Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Wednesday, 25 December 2013

பென்ஷன் வழங்க கோரி பட்டதாரி ஆசிரியர்கள் 27ம் தேதி உண்ணாவிரதம்


 தமிழ்நாடு அரசு பட்டதாரி ஆசிரியர்கள் சங்க தலைவர் சங்கர்பாபு வெளியிட்ட அறிக்கை: கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சத்துணவு திட்டத்தில் பணியாற்றி ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அரசுப்பள்ளிகளில் ஆசிரியர் பணி பெற்றவர்கள், பதவி உயர்வு மூலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் கிராம சேவிகா, முதன்மை சேவிகா, சமூக நலத்துறையில் மேற்பார்வையாளர்கள், சிறப்பு ஆசிரியர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம செவிலியர்கள் ஆகியோருக்கு ஓய்வு ஊதியம் மறுக்கப்பட்டது.இதை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடத்திய பிறகு 2010ல் அரசு உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவின்படி அனுப்பிய கருத்துருக்களை கணக்காயர் அலுவலகம் திருப்பி அனுப்பியது. இதற்கு பிறகு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் நிலுவையில் உள்ளன. 

மாநில கணக்காயர் அலுவலகம் அரசின் திருத்திய அரசாணை வெளியிட்டால் மட்டுமே ஓய்வு ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. மற்ற அரசு ஊழியர்களைப் போல 58 வயது பணி நிறைவு நாளில் கடைசியாக வாங்கிய சம்பளத்தில் 50 சதவீதம் பென்ஷன் கிடைக்க வாய்ப்பில்லை. எனவே குறைந்த பட்ச பென்ஷன் தர அரசு ஆவன செய்ய வேண்டும்.தமிழகத்தில் புதிய பென்ஷன் திட்டம் கைவிடப்பட்டு வரையறுக்கப்பட்ட ஓய்வு ஊதியம் நடைமுறைப்படுத்தப்படும் என்று தேர்தல் நேரத்தில் முதல்வர் ஜெயலலிதா வாக்குறுதி அளித்தார். அதன்படி எங்கள் கோரிக்கைகளை பரிசீலித்து ஓய்வு ஊதிய அரசாணை வெளியிட வேண்டும்.

No comments:

Post a Comment