தமிழகத்தில் உள்ள 19 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கென்று பிரத்யேக இணையதளம் வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டது.
சென்னை மருத்துவக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் இணையதளத்தைத் தொடங்கி வைத்தார்.
தமிழகத்திலுள்ள அனைத்து அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் சுகாதார தகவல் மேலாண்மைத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அரசு மருத்துவமனைகளில் புறநோயாளிகள் மற்றும் உள்நோயாளிகளின் சிகிச்சை குறித்த விவரங்களை டிஜிட்டல் முறையில் மாற்றுவதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் உள்ள 1771 ஆரம்ப சுகாதார நிலையங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தபட்டது. ஆரம்ப சுகாதார நிலையங்களின மாத அறிக்கை இந்த மென்பொருளில் பதிவேற்றப்படுகிறது.
இரண்டாவது கட்டமாக 267 தாலுகா மற்றும் மாவட்ட மருத்துவமனைகளில் இந்தத் திடடம் செயல்படுத்தப்பட்டது. மூன்றாம் கட்டமாக தற்போது 19 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை, வேலூர், தேனி, தஞ்சாவூர் உள்ளிட்ட எட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மேலும் தமிழ்நாட்டில் உள்ள 19 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கான பிரத்யேக இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ரூ. 150 கோடி செலவில் தமிழ்நாடு சுகாதாரத் திட்டத்தின் கீழ் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
No comments:
Post a Comment