வீடியோ கான்பரன்சிங் மூலம் பாடம் நடத்தும் முறையை பள்ளிகளில் நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்ப தலைமை ஆசிரியர்களுக்கு முதற்கட்டமாக சென்னையில் இன்று பயிற்சி தொடங்குகிறது.நெடுந்தூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத இடங்கள், மலைப் பிரதேசங்கள் ஆகியபகுதிகளில் இயங்கும் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியர் பயன் பெறும் வகையில் வீடியோ கான்பரசிங் மூலம் பாடம் நடத்தும் முறையை பள்ளிக் கல்வித்துறை அறிமுகம் செய்ய உள்ளது.முதற்கட்டமாக 8 மாவட்டங்களை தேர்வு செய்து அந்த மாவட்டங்களில் சிரமமான பகுதிகளில் உள்ள பள்ளிகளில் வீடியோ கான்பரன்சிங் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட சில பள்ளிகளில் இது போல வீடியோ கான்பரன்சிங் திரைகள் அமைக்கப்படுகிறது. இதற்காக 7 டிவைஸ்கள், இணைய தள வசதி, மைக்ரோ போன்கள், வெப் கேமராக்கள் வாங்கப்பட்டுள்ளன. அவற்றை எப்படி இயக்குவது என்பது குறித்து நடுநிலை, உயர்நிலை, மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சி தமிழகத்தில் நான்கு இடங்களில் நடக்க உள்ளது. முதற்கட்டமாக சென்னை சூளை மேடு பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் இன்று பயிற்சி தொடங்குகிறது.இந்த பயிற்சியில் 200 தலைமை ஆசிரியர்கள் பங்கேற்கின்றனர். பயிற்சிக்கு பிறகு ஜனவரி மாதத்தில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் பாடங்கள் நடத்தப்படும்.
No comments:
Post a Comment