Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Tuesday, 23 September 2014

ஆசிரியர் தகுதித் தேர்வு சிக்கல் முதல்வர் தலையிட கோரிக்கை

ஆசிரியர் தகுதித் தேர்வு மூலம் செய்யப்பட்டும் பணி நியமன சிக்கலைத் தீர்க்க முதல்வர் நேரடியாக தலையிட வேண்டும் என்று பொதுப்பள்ளிக்கான மாநிலமேடை கேட்டுக் கொண்டுள்ளது.
இது குறித்து பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
வெயிட்டேஜ் என்பது நால்வர் குழுவின் உருவாக்கமே தவிர முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவை மேற்கொண்ட அரசின் கொள்கை முடிவல்ல.

வெயிட்டேஜ் முறையை பரிந்துரை செய்தவர்கள் வல்லுநர்கள் அல்ல. இது கூடுதல் மதிப்பு தரும் முறையே தவிர, அடிப்படைத்தகுதிக்கு கீழ் உள்ள தகுதிக்கு தரும் மதிப்பு அல்ல. தேசிய ஆசிரியர் கல்வி மன்றம் (என்சிஇஆர்டி) வழிகாட்டுதலில் பத்தி 9(பி) மிகத் தெளிவாக கூறியுள்ளது என்னவென்றால், டிஇடி தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு பணி நியமனத்தின் போது மதிப்பளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
எஸ்டி பிரிவில் 50 சதவீதத்துக் கும் மேல் பின்னடைவு காலிப் பணியிடங்கள் இதுவரை நிரப்பவில்லை. பொதுப் பிரிவில் எஸ்சி, எஸ்டி பிரிவினர் ஒருவர்கூட தேர்வாகவில்லை என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். எனவே வழக்குகள் நீதிமன்றத்தில் இருந்தாலும் தீர்ப்புகள் வரும்வரை காத்திராமல், முதல்வர் நேரடியாக தலையிட்டு பணி நியமனம் நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கோரிக்கை மனுவில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment