Saturday, 16 November 2013

தனித்தேர்வர்களுக்குஆன்லைனில் விண்ணப்பம் பதிவு - சிறப்பு ஏற்பாடு

பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தனிதேர்வாளர்களுக்கான
ஆன்-லைன் விண்ணப்ப பதிவு 10 நாட்கள் நடக்கிறது.இந்த கல்வியாண்டில் (வரும் மார்ச்-2014ம் ஆண்டு) இடைநிலை மற்றும் மேல்நிலை தனிதேர்வாளர் மாணவர்களுக்கான பொதுதேர்வு நடக்கிறது. இதற்காக ஆன்-லைனில் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. மாணவர்கள் ஆன்-லைனில் தாங்களே பதிவு செய்யும் போது வரும் பிழைகளை தவிர்க்க இந்தாண்டு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி- பாலக்காடு ரோடு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கான ஆன்-லைன் விண்ணப்ப படிவங்கள் பூர்த்தி செய்யப்படுகிறது. வரும் 18ம் தேதி முதல் 29ம் தேதி வரை (அரசு விடுமுறை நாட்கள் தவிர) இந்த பதிவு நடக்கிறது. மாணவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள கல்வி மாவட்ட அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.பொள்ளாச்சி கல்வி மாவட்ட அதிகாரிகள் கூறியதாவது:பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பதிவு நடக்கிறது. இதற்காக பயிற்சி பெற்ற கம்ப்யூட்டர் ஆசிரியர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் மாணவர்களின் தகவல்களை சரியான முறையில் பூர்த்தி செய்து அனுப்புவார். தனிதேர்வாளர்கள் தங்கள் தகவல்களை மட்டும் தெரிவித்தால் போதுமானது.
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தை உள்ளடக்கிய பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, வால்பாறை, ஆனைமலை பகுதிகளை சேர்ந்த மாணவர்கள், அனைவரும் இப்பள்ளியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை மாணவர்கள் பதிவு செய்ய வரலாம்' என்றார்.

No comments:

Post a Comment