உயர்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் 897 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் கவுன்சலிங், ஆன்லைன் மூலம் நாளை நடக்கிறது. அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் செயல் பட்டு வரும் வட்டார வள மையங்களில் பணியாற் றும் மேற்பார்வையாளர்களுக்கு ஊதியம் வழங்குவதற்காக இந்த ஆண்டு மத்திய அரசு வழங்க வேண்டிய நிதி வரவில்லை. அதனால் வட்டார வள மையங்களில் பணியாற்றும் 47 மேற்பார்வையாளர்கள் அங்கிருந்து விடுவிக்கப்பட்டு மேனிலைப் பள்ளிகளில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்கப்பட உள்ளனர்.மேலும், முதுநிலை ஆசிரியர் பணி நிலையில் உள்ள 17 ஆசிரியர் பயிற்றுநர்களும் மேனிலைப் பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர்களாக மாறுதல் செய்யப்பட உள்ளனர்.
இதற்கான உத்தரவுகளை வழங்க நாளை ஆன்லைன் மூலம் கவுன்சலிங் நடக்கிறது.இந்நிலையில், 1.1.13 தேதியில் வெளியிடப்பட்ட தகுதி வாய்ந்தோர் முன்னுரிமைப் பட்டியலில் இடம் பெற்றுள்ள பட்டதாரி ஆசிரியர்கள் 897 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்படுகிறது. இவர்களுக்கும் நாளை ஆன்லைன் மூலம் கவுன்சலிங் நடத்தி உத்தரவுகள் வழங்கப்படுகிறது. இந்த ஆசிரியர்கள் மேனிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் நியமிக்கப்படுவார்கள். அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் நாளை காலை 9 மணிக்கு ஆன்லைன் கவுன்சலிங் தொடங்கும்.
No comments:
Post a Comment