறை சரியாகும் .. என கேள்வி எழுப்பினார் இதற்கு அரசு தரப்பில் எந்த பதிலும் இல்லை...
மேலும் இதை நீதியரசர் அக்கினிகோத்திரி அவர்கள் ஏற்றுக்கொண்டார்...
இறுதியில் இரு தரப்பு வாதங்களும் நிறைவு பெற்றது மேலும் இவ்வழக்கு வரும் வெள்ளிக்கிழமை விசாரிக்கப்படும் என்றும் அதிகப்படியான வாதத்தை முன்வைக்க விரும்புவோர் கடித ஆனை மூலமாக தெரிவிக்கலாம் என அறிவித்து மாலை 4:30க்கு முடிந்தது...
இருதரப்பினரும் நேரடி வாதங்களை முடித்த நிலையில்,இனி எழுத்துப்பூர்வ வாதங்களை அளிக்க அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.அதன் பின்னர் தீர்ப்பு வழங்கப்படும்.
தீர்ப்புக்குப் பின்னரே பணிநியமனம் நடைபெறக்கூடும் எனவும் அதுவரை பணிநியமனம் நடைபெற வாய்ப்பில்லை என நீதிமன்ற நோக்கர்கள் கருத்து தெரிவித்தனர்.
No comments:
Post a Comment