Friday, 25 October 2013

பொது தேர்வில் ஈடுபடுத்த ஆசிரியர் எண்ணிக்கை பட்டியல் 28க்குள் சமர்ப்பிக்க உத்தரவு


பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொது தேர்வுகள் அடுத்த ஆண்டு மார்ச்சில் தொடங்க உள்ளன. இரண்டு தேர்வுகளையும் ஒரே நேரத்தில் நடத்த தேர்வுத்துறை ஆலோசித்து வருகிறது. முன்னதாக, காலியாக உள்ள இடங்களில் புதிய ஆசிரியர்கள் நியமிக்கும் வரை சமூக அறிவியல் பாடம் தவிர மற்ற பாடங்களுக்கு தற்காலிக ஆசிரியர்களை நியமித்துக் கொள்ள பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

அடுத்தகட்டமாக பொதுத்தேர்வின்போது பறக்கும்படை, தேர்வு அறை கண்காணிப்பாளர் போன்ற பணிகளில் நியமிக்க உயர் நிலை, மேல்நிலை பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் பற்றிய விவரங்கள் எண்ணிக்கை ஆகியவற்றை கணக்கெடுத்து அனுப்ப வேண்டும். வரும் 28ம் தேதிக்குள் இந்த பட்டியல் தேர்வுத்துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது. இந்த விவரங் களை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் சேகரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment