வால்பாறை, மானாம்பள்ளியில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் போதிய மாணவர் சேர்க்கை இல்லாததால், பள்ளியை அரசிடம் ஒப்படைக்க அரசு உதவி பெறும் பள்ளி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
÷தமிழகத்தில் பல இடங்களில் தனியார் பள்ளிகள் தொடங்கி அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் வரை போதிய நிதி வசதி இல்லாததால் மூடப் போவதாக அறிவித்து வருகின்றன.
÷கோவை மாவட்டம், வால்பாறை அருகிலுள்ள மானாம்பள்ளி அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் 2 மாணவர்கள் மட்டுமே படித்து வருகின்றனர். இப்பள்ளியில் 2 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
÷இந்நிலையில் போதிய மாணவர் வருகை இல்லாததால் பள்ளியை அரசிடம் ஒப்படைக்கப் போவதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, கடந்த மாதம், மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்திற்கு பள்ளி நிர்வாகம் சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.
÷அதேபோல வால்பாறையில் உள்ள ஹை பாரஸ்ட் பகுதியில் உள்ள அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் 8 மாணவர்களுக்கு 2 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இப்பள்ளி நிர்வாகம் அடுத்த ஆண்டில் மாணவர் சேர்க்கையை அதிகரித்து பள்ளியைத் தொடர்ந்து நடத்திட உறுதி அளித்துள்ளதாக, தொடக்கக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment