Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Friday, 10 January 2014

தனியார் பள்ளி புதிய கட்டணம் வெளியீடு

தனியார் பள்ளிகளுக்கு 2013-2016 ஆண்டுக்கான புதிய கட்டணத்தை, அரசு இணையதளத்தில் கட்டண கமிட்டி நேற்று வெளியிட்டது. தனியார் பள்ளிகளுக்கு முறையான கட்டணத்தை கடந்த 2010ம் ஆண்டு கட்டண கமிட்டி நிர்ணயம் செய்தது. அந்த கட்டணம் 3 ஆண்டுகள் செல்லுபடியாகும் என்று தெரிவித்து இருந்தது. அடுத்த 3 ஆண்டுக்கான கட்டணம் நிர்ணயிக்கும் பணிகள் கடந்த மாதம் முடிந்தது. இன்னும் 700 பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டியுள்ளது. 2013-2016ம் ஆண்டுக்குரிய புதிய கட்டணம், திருத்திய கட்டண வீதங்கள் குறித்த பட்டியல்கள் நேற்று அரசு இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.  3 மற்றும் 4ம் கட்டமாக நடத்திய விசாரணையின் அடிப்படையில் இந்த கட்டணங்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment