Wednesday, 25 December 2013

மேல்நிலைப் பொதுத் தேர்வுகள், மார்ச் 2014 சார்பாக சரிபார்ப்புப் பெயர்ப்பட்டியல் (Check List) மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் குறித்த அறிவுரைகள்



1. தங்கள் பள்ளியின் “Check List” – ல் உங்கள் பள்ளிக்குரிய அனைத்து தேர்வர்களின் பெயர்களும் அச்சழுத்தம் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். 

2. தேர்வர்களின் பெயர்கள் ஏதேனும் விடுபட்டிருப்பின் அவ்விவரத்தினை “Check List” - ன் கடைசி பக்கத்தில் சிவப்புநிற மையினால் தெளிவாக எழுத வேண்டும். 

3. தேர்வர்களின் பெயர், பிறந்த தேதி, இனம், மொழி மற்றும் இதர பாடங்களில் தேர்வெழுதவுள்ள மொழி (Medium of Instructions) ஆகியவற்றை சரிபார்த்து உறுதி செய்து கொள்ள வேண்டும். குறிப்பாக பெயரின் உச்சரிப்பு எழுத்துக்கள் (Spelling) சரிபார்க்கப்பட வேண்டும்.


4. மேலே குறிப்பிட்டுள்ளவைகளில் தவறுகள் ஏதேனும் இருப்பின் அதனை சிவப்பு நிற மையினால் சுழித்து சரியான விபரத்தினைக் குறிப்பிடப்பட வேண்டும். 

5. மிக முக்கியமாக, தேர்வர்களின் Group Code மற்றும் Subject Code ஆகியவை சரியாகவும் வரிசைக்கிரமமாகவும் உள்ளதா? என்பதை ஒன்றுக்கு இரண்டுமுறை சரிபார்த்துத் தவறுகள் ஏதேனும் இருப்பின் சிவப்பு நிற மையினால் அதனை சுழித்து சரியான விபரத்தினை தெளிவாக குறிப்பிட வேண்டும். 

6. தங்கள் பள்ளியின் எண், பெயர் மற்றும் பெயர் ஆகியவை சரியாக அச்சழுத்தம் செய்யப்பட்டுள்ளதா? என்பதைக் கவனத்துடன் சரிபார்த்துக் கொள்ள வேண்டும், அதில் திருத்தம் ஏதேனும் வேண்டின் அதனை சிவப்பு நிற மையினால் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். 

7. அனைத்து பாடத் தேர்வுகளின் வினாத்தாட்கள் Bilingual முறையில் அச்சடித்து வழங்கப்படும். எனினும், Typewriting பாடத் தேர்வெழுதும் தேர்வர்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் தனித்தனியே வினாத்தாட்கள் அச்சடித்து வழங்கப்படும். எனவே, Typewriting பாடத் தேர்வு எழுதும் தேர்வர்களுக்கு தேர்வெழுதும் மொழி தமிழ் அல்லது ஆங்கிலம் (“T” or “E”) என சரியாகக் குறிப்பிட வேண்டும். தவறு இருப்பின் அதனை சிவப்புநிற மையினால் சுழித்து உரிய திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும். 

8. Physics, Chemistry, Biology, Botany, Zoology, Maths, History, Economics,Commerce, Accountancy ஆகிய பாடங்களுக்கு மட்டுமே மலையாளம், கன்னடம், தெலுங்கு, உருது ஆகிய மொழிகளில் வினாத்தாட்கள் வழங்கப்படுகிறது என்பதும் இதர பாடங்களுக்கு கிடையாது என்பதையும் கருத்தில் கொண்டு Check List-ஐ கவனத்துடன் ஆய்வு செய்ய வேண்டும். இதில் தவறு ஏற்படக்கூடாது. 

9. மேலே குறிப்பிட்டுள்ள பணிகளை தலைமையாசிரியர்கள் தங்களது நேரடி கவனத்தில் மேற்கொள்ள வேண்டும் என்றும், இவற்றில் தவறுகள் ஏற்பட்டால் தேர்வு நேரத்தில் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தும் என்பதோடு சம்பந்தப்பட்ட தேர்வர்களின் தேர்வு முடிவுகளை வெளியிடுவதிலும் தாமதம் ஏற்படும் சூடிநநிலை உருவாகும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். 

10. எக்காரணத்தைக் கொண்டும் தலைமையாசிரியர்கள் மேலே குறிப்பிட்டுள்ளவைகளை தங்களது நேரடி கண்காணிப்பில் சரிபார்க்காமல் “தலைமையாசிரியர்களால் சரிபார்க்கப்பட்டது” என்று Check list – ல் சான்றிட்டு எக்காரணங்கொண்டும் கையொப்பமிடக் கூடாது. மேலே சுட்டிக்காட்டப்பட்ட தவறுகளுடன் தலைமை ஆசிரியர் கையொப்பமிட்டிருப்பின் அதன் பின்விளைவுகளையும், முழு பொறுப்பினையும் தலைமை ஆசிரியர்களே சந்திக்க நேரிடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. 

11. ஒரே பெயர்(Name) மற்றும் தலைப்பெழுத்து (initials) கொண்ட மாணவ / மாணவியர்கள் ஒன்றுக்கு மேற்பட்டு இருப்பின், அந்தந்த மாணவ/மாணவியரின் பிறந்த தேதியினை மிகக் கவனத்துடன் சரிபார்க்க வேண்டும். இப்பதிவில் தவறு ஏதும் நிகழாவண்ணம் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டியது அவசியம். 

12.அனைத்துப் பள்ளிகளும் 01.01.2014 ( புதன்கிழமை) முதல் 03.01..2014 ( வெள்ளிக்கிழமை) மாலை 5.00 மணிக்குள் ஆன்லைனில் திருத்தங்களை மேற்கொள்ளவேண்டும். எனவே தலைமை ஆசிரியர்கள் மேலே குறிப்பிட்டுள்ளவைகளைக் கவனத்தில் கொண்டு தேர்வர்களின் நலன் பாதிக்காவண்ணம் தேர்வுப்பணியினை செம்மையாகவும் சிறப்பாகவும் மேற்கொண்டு தேர்வு முடிவுகளை நல்ல முறையில் வெளியிட தங்களது முழு ஒத்துழைப்பினை நல்க வேண்டுமென மீண்டும் வலியுறுத்தப்படுகிறது. என தேர்வுத்துறை கேட்டுக்கொண்டுள்ளது. 

No comments:

Post a Comment