Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Saturday, 30 November 2013

பள்ளிக்கூடத்திற்கு மாணவ–மாணவிகளை ஏற்றிச்செல்லும் தனியார் வேனின் மோட்டார் வாகன அனுமதி ரத்து

ஈரோடு அருகே பள்ளிக்கூடத்திற்கு மாணவ–மாணவிகளை ஏற்றி சென்ற போது விபத்தில் சிக்கிய தனியார் வேனின் மோட்டார் வாகன அனுமதியை (பெர்மிட்) மாவட்ட கலெக்டர் சண்முகம் ரத்து செய்து உள்ளார்.
விபத்து
ஈரோடு திண்டலில் தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளிக்கூடம் ஒன்று உள்ளது. இந்த பள்ளிக்கூடத்துக்கு பெருந்துறை பகுதியில் இருந்து மாணவ–மாணவிகளை பெருந்துறை கொங்குநகரைச் சேர்ந்த சேகர் என்பவருக்கு சொந்தமான வேனில் தினமும் அழைத்து வருவது வழக்கம். இதைப்போல் கடந்த அக்டோபர் மாதம் 7–ந்தேதி மாணவ–மாணவிகள் 14 பேர் வேனில் பெருந்துறையில் இருந்து பள்ளிக்கூடத்துக்கு வந்து கொண்டு இருந்தனர். இந்த வேனை ஈரோடு நேதாஜி ரோடு பகுதியைச் சேர்ந்த காதர்மொகைதீன்(48) என்பவர் ஓட்டி வந்தார். இந்த வேன் வேப்பம்பாளையம் பிரிவு என்ற இடத்தில் வந்த போது, வேன் ரோட்டைவிட்டு கீழே சென்று அங்கிருந்த மண்மேடுகளின் மேல் ஏறிச்சென்றது. இதில் வேன் கவிழ்ந்தது.
ஓட்டுனர் உரிமம் ரத்து
இந்த விபத்து குறித்த தகவல் கிடைத்ததும், அங்குள்ள கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, வேனின் நேராக நிறுத்தினார்கள். பின்னே உள்ளே காயத்துடன் இருந்த மாணவ–மாணவிகளை மீட்டனர். இதில் 3 பேர் பலத்த காயம் அடைந்து இருந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து, வேன் டிரைவரான காதர்மொகைதீனை கைது செய்து விசாரணை நடத்தினார்கள். இது தொடர்பாக பெருந்துறை வட்டார போக்குவரத்து அதிகாரி வெங்கடேசன் விசாரணை நடத்தினார். அப்போது டிரைவர் காதர்மொகைதீன் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. எனவே அவரின் ஓட்டுனர் உரிமத்தை வட்டார போக்குவரத்து அதிகாரி வெங்கடேசன் ரத்து செய்தார்.
வாகன அனுமதி ரத்து
இதைத்தொடர்ந்து பள்ளிக்கூடத்திற்கு மாணவ–மாணவிகளை ஏற்றி சென்ற வேனை குடிபோதையில் இருந்த டிரைவரிடம் இயக்க கொடுத்ததால், அந்த வேனின் பெர்மிட்டை(மோட்டார் வாகன அனுமதி) ரத்து செய்ய வட்டார போக்குவரத்து அதிகாரி வெங்கடேசன், மாவட்ட கலெக்டர் சண்முகத்துக்கு பரிந்துரை செய்தார். இந்த பரிந்துரையை ஏற்ற கலெக்டர் சண்முகம் வேனின் மோட்டார் வாகன அனுமதியை ரத்து செய்ய உத்தரவிட்டார். அதன்படி வேனின் மோட்டார் வாகன அனுமதி ரத்து செய்யப்பட்டது.

மாணவ–மாணவிகளின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க ஆசிரியர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி - பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் டாக்டர் முத்து பழனிச்சாமி

மாணவ–மாணவிகளின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க வேலூர் மாவட்டத்தில் உள்ள 2,303 ஆசிரியர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது என்று பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் டாக்டர் முத்து பழனிச்சாமி தெரிவித்தார்.
புத்தாக்கப்பயிற்சிகள்
வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகள், அரசு நிதிஉதவி பெறும் பள்ளிகளில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கும் பொருட்டு வேலூர் மாவட்டத்தில் 9 இடங்களில் ஆசிரியர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. குடியாத்தத்தில் கே.எம்.ஜி கல்லூரியில் நடந்துவரும் ஆசிரியர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி வகுப்புகளை பார்வையிட்ட பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் டாக்டர் முத்துபழனிச்சாமி நிருபர்களிடம் கூறியதாவது:–
வேலூர் மாவட்டத்தில் 10–ம் வகுப்பு மற்றும் 12–ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்களின் தேர்ச்சியை அதிகரிக்கும் பொருட்டு அனைத்து 10 மற்றும் 12–ம் வகுப்பு பாட ஆசிரியர்களுக்கு மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதற்கான புத்தாக்கப் பயிற்சிகள் 9 இடங்களில் நடைபெற்று வருகிறது.
மாநில தேர்ச்சி சராசரியை விட குறைவு
மாநிலத்தில் 10–ம் வகுப்பு தேர்ச்சி சராசரி 89 சதவீதம். வேலூர் மாவட்டம் 83 சதவீதமாக உள்ளது. பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் தேர்ச்சி சராசரி 88 சதவீதம். வேலூர் மாவட்டம் 81 சதவீதமாக உள்ளது. மாநில சராசரி தேர்ச்சியை விட வேலூர் மாவட்டம் தேர்ச்சி குறைவாக உள்ளதால் பாட ஆசிரியர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மொத்தம் 2 ஆயிரத்து 403 ஆசிரியர்கள் புத்தாக்கப் பயிற்சி பெறுகிறார்கள். 54 கருத்தாளர்கள், 18 தலைமைஆசிரியர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் பயிற்சி அளித்து வருகிறார்கள். குறிப்பாக சில பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சி விழுக்காடு வழங்கிய ஆசிரியர்களை கொண்டு பயிற்சி அளிப்பதால் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் பள்ளிகளில் பின்தங்கிய மாணவர்களுக்கு எளிதான பாடங்களை சொல்லி கொடுக்கவும், மாதிரி வினாக்கள் கூறியும் அதிக மதிப்பெண்கள் பெற்று எளிதில் தேர்ச்சி பெற முடியும். அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள் மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற முடியும்.
காலிப்பணியிடங்கள் இல்லை
மேலும் வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் காலி இடங்களுக்கு 779 தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால் வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர் காலி பணியிடங்கள் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுப்பிரமணி, நேர்முக உதவியாளர் ஜோதீஸ்வரன், பள்ளி துணை ஆய்வாளர்கள் மணிவாசகன், தாமோதரன், கே.எம்.ஜி கல்லூரி நிர்வாகிகள் கே.எம்.ஜி.ராஜேந்திரன், கே.எம்.ஜி.சுந்தரவதனம், தலைமைஆசிரியர்கள் மகராஜன், விநாயகம் உள்பட பலர் இருந்தனர்.

2013 அக்டோபர் மாத அகவிலைப்படி உயர்வு விவரம்

அக்டோபர் மாத விலைவாசி குறியீட்டு எண் 29.11.2013 அன்று வெளியிடப்பட்டது. இதன்படி அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு 97.32% ஆக உள்ளது. மேலும் விவரங்களுக்கு

http://www.igecorner.com/da-calculation-sheet/

எரிவாயு மானியம் பெற ...

BSNL இணையதள இணைப்பு - அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட வாடகை கழிவுத்தொகை 20% லிருந்து 10% ஆக குறைப்பு - அரசு ஊழியர்கள் அதிருப்தி

பள்ளிகளில் உடல்நல சங்கம் - ரூ.8 லட்சம் நிதி ஒதுக்கீடு

பள்ளிக்கல்வி செயலர் மற்றும் SSA SPD முயற்சியால் அனைவருக்கும் கல்வி திட்டத்துக்கு 136 கோடி நிதி ஒதுக்கீடு

தமிழ் ஆசிரியர்கள் இனி பட்டதாரி தமிழ் ஆசிரியர்கள் - அரசு உத்தரவு

Photo

பொதுத்தேர்வு மையங்களின் ஜெனரேட்டர் - தேர்வுத்துறை ஆலோசனை

Photo

அண்ணாமலை பல்கலை.யில் 70 அதிகாரிகள் இடமாற்றம்

Photo

பாடங்களின் சமநிலை - அரசு உத்தரவுக்கு முன்பு பெற்ற பட்டங்களுக்கும் பொருந்தும்

Photo

திருவண்ணாமலை மாவட்டத்தில் 20 பள்ளிகள் தேர்ச்சியை அதிகரிக்க தனியார் அமைப்புடன் ஒப்பந்தம்


திருவண்ணாமலை மாவட்டத்தில் 193 அரசு உயர்நிலை பள்ளிகள், 131 அரசு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. கடந்த ஆண்டு 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்ச்சியில் மாநில அளவில் கடைசி இடத்தை இம்மாவட்டம் பெற்றது. எனவே இந்த ஆண்டு தேர்ச்சியை அதிகரிக்க மாவட்ட கல்வித்துறை பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக சென்னையை சேர்ந்த ஜெ.கே. அறக்கட்டளை எனும் தனியார் அமைப்புடன் மாவட்ட கல்வித்துறை ஒருங்கிணைந்து, பின்தங்கியுள்ள 20 அரசு மேல்நிலைப்பள்ளிகளின் தேர்ச்சியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. 

இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. தொடர்ந்து முதன்மைக் கல்வி அலுவலர் பொன்.அருண்பிரசாத் தெரிவித்தாவது: தேர்ந்தெடுக்கப்பட்ட 20 பள்ளிகளில் 36 முதுநிலை ஆசிரியர்கள் மாதம் ரூ.6 ஆயிரம் என்ற மதிப்பூதியத்தில் நியமிக்கப்படுகின்றனர். அதற்காக இக்கல்வி ஆண்டு முடியும்வரை மாதந்தோறும் ரூ.2.16 லட்சத்தை அறக்கட்டளை வழங்கும். 

மேலும், கல்வியில் மிகவும் பின்தங்கிய மாணவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ள 500 பேருக்கு சிற்றுண்டியுடன் கூடிய மாலை நேர வகுப்புகள் நடத்தவும், ஒவ்வொரு பள்ளியிலும் நன்றாக படிக்கும் 3 மாணவர்களை ஊக்கப்படுத்த சிறப்பு பயிற்சி அளிக்க ரூ.2.32 லட்சம் செலவிடவும், ரூ.5.69 லட்சம் மதிப்பில் பயிற்சி கையேடுகளையும் வழங்கவும் அறக்கட்டளை மூலம் ஏற்பாடு செய்திருக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Friday, 29 November 2013

சிலையாகிவிட்டதா தமிழ் வழிக் கல்வி - தி தமிழ் ஹிந்து கட்டுரை

அரசுப் பள்ளி ஆசிரியரும் அவருடைய எழுத்தாள நண்பரும் பேசிக் கொண்டிருந்தார்கள். மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் பெற்றோர்கள் மாணவர்களை ஆவேசத்துடன் சேர்த்துவருவதுபற்றி அந்த ஆசிரியர் கவலையை வெளியிட்டார். ஏழாம் வகுப்பு ஆசிரியரான அவரிடம் எழுத்தாள நண்பர், ‘‘எங்கே நிலநடுக்கோட்டுக்கு இங்கிலீஷ்ல என்ன சொல்லு பாக்கலாம்?’’ என்று கேட்டார்.
ஆசிரியருக்குப் பதில் தெரியவில்லை. மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்ப்பது நியாயம்தான் என்பது போன்ற உணர்வுக்கு அவர் வந்ததாகத் தோன்றியது.
இலவச மிக்ஸி, கிரைண்டர் போல…
இந்தக் கல்வி ஆண்டில், போன ஆண்டைப் போல அல்லாமல் சரியான தருணத்தில் பள்ளிக்கூடங்கள் தொடங்கின. அதோடு மட்டுமல்லாமல், கூடுதலாக அரசுப் பள்ளிகளில் ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கு ஆங்கில வழிப் பாடத்திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது. குறைந்தது 20 மாணவர்களாவது இதில் சேரும்பட்சத்தில் இந்தக் கல்வியைச் சொல்லித்தருவது என்னும் நடப்பில் அநேகமாக ஊராட்சி ஒன்றியத்துக்கு ஒரு பள்ளி என்னும் அளவில் இப்போதைக்குத் தொடங்கப்பட்டிருக்கிறது.
இதற்கு எதிர்ப்புகளும் முணுமுணுப்பு களும் ஒரு பக்கம் இருந்தாலும், ஒரு விதத்தில் இது சரியானதே என்பது போன்ற தோற்றம் ஏற்படுகிறது. மிக்சி, கிரைண்டர் போன்றவையெல்லாம் அனைவருக்கும் எப்படி இலவசமாகக் கிடைக்கிறதோ, அப்படியே ஏழைப்பட்ட குழந்தைகளுக்கும் ஆங்கில வழிக்கல்வி கிடைக்கப்போகிறது. இல்லாவிட்டால், தகப்பன் சம்பாதித்து இந்தக் குழந்தைகளும் சம்பாதித்தால் மட்டுமே அடுத்த தலைமுறைக்கு ஒருவேளை ஆங்கிலவழிக் கல்வி கிட்டக்கூடும். ஒருசாரர் மட்டும் அனுபவிக்கும் பேற்றை அவர்கள் மட்டும் பெறாமல் போவதென்ன?
இலவசப் பேருந்துப் பயணம், சத்துணவு (இதில் இடம்பெறும் உணவு வகைகளின் பட்டியலைப் படித்துப்பார்க்கும் போன தலைமுறையினர், 30 ஆண்டுகளுக்கு முன்னதாகப் பிறந்ததுகுறித்து வருத்தப்படு வார்கள்), இலவசச் சீருடைகளுடன் படிப்பும் இலவசமாகக் கிடைக்குமென்றால், அது மெச்சத்தக்கதே.
தட்சிணை வைத்தால்தான் வித்தை
பொதுவாக, அதிக சம்பளம் பெறுகிற ஒருவரே நல்லாசிரியராக மதிக்கப்பட்டு, அவர்கள் வசம் தம் குழந்தைகளை அவற்றின் பெற்றோர் ஒப்புக்கொடுப்பதே நடந்திருக்க வேண்டும். இருபது, முப்பது ஆயிரங்களில் சம்பளம் பெறுகிற அரசு ஆசிரியர்களையும் அவர்கள் பணிபுரியும் அரசுப் பள்ளிகளையும் நிராகரித்துவிட்டு, ஐந்தாயிரமும் பத்தாயிரமும் சம்பளம் வாங்கும் மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களிடம் ‘காசும் கொடுத்து குழந்தைகளை ஒப்படைப்பது’ நடக்கிறதென்றால், இது புரிந்துகொள்ள இயலாத ஜாலம்தான்.
தட்சிணை வைக்கவில்லையானால், வித்தை பலிக்காது என்னும் எண்ணம் வலுவாக ஊன்றிய மண் நம்முடையது. “என் குழந்தையைப் படிக்கவைக்க நீ யாரு?” என அரசாங்கத்தை மக்கள் கேள்வி கேட்பார்கள்போல. அரசுடன் நாம் ஒப்புரவை இழந்துவிட்டோம்.
‘தொழிலாளி’ என்று சொல்லச் சொல்லுங்கள்!
‘தாய்வழிக் கல்வி அறிவூக்கத்துக்குச் சிறந்தது’ என பன்னிப்பன்னிப் பலரும் பேசியதற்குப் பலன் ஏதும் விளையவில்லை. பல நாடுகள், பல கேடுகளை எடுத்துக்காட்டாகப் பேசியும், அரசின் முன் மூடிய காதில் முகாரி பாடிய கதையே ஆயிற்று.
துறைசார் அறிவில் ஓங்கி நிபுணத்துவம் பெற்று வல்லுநர் ஆக வேண்டியதில்லை. ஏதேனும் வேலைகளில் ஒப்பேற்றும் அளவுக்குச் செல்லுநராக இருந்தாலே போதுமானது என்பது முடிவாக இருந்தால், இந்த அளவே போதுமானது.
இதில் தமிழின் நிலைமை என்ன வென்றால் ‘தொழிலாளி’ என்று சரியாக உச்சரிக்காதவர்களுக்கு வேலை இல்லை என்று சொன்னால், அறுபது சதவீதம் தமிழ் ஆசிரியர்கள் வேலை இழந்துவிடுவார்கள்.
அதேபோல தனியார் பள்ளியில் தம் குழந்தைகளைச் சேர்த்தவர்களுக்கு அரசு வேலை இல்லை என்ற முடிவை அரசு எடுத்திருந்தால், 90 சதவீதம் பேர் வேலை இழந்துவிடுவார்கள். மீதி 10 சதவீதம் திருமணம் ஆகாதவர்கள் என வைத்துக்கொள்ளுங்கள்.
அவைகள்
பாடத்திட்டத்தில் இருக்கிற தமிழ், வெளியின் புழங்குதளத்தில் தனது நுட்பத்தை இழந்தே வருகிறது. ‘டெண்டுல்கர் திடீர் ஓய்வு’ என்பது போன்றே எழுதி சதா சர்வகாலமும் பரபரப்பைத் தொற்றவைக்கும் முயற்சி ஒருபக்கம். முத்தமிழ் அறிஞரான கலைஞர் மக்களவை மற்றும் பாராளுமன்ற, சட்டமன்ற அவைகளில் அரசியல் செய்வதால் அவர்கூட ‘அவை’ என எழுத வேண்டியதை ‘அவைகள்’ என எழுதிவிட்டுப்போகட்டும். அவை என்பதே ‘பன்மை’ என மறந்து பலரும் ‘அவைகள்’ என எழுதிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
ஆங்கிலத்தின் தாக்கம்
பெங்களூரில் ‘தந்த, தாயி ஆசீர்வாத்’ என்று எழுதி பல ஆட்டோக்கள் ஓடுவதைப் பார்க்க முடியும். 3 என்ற எண்ணின் விளிம்புகளை வலப்புறத்துக்குத் திருப்பினாற்போன்ற அந்த ‘ர்’ எழுத்தின் பயன்பாடு சிக்கலானது. அநேகமாக, அனைத்து இந்திய மொழிகளும் ஆங்கிலத் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுதான் இருக்கும் என்று தெரிகிறது. செளகரியங்களால் பெறப்பட்ட மந்தபுத்தியால் கல்வியின் ஆழம் நோக்கிய பயணம் மேலோட்டத்திலேயே நின்றுவிடுகிறது.
ஆங்கில வழியில் சொல்லிக்கொடுக்கச் சிறப்பான அல்லது பிரத்தியேகமான ஆசிரியர்கள் அமையப்பெறாவிட்டால், பழைய கல்வி முறையில் படித்த ஆசிரியர்கள் ‘பரப்பு இழுவிசை, தந்துகிக் கவர்ச்சி, பூரிதக் கரைசல், பதங்கமாதல் போன்ற சொற்றொடர்களை எல்லாம் எப்படி ஆங்கிலத்தில் விளங்கிக்கொண்டு, எப்படிச் சொல்லித் தரப்போகிறார்கள் என்பதை நினைத்தால் பயமாகத்தான் இருக்கிறது. ஏற்கெனவே, எட்டாவது படிப்போர்கூட வாசிப்புத்திறனில், மொழித்திறனில், அறிவுத்திறனில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் தரத்தை எட்டவில்லை என்று ஆய்வுகள் சொல்கின்றனவாம்.
பாட அறிவு, தமிழ் அறிவு, ஆங்கில அறிவு அனைத்திலும் இரண்டுங்கெட்டானாகி மாணவர்கள் ‘சோமாசி’ ஆகிவிடக் கூடாது என்று பயமாக இருக்கிறது.
ஆங்கிலத்தால் கற்பது
ஆங்கிலத்தை மொழியாகக் கற்பது வேறு. ஆங்கில மொழியால் கற்பது வேறு. தமிழால் வரலாறு, அறிவியல், கணிதம் முதலான துறைகளைக் கற்றுத்தர இயலவில்லையென்றால், செலவழிக்கவும் சிலை வைக்கவும்தான் நாம் நமது செம்மொழி அந்தஸ்தைப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறோமா?
ஆசிரியர்கள் என்பவர்கள் கற்பதை நிறுத்தி விட்டவர்கள் என்ற கூற்றைப் பொய்யாக்கி, அவர்களும் மாணவர்களுடன் சேர்ந்து தடவித்தடவி ஆங்கிலத்தையும் தங்களது பாடத்தையும் மேம்படுத்திக்கொள்ள வேண்டியதுதான்.
‘பாட நூல் துணைவன்’ (நோட்ஸ்) விற்கிறவர்கள் வழக்கம்போல உற்சாகமாகி யிருப்பார்கள்.
வள்ளுவர் கோட்டம் முதல் முக்கடலின் அய்யன் சிலையூடான தமிழ் கூறு நல்லுலகில் இடையில் தமிழ்த் தாயையும் வணங்கிவிட்டு, என்னதான் நடக்கிறது என்று பார்த்துக்கொண்டிருக்க வேண்டியதுதான்.
இந்த நிலையில், நமக்கு இரண்டு அச்சங்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. தமிழ்த் தாயை... ‘இருந்த பெரும் தமிழணங்கே!’ என்று பாடவேண்டி வந்துவிடுமோ என்பது ஒன்று. நம் அத்தனை சந்ததியும் மண்ணில் நல்லவண்ணம் அறிவும் ஆங்கிலமும் கற்றுத் துறைபோகி நுண்மான் நுழைபுலம் எய்திவிட்டால், பாவம்! இந்த பிரிட்டிஷ்காரர்கள் நம்முன் ‘மொழிவழிச் சிறுபான்மையினராக ஆகி’அவஸ்தைபடப்போகிறார்கள் என்பதே அடுத்தது.

மத்திய அரசு - தனியார் கூட்டு சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு தமிழகத்தில் போதிய வரவேற்பு இல்லை

மத்திய அரசு-தனியார் கூட்டு முயற்சியில் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் தொடங்குவதற்கு தமிழகத்தில் வரவேற்பு இல்லை. இந்த புதிய கூட்டு முயற்சி திட்டத்துக்கு தமிழக அரசும் எதிர்ப்பு தெரிவிக்கும் வாய்ப்பு உள்ளது என்று தெரிய வந்துள்ளது.
மத்திய அரசு -தனியார் கூட்டு முயற்சியில் நாடு முழுவதும் 2,500 சி.பி.எஸ்.இ. பள்ளிகள் தொடங்கப்பட உள்ளன. ஒவ்வொரு மாநிலத்துக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பள்ளிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டுக்கு 356 பள்ளிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது.
இந்த பள்ளிகளின் உள்கட்ட மைப்புக்காக மத்திய அரசாங்கம் ஆண்டுதோறும் மானிய உதவி வழங்கும். அத்தோடு இந்த பள்ளிகளில் அரசால் ஸ்பான்சர் செய்யப்படும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தையும் பள்ளி நிர்வாகத்துக்கு வழங்கிவிடும். அரசு ஸ்பான்சர் மாணவர்கள் நீங்கலாக மற்ற பொது மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை பள்ளி நிர்வாகமே இன்றைய நிலைக்கேற்ப நிர்ணயித்து அந்த மாணவர்களிடம் வசூலித்துக்கொள்ளலாம்.
தமிழகத்தில் யாரும் விண்ணப்பிக்கவில்லை
இதுபோன்று தனியாருடன் கூட்டுசேர்ந்து மத்திய அரசு சி.பி.எஸ்.இ. பள்ளிகள் தொடங்குவதற்கு தமிழ்நாட்டில் அரசியல் கட்சி தலைவரும், கல்வியாளர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த திட்டத்தினால், தமிழகத்துக்குப் பாதிப்பு இல்லாமல் பார்த்துக்கொள்வோம் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
தமிழகத்தில் முதல்கட்டமாக 41 கூட்டு சி.பி.எஸ்.இ. பள்ளிகள் உள்பட ஒவ்வொரு மாநிலத்திலும் முதல்கட்டமாக தொடங்கப்பட வேண்டிய பள்ளிகளுக்கு விண்ணப்பிக்க மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டு அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதற்கான காலக்கெடு கடந்த அக்டோபர் மாதம் 15-ம் தேதி முடிவடைந்த நிலையில், தமிழகத்தில் இருந்து யாரும் விண்ணப்பிக்கவில்லை.
மத்திய அரசு அறிவிப்பின்படி, அடுத்த ஆண்டு பிப்ரவரியில் விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு ஏப்ரலில் ஒப்பந்தம் கையெழுத்தாக வேண்டும். இதைத் தொடர்ந்து, ஜூன் மாதம் பள்ளிகள் தொடங்கப்படும். இதற்கிடையே, கூட்டு சி.பி.எஸ்.இ. பள்ளிகள் தொடங்குவதற்கு தமிழகத்தில் தனியார் யாரும் முன்வரவில்லை.
மத்திய அரசுடன் கூட்டு முயற்சி என்பதால் நிர்வாகத்தில் பல்வேறு தலையீடுகள் இருக்கும் என்பதால் தனியார் பள்ளி நிர்வாகிகள் யாரும் ஆர்வம் காட்டவில்லை. “இத்தகைய சூழலில், மத்திய அரசு-தனியார் கூட்டு பள்ளிகள் தொடங்குவதற்கு அரசும் எதிர்ப்புதான் தெரிவிக்கும். எனினும் இதுகுறித்து மத்திய அரசுக்கு அதிகாரப்பூர்வமாக தகவல் தெரிவிக்கப்படவில்லை” என்று பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்திரா காந்தி பல்கலைக்கழக B.Ed நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது | IGNOU ENTRANCE EXAM RESUSLT 2013

மாணவ / மாணவியருக்கு சதுரங்கம் பற்றிய ஆர்வத்தை வளர்க்க - குறும்படம் இணையதளத்தின் மூலம் வெளியிடுவது - மாணவர்கள் காணவும் பள்ளிக்கல்வித் துறை உத்தரவு

EMIS பற்றிய அனைத்து பதிவுகள்

EMIS மாணவர்களின் புகைப்படம் எடுத்தல் - பள்ளிக்கல்வி இயக்குனரின் அறிவுரைகள்



EMIS பற்றி சில தகவல்கள் 



EMIS - மாணவர்களின் புகைப்படத்தை இணையதள வசதி இல்லாத கணிணியில் Resize செய்வது எப்படி? - விளக்கப் படங்களின் மீது CLICK செய்து பெரிதாக பார்க்கலாம்



EMIS இல் மாணவர்களின் புகைப்படங்களை 200 க்கு 200 PIXEL மற்றும் 30KB அளவுக்கு போட்டோஷாப் மென்பொருள் மூலம் மாற்றம் செய்வது எப்படி? ஒரு விளக்கம்



EMIS ADHAR INTEGRATION - வீடியோ விளக்கம் 


EMIS OFFLINE SET UP - வீடியோ விளக்கம் 


EMIS ... EMIS ... EMIS...COLLECTIONS

6 முதல் 10 வரை படிக்கும் பள்ளி குழந்தைகளுக்கு தேசிய அளவிலான கட்டுரைப்போட்டி :

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் - ஒன்று முதல் பன்னிரெண்டு வகுப்பு வரை கற்பிக்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்களின் சிறந்த கற்பித்தல் செயல்பாடுகள் – கல்வியியல் மேலாண்மைத் தகவல் முறைமை (EMIS) மூலம் - பகிர்தலும் பரவலாக்கலும் - சார்பு.

தமிழ்நாடு திறந்த நிலைப்பல்கலைக்கழகத்தில் அனைத்து பாடத்திட்டங்களும் மாற்றி அமைக்கப்படும் துணைவேந்தர் சந்திர காந்தா பேட்டி

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் அனைத்து பாடத்திட்டங்களும் மாற்றி அமைக்கப்படும் என்று துணைவேந்தர் சந்திரகாந்தா தெரிவித்தார்.

தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் சந்திரகாந்தா நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
5 லட்சம் பேர் பட்டம் பெற்றுள்ளனர்
கல்லூரிகளுக்கு செல்ல முடியாதவர்களும் தபால் வழியில் படிப்பதற்கு ஏற்ற வகையில் தமிழ்நாடு திறந்த நிலைப்பல்கலைக்கழகம் விளங்குகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் இதுவரை 5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பட்டம் பெற்றுச்சென்று உள்ளனர்.
தற்போது 110 பாடப்பிரிவுகளுடன் பல்கலைக்கழகம் செயல்படுகிறது. இந்த பல்கலைக்கழகம் பி.எட். படிப்பில் தமிழ் வழியில் 500 மாணவர்களையும், ஆங்கில வழியில் 500 மாணவர்களையும், மனநலம் குன்றிய மாணவர்கள், காதுகேட்காதவர்கள், கண்பார்வையற்றவர்கள் ஆகிய மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கக்கூடிய வகையில் 500 பேர்களுக்கு பி.எட்.படிப்பும் கற்பிக்கப்படுகிறது.
இந்த வருடம் இந்த 3 பி.எட். படிப்புகளுக்கும் தேர்வு நடத்தி முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.
பிஎச்.டி., எம்.பில். படிப்புகள்
இதுவரை தபால் வழியில் நடந்த எம்.பில். மற்றும் பிஎச்.டி. படிப்புகள் நேரடியாகவும் இந்த ஆண்டுமுதல் நடத்தப்படுகிறது. பிஎச்.டி. படிப்பில் 106 பேர்களும், எம்.பில். படிப்பில் 98 பேர்களும் சேர்க்கப்படுகிறார்கள். இந்த ஆராய்ச்சி படிப்புகள் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள துறைகளில் நடக்கின்றன.
பாடத்திட்டம் மாற்றம்
கடந்த 2006-ம் ஆண்டு பாடத்திட்டம் மாற்றப்பட்டது. இப்போதைய தேவைக்கு ஏற்ப பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட உள்ளது. அதாவது ஏற்கனவே உள்ள பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்படுகிறது.
இப்போதைய மாணவர்களில் சிலர் இன்றைய காலக்கட்ட அவசர உலகிற்கு ஏற்ப இருக்கிறார்கள். அவர்களின் மனநிலையை மாற்றவேண்டும் என்று எண்ணி 6 உளவியல் பாடங்களிலும் மாற்றம் கொண்டுவரப்படுகிறது. 110 பாடத்திட்டங்களும் மாற்றி அமைக்கப்படும்.
செல்போனில் பாடம் படிக்கலாம்
செல்போனில் பாடம் படிக்கும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் நடந்துவருகிறது. முதல்கட்டமாக எம்.ஏ. தமிழ் பாடத்திட்டம் மட்டும் செல்போனில் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு ஒரு ரகசிய கோடு கொடுப்போம். அந்த கோடு கொண்டு பாடத்திட்டத்தை டவுன்லோடு செய்து வைத்துக்கொண்டு எங்கு போனாலும் செல்போனில் படிக்கலாம்.
இது விரைவில் அறிமுகப்படுத்தப்படும். பின்னர் மற்ற படிப்புகளிலும் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே பாடத்திட்டம் சி.டி. வடிவிலும் வழங்கப்பட்டு வருகிறது.
மொத்தத்தில் எல்லோரும் கல்வி கற்கவேண்டும் என்ற உயரிய நோக்கில் தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் செயல்பட்டுவருகிறது.
இவ்வாறு துணைவேந்தர் சந்திரகாந்தா தெரிவித்தார்.

இருபத்து ஐந்துக்கும் குறைவான குழந்தைகள் உள்ள சத்துணவு மையங் களை மூடும் நடவடிக்கை யைக் கண்டித்து கரூரில் உண்ணாவிரதம்


தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர், கரூர் மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு உண்ணா விரதம் இருந்தனர்.

இருபத்து ஐந்துக்கும் குறைவான குழந்தைகள் உள்ள சத்துணவு மையங் களை மூடும் நடவடிக்கை யைக் கண்டித்தும், பணிக் காலத்தில் இறந்த ஊழியர் களின் வாரிசுகளுக்கு உட னடியாக பணி வழங்க வேண்டும்; ஒட்டுமொத்த ஓய்வூதியம், சிறப்பு சேமநல நிதியை பணி ஓய்வு பெறும் நாளன்றே வழங்க வேண் டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து இந்த உண்ணா விரதம் நடைபெற்றது.சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஏ.வேம்புசாமி தலைமை வகித்தார்.

மாவட் டக்குழு உறுப்பினர் பழனி வரவேற்றுப் பேசினார். அரசு ஊழியர் சங்க மாவட் டச் செயலாளர் எம்.சுப்பிர மணியன் போராட்டத்தைத் துவக்கி வைத்துப் பேசினார். சிஐடியு மாவட்டத் தலைவர் சி.முருகேசன் சிறப்புரை யாற்றினார். அரசு ஊழியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் ஏ.பெரியசாமி கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.

சத்துணவு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் பி.பாலகிருஷ்ணன், அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் மு.மகாவிஷ்ணன், பொருளாளர் பொன்.ஜெய ராம் உள்ளிட்டோர் கோரிக் கைகளை ஆதரித்துப் பேசி னர். சங்க மாவட்ட நிர்வாகி கள் பிச்சைகாரன், கௌதமி, சிவகாமி, சுசிலா, இராஜன் உள்ளிட்ட 200க்கும் மேற் பட்டோர் கலந்து கொண்ட னர். மாவட்டப் பொருளா ளர் மாலதி நன்றி கூறினார்.

10, 12ம் வகுப்பு தேர்ச்சி விழுக்காடு அதிகரிக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி


10, 12ம் வகுப்பு தேர்வுகளில் அரசுப் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விழுக்காடு அதிகரிப்பதற்காக ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் 35 ஆயிரம் தொடக்கப்பள்ளிகளும், 10 ஆயிரம் நடுநிலைப்பள்ளிகளும், 5ஆயிரத்து 500 உயர்நிலைப்பள்ளிகளும் 5 ஆயிரத்து 800 மேல்நிலைப்பள்ளிகளும் உள்ளன. மொத்தத்தில் 56 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் 7 லட்சம் 12ம் வகுப்புமாணவர்களும், 8 லட்சம் 10ம் வகுப்புமாணவர்களும் பயில்கின்றனர்.இவர்களில் குறைந்த மதிப்பெண் பெறும் மாணவர்களை அரசு இறுதித்தேர்வில் தேர்ச்சி அடையச்செய்வதற்காகவும் தேர்ச்சி பெறுவது கடினம் என்ற நிலையில் உள்ள மாணவர்களையும் கண்டறிந்துஅவர்களுக்கு தனியாக சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

மேலும் குறைந்த மதிப்பெண் பெறும் மாணவர்களை தேர்ச்சி பெற வைப்பதற்காக அந்த மாணவர்கள் எளிதில் படிக்க வினா-விடை பயிற்சி ஏடு ஒன்று அந்தந்த மாவட்டத்தில் தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது.இது குறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் கூறியதாவது:10, 12ம் வகுப்பு தேர்ச்சி விழுக்காடு குறைந்த பள்ளிகளை கண்டறிந்து அந்த பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மீது தனி அக்கறை செலுத்தி தேர்ச்சி பெற வைக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்த பயிற்சி அந்தந்த மாவட்டங்களில் அளிக்கப்பட்டு வருகிறது.வருகிற அரையாண்டு தேர்வில் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்ணை கொண்டு எந்த பாடத்தில் குறைவாக எடுத்திருக்கின்றனரோ அந்த பாட ஆசிரியர் குறிப்பிட்ட அந்த மாணவர்களுக்கு தனியாக பாடம் நடத்த வேண்டும்.

அந்த மாணவர் தேர்வில் செய்யும் பிழையை திருத்த வேண்டும். எப்படி எளிதில் தேர்ச்சி பெறலாம் என்பதற்கு எதை படிக்க வேண்டும் என்று மாணவர்களுக்கு ஆசிரியர்கள் சொல்லிக்கொடுக்கிறார்கள். இதனால் தேர்ச்சி விழுக்காடு கண்டிப்பாக உயரும்.இவ்வாறு ராமேஸ்வர முருகன் தெரிவித்தார்.

9 மணி நேர மின் தடை : தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் 80 ஆயிரம் மாணவர்கள் தவிப்பு


பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுத 1 லட்சத்து 26 ஆயிரம் தனித் தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளனர். தொடர் மின் தடை காரணமாக அவர்களில் 80 ஆயிரம் பேர் இன்னும் தேர்வுக் கட்டணம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இன்று மாலைக்குள் கட்டணம் செலுத்தாத விண்ணப்பங்களை தேர்வுத் துறை நிராகரிக்க முடிவு செய்துள்ளது. பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் 2014 மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடக்க உள்ளது. பள்ளிகள் மூலம் தேர்வு எழுத உள்ள மாணவர்கள் தவிர, ஏற்கனவே தேர்வு எழுதி தோல்வி அடைந்தவர்கள், வீட்டில் இருந்தே நேரடியாக தேர்வு எழுத விரும்புவோரை தனி தேர்வர்களாக தேர்வு துறை வைத்துள்ளது. 

இவர்கள் பொதுத் தேர்வு நேரங்களில் விண்ணப்பித்து தேர்வு எழுத விண்ணப்பிக் கும் போது பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இதற்காக தேர்வுத்
துறை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. ஆனாலும், தனியார் கம்ப்யூட்டர் மையங்கள் மூலம் தேர்வு விண்ணப்பங்களை ஆன்லைனில் அனுப்பும்போது பல்வேறு தவறுகளை அந்த கம்ப்யூட்டர் மையங்கள் செய்து விடுகின்றன. 

இதனால் பல மாணவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன. சில மாணவர்கள் தேர்வு எழுதினா லும் அவர்கள் கொடுத்த தவறான தகவல்களின் அடிப்படையில் அச்சிடப் படும் மதிப்பெண் பட்டியலில் ஏற்படும் குறைகளை சரி செய்ய தேர்வுத் துறைக்கு படையெடுக்கின்றனர். இதை கருத்தில் கொண்டு அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரி (டிஇஓ) அலுவலகங்களில் இருந்தே தேர்வு விண்ணப்பங்களை அனுப்ப 88 மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 

இந்த மையங்களிலேயே விண்ணப்பிக்கலாம், போட்டோ எடுத்துக் கொள்ளலாம், கட்டணமும் செலுத்திவிடலாம். மாணவர்கள் அங்கும் இங்கும் அலையத் தேவையில்லை. இந்த பணிகளை செய்ய தேர்வுத்துறையை சேர்ந்த அலுவலர்கள் ஒவ்வொரு மையத்திலும் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வுத் துறை பணியாளர்களே விண்ணப்பங்களை பூர்த்தி செய்வ தால் பிழைகள் ஏற்பட வாய்ப்பில்லை.

இதையடுத்து பிளஸ் 2 தேர்வு எழுத தமிழகம் முழுவதிலும், நேற்று வரை 56 ஆயிரத்து 781 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் ஏற்கெனவே தேர்வு எழுதி தோல்வி அடைந்தவர்கள் 38 ஆயிரத்து 932 பேர். பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்தபடியே படித்து நேரடியாக தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளவர்கள் 15 ஆயிரத்து 978 பேர். மொத்த மாணவர்களில் 17 ஆயிரத்து 644 பேர் மட்டுமே இதுவரை கட்டணம் செலுத்தியுள்ளனர். 

சென்னையில் 5210 பேர் விண்ணப்பித்துள்ளனர். 2160 பேர் மட்டுமே கட்டணம் செலுத்தியுள்ளனர். பத்தாம் வகுப்பு தேர்வு எழுத மொத்தம் 69 ஆயிரத்து 941 பேர் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் 28 ஆயிரத்து 344 பேர் மட்டுமே கட்டணம் செலுத்தியுள்ளனர். சென்னையில் 4049 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் 1450 பேர் மட்டுமே கட்டணம் செலுத்தியுள்ளனர். 

இந்நிலையில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும், கட்டணம் செலுத்தவும் இன்று கடைசி நாள். ஆனால், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வுகளுக்கு தனித் தேர்வர்களாக விண்ணப்பித்துள்ள 1 லட்சத்து 26 ஆயிரத்து 722 பேரில் நேற்று வரை 80 ஆயிரத்து 734 பேர் தேர்வுக் கட்டணம் செலுத்தவில்லை. இதனால் அவர்கள் விண்ணப்பங்களை தேர்வுத் துறை நிராகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அப்படி நிராகரிக்கப்பட்டால் ஒரு ஆண்டு வரை மாணவர்கள் காத்திருக்க வேண்டியதுதான். 

இன்று இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பல மாணவர் களால் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும், கட்ட ணம் செலுத்த முடியாமல் போனதற்கு மின்தடைதான் காரணமாக கூறப்படுகிறது. 9 மணி நேரம் மின் தடை ஏற்பட்டுள்ளதால் கம்ப்யூட்டர்களை இயக்க முடியவில்லை என்று டிஇஓ அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

டிஇஓ அலுவலகங்களில் நேற்று வரை பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்களில், தேர்வுத் துறைக்கு ஆன்லைன் மூலமே அனுப்ப மின்சாரம் இருந்தால் தான் முடியும். நேற்று மொத்த விண்ணப்பங்களில் 57 ஆயிரத்து 347 விண்ணப்பங்கள் மட்டுமே தேர்வுத்துறைக்கு வந்து சேர்ந்துள்ளன. தவிரவும், ஆன்லைனில் விண்ணப்பிக்க உருவாக்கப்பட்ட 88 மையங்கள் போதாது. 

தமிழகத்தில் உள்ள 400 ஊராட்சி ஒன்றியங்களிலும் தலா ஒரு மையம் ஏற்படுத்த வேண்டும் என்றும் மாணவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. எனவே மின்தடையை கருத்தில் கொண்டு விண்ணப்பிக்கும் தேதியை நீட்டிக்க வேண்டும் என்றும் மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர். தேர்வுத் துறை நடவடிக்கை எடுக்குமா?

8 வயதுக்கு மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கு பயோ-மெட்ரிக் பதிவு கட்டாயம் - கல்வித்துறை தகவல் சேகரிப்பு

கற்றல் குறைபாடு மாணவர்களுக்கு தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்

தமிழ் வழியில் முதுகலை படித்திருந்தாலும் ஆசிரியர் பணி - ஐகோர்ட் உத்தரவு

சென்னையில் பள்ளி செல்லா குழந்தைகள் அதிகரிப்பு?

Thursday, 28 November 2013

EMIS - ஆதார் அட்டை இருக்கும் மாணவர்களுக்கு மட்டும் ஆதார் எண்ணை உள்ளீடு செய்தால் போதுமானது.

ஆதார் அட்டை இருப்பவர்களுக்கு மட்டும் ஆதார் எண்ணை உள்ளீடு செய்தால் போதுமானது.


ஆதார் எண் இல்லாதவர்களுக்கு ஆதார் அட்டைக்கு உடனே புகைப்படம் எடுக்க கட்டாயப் படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப் பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

ஆதார் அட்டைக்கு 8 வயது முடிந்த குழந்தைகளுக்கு மட்டுமே புகைப்படம் எடுக்கப் படுகிறது. அதாவது 2005 ஆம் ஆண்டு அல்லது அதற்கு முன்பு பிறந்தவர்களுக்கு மட்டுமே புகைப்படம் எடுப்பதாகவும் சொல்லப்படுகிறது. 

EMIS பணிக்காக மாணவர்களின் புகைப்படத்தை RESIZE செய்யும் போது 25KB முதல் 30KB அளவிலும் 200 PIXEL அளவிலும் புகைப்படம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

மாணவரின் ஆதார் எண்ணை உள்ளீடு செய்து 30.11.2013 க்குள் CD இல் பதிவு செய்து EMIS ஒருங்கிணைப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும். 

மாணவரின் புகைப்பட CD ஒப்படைப்பது பற்றி ஓரிரு நாட்களில் தெரிவிக்கப் படும்.

தொடக்கக் கல்வி - ஆசிரியர் சேமநலநிதி உதவித் தொடக்கக் கல்வி அலுவலகக் கட்டுப்பாட்டில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் சேமநலநிதி இருப்பு தணிக்கை செய்தது சார்பு

உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு அடுத்த வாரத்தில் நடைபெறும் என எதிர்ப்பார்ப்பு

பள்ளிக்கல்வித்துறையில் காலியாக உள்ள உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவிகளுக்குகான பதவி உயர்வு கலந்தாய்வு அடுத்த வாரத்தில் நடைபெற உள்ளதென தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் முறையான அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகுமென தகவல்கள் தெரிவிக்கின்றன.

499 ஆசிரியர்கள் நீக்கம் தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என இயக்குநர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பதில் மனு தாக்கல்

பள்ளிக்கல்வித் துறையின் கீழ் உள்ள அரசு உதவிபெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 499 ஆசிரியர்களை நீக்கம் செய்து அண்மையில் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது. இதையடுத்து பள்ளிக்கல்வித்துறையின் உத்தரவை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் பள்ளிக்கல்வித்துறையின் உத்தரவிற்கு தடை விதித்து உத்தரவிட்டது. மேலும் பள்ளிக்கல்வி இயக்குநருக்கு இதுகுறித்த பதிலளிக்க உத்தரவிட்டது. இதையடுத்து இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பள்ளிக்கல்வி இயக்குநர் தாக்கல் செய்த பதில் மனுவில் 499 ஆசிரியர்கள் நீக்கம் தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளவில்லை எனவும், இதுகுறித்த அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குரூப் 2 தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகள் செய்ய வேண்டியுள்ளதால் தருமபுரி மாவட்ட பள்ளிகளுக்கு நவம்பர் 30 அன்று விடுமுறை


தமிழ்நாடு அரசுப் பணியாளர் குரூப் 2 தேர்வு வருகிற ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளதையொட்டி தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் சனிக்கிழமை விடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

குரூப் 2 தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகள் செய்ய வேண்டியுள்ளதால் தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும், சுயநிதி மற்றும் மெட்ரிக் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு வருகிற சனிக்கிழமை (நவ.30) விடுமுறை அளிக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

எனவே, அன்றைய தினம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என தருமபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

www.tntam.in கல்வி இணையதள ஆசிரியர் திரு.கார்த்திக் அவர்களின் திருமண அழைப்பிதழ் - மணமக்கள் அனைத்து வளங்களும், நலன்களும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்


நண்பர் கார்த்திக் அவர்களுக்கு

நேரில் வாழ்த்து சொல்ல - தரகுமண்டி கல்யாண மஹால், திண்டுக்கல் 

தொலைபேசி/குறுஞ்செய்தி மூலம் வாழ்த்து சொல்ல - 98654 45689

மின்னஞ்சல் மூலம் வாழ்த்து சொல்ல - tamnewsdgl@gmail.com 

Face Book மூலம் வாழ்த்து சொல்ல -
karthick.chinnan@facebook.com
tam.dgl@facebook.com 

EMIS பற்றிய அனைத்து பதிவுகள் - ஆசிரியர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மீண்டும் வெளியிடுகிறோம் - கண்டு பயன் பெற வேண்டுகிறோம்

EMIS மாணவர்களின் புகைப்படம் எடுத்தல் - பள்ளிக்கல்வி இயக்குனரின் அறிவுரைகள்



EMIS பற்றி சில தகவல்கள் 



EMIS - மாணவர்களின் புகைப்படத்தை இணையதள வசதி இல்லாத கணிணியில் Resize செய்வது எப்படி? - விளக்கப் படங்களின் மீது CLICK செய்து பெரிதாக பார்க்கலாம்



EMIS இல் மாணவர்களின் புகைப்படங்களை 200 க்கு 200 PIXEL மற்றும் 30KB அளவுக்கு போட்டோஷாப் மென்பொருள் மூலம் மாற்றம் செய்வது எப்படி? ஒரு விளக்கம்



EMIS ADHAR INTEGRATION - வீடியோ விளக்கம் 


EMIS OFFLINE SET UP - வீடியோ விளக்கம் 


EMIS ... EMIS ... EMIS...COLLECTIONS

அரசு பள்ளிகளில் 10-வது, பிளஸ்-2 தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி

எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வுகளில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிப்பதற்காக அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
பள்ளிக்கூடங்கள்
தமிழ்நாட்டில் 35 ஆயிரம் தொடக்கப்பள்ளிகளும், 10 ஆயிரம் நடுநிலைப்பள்ளிகளும், 5ஆயிரத்து 500 உயர்நிலைப்பள்ளிகளும் 5 ஆயிரத்து 800 மேல்நிலைப்பள்ளிகளும் உள்ளன. மொத்தத்தில் 56 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் இருக்கின்றன. இந்த பள்ளிகளில் 7 லட்சம் பிளஸ்-2 மாணவர்களும், 8 லட்சம் எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களும் படிக்கிறார்கள்.
இவர்களில் குறைந்த மதிப்பெண் பெறும் மாணவ-மாணவிகளை அரசு இறுதித்தேர்வில் தேர்ச்சி அடையச்செய்வதற்கான தேர்ச்சி பெறுவது கடினம் என்ற நிலையில் உள்ள மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தனியாக சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. மேலும் குறைந்த மதிப்பெண் பெறும் மாணவர்களை தேர்ச்சி பெற வைப்பதற்காக அந்த மாணவர்கள் எளிதில் படிக்க வினா-விடை பயிற்சி ஏடு ஒன்று அந்தந்த மாவட்டத்தில் தயாரிக்கப்பட்டு பள்ளிகளுக்கு வழங்கப்படுகிறது. இது குறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் கூறியதாவது:-
ஆசிரியர்களுக்கு பயிற்சி
எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்ச்சி சதவீதம் குறைந்த பள்ளிகளை கண்டறிந்து அந்த பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மீது தனி அக்கறை செலுத்தி தேர்ச்சி பெற வைக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சி அந்தந்த மாவட்டங்களில் அளிக்கப்பட்டு வருகிறது. வருகிற அரையாண்டு தேர்வில் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்ணை கொண்டு எந்த பாடத்தில் குறைவாக எடுத்திருக்கிறாரோ அந்த பாட ஆசிரியர் குறிப்பிட்ட அந்த மாணவர்களுக்கு தனியாக பாடம் நடத்த வேண்டும்.
அந்த மாணவர் தேர்வில் என்ன பிழை செய்து இருக்கிறாரோ அதை திருத்த வேண்டும்.மேலும் எதைப் படித்தால் எளிதில் தேர்ச்சி பெறலாம் என்பதை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் எளிதில் சொல்லிக்கொடுக்கிறார்கள். இதனால் தேர்ச்சி சதவீதம் கண்டிப்பாக உயரும். இவ்வாறு ராமேஸ்வர முருகன் தெரிவித்தார்.

மாணவிகளுக்கு ஆபாசப் படம்: பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்

புதுச்சேரியை அடுத்த அரும்பார்த்தபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் மாணவிகளுக்கு ஆபாசப் படம் காண்பித்ததாகக் புகார் தெரிவித்து, மாணவிகளின் பெற்றோர் புதன்கிழமை பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அரும்பார்த்தபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 500 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை ஒரு மாணவி தனது வீட்டுக்கு அழுதவாறே சென்றுள்ளார்.
அவரது பெற்றோர் விசாரித்த போது, பள்ளி வகுப்பறையில் 3 ஆசிரியர்கள் சேர்ந்து ஆபாசப் படங்களை கணினியில் காண்பித்து பார்க்குமாறு கூறி கட்டாயப்படுத்தியதாகக் கூறியுள்ளார்.
மேலும் சில மாணவிகளுக்கும் இதேபோல் ஆபாசப் படங்களை காண்பித்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த மாணவிகளின் பெற்றோர் 100-க்கு மேற்பட்டோர், அரும்பார்த்தபுரம் பள்ளிக்குச் சென்று முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுவை மாணவர் கூட்டமைப்பின் தலைவர் சுவாமிநாதன், பி.டி.ஏ. நிர்வாகிகளும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஆபாசப் படம் காண்பித்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
தகவலறிந்த கல்வித்துறை இயக்குநர் வல்லவன், முதன்மைக்கல்வி அலுவலர் கலைச்செல்வன் ஆகியோர் பள்ளிக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் தலைமை ஆசிரியர், ஆசிரியர்களிடம் அவர்கள் விசாரணை நடத்தினர்.
இப்புகார் தொடர்பாக 3 ஆசிரியர்களை பணியிட மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் மீது துறை ரீதியாகவும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் உறுதி கூறினர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்துச் சென்றனர்.

கற்பித்தலில் புதிய அணுகுமுறை விரிவுரையாளர்களுக்கு பயிற்சி


மாநில ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் சார்பில் கற்பித்தலில் புதிய அணுகுமுறைகள் குறித்து பயிற்சி அளிக்க திட்டமிட்டது. மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறவனங்களில் பணியாற்றும்  முதுநிலை விரிவுரையாளர்களுக்கு இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. வாய் மொழியாக படித்து கற்றல், செய்கைகள், பரிசோதனைகள் மூலம் கற்பித்தல், புதிய பாணியில் கற்பித்தல் உள்ளிட்ட தலைப்புகளில் பயிற்சி இருக்கும். கடந்த அக்டோ பர், செப்டம்பர் மாதங்களில்  240 முதுநிலை விரிவுரையாளர்கள் பயிற்சி பெற்றனர்.

அடுத்த கட்டமாக டிசம்பர் 5 மற்றும் 6ம் தேதிகளில் சென்னையில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில் மேலும் 120 பேர் பயிற்சி பெற உள்ளனர். இந்த பயிற்சி பெறும் முதுநிலை விரிவுரையாளர்கள்,  ஆசிரியர் பயிற்று நிறுவனங்களில் படிக்கும் மாணவ மாணவியருக்கு பாடங்களுடன் இதையும் கற்பிப்பார்கள். மேலும், அந்தந்த வட்டார வள மையங்களில்  அடங்கிய பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிப்பார்கள்.

6.64 லட்சம் பேர் எழுதும் குரூப் 2 தேர்வு: அனைத்து முன்னேற்பாடுகளும் திருப்தி

தமிழகத்தில் வரும் 1 ஆம் தேதி நடைபெறவுள்ள குரூப் 2 தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முழுமையாகச் செய்யப்பட்டுள்ளதாக அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் நவநீதகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். வணிகவரி துணை ஆணையாளர், சார் பதிவாளர், தலைமைச் செயலக உதவிப் பிரிவு அலுவலர் போன்ற முக்கிய பதவிகளுக்கான குரூப் 2 தேர்வு டிசம்பர் 1-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்வுகள் அனைத்து மாவட்ட ஆட்சியர்களின் கண்காணிப்பில் நடத்தப்படுகின்றன.
இதற்கான ஆயத்தப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் தேர்வாணையத் தலைவர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. தேர்வுக்கான முன்னேற்பாடுகள் குறித்து காணொலி காட்சி முறையின்மூலம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடமும் அவர் கேட்டறிந்தார். இதையடுத்து அவர் கூறியது: குரூப் 2 பிரிவில் காலியாகவுள்ள ஆயிரத்து 64 பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு வரும் 1 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இதற்காக 6 லட்சத்து 65 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். அவர்களில் தகுதியான 6 லட்சத்து 64 ஆயிரம் பேருக்கான ஹால் டிக்கெட்டுகள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அனைத்து மாவட்டங்களிலும் தேர்வுக்கான ஏற்பாடுகள் திருப்தி அளிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார் நவநீதகிருஷ்ணன்.

பிளஸ் 2 தனித்தேர்வு: இன்றுமுதல் இணையத்தில் விடைத்தாள் நகல்கள்

பிளஸ் 2 தனித்தேர்வு விடைத்தாள் நகலை தேர்வர்கள் வியாழக்கிழமை (நவம்பர் 28) முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. கடந்த மாதம் நடைபெற்ற பிளஸ் 2 தனித்தேர்வில் விடைத்தாள் நகலைக் கோரி ஏராளமான மாணவர்கள் விண்ணப்பித்தனர்.
இவர்களது விடைத்தாள் நகல்கள் examsonline.co.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்கள் தங்களது பதிவெண், பிறந்த தேதி மற்றும் அக்டோபர் 2013 தனித்தேர்வு மதிப்பெண் சான்றிதழில் உள்ள டிஎம்ஆர் கோட் எண் ஆகியவற்றைப் பதிவு செய்து நகலைப் பதிவிறக்கம் செய்யலாம்.
இந்தத் தேர்வில் மறுகூட்டல் கோரி ஏற்கெனவே விண்ணப்பித்தவர்களுக்கான முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும். விடைத்தாள் நகல் கோரிய தேர்வர்கள் மட்டும், அதை பதிவிறக்கம் செய்த பிறகு, மறுமதிப்பீடு அல்லது மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்.
அவ்வாறு விண்ணப்பிக்க விரும்புவோர் அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் ஜ்ஜ்ஜ்.ற்ய்க்ஞ்ங்.ண்ய் என்ற இணையதள முகவரியில் நவம்பர் 28 முதல் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்த விண்ணப்பத்தைப் பூர்த்திசெய்து கட்டணத்துடன் சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் டிசம்பர் 2, 3 தேதிகளில் மட்டும் நேரில் செலுத்த வேண்டும் என்று அரசுத் தேர்வு இயக்ககம் அறிவித்துள்ளது.

ஓய்வூதியம் பெறுபவர்களின் கவனத்திற்கு

பொங்கலுக்குப் பின் டி.இ.டி., ஆசிரியர் நியமனம் : இறுதி தேர்வில், கடும் போட்டி உறுதி

ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,) தேர்ச்சி பெற்றவர்கள்பொங்கல் பண்டிகைக்குப் பின்பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். வெயிட்டேஜ் மதிப்பெண் காரணமாகதேர்ச்சி பெற்றவர்கள்இறுதி
தேர்வுப் பட்டியலில் இடம்பிடிக்க, கடும் போட்டியை சந்திக்க உள்ளனர்.

ஆகஸ்ட், 17, 18 தேதிகளில் நடந்த டி.இ.டி.தேர்வில், 27 ஆயிரம் பேர்தேர்ச்சி பெற்றனர். எனினும்அரசு பள்ளிகளில், 15 ஆயிரம் இடங்கள் மட்டுமேகாலியாக உள்ளன. டிசம்பர் இறுதிக்குள்,சான்றிதழ் சரிபார்ப்பை நடத்தி முடித்திடடி.ஆர்.பி.,திட்டமிட்டுள்ளது. ஜனவரி முதல் வாரத்திற்குள்இறுதி தேர்வுப் பட்டியல் தயாரானால்பொங்கல் முடிந்ததும், 15 ஆயிரம் பேரும்,பணி நியமனம் செய்யப்படுவர் எனஉயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கடும் போட்டி உறுதி : டி.இ.டி.தேர்வில், 150க்கு, 60 சதவீதம் (90மதிப்பெண்) எடுத்தவர்கள்தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இறுதி தேர்வானதுபள்ளி படிப்பு மற்றும் பட்ட படிப்புகளில் எடுத்த மதிப்பெண்களும்கணக்கில் கொள்ளப்பட்டுஅதில் பெற்ற மதிப்பெண், 40க்கு கணக்கிடப்படும்.
டி.இ.டி.தேர்வில் எடுத்த மதிப்பெண், 60க்கு கணக்கிடப்பட்டு,மொத்தத்தில், 100க்குதேர்வர் பெற்ற மதிப்பெண் அடிப்படையில்,இறுதி தேர்வுப் பட்டியல் தயாரிக்கப்படும்.

இடைநிலை ஆசிரியரை பொறுத்தவரைபிளஸ் 2க்கு, 15மதிப்பெண்ஆசிரியர் பட்டய தேர்வுக்கு, 25 மதிப்பெண் என, 40மதிப்பெண் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில்பிளஸ் 2 தேர்வில், 90சதவீதத்திற்கும் அதிகமான மதிப்பெண்களை பெற்றவர்களுக்கு மட்டுமே, 15 மதிப்பெண் முழுமையாக கிடைக்கும். அதேபோல்,ஆசிரியர் பட்டய தேர்வில், 70 சதவீதம் மற்றும் அதற்கும் அதிகமாக மதிப்பெண் பெற்றிருந்தால் தான், 25 மதிப்பெண்முழுமையாக கிடைக்கும். இல்லையெனில்இந்த மதிப்பெண் குறையும்.

கடும் போட்டி : அதேபோல்பட்டதாரி ஆசிரியரை பொறுத்தவரை,பிளஸ் 2க்கு, 10 மதிப்பெண்பட்ட படிப்பிற்கு, 15 மதிப்பெண் மற்றும் பி.எட்.படிப்பிற்கு, 15 மதிப்பெண் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இந்த, 40 மதிப்பெண்களையும்முழுமையாக பெற வேண்டும் எனில்முறையே, 90 சதவீதம், 70 சதவீதம் (பட்டப் படிப்பு மற்றும் பி.எட்.,) மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். இத்துடன்டி.இ.டி.,தேர்வில், 90 சதவீத மதிப்பெண் (150க்கு, 135 மதிப்பெண்) பெற்றிருப்பவர்களுக்கு மட்டுமேவேலை உறுதி. மற்றவர்கள்கடும் போட்டியை சந்திக்க வேண்டியிருக்கும்.


கடந்த தேர்வுகளில்காலி பணியிடங்களை விடதேர்ச்சி பெற்றவர் எண்ணிக்கை குறைவாக இருந்ததால்வெயிட்டேஜ் மதிப்பெண்கள் கணக்கிடாமல்தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் வேலை கிடைத்தது. ஆனால்தற்போதுகாலியிடங்கள் எண்ணிக்கை குறைவாகவும்தேர்ச்சி பெற்றிருப்பவர் எண்ணிக்கை,அதிகமாகவும் இருப்பதால்இந்த போட்டி ஏற்பட்டுள்ளது.

திருப்பூர் : உதவித் தொடக்கக் கல்வி அலுவலகத்தை கண்டித்து போராட்டம்

வாசித்தலில் பின்தங்கிய மாணவர்களுக்கு இணைப்புப் பயிற்சி அளிக்க சிறப்பாசிரியர்கள் நியமனம்

அரசு பள்ளிகளில் 9-வது வகுப்பில் கற்றல் மற்றும் வாசித்தலில் பின்தங்கிய மாணவ, மாணவிகளுக்கு அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டம் மூலம் இணைப்பு பயிற்சி அளிக்கும் வகையில் சிறப்பாசிரியர்கள் நியமனம் செய்யப்படவுள்ளனர். 

தமிழகம் முழுவதும் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் படித்து வரும் மாணவ, மாணவிகளின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கு அரசு பள்ளிக் கல்வி துறை பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் அடிப்படையில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டம் மூலம் 9-ஆவது வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களில் இணைப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில், குறிப்பிட்ட வகுப்பில் கற்றல், வாசித்தல், உச்சரிப்பு மற்றும் குறைந்த மதிப்பெண்கள் பெறும் பின்தங்கிய மாணவர்களை ஆசிரியர்கள் மூலம் கண்டறியப்பட்டு வருகிறது. இதையடுத்து, இவர்களுக்கு உச்சரித்தல், எழுத்துப் பயிற்சி மற்றும் அடிப்படை பயிற்சியும் 3 மாதங்கள் வரையில் சிறப்பாக அளிக்கப்பட இருக்கிறது.

இதற்காக, ஒவ்வொரு பள்ளியிலும் குறிப்பிட்ட பாடங்களுக்குரிய சிறப்பாசிரியர்களை அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் தலைமையில் பள்ளி வளர்ச்சிக் குழு மேலாண்மையின் மூலம் நியமனம் செய்வதற்கு அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டம் உத்தரவிட்டுள்ளது. இத்திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டு நியமனம் செய்யப்படும் ஆசிரியர்களுக்கு மாதந்தோறும் ரூ.2500 வீதம் 3 மாதங்களுக்கு வழங்கப்படும். இவர்கள் பள்ளியில் குறிப்பிட்ட பாடவேளையிலும், மாலையிலும் 2 மணி நேரம் வரையில் வகுப்பறையில் பயிற்சி அளிக்க வேண்டும். மாநிலம் முழுவதும் ஒவ்வொரு பள்ளியிலும் 9-ஆம் வகுப்பில் இப்பயிற்சி அளிப்பதன் மூலம் 10-ஆம் வகுப்பு அரசு தேர்வில் மாணவ, மாணவிகளின் தேர்ச்சி சதவீதத்தை அதிகப்படுத்த முடியும் என்பதே நோக்கமாகும். 

இத்திட்டத்தின் அடிப்படையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 175 அரசு உயர் நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் இப்பயிற்சி வகுப்பு வருகிற நவம்பர் இறுதியில் தொடங்கி, தொடர்ந்து பிப்ரவரி இறுதி வரையில் நடைபெற இருக்கிறது. இதற்காக பள்ளி வளர்ச்சி மேலாண்மைக் குழு மூலம் சிறப்பாசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
அதியமான் தெரிவித்தார்.