Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Showing posts with label News. Show all posts

Friday, 27 September 2013

சேப்பாக்கத்தில் ஆசிரியர்கள் மறியல்: 2 ஆயிரம் பேர் கைது

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக தொடர் மறியல் போராட்டம் நடந்து வருகிறது. மத்திய அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், 6–வது ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆயிரக்கணக்கான இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இன்று 3–வது நாளாக சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு அமர்ந்து கோஷங்களை எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.
தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட 2300 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரையும் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்திற்கு போலீசார் கொண்டு சென்றனர்.
போராட்டம் குறித்து சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் என். ரெங்கராஜன் கூறியதாவது:–
தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 3 நாட்களாக தொடர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அனால் அரசு கண்டு கொள்ளவில்லை. எங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். கடும் வெயிலை பொருட்படுத்தாமல் ஆசிரியைகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
எங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவது குறித்து பரிசீலிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Thursday, 26 September 2013

மத்திய அரசு ஊழியர்களுக்கு 7வது ஊதியக் குழு அமைத்து மத்திய அரசு உத்தரவு, 01.01.2016 முதல் அமுலுக்கு வருகிறது

மத்திய அரசு ஊழியர்களுக்கான, ஏழாவது சம்பள கமிஷன் குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதற்கான உத்தரவை பிரதமர் மன்மோகன்சிங் பிறப்பித்துள்ளார். இந்த சம்பள கமிஷன் 2016-ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. 7வது ஊதியக் குழுவில் இடம் பெற உள்ள வல்லுனர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த ஊதியக் குழு தனது பரிந்துரைகளை 2 வருடத்திற்குள் மத்திய அளிக்கும் என அரசு அறிவித்துள்ளது. இதற்கான ஒப்புதலை பிரதமர் மன்மோகன் சிங் அளித்துள்ளார்.