உங்கள் படைப்புகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல்:trstrichy@gmail.com, To Join facebook
Flash News
Flash News
Tuesday 31 December 2013
போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த அண்ணாமலைப் பல்கலைக்கழக தனிஅதிகாரி பணிநீக்கம்
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பிஇ படித்ததாக போலி சான்றிதழ் கொடுத்து தனிஅதிகாரியாக பணியில் சேர்ந்த செந்தில்குமார் (26) என்பவரது பணிநியமன உத்தரவு ரத்து செய்யப்பட்டு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடியைச் சேர்ந்த செந்தில்குமார். இவர் கடந்த 2004-2008ல் அண்ணா பல்கலைக்கழகத்தில் பிஇ எலக்டிரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் பட்டப்படிப்பு படித்ததாக போலி சான்றிதழ் பெற்றுள்ளார். பின்னர் 2011-ம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பிஇ போலி சான்றிதழை கொடுத்து திருவண்ணாமலை படிப்பு மையத்தில் தனி அதிகாரியாக பணியில் சேர்ந்துள்ளார்.
தற்போது பல்கலைக்கழகம் அரசு கட்டுப்பாட்டின் கீழ் வந்த பின்னர் நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா உத்தரவின் பேரில் அனைத்து ஆசிரியர்கள், ஊழியர்கள் சான்றிதழ்கள் உறுதித்தன்மை சான்று பெறும் பணியில் நடைபெற்று வருகிறது. இதில் மேற்கண்ட செந்தில்குமாரின் சான்றிதழ் போலியானது என தெரியவந்ததை அடுத்து பல்கலைக்கழக பதிவாளர் என்.பஞ்சநதம் அவரது பணி நியமன உத்தரவை ரத்து செய்து, பணி நீக்கம் செய்து ஆணை பிறப்பித்துள்ளார்.
ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் மருத்துவ காப்பீட்டுத் திட்டம்
தமிழகத்தில் ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அரசாணை விவரம்:- பேரவையில் 2013-14-ஆம் ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்தபோது, அரசு ஊழியர்களுக்காக தனியாக உடல்நல காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். இந்த திட்டத்தை ஓய்வூதியதாரர் மற்றும் அவரது வாழ்க்கைத்துணை அல்லது குடும்ப ஓய்வூதியதாரர் ஆகியோருக்கும் விரிவுபடுத்த அரசு முடிவு செய்துள்ளது. இந்தப் புதிய காப்பீட்டு திட்டம் தொடங்கப்பட்டு 4 ஆண்டுகள் வரை ரூ.2 லட்சம் அளவுக்கு ஓய்வூதியதாரர் மற்றும் அவரது வாழ்க்கைத் துணை அல்லது குடும்ப ஓய்வூதியதாரர் பயனடையலாம். ஒரு குடும்பத்தில் இரண்டு அரசு ஊழியர் இருந்தால், அதில் ஒருவர் மட்டும் இந்த திட்டத்துக்கான பிரிமியம் செலுத்தினால் போதுமானது. இந்தத் திட்டம், அரசு கருவூலம் மற்றும் கணக்கு ஆணையர் அலுவலகம் மூலம் அமலாக்கப்படும். காப்பீட்டு நிறுவனத்தை தேர்வு செய்த பிறகு, இந்த திட்டத்தில் ஓய்வூதியதாரரின் பங்களிப்பு எவ்வளவு என்பது குறித்து முடிவு செய்யப்படும் என அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் நியமனம்: கேள்வித்தாள் வெளியானதால் தேர்வு ரத்து
டெல்லியில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில் 1 லட்சம் ஆசிரியர்களை நியமிப்பதற்கான எழுத்துத்தேர்வு நேற்று நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினார்கள். ஆனால் தேர்வுக்கு முன்பே, கேள்வித்தாள் ரகசியமாக வெளியானது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து, ஆசிரியர் நியமன தேர்வை ரத்து செய்து டெல்லி மாநில கல்வி மந்திரி மனிஷ் சிசோடியா உத்தரவிட்டார். மறு தேர்வு இன்னும் ஒரு மாதத்தில் நடைபெறும் என்று தெரிகிறது.
திருச்சி மாநகராட்சியால் நடத்தப்படும் அனைத்து பள்ளிகளிலும் சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் வசதி
திருச்சி மாநகராட்சியால் நடத்தப்படும் அனைத்து பள்ளிகளிலும் சூரிய சக்தி மின்சார தயாரிப்பு வசதிகளை அமைக்கவேண்டும் என கல்வி நிலைக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கல்விக்குழு கூட்டம்
திருச்சி மாநகராட்சியின் கல்வி நிலைக்குழு கூட்டம் நேற்று மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற்றது. கல்வி குழு தலைவர் என்.எஸ். பூபேந்திரன் தலைமை தாங்கினார். நகரப்பொறியாளர் சந்திரன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–
மாநகராட்சியால் நடத்தப்படும் 79 பள்ளிகளிலும் சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் வசதிகளை (சோலார் பேனல்) அமைப்பது, அனைத்து பள்ளிகளிலும் தேவையான தீயணைப்பு கருவிகள்பொருத்த நடவடிக்கை எடுப்பது, இடவசதிக்கேற்ப அனைத்து பள்ளிகளிலும் பசுமைத்தளம் அமைப்பது, அனைத்து பள்ளிகளிலும் உள்ள கழிவறைகளை பராமரிக்கும் பணியை தனியாரிடம் ஒப்படைப்பது, பள்ளிகளுக்கு பகல் மற்றும் இரவு நேர காவலர்களை தனித்தனியாக நியமிப்பது, புதிய தளவாட பொருட்கள் வாங்குவது, தேவையான அளவு விளையாட்டு கருவிகளை வாங்குவது, நவீன கரும்பலகைகள் அமைப்பது, ரூ.8¾ கோடியில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்வது.
மேற்கண்டவை உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கும் உடல்நல காப்பீடு அரசாணை வெளியீடு
தமிழ்நாடு நிதித்துறை செயலாளர் முதன்மைச்செயலாளர் கே.சண்முகம் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:–
தமிழ்நாடு சட்டசபையில் 2013–14–ம் ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்தபோது, அரசு ஊழியர்களுக்காக தனியாக உடல்நல காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் அறிவித்தார். இந்த திட்டத்தை ஓய்வூதியதாரர் மற்றும் அவரது வாழ்க்கைத்துணை அல்லது குடும்ப ஓய்வூதியதாரர் ஆகியோருக்கும் விரிவுபடுத்த அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கான சில புதிய வரைமுறைகளை அரசு வகுத்தளிக்கிறது. அதன்படி, இந்த புதிய காப்பீட்டு திட்டம் தொடங்கப்பட்டு 4 ஆண்டுகள் வரை ரூ.2 லட்சம் அளவுக்கு ஓய்வூதியதாரர் மற்றும் அவரது வாழ்க்கைத்துணை அல்லது குடும்ப ஓய்வூதியதாரர் பயனடையலாம். ஒரு குடும்பத்தில் இரண்டு அரசு ஊழியர் இருந்தால், அதில் ஒருவர் மட்டும் இந்த திட்டத்துக்கான பிரிமியம் செலுத்தினால் போதுமானது.
இந்த திட்டம், அரசு கருவூலம் மற்றும் அக்கவுண்ட் ஆணையர் அலுவலகம் மூலம் அமலாக்கப்படும். காப்பீட்டு நிறுவனத்தை தேர்வு செய்த பிறகு, இந்த திட்டத்தில் ஓய்வூதியதாரரின் பங்களிப்பு எவ்வளவு என்பது குறித்து முடிவு செய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மூன்றாம் பருவப் புத்தகங்கள்: தனியார் பள்ளிகளுக்கு விற்பனை
தனியார் பள்ளி மாணவர்களுக்கான மூன்றாம் பருவப் புத்தகங்கள் தமிழ்நாட்டுப் பாடநூல் கழக வட்டார அலுவலகங்களில் விற்பனை செய்யப்படுவதாக அந்த கழகத்தின் நிர்வாக இயக்குநர் சி.என்.மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை மூன்றாம் பருவத்துக்கான வகுப்புகள் ஜனவரி 3-ஆம் தேதி தொடங்க உள்ளன. வகுப்பு தொடங்கும் முதல் நாளிலேயே அனைத்து மாணவர்களுக்கும் புத்தகங்களை வழங்குவதற்காக பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தப் பணிகள் தொடர்பாக அவர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
முப்பருவ முறையின் கீழ் மூன்றாம் பருவத்துக்காக 2.3 கோடி புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன.
இதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்காக 1.58 கோடி புத்தகங்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகங்கள் வழியாக இலவசமாக வழங்கப்பட உள்ளன.
இதற்காக சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்குப் புத்தகங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.
தனியார் பள்ளி மாணவர்களுக்கான 81 லட்சம் பிரதிகள் தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்தின் 22 வட்டார அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் (மழலையர் பள்ளி) ஆகியோர் மூலம் தனியார் பள்ளிகளுக்கான புத்தக விற்பனை நடைபெற்று வருகிறது என அவர் தெரிவித்துள்ளார்.
பள்ளி மாணவர்கள் இயக்கிய குறும்படம் "யூகம்' வெளியீடு
பள்ளி மாணவர்கள் குறைந்த செலவில் இயக்கிய "யூகம்' குறும்படம் ஞாயிற்றுக்கிழமை திரையிடப்பட்டது.
சென்னை ஏவிஎம் ஸ்டூடியோ மினி திரையரங்கில் திரையிடப்பட்ட "யூகம்' குறும்பட நிகழ்ச்சியை "சுட்டகதை' திரைப்பட இயக்குநர் சுபு, எடிட்டர் லெனின் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
பின்னர் "யூகம்' குறும்பட இயக்குனர் அஜித் பாலாஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது :
சின்மயா வித்யாலயா பள்ளி மாணவர்கள் 14 பேர் ஒன்றாக இணைந்து "யூகம்' குறும்படத்தை இயக்கி உள்ளோம். தெலுங்கில் வெளியான "ஷேடோ' என்ற குறும்படத்தின் கதைக் கருவை கொண்டு 14 நிமிடங்கள் ஓடக்கூடிய இப்படத்தை உருவாக்கினோம்.
இந்தப் படத்தை குறைந்த செலவில் (ரூ.56 ஆயிரம்) உருவாக்கி இருக்கிறோம். பள்ளி மற்றும் பெற்றோர் தரப்பில் இருந்து எந்தவித எதிர்ப்பும் எழாததால் இதை வெற்றிகரமாக உருவாக்க முடிந்தது.
படத்தை பார்த்துவிட்டு திரைப்பட துறை வல்லுநர்கள் பாராட்டியது மகிழ்ச்சியாக உள்ளது என்றார் அஜித்.
தமிழகம் முழுவதும் '104' முதலுதவி சேவை விரைவில் அறிமுகம்
தமிழகம் முழுவதும் 104 அவசரகால முதலுதவி சேவை திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. தமிழகத்தில் அவசரகால ஆம்புலன்ஸ் சேவை 108 என்ற ஹெல்ப் லைன் எண்ணுடன் இயங்கி வருகிறது. இந்நிலையில், அவசரகாலங்களில் முதலுதவி செய்ய முடியாமல் பலர் உயிரிழப்பை சந்தித்து வருகின்றனர். ஆம்புலன்ஸ் வந்து மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்குள் முதலுதவி கிடைக்காதவர்கள் உயிரிழப்பை சந்திக்கின்றனர். இதனை தவிர்க்க 104 என்ற ஹெல்ப் லைன் சேவை எண்ணுடன் முதலுதவி ஆலோசனை கூறும் மையம் ஒன்று தமிழகத்தில் விரைவில் தொடங்கப்படுகிறது.
இதற்காக அமைக்கப்படும் மையத்தில் டாக்டர்கள் கொண்ட குழு தயார் நிலையில் இருக்கும். 104 ஹெல்ப் லைன் எண் மூலம் தொடர்பு கொள்ளும்போது, மையத்தில் உள்ள டாக்டர்கள், இருக்கும் இடத்தில் உள்ள வசதிகளை கொண்டே பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி அளிக்கும் வழிமுறைகளை கூறுவர். இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஓரிரு நிமிடங்களில் முதலுதவி சிகிச்சை கிடைக்கும். அதன்பிறகு ஆம்புலன்ஸ் அல்லது வேறு வகையிலோ மருத்துவமனைகளுக்கு பாதிக்கப்பட்டவர்களை கொண்டு சென்று காப்பாற்ற முடியும்.
இதன் மூலம் முதலுதவி கிடைக்காமல் இறப்பவர்களின் விகிதத்தையும் குறைக்க முடியும். இந்த சேவையை முதல்வர் ஜெயலலிதா நேற்று தொடங்கி வைக்க இருந்ததாகவும், ஆனால், பல மாவட்டங்களில் அதற்கான தயாரிப்புகள் முடிவடையாததால் தடை ஏற்பட்டுள்ளதாகவும், விரைவில் இந்த சேவை அனைத்து மாவட்டங்களிலும் கிடைக்கும் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பூம்புகார் கடலில் தத்தளித்த மாணவர்களை காப்பாற்றிய ஆசிரியர் நீரில் மூழ்கி சாவு
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் ராகவேந்திரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவர்கள், அரையாண்டு தேர்வு முடிந்து சுற்றுலா சென்றனர். 6, 7, 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 28 பேர், பிளஸ் 2 கம்ப்யூட்டர் ஆசிரியர் பிரசாந்த் (25) உட்பட 3 ஆசிரியர்கள் என 31 பேர் ஒரு வேனில் பயணம் செய்தனர். நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள பூம்புகாருக்கு சென்று அங்கே உள்ள கலைக்கூடத்தை நேற்று கண்டு ரசித்தனர். அதன்பிறகு ஒரு சில மாணவர்கள் கடலில் இறங்கி குளித்தனர். அவர்களை ஆசிரியர் பிரசாந்த் கண்காணித்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று 4 மாணவர்களை கடல் அலை இழுத்து சென்றது. இதை பார்த்த பிரசாந்த், உடனடியாக கடலில் குதித்து போராடி 4 மாணவர்களையும் மீட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக ராட்சத அலை பிரசாந்தை கடலுக்குள் இழுத்து சென் றது. அங்கிருந்த மீனவர்கள் காப்பாற்றி மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார்.
தேர்வு எழுதுவோர் விவரம் அடுத்த வாரம் வெளியாகிறது
பொது தேர்வு எழுதுவோர் விவரங்களை, அடுத்த வாரம் வெளியிட, தேர்வுத் துறை திட்டமிட்டு உள்ளது. பிளஸ் 2 தேர்வு, மார்ச், 3ல் துவங்கி, 26 வரையிலும், 10ம் வகுப்பு தேர்வு, மார்ச், 26ல் துவங்கி, ஏப்ரல், 9 வரையிலும் நடக்கிறது. இதில் பங்கேற்கும் மாணவ, மாணவியர் விவரங்களை, மாவட்ட வாரியாக, தேர்வுத் துறை பெற்றுள்ளது. பெற்ற விவரங்கள் சரியானவையா என்பதை, மீண்டும் ஒரு முறை சரிபார்த்து, தவறு இருந்தால், அதை சரிசெய்து, 5ம் தேதிக்குள், மீண்டும் சமர்ப்பிக்க, தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, தற்போது, தேர்வு எழுதும் மாணவர் பட்டியல், பள்ளிகளில், சரிபார்க்கப்பட்டு வருகின்றன. இந்த பணி முடிந்ததும், அடுத்த வாரத்தில், தேர்வெழுதும் மாணவர் எண்ணிக்கை குறித்த விவரங்களை வெளியிட, தேர்வுத் துறை, முடிவு செய்துள்ளது. பிளஸ் 2 தேர்வை, 8.5 லட்சம் பேரும், 10ம் வகுப்பு தேர்வை, 10.5 லட்சம் பேரும் எழுதலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது
உபரி ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய, கல்வித் துறை நடவடிக்கை: கலக்கத்தில் உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள்
தமிழகத்தில், அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், உபரி ஆசிரியர்களை கணக்கெடுத்து, அவர்களை இடமாற்றம் செய்ய, கல்வித் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. பல லட்ச ரூபாய் செலவு செய்து, பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், 160 மாணவர்களுக்கு, ஐந்து பட்டதாரி ஆசிரியர்கள் வீதம், பணியில் நியமிக்கலாம். பின், ஒவ்வொரு, 30 மாணவர்களுக்கும், ஓர் ஆசிரியர் வீதம், கூடுதலாக நியமிக்கலாம். மாநில அளவில், அரசு உதவி பெறும் பள்ளிகளில், 2013 ஆக., 1ம் தேதி படி, ஆசிரியர்கள், மாணவர்கள் விகித கணக்கெடுப்பு நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளில், மாணவர்கள் எண்ணிக்கையை விட, ஆசிரியர்கள் அதிகம் உள்ளது கண்டறியப்பட்டது. இதையடுத்து, உபரி ஆசிரியர்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் விகிதாசார அடிப்படையில், ஆசிரியர் பற்றாக்குறை உள்ள பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்ய - பணிநிரவல் செய்ய, பள்ளிக் கல்வித் துறை இயக்குனர், ராமேஸ்வரமுருகன் உத்தரவிட்டு உள்ளார். இதன்படி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தலைமையில், இதற்கான, பணிநிரவல் நடத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், ஒரே இடத்தில் பணியாற்ற வேண்டும் என, பல லட்சம் ரூபாய் கொடுத்து, பணியில் சேர்ந்தோம். உபரி என்ற பெயரில், இடமாற்றம் செய்தால் குடும்ப சூழ்நிலை பாதிக்கும் என்றனர்.
ஒப்புதலில் சிக்கல் : ஒரு உதவி பெறும் பள்ளியில் இருந்து,மற்றொரு பள்ளிக்கு ஆசிரியர் மாற்றப்படும் போது, சம்பந்தப்பட்ட பள்ளி சார்பில், அந்த ஆசிரியரை ஏற்றுக்கொள்கிறோம் என்ற ஒப்புதல் அளிக்க வேண்டும். ஆனால், ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ள பல பள்ளிகள், இதற்கான ஒப்புதலை அளிக்க முன்வரவில்லை. தற்போது இருக்கும் ஆசிரியர்கள் எண்ணிக்கையே போதும் என்ற நிலையை, பள்ளிகள் எடுக்கும்போது, பணிநிரவல் செய்வதில் சிக்கல் ஏற்படலாம், என, கல்வித் துறையினர் கூறுகின்றனர்.
புத்தாண்டு வாழ்த்து கூறுவதாக கேலி, கிண்டல் செய்தால் காப்பு
குடிபோதையில் வாகனம் ஓட்டினாலும், புத்தாண்டு கொண்டாடம் என்ற பெயரில், பெண்களை கேலி, கிண்டல் செய்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, போலீசார் எச்சரித்து உள்ளனர். குடிபோதையில் வாகனம் ஓட்டுவோர், அதிவேகமாக செல்வோர், இரண்டு பேருக்கு மேல் இருசக்கர வாகனத்தில் சென்றால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். புத்தாண்டு வாழ்த்து கூறுவதாக, பெண்களை கேலி, கிண்டல் செய்தல், கையைப் பிடித்து இழுத்தல் கூடாது; மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் கூடும் இடங்களில் பட்டாசு வெடிக்கக்கூடாது. இழிவான முறையில் கேலி, கிண்டல் செய்வோர், வர்ண பொடிகள் தூவுதல், வர்ணம் கலந்த தண்ணீர் அடித்தல் போன்றவற்றை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். கடலில் விளையாடுதல், படகுகளில் ஏறி கடலுக்குள் செல்வது கூடாது. இருசக்கர வாகனங்களில், ரேஸ்களில் ஈடுபடுவதை கண்காணிக்க, தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இவை, போலீசாரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
போக்குவரத்து மாற்றம் : இரவு, 8:00 மணிக்கு மேல், கடற்கரை உட்புற சாலைக்குள் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. உட்புற சாலையில் உள்ள வாகனங்கள், இரவு, 8:00 மணி வரை ?வளியே அனுமதிக்கப்படும்.காந்தி சிலை முதல், போர் நினைவுச் சின்னம் வரை, இன்று இரவு, 8:00 முதல், நாளை அதிகாலை, 2:00 மணி வரை வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படும். எந்த வாகனமும் கடற்கரை சாலையில் இருந்து, காமராஜர் சாலைக்கு அனுமதிக்கப்படாது. ராஜாஜி சாலை, எலியட்ஸ் கடற்கரை சாலையிலும் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.
திருச்சி: ஹோட்டல்களில் இன்று இரவு புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு மாநகர போலீஸ் தடை விதித்துள்ளது.
இதுகுறித்து திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலக செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:
புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் இன்று இரவு, இளைஞர்கள் குடி போதையில் பைக்குகளில், அதிக எண்ணிக்கையில் அமர்ந்து கொண்டு படுவேகமாக சென்று மக்களுக்கு இடையூறு செய்தல், பெண்களிடம் அத்துமீறி நடப்பது போன்ற சம்பவங்களில் ஈடுபடக்கூடாது.
குடி போதையில் டூவீலர் ஓட்டுபவர்கள், இரண்டு நபர்களுக்கு மேல் செல்பவர்கள், அதிவேகமாக ஓட்டுபவர்கள் ஆகியோரை தடுக்க, போலீஸார் பல குழுக்களாக பிரிந்து மாநகர் முழுவதும் வாகன தணிக்கையில் ஈடுபடவுள்ளனர். இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
மாநகரில் அனைத்து போலீஸ் ஸ்டேஷன் எல்லைகளிலும், போலீஸார் தீவிர ரோந்து பணியில் ஈடுபடவுள்ளனர். புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் அனைத்து ஹோட்டல்களிலும் நடனங்கள் நடத்துவது, ஹோட்டலுக்கு வெளியில் பார்ட்டி என்ற பெயரில் கும்மாளம் அடிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது. பொது இடங்களில் புத்தாண்டு வாழ்த்து கூறுவதாக சொல்லி பெண்களை கேலி, இழிவு படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். மக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக வாகனங்களை நிறுத்தி, அநாகரீக முறையில் மது அருந்துதல், வெடி வெடித்தல் போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் அனைத்து ஹிந்து கோவில்கள், முஸ்லிம் மசூதிகள், கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு போதுமான பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் யாராவது மக்களுக்கு இடையூறு செய்தால், போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு, 100 என்ற டெலிஃபோனில் எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
கூட்டுறவு வங்கிக்கு தேர்வாகியும் பணி இல்லை : அரசு இழுத்தடிப்பால் தவிக்கும் பட்டதாரிகள்
கூட்டுறவு வங்கி உதவியாளர் பணிக்கு நேர்முகத்தேர்வு நடத்தி ஓராண்டாகியும், இன்னும் வேலை தராமல் அரசு இழுத்தடிப்பதால், பட்டதாரிகள், 7,200 பேர் தவித்து வருகின்றனர்.கடந்த ஆண்டு தமிழக கூட்டுறவு வங்கிகளில், 3,589 உதவியாளர் பணியிடங்களை நிரப்ப, கூட்டுறவு சங்க மாநில ஆள் சேர்ப்பு நிறுவனம் வாயிலாக, 2012 டிச., 9ல், எழுத்துத் தேர்வு நடந்தது.
இதில், 7,200 பேர் தேர்வாயினர். நேர்முகத்தேர்வு, மாவட்ட வாரியாக, டிச., 28ம் தேதி முதல், டிச., 31ம் தேதி வரை நடந்தது. இதில், தேர்வானவர்களுக்கு உடனடியாக பணி ஆணை வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டிருந்தது. நேர்முகத்தேர்வு முடிந்து ஓராண்டாகியும் இன்னும் வேலை கிடைக்கவில்லை.
தேர்வானவரகள் பட்டியல் கூட ?வளியிடாமல், அரசு இழுத்தடித்து வருகிறது. இதனால், 7,200 பட்டதாரிகளும் பரிதவித்து வருகின்றனர்.
பணிக்காக காத்திருக்கும் மணிகண்டன் கூறுகையில், முதல்வர் தனிப்பிரிவு, கூட்டுறவு சங்க பதிவாளர் அலுவலகம் என, மாறி மாறி அலைந்தும் ஒன்றும் நடக்கவில்லை. சமீபத்தில், கூட்டுறவு சங்க பதிவாளர் அலுவலகத்தையும் முற்றுகையிட்டோம். பாதிக்கபட்டோரை ஒருங்கிணைத்து, தொடர் போராட்டம் நடத்த ஆலோசித்து வருகிறோம், என்றார்.
வழக்கில் உள்ளது : இதுகுறித்து கூட்டுறவு சங்க உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், அவர்களின் கோரிக்கை நியாயமானதுதான். ஆனால், ஏற்கனவே தற்காலிக பணியாளராக உள்ளோர் கோர்ட்டிற்குச் சென்றதால், உடனடியாக வேலை வழங்க முடியாத நிலை உள்ளது. சிக்கலைத் தீர்க்க முயற்சி மேற்கொண்டு வருகிறோம் என்றார்.
சென்னை மாநகராட்சி ஆசிரியைகள் பணி நிரந்தரம் எப்போது?
சென்னை மாநகராட்சி மழலையர் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியைகள், உரிய பயிற்சி முடித்தும், பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ளனர். இதுகுறித்து, உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
92 ஆசிரியைகள் : தற்போது, மாநகராட்சி வசம், 40 மழலையர் பள்ளிகள் உள்ளன. அவற்றில், 92 ஆசிரியைகள் பணிபுரிகின்றனர். அவர்களை தவிர, வகுப்பறைக்கு ஒரு ஆயா, பள்ளிக்கு ஒரு அலுவலக உதவியாளர் பணியில் உள்ளனர். துவக்கத்தில், அவர்கள் அனைவரும், தற்காலிகமாக பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர். பின்னர், 25 ஆசிரியைகள், ஆயாக்கள், அலுவலக உதவியாளர்கள், பணி நிரந்தரம் செய்யப்பட்டனர். ஆசிரியைகள், 67 பேர் இன்னும் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை.
பயிற்சி அளித்தும்... : அவர்கள் அனைவரும், அங்கீகாரம் இல்லாத நிறுவனத்தில், ஓராண்டு மழலையர் பள்ளி ஆசிரியர் பயிற்சி முடித்ததாக காரணம் கூறப்பட்டது. இதை அடுத்து, அந்த ஆசிரியர்கள் அனைவருக்கும், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன், மாநகராட்சி சார்பில், ஆறு மாதம், மழலையர் பள்ளி ஆசிரியர் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. இந்த பயிற்சிக்கு பின், அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்றுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால், சம்பளத்தில் வித்தியாசம், விடுப்பு உட்பட, பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக, அவர்கள் வேதனை தெரிவித்தனர்.
தடுக்க முடியாது : இதுகுறித்து மாநக ராட்சி கல்வி துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,மழலையர் பள்ளி ஆசிரியைகளில் இரண்டு ஆண்டு பயிற்சி முடித்தோர் பணி நிரந்தரம் செய்யப்பட்டு உள்ளனர். ஓராண்டு பயிற்சி முடித்தவர்களை பணி நிரந்தரம் செய்வது தொடர்பான கோப்பு, அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது என்றார்.
மேலும் அவர் கூறுகையில், தங்களை பணி நிரந்தரம் செய்ய உத்தரவிடக் கோரி ஆசிரியைகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். வழக்கு நிலுவையில் உள்ளது. அவர்களை பணிக்கு தேர்வு செய்யும் போது, இரண்டு ஆண்டு பயிற்சி முடித்திருக்க வேண்டும் என, குறிப்பிட்டு சொல்லப்படவில்லை. அதனால், ஓராண்டு பயிற்சி முடித்த ஆசிரியைகளின் பணி நிரந்தரத்தை யாராலும் தடுக்க முடியாது. ஆனாலும், அரசின் ஒப்புதல் கிடைக்காததால், பணி நிரந்தரம் தாமதமாகி வருகிறது என்றார்.
முதுநிலை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்க நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் வலியுறுத்தல்
தொடக்கக் கல்வியில், பணி நியமனம் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கும்,முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும்' என,கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தில், தொடக்கக் கல்வித்துறையில், 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இவற்றில், ஒன்றாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரை, 2004-05ம் ஆண்டு முடிய, இடைநிலை ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டனர். கல்வித்தரத்தை மேம்படுத்தும் வகையில், ஐந்தாம் வகுப்பு வரை, இடைநிலை ஆசிரியர்களை நியமிப்பது எனவும், ஆறு, ஏழு, எட்டாம் வகுப்புகளுக்கு, அந்தந்த, பாட பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பது எனவும்,அரசு முடிவெடுத்தது.
அதன்படி, தொடக்கக் கல்வித்துறை கட்டுப்பாட்டில் செயல்படும் நடுநிலைப்பள்ளிகளில், 2005ல் இருந்து, 26,000 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அரசு உயர்நிலைப்பள்ளிகளில், பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்கப்படுபவர்களுக்கு, மாநில முன்னுரிமை அடிப்படையில், 50 சதவீதம், முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கப்படுகிறது.மேலும், பள்ளி தலைமை ஆசிரியர்களாகவும், மாவட்டக்கல்வி அலுவலர்களாகவும் பதவி உயர்வு வழங்கப்படுகிறது.
தொடக்கக்கல்வித்துறையில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு, முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு வழங்கப்படுவதில்லை. பள்ளிக்கல்வித்துறையின் கீழ், தொடக்கக்கல்வித்துறை செயல்பட்டாலும், அதை, தனி யூனிட்டாகவே கருதி, தனி நிர்வாகம் நடந்து வருகிறது. இதனால், தொடக்கக்கல்வித்துறையில் நியமிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு, பதவி உயர்வு என்பது கானல் நீராக உள்ளது.முதுகலை ஆசிரியர் நியமனத்தில், தங்களுக்கும், பதவி உயர்வு வாய்ப்பு வழங்க வேண்டும் என, தொடக்கக் கல்வித்துறையில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் ஒருவர் கூறியதாவது:
ஒரே சமயத்தில், டி.ஆர்.பி., தேர்வெழுதி பணிநியமனம் பெற்ற நிலையில், உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். சில ஆண்டுகளில், அவர்கள், தலைமை ஆசிரியர்களாகவும், மாவட்டக்கல்வி அலுவலராகவும் மாற வாய்ப்பு உள்ளது.
ஆனால், தொடக்கக்கல்வித்துறையில் பணியில் சேர்ந்த, பட்டதாரி ஆசிரியர்கள், கடைசி வரை, பட்டதாரி ஆசிரியர்களாவே இருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.இதை மாற்றி, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கும், முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இன்ஜி., கல்வி தரம் குறைவு: பலருக்கு வேலை கிடைக்கவில்லை
இன்ஜினியரிங் கல்லூரிகளில் இருந்து, படித்து முடித்து வௌ?யே வரும் பட்டதாரிகளின் எண்ணிக்கை, அதிகரித்துக் கொண்டே செல்கிறது. எனினும், அவர்களில் பலருக்கு வேலை கிடைக்கவில்லை. எனவே, தொழில்நுட்ப கல்வி, தரம் வாய்ந்ததாக இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் தான், தொழில் துறை வளர்ச்சி அடையும்.
பெண்களின் பாதுகாப்பிற்காக மைக்ரோசாப்ட் புதிய திட்டம்
பணி இடங்கள் மற்றும் பயணங்களின் போது, பெண்கள், தங்களுக்கு எதிராக நடத்தப்படும் பாலியல் வன்முறைகளிலிருந்து, பாதுகாத்து கொள்வதற்காக, முன்னணி மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட், புதிய தொழில்நுட்பத்தை வடிவமைத்துள்ளது.உடனடி தகவல்இந்தியாவுக்கான, 'மைக்ரோசாப்ட்' நிறுவன இயக்குனர், ராஜ் பியானி கூறியதாவது:பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் அதிகரித்துள்ளன.
இதிலிருந்து, பெண்கள், தங்களை காத்துக் கொள்ள, மைக்ரோசாப்ட் புதிய தொழில்நுட்பத்தை வடிவமைத்து உள்ளது.மொபைல் போன்களில், இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் மூலம், பெண்கள் பாலியல் ரீதியான கொடுமைகளுக்கு உள்ளாகும்போது, அவர்களின் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்படும்.ஆபத்து காலத்தில், மொபைல் போனில் உள்ள ஒரு பட்டனை அழுத்தினால், மொபைல் போனில் உள்ள அனைத்து தொடர்பு எண்கள், போலீஸ், பாதுகாப்பு நிறுவனங்கள், பேஸ்புக் நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தகவல் அனுப்பப்படும்.
டிராக்கிங் சிஸ்டம் : இதில் உள்ள தொடுதிரை வசதியின் மூலம், நடக்கும் காட்சிகள் பதிவு செய்யப்படும். இதன் மூலம், குற்றவாளிகளை எளிதாக கண்டறிய முடியும். அதுமட்டுமின்றி, இணையதள வசதி இல்லாமலும், இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்த முடியும். இதில் உள்ள, 'டிராக்கிங் சிஸ்டம்' மொபைல் போனை பயன்படுத்தும் நபர் எங்கு உள்ளார் என்பதை, அனைவருக்கும் காண்பிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
பள்ளிகளில் செக்ஸ் கல்வி தேவையில்லை : ஆந்திர ஐகோர்ட் நீதிபதி பேச்சு
பள்ளிகளில் செக்ஸ் கல்வி, மாணவர்களின் மனதை சிதைத்து விட்டது. அந்த கல்வி திட்டத்தால், மாணவர்களுக்கு எவ்வித பயனும் ஏற்படவில்லை என, ஆந்திர உயர் நீதிமன்ற நீதிபதி கூறினார்.
கருத்தரங்கில் தகவல் : ஐதராபாத்தில் நடந்த, குற்றங்களில் இருந்து குழந்தைகளை காப்பது தொடர்பான கருத்தரங்கில் பேசிய, மாநில உயர் நீதிமன்ற நீதிபதி, எல்.நரசிம்ம ரெட்டி பேசியதாவது:
மாநில உயர்நிலைப் பள்ளிகளில், 2005 - 06ம் ஆண்டு முதல், செக்ஸ் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. அது, மாணவர்கள் மனதை சிதைத்து விட்டது. அதைத் தவிர, அந்த திட்டத்தால், மாணவர்களுக்கு எவ்வித பயனும் கிடைக்கவில்லை.பெற்றோர் கையில் உள்ளது மாணவர்களை நன்னெறிப் படுத்துவது, பெற்றோர் கையில் தான் உள்ளது. அவர்களால் தான், மாணவர்களை நல்ல முறையில் வளர்க்க முடியும்.தங்கள் குழந்தைகளுக்கு, பெற்றோர், முன்னுதாரணமாக இருக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.இந்த நிகழ்ச்சியில், ஐதராபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, கல்யாண் ஜோதி சென்குப்தா, டி.ஜி.பி., பிரசாத் ராவ் கலந்து கொண்டனர்.
நேர்மையான பணியால் 'ஹாட்ரிக்' விருது: திருச்சி கலெக்டருக்கு குவியும் பாராட்டு
நேர்மையான பணியாலும், பாரபட்சமில்லா நடவடிக்கையாலும், நிர்வாகத் திறமையாலும், திருச்சி கலெக்டர் ஜெயஸ்ரீக்கு, தொடர்ந்து மூன்று முறை, தமிழக அரசின் சிறந்த கலெக்டர் விருது வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு, திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த, பல சமூக நல அமைப்புகளும், விவசாய அமைப்புகளும், பாராட்டு தெரிவித்துள்ளன.
தமிழகத்தில், 2011ம் ஆண்டு, அ.தி.மு.க., ஆட்சி அமைந்தது. ஜூன் மாதம், திருச்சி மாவட்ட கலெக்டராக, ஜெயஸ்ரீ பொறுப்பேற்றார். பதவியேற்ற நாளிலிருந்து இன்று வரை, மாவட்ட நிர்வாகத்தில், பல வளர்ச்சி பணிகளைச் செய்துள்ளார்; மாற்றங்களை கொண்டு வந்துள்ளார். தமிழக முதல்வர் ஜெயலலிதா, மாநிலம் முழுவதும் மரக்கன்று நடும் திட்டத்தை தீவிரப்படுத்த, கலெக்டர்களுக்கு உத்தரவிட்டார். அதன்படி, கடந்த ஆண்டு, திருச்சி மாவட்டத்தில், 1.60 லட்சம் மரக்கன்றுகள் நட, இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இலக்கை விஞ்சி, 2.10 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டன. அதேபோல, நடப்பாண்டு, 2 லட்சம் என்ற இலக்கை விஞ்சி, 8.40 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு உள்ளன. மத்திய, மாநில விருதுகள் முதல்வர் தனிப்பிரிவு மனு மீது, துரிதமாக நடவடிக்கை எடுத்ததற்காக, திருச்சி கலெக்டர் ஜெயஸ்ரீ, தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம், மூன்று முறை தொடர்ந்து, 'ஹாட்ரிக்' விருது பெற்றுள்ளார். இதற்கிடையே, 100 நாள் வேலை திட்டத்தில், ஆவணங்களை முறையாக பராமரித்ததற்காக, பிரதமர் மன்மோகன் கையால், மத்திய அரசின் விருது கிடைத்தது.
மேடையை நிராகரித்த கலெக்டர்:
திங்கட்கிழமை தோறும் மக்கள் குறைதீர் கூட்டம் நடக்கும். இந்த கூட்டத்துக்கு வரும் மாற்றுத் திறனாளிகள், கஷ்டப்பட்டு, மேடை ஏறி வந்து தான், மனு அளிப்பர். மாற்றுத் திறனாளிகள் கஷ்டப்படுவதைக் கண்ட கலெக்டர், பதவியேற்ற சில நாட்களிலேயே, மாற்றுத் திறனாளிகளுக்காக, கீழே அமர்ந்து மனு பெறுவதாகக் கூறினார். அரசு அதிகாரிகள், ஊழியர்களில் தவறு செய்பவர்கள் இருப்பர் என்பதை நன்கு உணர்ந்த கலெக்டர் ஜெயஸ்ரீ, தனக்கு கீழ் பணியாற்றுபவர் எப்படி இருக்க வேண்டும் என்பதை, அவ்வப்போது அவர்களுக்கு அறிவுறுத்துவார். மீறி யாராவது தவறு செய்தால், அவர்களை பதவி, பணியிலிருந்து தூக்கியடிக்க, சிறிதும் தயங்கமாட்டார். யார் மீது புகார் வந்தாலும், கடும் எச்சரிக்கை விடும் கலெக்டர், புகாரில் உண்மைத்தன்மை இருப்பது தெரிய வந்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்கியது இல்லை. சாதாரண மக்கள், தங்கள் மாவட்ட கலெக்டரைச் சந்திப்பது, எளிதான காரியமில்லை. ஆனால், திருச்சி கலெக்டர் ஜெயஸ்ரீயை, எப்போதும் பொதுமக்கள் சந்திக்கலாம். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியரை கண்டால், உற்சாகமாகும் கலெக்டர், நற்சிந்தனையை தூண்டும் வகையில், அவர்களுக்கு அறிவுரை வழங்குவார்; பல இடங்களில், பாடமும் நடத்தியுள்ளார். திருச்சி மத்திய மண்டலத் தில் உள்ள, எட்டு மாவட்டங்களில், இவருடன், கலெக்டர்களாக நியமிக்கப்பட்ட பலரும், மாற்றப்பட்ட நிலையில், இவர் மட்டுமே, தொடர்ந்து, திருச்சி கலெக்டராக பணியில் உள்ளார். இதற்கு திருச்சி மாவட்ட பல்வேறு சமூக அமைப்புகளும், விவசாய அமைப்புகளும், கலெக்டருக்கு பாராட்டு தெரிவித்துள்ளன.
Monday 30 December 2013
தமிழ்நாடு கல்வித் துறை அலுவலர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் தங்களுக்குள் இலவசமாக பேசிக்கொள்ள ஏர்செல் நிறுவனத்தின் Teachers CUG திட்டம் அறிமுகம்
தமிழ்நாடு கல்வித் துறை அலுவலர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் தங்களுக்குள் இலவசமாக பேசிக்கொள்ள ஏர்செல் நிறுவனத்தின் Teachers CUG திட்டம் அறிமுகம்
இத்திட்டத்தை வழங்குபவர்கள்:
Kaveri Communications, Trichy.
இத்திட்டத்தில் இணைந்துள்ள ஆசிரியர்கள் தங்களுக்குள் 24 மணிநேரமும் இலவசமாக பேசிக்கொள்ளலாம். ஒரு ஆசிரியர் குடும்ப உறுப்பினர்களிடம் இலவசமாக பேசிக்கொள்ள (தேவைபட்டால்) 3 சிம் கார்டுகள் வரை கூடுதலாக தரப்படும்.
இந்த 3 சிம்கார்டுகளில் இருந்தும் இத்திட்டத்தில் இணைந்துள்ள தமிழ் நாட்டில் உள்ள எந்த ஆசிரியரிடமும் பேசினால் முற்றிலும் இலவசம்.
Scheme Details:
Monthly Rental Rs.149 + 12.31% Tax (Nearly Rs.167 per month)
CUG numbers Unlimited Talk Time Free
Other Numbers 400 Mints Free
More than 400 Mints, 30 paise per Mint
250 Aircel to Aircel SMS free
2G internet - 500 mb free
Deposit Rs. 250 only
ஆசிரியர்களுக்காக பல்வேறு சிறப்பு திட்டங்களும் இருக்கின்றன
More Details Pls Contact:
Miss. Vijaya Lakshmi, Mobile 98424 01531
இத்திட்டத்தை வழங்குபவர்கள்:
Kaveri Communications, Trichy.
இத்திட்டத்தில் இணைந்துள்ள ஆசிரியர்கள் தங்களுக்குள் 24 மணிநேரமும் இலவசமாக பேசிக்கொள்ளலாம். ஒரு ஆசிரியர் குடும்ப உறுப்பினர்களிடம் இலவசமாக பேசிக்கொள்ள (தேவைபட்டால்) 3 சிம் கார்டுகள் வரை கூடுதலாக தரப்படும்.
இந்த 3 சிம்கார்டுகளில் இருந்தும் இத்திட்டத்தில் இணைந்துள்ள தமிழ் நாட்டில் உள்ள எந்த ஆசிரியரிடமும் பேசினால் முற்றிலும் இலவசம்.
Scheme Details:
Monthly Rental Rs.149 + 12.31% Tax (Nearly Rs.167 per month)
CUG numbers Unlimited Talk Time Free
Other Numbers 400 Mints Free
More than 400 Mints, 30 paise per Mint
250 Aircel to Aircel SMS free
2G internet - 500 mb free
Deposit Rs. 250 only
ஆசிரியர்களுக்காக பல்வேறு சிறப்பு திட்டங்களும் இருக்கின்றன
More Details Pls Contact:
Miss. Vijaya Lakshmi, Mobile 98424 01531
முடிந்தது நெட் தேர்வு: வழக்கு தொடர்ந்த மாணவருக்கு மட்டும் பிரெய்லி வினாத்தாள்
பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) தேசிய அளவிலான தகுதித் தேர்வில் (நெட்) நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பார்வையற்ற மாணவருக்கு மட்டும் பிரெய்லி வினாத்தாள் வழங்கப்பட்டுள்ளது.
தேர்வில் பங்கேற்ற பிற பார்வையற்ற மாணவர்களுக்கு இந்த பிரத்யேக வினாத்தாள் வழங்கப்படவில்லை.
யுஜிசி நடத்தும் உதவிப் பேராசிரியர் பணிக்கான "நெட்' தகுதித் தேர்வு நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று தேர்வெழுதினர். சென்னையில் 13 மையங்கள் உள்பட தமிழகம் முழுவதும் 47 மையங்களில் இந்தத் தேர்வு நடத்தப்பட்டது.
இந்த நிலையில், சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த மிராண்டா டாம்கின்ஸன் என்பவர் சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், "நெட்' தேர்வில் பங்கேற்கும் பார்வையற்ற மாணவர்களுக்கு பிரெய்லி முறை வினாத்தாள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.
270 பார்வையற்றோர் பங்கேற்பு:
ஆனால், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற "நெட்' தேர்வில் தமிழகத்தில் மட்டும் 270-க்கும் மேற்பட்ட பார்வையற்ற மாணவர்கள் பங்கேற்றபோதும், வழக்கு தொடர்ந்த மிராண்டாவுக்கு மட்டும் பிரெய்லி முறை வினாத்தாள் வழங்கப்பட்டது.
இவர் தேர்வெழுதிய எம்.ஜி.ஆர். ஜானகி பெண்கள் கல்லூரி மையத்தில் தேர்வெழுதிய மற்ற பார்வையற்ற மாணவர்களுக்கு இந்த பிரத்யேக வினாத்தாள் வழங்கப்படவில்லை.
அவர்கள் அனைவரும் வழக்கம்போல், உதவியாளர் ஒருவரின் உதவியுடனே தேர்வெழுதினர்.
இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத பார்வையற்ற தேர்வர் கூறியது:
பிறரது உதவியுடன் தேர்வெழுதும்போது, தவறாக பதிலளிக்க வாய்ப்புள்ளது என்பது உள்ளிட்ட காரணங்களால்தான் பிரெய்லி முறை வினாத்தாள் வழங்க வேண்டும் என மிராண்டா டாம்கின்ஸன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவுக்கு மாறாக மிராண்டாவுக்கு மட்டுமே பிரத்யேக வினாத்தாள் வழங்கியிருப்பது மிகுந்த கவலை அளிக்கிறது.
எனவே, வரும் காலங்களில் பார்வையற்ற மாணவர்கள் அனைவருக்கும் பிரெய்லி வினாத் தாள் வழங்க யுஜிசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதுகுறித்து யுஜிசி அதிகாரி ஒருவர் கூறுகையில், போதிய கால அவகாசம் இல்லாத காரணத்தாலேயே வழக்கு தொடர்ந்த மாணவருக்கு மட்டும் பிரெய்லி வினாத்தாள் வழங்கும் நிலை ஏற்பட்டது. வரும் காலங்களில் தேவைப்படும் எண்ணிக்கையில் இந்த வினாத் தாள்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும் என்றார்.
முதுநிலை தமிழாசிரியர் நியமன கவுன்சலிங் இன்று தொடக்கம்
அரசு மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை தமிழாசிரியர் பணியிடங்களில் புதியதாக ஆசிரியர்களை நியமிப்பதற்கான கவுன்சலிங் இன்றும் நாளையும் நடக்கிறது. சென்னை மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு விழுப்புரத்திலும், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு வேலூரிலும் கவுன்சலிங் நடக்கிறது.அரசு மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் நியமனத்துக்கான போட்டித் தேர்வு ஜூலை 21ம் தேதி நடந்தது. தமிழ் தவிர மற்ற பாடங்களுக்கான தேர்வு முடிவுகள் அக்டோபர் 7ம் தேதி வெளியிடப்பட்டது. தமிழாசிரியர்கள் தேர்வு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கில் கடந்த 11ம் தேதி வெளியிட்ட உத்தரவின் அடிப்படையில் தகுதியுள்ளவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதையடுத்து ஒரு பதவிக்கு ஒருவர் வீதம் சான்று சரிபார்ப்பு நடத்துவதற்கான பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 23ம் தேதி இணைய தளத்தில் வெளியிட்டது. இதையடுத்து அழைப்பு கடிதங்களையும் இணைய தளத்தில் வெளியானது. தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தங்களின் தேர்வு எண்ணை பதிவு செய்து இணைய தளத்தில் இருந்து அழைப்புக் கடிதங்கள் மற்றும் கவுன்சலிங்கில் பங்கேற்கும் போது பூர்த்தி செய்து கொடுக்க வேண்டிய படிவங்களையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் சான்று சரிபார்ப்பின் போது சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு வெயிட்டேஜ் மதிப்பெண் உள்ளிட்ட மதிப்பீடுகளுக்கு பிறகு இறுதி தெரிவு பட்டியல் வெளியிடப்படும்.
முதுநிலை பட்டதாரி தமிழாசிரியர்களுக்கான தேர்வை 32,000 பேர் எழுதினர். தற்போது மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள 602 இடங்களில் மேற்கண்ட தமிழாசிரியர்களை நியமிக்க 649 பேர் சான்று சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். டிஆர்பி நடத்தும் ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வுகளுக்கான கவுன்சலிங் பெரும்பாலும் சென்னையில்தான் நடப்பது வழக்கம். ஆனால் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கும் வெளி மாவட்டங்களில் இப்போது கவுன்சலிங் நடக்கிறது.
சான்று சரிபார்ப்பு நடக்கும் இடங்கள்:
* மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தேனி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி- மதுரை, தெப்பகுளம் பகுதியில் உள்ள ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் பெண்கள் மேல்நிலை பள்ளி.
* சேலம், நீலகிரி, கோவை, ஈரோடு, நாமக்கல், திருப்பூர்- சேலம், சூரமங்கலம், ஸ்ரீராமகிருஷ்ணா சாரதா மேல்நிலை பள்ளி.
* திருச்சி, கரூர், பெரம்பலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், அரியலூர், திண்டுக்கல், புதுக்கோட்டை- திருச்சி, புதூர், பிஷப் ஹீப்பர் மேல்நிலை பள்ளி.
* விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, சென்னை- விழுப்புரம், அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி.
* வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி-வேலூர், ஊரிஸ் மேல்நிலை பள்ளி.
பிஎப் வட்டி உயருமா? ஜனவரி 13ல் தெரியும்
தொழிலாளர்களின் பிஎப் தொகைக்கு 8.5% வட்டி வழங்கப்படுகிறது. இந்த நிதியாண்டும் (2013&14) அதே வட்டி விகிதமே தொடர்ந்து நீடிக்கும் என்று தெரிகிறது. ‘தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பில்’ நாடு முழுவதும் 5 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் சந்தாதாரர்களாக இருக்கின்றனர். இவர்களது சம்பளரூ.தில் இருந்து பிடிக்கப்படும் பிஎப் தொகைக்கு 2011&2012 ஆண்டில் வட்டி 8.25% வழங்கப்பட்டது. இந்நிலையில், 8.25 சதவீதரூ.தை உயர்ரூ.தி 2012&2013ம் ஆண்டில் வட்டி தொகை 8.5% ஆக வழங்கப்பட்டது. இதன் மூலம் பிஎப் தொழிலாளர்களின் ஒட்டு மொரூ.த கணக்கில் ரூ.56.96 கோடி கூடுதலாக சேர்க்கப்படுகிறது. ஒட்டு மொரூ.தமாக பிஎப் தொகை ரூ.20,796.96 கோடி இருக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. பிஎப்க்கு வழங்கப்ப டும் வட்டி விகிதரூ.தை 9 சதவீதமாக உயர்ரூ.த வேண்டும் என்று தொழிலாளர்கள் கோரிக்கை விடுரூ.து வருகின்றனர்.
இந்நிலையில், மரூ.திய தொழிலாளர் துறை அமைச்சரும், பிஎப் அமைப்பின் மரூ.திய வாரிய அறக்கட்டளை குழுவின் தலைவருமான ஆஸ்கார் பெர்ணான்டஸ் தலைமையில் அறக்கட்டளையின் கூட்டம் ஜனவரி 13ம் தேதி நடக்கிறது. இதில், பிஎப் வட்டி தொகையை உயர்ரூ.துவதா அல்லது தற்போது உள்ள நிலையே தொடர்வதா என்பது குறிரூ.து முடிவு செய்யப்படும் என்று பிஎப் வட்டாரங்கள் தெரிவிரூ.தன. கடந்த ஒரு வருடரூ.திற்கு பிறகு இந்த கூட்டம் நடக்கவுள்ளது என்றும் தற்போது உள்ள வட்டி 8.5 சதவீதமே 2013&14ம் ஆண்டிற்கும் நீடிக்கும் என்றும், வட்டி விகிதரூ.தை உயர்ரூ.தினால் அதற்கு நிதி அமைச்சகரூ.தின் ஒப்புதல் வேண்டும் என்றும், கூடுதலாக நிதி சுமை ஏற்படும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவிரூ.தன.
மின்சாரம் இல்லாத நேரங்கள், பொழுதை போக்குவதில் குழப்பங்கள்: இளம் பருவத்தினர் தவிப்பு
பள்ளி, கல்லூரி முடித்து வந்த பின்னரும், விடுமுறை நாட்களிலும் பொழுதுகளை கழிப்பது கடினமான செயலாக பதின் பருவத்தினரிடையே காணப்படுகிறது. ஒரே செயல்பாட்டை நாள் முழுவதுக்குமானதாக தொடர இளம் தலைமுறையால் முடிவதில்லை. புதியவற்றை அவர்கள் மனம் தேட ஆரம்பித்துவிடுகிறது. இதன் காரணமாக பொழுதை போக்குவதில் கூட குழப்பங்கள் ஏற்படுகிறது.
இளம் பருவத்தினர் பாடங்கள் படிப்பதை தவிர்த்து மீதமான நேரத்தை எப்படி செலவழிப்பது என்பதில் தெளிவில்லாமலேயே இருக்கின்றனர். பொழுதை கழிப்பதற்காக முதலாவதாக இவர்கள் தேர்ந்தெடுப்படுப்பது தொலைக்காட்சியை, அடுத்ததாக கணினி விளையாட்டுகள், திரைப்படம் என தங்களுக்கு விருப்பமானதாக தெரியும் இவற்றை பயன்படுத்துகின்றனர். நண்பர்கள் இணைந்து திரைப்படம் பார்க்கிறார்கள் என்றால் திரைப்படம் முடிந்தவுடன், நண்பர்களுக்கிடையே ஒவ்வொருவரிடமிருந்தும் "அடுத்து என்ன செய்வது?, அங்கே போவதா?, இங்கே போவதா?" என்று கேள்விகள் எதிர்படுகின்றன. எங்கு போக வேண்டும் என்று சொன்னாலும், அது முதலில் தவிர்க்கப்பட்டு பின்னர் எதாவது இரு திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டு அங்கே திருப்தியில்லாமல் செல்லக்கூடிய நிலையே காணப்படுகிறது.
நேரத்தை எப்படி கழிப்பது என்று கூட தெரியாமல் அல்லது புரியாத தலைமுறைகளாக இந்தத் தலைமுறை வளர்ந்துகொண்டிருக்கிறது. இந்தத் தலைமுறைக்கு சரியான வழிகாட்டுதல்கள் இல்லாததோ அல்லது அதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் வகையில் சூழ்நிலைகளை கட்டமைக்கப்படாதது கூட காரணமாக இருக்கலாம். நேரத்தை எப்படி கழிப்பது? என்பதை சென்னையை கடந்து வெளியூர்களில் இருக்கும் நகரத்து குழந்தைகள் சமீப காலமாக உணர்ந்து வருகின்றனர். அதற்கு காரணம் மின்சாரம் இல்லாத நேரங்கள்.
ஏனென்றால், நேரத்தை செலவழிப்பதற்கு மின்சாரத்தால் இயங்கும் சாதனங்களைத் தான் பயன்படுத்துகிறார்கள். இந்த வகை சாதனங்கள் நேரத்தை மட்டுமல்ல அறிவு வளர்ச்சிக்கும் பெரும் தடையை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. மின் மற்றும் மின்னணு சாதனங்கள் மனிதர்களுக்கு இடையே இடைவெளியையும், இயற்கைக்கும் மனிதனுக்குமான தொடர்பில் பாதிப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. இந்த தடுமாற்றங்களை சரி செய்ய வேண்டுமென்றால் மீண்டும் தடைகளை கடந்து வெளியேற வேண்டியது இருக்கிறது.
பொழுதை கழிக்கக்கூடிய நேரங்கள் அனைத்தும் உபயோகமானதாக இருக்கிறதா என்பதில் இளம் பருவத்தினர் கவனம் செலுத்துவதில்லை. ஒரு சில பெற்றோரும் "தங்கள் பிள்ளை தொந்தரவு செய்யாமல் இருக்கிறதே அதுவே போதும்" என்ற மனநிலையில் தான் இருக்கின்றனர். அவசியமில்லாததில் நேரத்தையும், மூளையையும் செலவிடும் இது போன்ற நிலையால், எதிர்கால சமூகத்தின் வளர்ச்சியில் தளர்ச்சி ஏற்படும் எனபதனை பலரும் நினைத்துப் பார்ப்பதில்லை.
நேரங்களை உபயோகமான முறையில் மேம்படுத்த நண்பர்களோடு தங்கள் முந்தைய காலத்தில் செய்த குறும்புகள், விளையாட்டுக்கள் ஆகியவற்றை ஓவ்வொருவரும் பகிர்ந்துகொள்வதே மிகச்சிறந்த பொழுதுபோக்காகும். மனம் தகவல்களை பரிமாறிக்கொள்ளும்போது உற்சாகத்தால் நிரம்பி வழிகின்றது. இரவு நேரமாக இருந்தால் வானத்தின் நிலவொளியில் உற்சாகமாக பேசலாம். மரங்கள் சூழ்ந்த பகுதியில் மோட்டார் வாகனங்களை தவிர்த்து கைவீசி பேசலாம். பறவைகளையும், கடல் அலையையும் ரசிக்கலாம். கடல் இல்லாவிட்டால் ஆற்றின் நீரோட்டத்தையும், குளத்தின் அமைதியையும் கண்டு உணரலாம். இயற்கை கணக்கில்லாத பாடங்களை நமக்கு கற்றுத்தர தயாராக இருக்கிறது. பாடங்கள் படிக்க தயாரா?
Sunday 29 December 2013
11ம் வகுப்பிற்கு முப்பருவ கல்வி: வலியுறுத்தும் கல்வித்துறை
"தனியார் பள்ளிகள், அரசு விதிமுறைகளை மதிக்காமல், பிளஸ் 1 வகுப்பில் முழுக்க முழுக்க பிளஸ் 2 பாடத்தையே நடத்துகின்றன. இதை தவிர்க்கவும், பிளஸ் 1 வகுப்பிற்கு உரிய முக்கியத்துவம் அளிக்கவும், முப்பருவ கல்வி முறையை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும்" என கல்வித்துறை வலியுறுத்தி உள்ளது.
தனியார் பள்ளிகளின் வளர்ச்சியில், பிளஸ்2, 10ம் வகுப்பு பொதுதேர்வு முடிவுகள், 100 சதவீத பங்கை வகிக்கின்றன. 100 சதவீத தேர்ச்சி மற்றும் மாநில அளவில், குறிப்பிடத்தக்க இடங்களை பெறுவதன் மூலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, ஈரோடு உள்ளிட்ட சில மாவட்டங்களில் உள்ள தனியார் பள்ளிகள், பிரமாண்ட வளர்ச்சியை பெற்றுள்ளன.
வட மாவட்டங்களைச் சேர்ந்த பெற்றோரும், தங்கள் பிள்ளைகளை, இந்த மாவட்டங்களில் உள்ள தனியார் பள்ளிகளில் சேர்த்து, லட்சக்கணக்கில் செலவழிக்கின்றனர். தனியார் பள்ளிகளில், ஒன்பதாம் வகுப்பிலும், பிளஸ் 1 வகுப்பிலும், அந்த வகுப்பிற்குரிய பாடங்களுக்கு, முக்கியத்துவம் அளிப்பதில்லை. ஒன்பதாம் வகுப்பில், 10ம் வகுப்பு பாடத்தை நடத்துவதையும், பிளஸ்1 வகுப்பில், பிளஸ்2 பாடத்தை நடத்துவதையும், பல ஆண்டுகளாக, கடைப்பிடித்து வருகின்றனர்.
இரு ஆண்டுகள், ஒரே பாடத்தை படிப்பதன் மூலம், மாணவர்களுக்கு, பாடப் பகுதிகள், நன்றாக மனப்பாடம் ஆகிவிடுகின்றன. தேர்வில் சாதிப்பதற்கு இதுவே காரணமாக உள்ளது. இதுபோன்ற விதிமீறலை தடுக்கவும், பிளஸ்1 வகுப்பிற்கு உரிய முக்கியத்துவம் அளிக்கவும், இந்த வகுப்பிலும் முப்பருவ கல்வி முறையை அமல்படுத்தலாம் என கல்வித்துறை கருதுகிறது.
அதிகாரி ஒருவர் கூறியதாவது: பிளஸ்1 வகுப்பு, பெயர் அளவிற்குத் தான் உள்ளது. பாடமும், சரியாக நடத்துவதில்லை; தேர்வும், முறையாக நடப்பதில்லை. முப்பருவ கல்வி முறையை அமல்படுத்தினால், தனியார் பள்ளிகள் உட்பட அனைத்து வகை பள்ளிகளிலும், முறையாக, பிளஸ் 1 வகுப்புகள் நடக்கும்.
அந்தந்த பருவ பாடங்களை, ஆசிரியர் நடத்துவர்; தேர்வும் முறையாக நடக்கும். இதனால், முன்கூட்டியே, பொது தேர்வு பாடங்களை நடத்துவதையும் தடுக்க முடியும்.
தற்போது, ஒன்பதாம் வகுப்பிலும், முப்பருவ கல்வி முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், அனைத்து பள்ளிகளிலும் ஒன்பதாம் வகுப்பு பாடங்கள், சரியாக நடக்கின்றன. 10ம் வகுப்பு பாடத்தை, முன்கூட்டியே நடத்துவதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு, அந்த அதிகாரி தெரிவித்தார்.
பத்தாம் வகுப்பிற்கு, முப்பருவ கல்வி முறை வருவதே, பெரும் குழப்பத்தில் உள்ள நிலையில், பிளஸ் 1 வகுப்பிற்கு வருமா என்பது கேள்விக்குறியே.
500 நடுநிலைப்பள்ளிகளை தரம் உயர்த்த வேண்டும் இடைநிலை கல்வி இயக்ககம் மத்திய அரசுக்கு பரிந்துரை
500 நடுநிலைப்பள்ளிகளை, உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்த வேண்டும் என்று இடைநிலை கல்வி இயக்ககம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய உள்ளது.
ரூ.177 கோடி ஒதுக்கீடு
பின்தங்கிய ஒன்றியங்களில் மாதிரி பள்ளிகளை தொடங்கும் மத்திய அரசின் திட்டப்படி, தமிழ்நாட்டில் 44 மாதிரி பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன. அதில் 11 பள்ளிகளுக்கு கட்டிடம் கட்டும் பணி முடிந்துவிட்டது.
7 பள்ளிகளுக்கு கட்டிட பணி முடியும் நிலையில் உள்ளது. 2-வது கட்டமாக 26 பள்ளிகளுக்கும், விடுதிகளுக்கும் கட்டிடம் கட்டப்பட உள்ளது. இதற்காக மத்திய அரசு கொடுத்த நிதியுடன், கட்டிட செலவு அதிகரித்துள்ளதால் மத்திய அரசு கொடுத்த நிதி போக, தேவைப்படும் எஞ்சிய நிதியையும் தமிழக அரசு ஏற்றுள்ளது. அதன்படி ரூ.177 கோடியே 44 லட்சத்தை முதல்- அமைச்சர் ஜெயலலிதா வழங்கி உள்ளதாக கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
500 பள்ளிகளை தரம் உயர்த்த
இடைநிலை கல்வி திட்டத்தின்படி வருகிற கல்வி ஆண்டில் 500 நடுநிலைப்பள்ளிகளை, உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்த வேண்டும் என மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய உள்ளோம் என்றும் அவர் கூறினார்.
மெல்ல கற்கும் மாணவர்களை தேர்ச்சிபெற வைக்க வேண்டும்: பள்ளிக் கல்வி இணை இயக்குநர்
பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி படிக்கும் மாணவர்களில் மெல்ல கற்பவர்களைக் கண்டறிந்து, சிறப்புப் பயிற்சியை அளித்து, தேர்ச்சி பெற வைக்கும் வகையில் ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டும் என்றார் பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (இடைநிலை) எம். பழனிச்சாமி.
திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற பள்ளித் தலைமையாசிரியர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று, மேலும் அவர் பேசியது:
பிளஸ்2, எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க வேண்டும். மாவட்ட மற்றும் மாநில அளவில் சிறப்பிடங்களைப் பெற வேண்டும். அரையாண்டுத் தேர்வு முடிந்த பின்னர், தேர்வில் மாணவ, மாணவிகள் பெறும் மதிப்பெண்களைக் கொண்டு ஆய்வு செய்ய வேண்டும்.
தேர்வில் தோல்வியடையும் மாணவர்களைப் பற்றிய விவரங்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு எளிதான பாடங்களைக் கொண்டு அடிக்கடித் தேர்வு நடத்த வேண்டும்.
வகுப்பு ஆசிரியர், பாடஆசிரியர் மெல்ல கற்கும் மாணவர்களையும் கண்டறிந்து அவர்களை தேர்ச்சி பெறுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். அதுபோல, ஒவ்வொரு வகுப்பறையிலும் அதிக மதிப்பெண்களைப் பெற்று சிறப்பிடம் பெறும் மாணவ, மாணவிகளைக் கண்டறிந்து, அவர்கள் மாநில அளவில் சிறப்பிடம் பெறுவதற்கான பணிகளை மேற்கொள்வதுடன், அவர்களுக்குச் சிறப்புப் பயிற்சியையும் அளிக்க வேண்டும்.
ஒவ்வொரு 15 நாள்களுக்கு ஒருமுறையும் பாட ஆசிரியர்கள், வகுப்பாசிரியர்களுடன் பள்ளித் தலைமையாசிரியர்கள் மாணவர்களின் கல்வி நிலை குறித்து கலந்து ஆலோசிக்க வேண்டும். இதுபோல பெற்றோரையும் அழைத்து பேச வேண்டும் என்றார் பழனிச்சாமி.
கூட்டத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கே. செல்வக்குமார் மற்றும் பள்ளித் தலைமையாசிரியர்கள் பங்கேற்றனர்
கட்டண நிர்ணய விசாரணைக்கு ஆஜராகாத 760 தனியார் பள்ளிகள் நிலை என்ன?
தனியார் பள்ளிகளுக்கு 20132016ம் ஆண்டுக்கான கட்டணம் நிர்ணயிப்பது தொடர்பாக நடந்த விசாரணையில் இதுவரை ஆஜராகாத 760 தனியார் பள்ளிகளுக்கு கட்டண கமிட்டி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.தனியார் பள்ளிகள் கட்டணத்தை முறைப்படுத்த கடந்த 2009ம் ஆண்டு அமைக்கப்பட்ட கட்டண கமிட்டி கடந்த 2010ம் ஆண்டு சுமார் 13 ஆயிரம் பள்ளிகளுக்கு கட்டணத்தை நிர்ணயித்தது. அதில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் மீண்டும் நேரடியாக விசாரணை நடத்தப்பட்டு 2013ம் ஆண்டு வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த ஆண்டுடன் கட்டணம் முடிந்த பள்ளிகளுக்கு அடுத்த 3 ஆண்டுகளுக்கான கட்டணம் நிர்ணயிக்க மேற்கண்ட பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
அதை தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் ஒரு கட்டமாகவும், ஆகஸ்ட் மாதம் அடுத்த கட்டமாகவும் விசாரணை நடத்தி 2016ம் ஆண்டு வரை செல்லுபடியாகும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. இந்த விசாரணையில் இதுவரை 11 ஆயிரத்து 126 பள்ளிகள் நேரில் ஆஜராகி அடுத்த 3 ஆண்டுக்கான கட்டணம் வசூலிக்கும் உத்தரவை பெற்றுள்ளன.ஆனால் 760 பள்ளிகள் இன்னும் கட்டண கமிட்டியில் ஆஜராகவில்லை. இந்த பள்ளிகள் மூடப்பட்டனவா?, அங்கீகாரம் பெறும் பணிகள் நடக்கிறதா?, அல்லது கட்டண கமிட்டிக்கே தெரியாமல் இயங்குகின்றனவா? என்ற சந்தேகம் கட்டண கமிட்டிக்கு எழுந்துள்ளது. இதையடுத்து, மேற்கண்ட 760 பள்ளிகளை 3 பிரிவுகளாக பிரித்து அந்த பள்ளிகளின் பெயரை குறிப்பிட்டு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் கட்டண கமிட்டியின் தலைவர் நீதிபதி சிங்காரவேலு நோட்டீஸ் அனுப்பினார்.
அதில் மேற்கண்ட 760 பள்ளிகளின் உண்மையான நிலை என்ன? அவை இயங்குகிறதா? என்று கேட்டுள்ளார். மேலும் மேற்கண்ட பள்ளிகள் விரைவில் கட்டண கமிட்டியில் நேரில் ஆஜராக வேண்டும். இல்லை என்றால் பள்ளிகளை மூட முதன்மை கல்வி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இதுதவிர 760 பள்ளிகளில் மூடப்பட்ட பள்ளிகள் எத்தனை, மீதம் உள்ள பள்ளிகள் எத்தனை என்றும் விளக்கம் கேட்டுள்ளார்.இதையடுத்து 19 மாவட்டங்களில் இருந்து கட்டண கமிட்டிக்கு விவரங்கள் வந்துள்ளன. அதன்படி 115 பள்ளிகள் மூடப்பட்டதாகவும், 126 பள்ளிகளில் அங்கீகாரம் பெறுவது தொடர்பான பணிகள் நடப்பதாகவும் தகவல் கூறியுள்ளனர். இன்னும் 634 பள்ளிகள் குறித்த தகவல்கள் வர வேண்டியுள்ளது.
இதுவரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்ட 11 ஆயிரத்து 126 பள்ளிகளில் 1.5 சதவீத பள்ளிகள் இந்த கட்டணம் போதாது என்று கூறி நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளன. அந்த மேல்முறையீட்டில் உயர் நீதிமன்றம் வழங்கும் உத்தரவை அடிப்படையாக கொண்டு கட்டண கமிட்டி மீண்டும் விசாரணை நடத்தி கட்டணத்தை திருத்த வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற பிரச்னைகளை சமாளிக்க ஒரு பள்ளியை ஒருமுறைக்கு மேல் விசாரிப்பதில்லை என்ற முடிவு எடுக்க கட்டண கமிட்டியின் உறுப்பினர்கள் திட்டமிட்டுள்ளனர். இதை கமிட்டி எந்த அளவுக்கு நடைமுறைப்படுத்தும் என்று தெரியவில்லை.
இது ஒருபுறம் இருக்க, கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளை ஒழுங்குபடுத்த வேண்டிய நிலையும் கமிட்டிக்கு ஏற்பட்டுள்ளது. அதனால், கட்டணத்தை நிர்ணயித்துவிட்டு கமிட்டி சும்மா இருந்து விடாமல் பள்ளிகளுக்கு நேரடியாக சென்று பார்வையிட வேண்டும். கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது கமிட்டியே நேரடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான விதிகளை கட்டண கமிட்டிக்காக உருவாக்கப்பட்ட சட்ட விதிகளில் சேர்க்க வேண்டும் என்று பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். இவற்றின் மீது அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.
முதுநிலை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வில் ஆசிரியர்கள் ஏமாற்றம்
தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் வட்டார வள மையங்களில் முதுநிலை ஆசிரியர் பணி நிலையில் பணிபுரிந்து வரும் 44 மேற்பார்வையாளர்கள், 19 ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு அரசு மேல்நிலைப் பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர்களாக மாறுதல் வழங்குவதற்கான கலந்தாய்வு நேற்று நடந்தது.அதே நேரம் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதற்கான கலந்தாய்வும், தமிழகம் முழுவதும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலகங்களிலும் ஆன்லைன் மூலம் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது.
அதற்கு முன்னதாக மாவட்டங்களில் காலியாக இருந்த பணியிடங்களின் பட்டியல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் ஒட்டப்பட்டிருந்தது. நெல்லை மாவட்டத்தில் 73 பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தன. இவற்றுக்கு வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் மூவரும், ஆசிரியர் பயிற்றுநர்கள் இருவர், பட்டதாரி ஆசிரியர்கள் 42 பேர் என 47 பேர் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். கலந்தாய்வு தொடங்கிய போது பல மாவட்டங்களில் முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் மாயமாகி இருந்தன. வெளியே ஒட்டப்பட்டிருந்த பட்டியலுக்கும், கணினி திரையில் காண்பித்த பட்டியலுக்கும் தொடர்பு இல்லாமல் இருந்தது. இதனால் ஆசிரியர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய உடற்கல்வி ஆசிரியர் கைது
வேலூரில், ஒரு லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கிய, உடற்கல்வி ஆசிரியர் கைது செய்யப்பட்டார். வேலூர் மாவட்டம், பள்ளி கொண்டா அடுத்த, கேமராயன் பேட்டையைச் சேர்ந்தவர், புவனா. இவர், குடியாத்தம், நெல்லூர் பேட்டை அரசினர் உயர் நிலைப் பள்ளியில், ஆங்கில ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். இவரை, கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளிக்கு, இடமாறுதல் செய்து, உத்தரவிடப்பட்டது. பள்ளிக்கு போய் வர சிரமம் ஏற்படுவதாக, பல்லாங்குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளியில், உடற்கல்வி ஆசிரியராக வேலை பார்க்கும், ஏரி குத்தியைச் சேர்ந்த, கலையரசன் என்பவரிடம், புவனா கூறியுள்ளார். "தனக்கு கல்வித் துறையில் உயர் அதிகாரிகளையும், கல்வித்துறை அமைச்சரையும் தெரியும் எனவும், மூன்று லட்ச ரூபாய் இருந்தால் மட்டும், முன் பணியாற்றிய பள்ளிக்கே, இடமாறுதல் வாங்கித் தருவதாகவும்' புவனாவிடம், உடற்கல்வி ஆசிரியர் கலையரசன் தெரிவித்துள்ளார். அதிர்ச்சி அடைந்த புவனா, லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் அறிவுரைப்படி, ரசாயனம் தடவிய, ஒரு லட்ச ரூபாய் பணத்தை, உடற்கல்வி ஆசிரியர் கலையரசனிடம், புவனா கொடுத்தார்.மறைந்திருந்த போலீசார்,கலையரசனை கைது செய்தனர்.
தனியார் பள்ளிகளின் விதிமீறலை தடுக்க பிளஸ்1வகுப்பிற்கும் முப்பருவ கல்வி முறை
'தனியார் பள்ளிகள், அரசு விதிமுறைகளை மதிக்காமல், பிளஸ் 1 வகுப்பில், முழுக்க முழுக்க, பிளஸ்2 பாடத்தையே நடத்துகின்றன. இதை தவிர்க்கவும், பிளஸ்1 வகுப்பிற்கு, உரிய முக்கியத்துவம் அளிக்கவும், முப்பருவ கல்வி முறையை, தமிழக அரசு அமல்படுத்த வேண்டும்' என, கல்வித் துறை வலியுறுத்தி உள்ளது.
பிரமாண்ட வளர்ச்சி: தனியார் பள்ளிகளின் வளர்ச்சி யில், பிளஸ்2, 10ம் வகுப்பு பொதுதேர்வு முடிவுகள், 100 சதவீத பங்கை வகிக்கின்றன. 100 சதவீத தேர்ச்சி மற்றும் மாநில அளவில், குறிப்பிடத்தக்க இடங்களை பெறுவதன் மூலம், நாமக்கல், கிருஷ்ண கிரி, ஈரோடு உள்ளிட்ட சில மாவட்டங்களில் உள்ள தனியார் பள்ளிகள், பிரமாண்ட வளர்ச்சியை பெற்றுள்ளன. வட மாவட்டங்களைச் சேர்ந்த பெற்றோரும், தங்கள் பிள்ளைகளை, இந்த மாவட்டங்களில் உள்ள தனியார் பள்ளிகளில் சேர்த்து, லட்சக்கணக்கில் செலவழிக்கின்றனர். தனியார் பள்ளிகளில், ஒன்பதாம் வகுப்பிலும், பிளஸ்1 வகுப்பிலும், அந்த வகுப்பிற்குரிய பாடங்களுக்கு, முக்கியத்துவம் அளிப்பதில்லை. ஒன்பதாம் வகுப்பில், 10ம் வகுப்பு பாடத்தை நடத்துவதை யும், பிளஸ்1 வகுப்பில், பிளஸ்2 பாடத்தை நடத்துவதையும், பல ஆண்டுகளாக, கடைப்பிடித்து வருகின்றனர். இரு ஆண்டுகள், ஒரே பாடத்தை படிப்பதன் மூலம், மாணவர்களுக்கு, பாடப் பகுதிகள், நன்றாக மனப்பாடம் ஆகிவிடுகின்றன. தேர்வில், சாதிப்பதற்கு, இதுவே காரணமாக உள்ளது. இதுபோன்ற விதிமீறலை தடுக்கவும், பிளஸ்1 வகுப்பிற்கு, உரிய முக்கியத்துவம் அளிக்கவும், இந்த வகுப்பிலும், முப்பருவ கல்வி முறையை அமல்படுத்தலாம் என, கல்வித் துறை கருதுகிறது.
அதிகாரி ஒருவர் கூறியதாவது: பிளஸ்1 வகுப்பு, பெயர் அளவிற்குத் தான் உள்ளது. பாடமும், சரியாக நடத்துவதில்லை; தேர்வும், முறையாக நடப்பதில்லை. முப்பருவ கல்வி முறையை அமல்படுத்தினால், தனியார் பள்ளிகள் உட்பட, அனைத்து வகை பள்ளிகளிலும், முறையாக, பிளஸ்1 வகுப்புகள் நடக்கும்.
குழப்பம்:
அந்தந்த பருவ பாடங்களை, ஆசிரியர் நடத்துவர்; தேர்வும் முறையாக நடக்கும். இதனால், முன்கூட்டியே, பொது தேர்வு பாடங்களை நடத்துவதையும் தடுக்க முடியும். தற்போது, ஒன்பதாம் வகுப்பிலும், முப்பருவ கல்வி முறை அமல்படுத்தப் பட்டுள்ளது. இதனால், அனைத்து பள்ளிகளிலும், ஒன்பதாம் வகுப்பு பாடங்கள், சரியாக நடக்கின்றன. 10ம் வகுப்பு பாடத்தை, முன்கூட்டியே நடத்துவதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு, அந்த அதிகாரி தெரிவித்தார். பத்தாம் வகுப்பிற்கு, முப்பருவ கல்வி முறை வருவதே, பெரும் குழப்பத்தில் உள்ள நிலையில், பிளஸ்1 வகுப்பிற்கு வருமா என்பது, கேள்விக்குறியே.
முதுகலை ஆசிரியராக 733 பேருக்கு "புரமோஷன்'
முதுகலை ஆசிரியராக, 733 பேருக்கு, இன்று நடந்த கலந்தாய்வில், பதவி உயர்வு, உத்தரவுகள் வழங்கப்பட்டன.பட்டதாரி ஆசிரியரில், முதுகலை ஆசிரியர் தகுதி வாய்ந்த, 897 பேருக்கு, பதவி உயர்வு வழங்க, மாநிலம் முழுவதும், இன்று, கலந்தாய்வு நடந்தது. 3,000 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள், காலியாக இருந்தும், கடைசியில், 733 பேர் மட்டுமே, பதவி உயர்வு பெற, முன் வந்தனர். இவர்களுக்கு மட்டும், பதவி உயர்வுக்கான உத்தரவுகள் வழங்கப்பட்டன.பதவி உயர்வு இடம், எதிர்பார்ப்பிற்கு மாறாக, நீண்ட தொலைவில் இருந்ததால், 164 பேர், பதவி உயர்வை புறக்கணித்தனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில், 40, திருவள்ளூரில், 31, வேலூரில், 47, சேலத்தில், 48 பேர், பதவி உயர்வு பெற்றனர். சென்னை மாவட்டத்தில், ஐந்து காலி பணியிடங்கள் மட்டுமே இருந்தன.கலந்தாய்வில், 26 பேர், பங்கேற்றபோதும், "சீனியர்' ஐந்து பேர், காலியிடங்களை தேர்வு செய்தனர். இதனால், 21 பேர், பதவி உயர்வை புறக்கணித்தனர்.
Saturday 28 December 2013
அனைத்து அரசு ஊழியர்களுக்கும் அடையாள அட்டை அவசியம்: தமிழக அரசு அதிரடி உத்தரவு
மாவட்டங்களில் பணிபுரியும் அரசு அலுவலர்கள் முதல் தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் அரசு உயரதிகாரி வரை அனைவரும் பணியின்போது கட்டாயம் அடையாள அட்டை அணிந்திருக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்த உத்தரவு அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், தலைமைச் செயலகத்தில் உள்ள துறைகளின் செயலாளர்கள், மாவட்ட நீதிபதிகள், குற்றவியல் தலைமை நீதிபதிகள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் என அரசு ஊழியர்கள் பணியாற்றும் அனைத்து இடங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவை பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை செயலாளர் பி.டபிள்யூ.சி.டேவிதார் பிறப்பித்துள்ளார்.
இந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
அரசு அலுவலகங்களில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும் அடையாள அட்டை அணிய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையில் அரசு பணியாளரின் பெயர் மற்றும் பதவி ஆகியன ஆங்கிலத்தில் மட்டுமே குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதற்கு பதிலாக, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒன்றின் கீழ் ஒன்று இடம் பெறுமாறு மாற்றி அமைத்து உரிய அடையாள அட்டைகளை வழங்குமாறு அனைத்துத் துறைத் தலைவர்களும் மாவட்ட ஆட்சியர்களும் ஏற்கெனவே கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், அனைத்து அரசுப் பணியாளர்களும் அலுவலகத்தில் பணியாற்றும் நேரங்களில் அடையாள அட்டையை தவறாது அணிந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அனைத்துத் துறைத் தலைவர்களும் மாவட்ட ஆட்சியர்களும் தங்களுக்குக் கீழேயுள்ள சார்நிலை அலுவலகங்களுக்கு இது தொடர்பாக உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும் என்று தனது உத்தரவில் டேவிதார் கேட்டுக் கொண்டுள்ளார்.
யாரும் அணிவதில்லை: தலைமைச் செயலகம், சட்டப் பேரவைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் அனைத்திலும் பணியாற்றும் ஊழியர்களுக்கு தனித்தனியே புகைப்படத்துடன் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த அடையாள அட்டைகளை பெரும்பாலான பணியாளர்கள் அணிவதில்லை என்று புகார்கள் கூறப்பட்டு வந்தன.
இந்தப் புகார்களைத் தொடர்ந்து அரசு பணியாளர்கள் அனைவரும் அடையாள அட்டையை அணிய வேண்டும் என்ற மாநிலம் தழுவிய உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழ், ஆங்கில மீடியம் 10, 12ம் வகுப்பு சமச்சீர் டிவிடி வீடியோ கைடு
10ம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில வழி சமச்சீர் கல்வி மாணவர்களுக்காக தமிழ், கணிதம் ஆகியவை 22 மணிநேரம் அனுபவமிக்க ஆசிரியர்களால் படமாக்கப்பட்டு, தேர்வுக்கான முக்கிய வினாக்களுக்கு விடையுடன் கூடிய டிவிடிக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. அறிவியல், சமூக அறிவியல் பாடங்களும், 3டி அனிமேஷன் முறையிலும், கணினி மூலம் பயிற்சி பெறும் சிடிக்களும் உள்ளன. 12ம் வகுப்பு கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், 3டி அனிமேஷன் முறையில் ஒலி, ஒளியுடன் விளக்க சிடிக்கள், சமச்சீர் பாடத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கு டிவிடிக்கள் உள்ளன. சிபிஎஸ்இ மாணவர்களுக்கு சிசிஇ முறையில் முறையில்Work Sheet, NCRET மற்றும் Conceptsஆகியவை உள்ளடங்கிய சிடிக்களும் உள்ளன. மேலும்Olympaid, IIT Preparation, Spoken English, Phonics, TNPSC, UPSC, Tally, Quiz, Yoga உள்பட பல பொறியியல் சிடிக்கள், திருக்குறள், பாரதியார் பாடல், கதைகள் , ராமாயணம், மகாபாரதம் உள்ளன. கல்வி டிவிடி கண்காட்சி டிசம்பர் 20ம் தேதி முதல் மயிலாப்பூர் குளம் அருகில், தாம்பரத்தில் நகராட்சி அலுவலகம் அருகில், அருணா ஜானகி மஹால். அம்பத்தூரில் திருமால் மஹால் முருகன் கோயில் அருகில், கோயம்பேடு மற்றும் போரூர் ஏ.வி. எஸ் புத்தக கண்காட்சி வளாகத்திலும் நடக்கிறது. நிரந்தர ஷோரூம் எண் 50, மார்சல்ஸ் ரோடு, லட்சுமி அபார்ட்மென்ட், ராஜரத்தினம் மைதானம் எதிரில், எழும்பூர் சென்னை,8. மேலும் விவரங்களுக்கு 98945 79294, 93802 84061 என்ற எண்களிலும் அருகில் உள்ள புத்தக கடைகளிலும் தொடர்பு கொள்ளவும்.
நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு 25 சதவீதம் பதவி உயர்வு அளிக்க கோரிக்கை
நேரடி முதுகலை ஆசிரியர் நியமனத்தில் கடைபிடிக்கப்படும், 50 சதவீதத்தில், 25 சதவீதத்தை, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்கி, பதவி உயர்வு செய்ய வேண்டும்' என, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம், வலியுறுத்தி உள்ளது. சங்க தலைவர், தியாகராஜன், பள்ளி கல்வி இயக்குனருக்கு அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: தொடக்க கல்வித் துறையின் கீழ், நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியரில், முதுகலை ஆசிரியர் தகுதி வாய்ந்தவர்களுக்கு, கடைசி வரை, பதவி உயர்வே கிடையாது. பள்ளி கல்வித் துறையில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர் மட்டும், கல்வி தகுதிக்கு ஏற்ப, பதவி உயர்வு பெற முடிகிறது. தற்போது, முதுகலை ஆசிரியர் காலி இடங்களில், 50 சதவீதம், பதவி உயர்வு மூலமும், 50 சதவீதம், நேரடி நியமனம் மூலமும் நிரப்பப்படுகின்றன. இதில், நேரடி நியமனத்திற்கான, 50 சதவீத இடங்களில், 25 சதவீதத்தை, நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒதுக்கி, பதவி உயர்வு வழங்க வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறியுள்ளார்.
தியாகராஜன் கூறியதாவது: முதுகலை ஆசிரியர் பணிக்கு தகுதி வாய்ந்தவர்கள், பட்டதாரி ஆசிரியர் பணிக்கும், தகுதியானவராக இருக்கின்றனர். எனவே, இரு தேர்வுகளிலும், அவர்கள் பங்கேற்கலாம். பட்டதாரி ஆசிரியர், அதிகளவில் தேர்வு செய்யப்படுவதால், அவர்களுக்கு கூடுதல் வாய்ப்பு உள்ளது. ஆனால், எங்களுக்கு, முதுகலை ஆசிரியர் பதவி உயர்வைத் தவிர, வேறு வாய்ப்பு இல்லை. எனவே, எங்களுக்கு, 25 சதவீதம் பதவி உயர்வு வழங்குவதால், யாருக்கும் பாதிப்பு ஏற்படாது, என்றார்.
Subscribe to:
Posts (Atom)