புதிதாக துவங்க உள்ள 54 தொடக்க பள்ளிகளுக்கு, தலைமை ஆசிரியர், ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிக்கொள்ள," கல்வித்துறை செயலர் சபீதா உத்தரவிட்டுள்ளார்.
குடியிருப்பு பகுதிகளில், மக்கள் தொகை 300 பேருக்கு, ஒரு தொடக்க பள்ளி அமைக்கவேண்டும் என்ற அடிப்படையில், மாநிலம் முழுவதும் கடந்தாண்டு, கள ஆய்வு செய்தனர். ஆய்வில், 54 குடியிருப்பு பகுதிகளில் தொடக்கப்பள்ளி இல்லாதது கண்டறியப்பட்டது.
இப்பகுதிகளில், புதிய தொடக்க பள்ளிகளை விரைந்து துவக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான, ஆசிரியர்கள் சம்பள விபரங்களை தொடக்க கல்வி இயக்குனர், அரசிடம் வழங்கினார். அதன்படி, 2013-14ல் துவங்க உள்ள, தொடக்க பள்ளிகளுக்கென தலைமை ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் நிர்ணயம், தர ஊதியம் குறித்து, அரசு உத்தரவிட்டுள்ளது.
அதில், புதிதாக துவங்கும் 54 பள்ளிகளுக்கு, இடைநிலை ஆசிரியருக்கு ரூ.5200-20200+2800; தலைமை ஆசிரியருக்கு ரூ.9300-34,800+4500 என்ற தர ஊதியமும் நிர்ணயித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment