'நாட்டில் சிறுபான்மையினர் நடத்தும், சில கல்வி நிறுவனங்களில் கூட்டம் குவிவதைத் தவிக்க, தரமான ஆரம்ப பள்ளிகளை உருவாக்க, அரசு பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம்' என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ், மாணவர்கள் சேர்க்கையை நடத்தும்படி, சில பள்ளிகளுக்கு, கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த, நீதிபதிகள் தவே மற்றும் லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு தெரிவித்ததாவது: மருத்துவ கல்லூரிகளை எடுத்துக் கொண்டால், அரசு மருத்துவ கல்லூரிகளுக்கே மவுசு அதிகம் உள்ளது. அங்கு சேரவே, பெரும்பாலான மாணவர்கள் விரும்புகின்றனர். அதேநேரத்தில், தனியார் கல்லூரிகள் எல்லாம், வர்த்தக நோக்கத்தில் செயல்படுகின்றன. அரசால் நடத்தப்படும் மருத்துவ கல்லூரிகள், சிறப்பாக செயல்பட முடிகின்றன என்றால், ஏன் சிறந்த ஆரம்ப பள்ளிகளை அரசால் உருவாக்க முடியாது. சிறந்த ஆரம்ப பள்ளிகளை, அதிக அளவில் கொண்டிருக்க வேண்டியது அரசின் கடமை.
எனவே, சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களில், மாணவர்கள் குவிவதைத் தடுக்க, சிறந்த ஆரம்ப பள்ளிகளை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை, அரசு எடுக்க வேண்டும்.
இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment