பணிக்கு தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள், பணி நியமன உத்தரவை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் மற்றும் பிளஸ்- 2, பட்டப் படிப்பு, பி.எட்., இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வு மதிப்பெண் அடிப்படையில் 'வெயிட்டேஜ்' மதிப்பெண் கணக்கிடப்படுகிறது.
இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கு தேர்வு
செய்யப்பட்டவர்களுக்கு, கடந்த 30ம் தேதி முதல் 5ம் தேதி வரை ஆன்-லைனில் கலந்தாய்வு நடத்தப்பட்டு, பணி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டது.பணிநியமன உத்தரவு வழங்கப்பட இருந்த நிலையில், 'வெயிட்டேஜ்'ல் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள், ஆசிரியர்களால் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால், பணி நியமன ஆணை வழங்க, நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
வழக்கு, உயர் நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், பணிக்கு தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் பணி நியமன உத்தரவை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். நீதிமன்ற உத்தரவு கிடைத்ததும், ஆசிரியர்களுக்கு பணி நியமன உத்தரவை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.பணி நியமன ஆணை, ஆன்-லைனிலேயே தயாராக இருப்பதால், உத்தரவு வந்தும், ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வி அதிகாரிகள் மூலமாக உத்தரவு வழங்க முடியும் என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment