Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Thursday, 11 September 2014

எஸ்.எஸ்.ஏ., மானியம் செலவிடுவதில்' மாணவர்கள் கண்காணிக்கலாம்!

தமிழகத்தில் அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் (எஸ்.எஸ்.ஏ.,) ஒதுக்கப்படும் பள்ளி பராமரிப்பு மானியத்தை செலவிடுவதற்கு ஒப்புதல் வழங்கும் குழுவில், ஆசிரியர்கள், மாணவர்களை சேர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கற்றல், கற்பித்தல் தேவை அடிப்படையில் ஆண்டுதோறும் எஸ்.எஸ்.ஏ., திட்டம் சார்பில் ஒன்று முதல் 8 ம் வகுப்பு வரை பள்ளி மானியம் மற்றும் பராமரிப்பு மானியம் வழங்கப்படுகின்றன.
பள்ளி மானியமாக அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளுக்கு ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை ரூ.5 ஆயிரம், 6 முதல் 8 ம் வகுப்பு வரை ரூ. 7 ஆயிரம் வழங்கப்படும். பராமரிப்பு மானியம் என்பது பயன்பாட்டில் உள்ள வகுப்பறை எண்ணிக்கை அடிப்படையில் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை ஒதுக்கப்படும். பராமரிப்பு மானியம் அரசு பள்ளிகளுக்கு மட்டும் வழங்கப்படும். கடந்தாண்டு வரை இம்மானியத்தை செலவிட, பள்ளி தலைமையாசிரியர் மற்றும் கிராமக் கல்விக் குழு ஒப்புதல் போதுமானதாக இருந்தது. ஆனால், இந்தாண்டு முதல் புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, முதற்கட்டமாக பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர், மாணவர், அங்கன்வாடி பணியாளர் கொண்ட குழு ஏற்படுத்தி, இதன் ஒப்புதல் பெற்ற பின் தான், கிராமக் கல்விக் குழுவில் வைத்து அனுமதி பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து இத்திட்ட கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது: பள்ளி மானியம் மற்றும் பராமரிப்பு மானியத்தை செலவிடுவதில் சில மாவட்டங்களில் வெளிப்படை தன்மை இல்லை என்ற சர்ச்சை எழுந்தது. இதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு கூட்டத்தில், தலைமையாசிரியருடன், அந்த பள்ளி ஆசிரியர், மாணவர் மற்றும் அங்கன்வாடி பணியாளர்களையும் குழுவில் இணைக்க முடிவு செய்யப்பட்டது. இந்தாண்டு முதல் இக்குழுவும் ஒப்புதல் அளித்தால்தான் மானியத்தை செலவிட முடியும். நிதியை தவறாக பயன்படுத்த முடியாது, என்றார்.

No comments:

Post a Comment