Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Wednesday, 25 December 2013

ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் எல்லா வகுப்பு மாணவருக்கும் ஒரே அறையில் பாடம்


 தமிழகத்தின் வட மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் எல்லா வகுப்பு மாணவர்களுக்கும் ஒரே அறையில் பாடம் நடத்தப்படுவது ஆய்வில் தெரியவந்துள்ளது. சமகல்வி இயக்கத்தின் சார்பில் வட தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் இயங்கும் அரசு ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளின் நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டது. 

இந்த ஆய்வு குறித்த தகவல்கள் நேற்று வெளியிடப்பட்டன. இதற்கான வெளியீட்டு விழாவில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி கிறிஸ்துதாஸ் காந்தி ஆய்வு அறிக்கையை வெளியிட்டார்.  ஆய்வு அறிக்கை குறித்து சமகல்வி இயக்கத்தின் பொதுச் செயலாளர் செல்வகுமார் கூறியதாவது: ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் அதிக எண்ணிக்கையில் பள்ளிகள் உள்ள மாவட்டங்களை கணக்கில் கொண்டும் தமிழகத்தில் பட்டியல் இனத்து மொத்த மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு பெரும்பான்மை உள்ள சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய 6 மாவட்டங்களில் 90 ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளை மாதிரிகளாக கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது.  அதன்படி பெரும்பாலான பள்ளிகளின் இடங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. பள்ளியின் சொத்துகள் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் உள்ளன. 

53 சதவீத பள்ளிகளில் போதுமான வகுப்பறை வசதிகள் இல்லை. ஒரே வகுப்பறையில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பாடம் நடத்தப்படுகின்றன. 50.6 சதவீத பள்ளிகள் சுமாரான தரத்தில் தான் உள்ளன. 29 சதவீத பள்ளி கட்டிடங்கள் மிகவும் பழுதடைந்து பாதுகாப்பற்ற அபாயகரமாக உள்ளன. 17 சதவீத பள்ளிகளில் சுற்றுச்சுவர் இல்லை. அதனால் இரவு நேரங்களில் பள்ளிகள் ஆடு மாடுகள் தங்கும் இடமாகவும், நாய்கள் படுத்து உறங்கும் இடமாகவும் மாறியுள்ளன. 90 பள்ளிகளில் 57 பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள் இல்லை. 26 பள்ளிகளில் கழிப்பறை வசதிகள் இல்லை. 55 பள்ளிகளில் கழிப்பறை இருந்தும் தண்ணீர் வசதி, கதவு வசதி இல்லை. அதனால் பள்ளியின் அருகிலேயே திறந்த வெளி கழிப்பிடமாக மாறியுள்ளது. 56 தொடக்கப்பள்ளிகளில் 11 பள்ளிகளில் மட்டுமே 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர். 24 பள்ளிகளில் 20ல் இருந்து 30 குழந்தைகள் வரை படிக்கின்றனர். 18 பள்ளிகளில் 10 முதல் 20 குழந்தைகள் படிக்கின்றனர். கடந்த மார்ச் மாதம் வரை 76 சதவீத பள்ளிகளுக்கு கல்வி சாதனங்கள் வழங்கப்படவில்லை. நடப்பு ஆண்டில் 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை உள்ள மாணவ மாணவியருக்கு சீருடை வழங்கப்படவில்லை. 

ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் பெரும்பாலான நடுநிலை, உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில பாட வாரியான ஆசிரியர்கள் நியமிக்கப்படாமல் உள்ளனர். இவ்வாறு செல்வகுமார் தெரிவித்தார்.

No comments:

Post a Comment