Friday, 25 October 2013

தனியார் பள்ளி இடப்பிரச்னை விதிகளை தளர்த்த அரசு முடிவு


தனியார் பள்ளிகள் இயங்க குறைந்தபட்ச நிலப்பரப்பு இருக்க வேண்டும் என்று கடந்த 2004ம் ஆண்டு அரசு உத்தரவிட்டது. இதன்படி தமிழகத்தில் இடம் இல்லாத தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் புதுப்பிக்க முடியாத நிலையில் உள்ளனர். 2000 பள்ளிகள் இந்த பிரச்னையில் சிக்கி தவித்து வருகின்றன. தமிழக முதல்வர் தனிப் பிரிவில் தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக்குலேஷன் மேல்நிலை பள்ளிகள் சங்கம் சார்பில் விதிகளை தளர்த்தகோரி மனு கொடுத்தனர்.  

இது குறித்து தனியார் பள்ளிகள் இடப்பிரச்னை தொடர்பாக ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழு சில முடிவுகளை எடுத்துள்ளது. அதன்படி தயாரிக்கப்பட்ட பரிந்துரைகளையும் அரசுக்கு சமர்ப்பிக்க உள்ளது. தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவது அல்லது புதுப் பிப்பது ஆகியவற்றை பொருத்தவரை இடத்தை குறைத்தல், மாணவர் எண்ணிக்கையை குறைத்தல், வகுப்புகளை குறைத்தல் என 3 முடிவுகள் அறிவிக்க உள்ளது.

2004ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட விதிகளின்படி இடம் இல்லாத பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கும்போது, இருக்கின்ற இடத்துக்கு ஏற்ப மாணவர்களின் எண்ணிக்கையை குறைக்கவேண் டும். விதிப்படி இருக்க வேண்டிய இடம் இல்லாதவர்களுக்கு இருக்கின்ற இடத்தில் குறிப்பிட்ட பள்ளியை நடத்திக் கொள்ள அனுமதிக்கவேண்டும்.  இடத்திற்கு ஏற்ப வகுப்பு களை குறைக்கவேண்டும். இதன்படி ஊரகப்பகுதிகளில் 3 ஏக்கர் நிலம் இல்லாதவர்கள் அதிக வகுப்பு களை நடத்த முடியாது. சென்னை நகரில் ஒரு கிரவுண்ட் இடமே வைத்திருப்பவர்கள் பள்ளிகள் மூடப்படும் நிலை ஏற்படும்.

No comments:

Post a Comment