தனியார் பள்ளிகளுக்கு 2013-2016 ஆண்டுக்கான புதிய கட்டணத்தை, அரசு இணையதளத்தில் கட்டண கமிட்டி நேற்று வெளியிட்டது. தனியார் பள்ளிகளுக்கு முறையான கட்டணத்தை கடந்த 2010ம் ஆண்டு கட்டண கமிட்டி நிர்ணயம் செய்தது. அந்த கட்டணம் 3 ஆண்டுகள் செல்லுபடியாகும் என்று தெரிவித்து இருந்தது. அடுத்த 3 ஆண்டுக்கான கட்டணம் நிர்ணயிக்கும் பணிகள் கடந்த மாதம் முடிந்தது. இன்னும் 700 பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டியுள்ளது. 2013-2016ம் ஆண்டுக்குரிய புதிய கட்டணம், திருத்திய கட்டண வீதங்கள் குறித்த பட்டியல்கள் நேற்று அரசு இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 3 மற்றும் 4ம் கட்டமாக நடத்திய விசாரணையின் அடிப்படையில் இந்த கட்டணங்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment