Monday, 27 January 2014

"18 வயது நிரம்பாத பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்யும் பெற்றோர்கள் குற்றவாளிகள்"

"18 வயது நிரம்பாத பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்கும் பெற்றோர்கள் குற்றவாளிகள்" என நீதிபதி சந்திரன் பேசினார்.
தேசிய பெண்குழந்தைகள் தின விழா ஆண்டு தோறும் ஜன., 24 ல் கொண்டாடப்பட்டு வருகிறது. கோவில்பட்டியில் இந்த விழா நேற்று கொண்டாடப்பட்டது. மகளிர் அரசுப்பள்ளியில் நடந்த விழாவில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் எட்டயபுரம் ரோடு. புது ரோடு வழியாக அரசு மகளிர் பள்ளியை அடைந்தது.
விழாவிற்கு குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சண்முகையா தலைமை வகித்தார். பாரதியார் நினைவு அறக்கட்ளை நிறுவனர் முத்து முருகன் முன்னிலை வகித்தார்.பாதுகாப்பு அலுவலர் ஜேம்ஸ் அதிசயராஜா வரவேற்றார். கோவில்பட்டி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சந்திரன் பெண்குழந்தைகளுக்கு பூரண கும்ப மரியாதை செலுத்தி கிரீடம் சூட்டினார்.
பெண் குழந்தைகள் பாதுகாப்பு, அவர்களுக்கு எதிரான செயல்கள் தடுப்பது குறித்து உறுதி மொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. நீதிபதி சந்திரன் பேசுகையில் "வன் கொடுமை தடுப்பு சட்டத்தின் மூலம் பெண்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றனர். 18 வயது நிரம்பாத பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்கும் பெற்றோர்கள் குற்றவாளிகள். 18 வயது நிரம்பிய பின்னர் அவர்களது மனசும், வயதும், பக்குவம் அடைந்த பின்னரே பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்க வேண்டும்" என அவர் பேசினார்.

No comments:

Post a Comment