Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Friday, 28 February 2014

50 சதவீத அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் இணைப்பதற்கு பரிந்துரை

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 10 சதவிகிதம் உயர்த்துதல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகள் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளன.

மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில், அதற்கு முன்பாக, பல்வேறு முக்கிய முடிவுகளை எடு்ப்பதற்காக அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்றது.

இதில், தேர்தலை கருத்தில் கொண்டு பல்வேறு சலுகைகள் அளிப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப் படி 10 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டு 100 சதவிகிதம் ஆக்கப்பட்டுள்ளது. இந்த முடிவால் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பலன் பெறுவார்கள். மேலும் 30 லட்சம் ஓய்வூதியதாரர்களும் இதனால் பலன் பெறுவார்கள்.

தற்போது அகவிலைப்படி 100 சதவீதத்தை அடைந்துள்ளதால், இது தொடர்பான பரிந்துரையை ஏழாவது ஊதியக் குழுவுக்கு அனுப்பவும் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்‌யப்பட்டது. இதன்மூலம், ஏழாவது ஊதியக் குழு தனது இடைக்கால அறிக்கையில், 50 சதவீத அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் இணைப்பதற்கு பரிந்துரை செய்ய முடியும். அவ்வாறு இணைக்கப்பட்டால், மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் 30 சதவிகிதம் உயரும்.

"இன்று தலை குனிந்து படித்தால், நாளை தலைநிமிர்ந்து செல்லலாம்!''

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பூவநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி கடந்த ஆண்டு நடைபெற்ற பிளஸ் டூ தேர்வில் 100 சதவீத தேர்ச்சியைப் பெற்று சாதனை படைத்தது. அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் கதிரேசன், பிளஸ் டூ தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வழங்கும் ஆலோசனைகள் இதோ...

இருக்கின்ற குறுகிய காலத்தில் புதிதாக பாடங்களைப் படிக்கத் தொடங்காதீர்கள். படித்த பாடங்களை மீண்டும் மீண்டும் நன்கு படியுங்கள். படித்ததை எழுதிப் பாருங்கள். உங்களுக்கு நீங்களே தேர்வு வைத்து எழுதிப் பாருங்கள் அல்லது வீட்டில் உள்ளவர்களை கேள்வி கேட்கச் சொல்லி பதில் சொல்லலாம். இப்படிச் செய்தால் உங்கள் ஞாபகத் திறன் அதிகரிக்கும்.

சராசரி மாணவர்கள், மெதுவாக கற்போர் என யாராக இருந்தாலும் புளூ பிரிண்ட்படி 60 சதவீதப் பாடங்களைப் படித்தாலே சராசரியாக 85 சதவீத மதிப்பெண்களைப் பெற்று விடலாம்.

அப்படியும் படிக்க முடியாத மாணவர்களுக்கு, இந்தக் குறுகிய காலத்தில் புத்தகத்தில் உள்ள எளிய பாடங்களை தேர்வு செய்து அதனை படித்தால் குறைந்தபட்சத் தேர்ச்சி மதிப்பெண்கள் உறுதியாக எடுக்க முடியும். ஒரு மதிப்பெண் வினா- விடைகளில் நன்கு பயிற்சி செய்து கொள்வது நல்லது.  

தேர்வு நடைபெறும் வரை எந்தெந்தப் பாடங்களை எப்போதைக்குள் ரிவிஷன் செய்து முடிக்க வேண்டும் என்பதைத் திட்டமிட்டுக் கொண்டு அதனை செயல்படுத்த வேண்டும்.

இப்போதிருக்கும் மாணவர்களை அதிகம் சீரழிப்பது செல்போன், லேப்டாப் போன்றவைதான். தொலைக்காட்சி மூன்றாம் இடத்தைப் பிடித்திருக்கிறது. பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை கவனத்துடன் பார்த்துக்கொள்ள வேண்டும். தேர்வு முடியும் வரை, அவசியம் ஏற்பட்டால் தவிர மற்ற நேரங்களில் செல்போன், லேப்டாப் போன்றவற்றைப் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது. ஓய்வு நேரத்தில் சற்று நேரம் வேண்டுமானால் டி.வி. பார்க்க அனுமதிக்கலாம்.

பிள்ளைகள் சோர்ந்து போனால், தன்னம்பிக்கை வார்த்தைகளைக் கொடுத்து ஊக்கப்படுத்த வேண்டும். நாங்கள் உனக்காக இருக்கிறோம். நீ நன்கு படி, என்று நம்பிக்கை ஊட்ட வேண்டும்.

வீட்டில் அமைதியான சூழ்நிலையில் முழு கவனம் செலுத்திப் படிக்க வேண்டும். மாணவர்கள் காலையில் தியானம் மற்றும் மூச்சுப் பயிற்சிக்கென குறைந்தது 5 நிமிடங்கள் ஒதுக்க வேண்டும். இது மனதை ஒருமுகப்படுத்த உதவும். இதனால் படிப்பில் அதிக கவனம் செலுத்த முடியும்.

மனம் எந்த அளவுக்குப் படிப்பதற்கு முக்கியமோ, அந்த அளவிற்கு உடல் நலனும் முக்கியம். உடல்நலக் குறைவு ஏற்பட்டால் அது மனதையும் பாதிக்கும், படிப்பையும் பாதிக்கும்.

தேர்வு எழுதும் காலம் வெயில் காலம் என்பதால், உடலைக் குளிர்ச்சியாகவும், ஆரோக்கியமானதாகவும் வைத்துக் கொள்ளவேண்டும். இதற்காக மாமிச உணவுகளைத் தவிர்த்து விட்டு, காய்கறி, கீரைகள், பழ வகைகளை சாப்பிடுங்கள். படிக்கும்போது, வயிறு முட்ட சாப்பிட வேண்டாம்.

தேர்வு நேரம் என்றாலும் தினந்தோறும் குறைந்தது 6 மணி நேரமாவது தூங்க வேண்டும். இரவு பதினோரு மணிவரை படிக்கிறீர்கள் என்றால் மறுநாள் காலை 5 மணிக்கு எழுந்துகொள்ள வேண்டும். நள்ளிரவு 12 மணி வரை  படிக்கிறீர்கள் என்றால் மறுநாள் காலை 6 மணிக்கு எழுந்து கொள்ள வேண்டும். மூளை சுறுசுறுப்பாக இருக்க குறைந்தபட்சம் 6 மணி நேர தூக்கம் அவசியம். தேர்வுக்கு முந்தைய தினங்கள் இரவில் நீண்ட நேரம் கண் விழித்துப் படிக்க வேண்டாம்.

தேர்வுக் கூடத்திற்குச் சென்று கேள்வித்தாளைப் பார்த்ததும் கடகடவென்று எழுத ஆரம்பித்து விடாதீர்கள். பத்து நிமிடம் கேள்வித்தாளை ஆழ்ந்து படியுங்கள். கேள்விகளைப் புரிந்துகொண்டு, நம்பிக்கையோடு தேர்வினை எழுதுங்கள்.

இன்று தலை குனிந்து படித்தால், நாளை தலைநிமிர்ந்து செல்லலாம் என்பதை மனதில் கொண்டு படியுங்கள். வெற்றி உங்கள் வசமாகட்டும்.

பிளஸ் டூ தேர்வு: தேர்வு அறையில் நடந்துகொள்வது எப்படி?

பிளஸ் டூ தேர்வு மார்ச் 3-ஆம் தேதி தொடங்குகிறது. எதிர்காலப் படிப்பை நிர்ணயிக்கும் முக்கியத் தேர்வான பிளஸ் டூ தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இதுவரை வினா-விடை வழங்கி வழிகாட்டிய ‘புதிய தலைமுறை கல்வி’, தேர்வு எழுதுவதற்கும் வழிகாட்டுகிறது. பிளஸ் டூ தேர்வு எழுதும் மாணவர்களுக்குப் பயனுள்ள யோசனைகள் இதோ...

தேர்வுக்கு முதல் நாளிலேயே தேவையான பேனா, பென்சில், ஸ்கேல், ரப்பர், ஜாமெண்ட்ரி பாக்ஸ் போன்றவற்றை எடுத்து வைத்துக் கொள்ளவும். ஹால் டிக்கெட்டை மறந்து விடாதீர்கள்!

படித்த பாடங்களை மீண்டும் படித்து நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். தேர்வு குறித்து பயம் வேண்டாம்! தன்னம்பிக்கையோடு இருங்கள்!

தேர்வுக்குச் செல்லும்போது பட்டினி வேண்டாம். அளவோடு சாப்பிட்டுச் செல்லவும். திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டால், தகுந்த மருந்துகளை சாப்பிட்டுவிட்டு தேர்வுக்குச் செல்லவும்.

தேர்வு தொடங்க ஒரு மணி நேரத்துக்கு முன்னதாகவே தேர்வு நடைபெறும் பள்ளிக்குச் சென்று விடுவது நல்லது. இதனால், பஸ் தாமதம் போன்ற கடைசி நேரப் பரபரப்புகளில் சிக்கித் தவிப்பதைத் தவிர்க்க முடியும்.

தேர்வு மைய வளாகத்தில் உங்களிடம் உள்ள பாடக் குறிப்புகளை சிறிது நேரம் திருப்பிப் பார்த்துவிட்டு அமைதியாக இருக்கவும். மற்றவர்களுடன் தேவையில்லாத அரட்டை வேண்டாம்.

தேர்வு அறையில் உங்களது தேர்வு எண் குறிப்பிடப்பட்டுள்ள இருக்கையில் அமரவும். அதற்கு முன்னதாக, உங்களது புத்தகங்களையும் உங்களது பையில் ஏதாவது பாடக்குறிப்புகளோ, காகிதங்களோ இருந்தால், அதையும்  சேர்த்து தேர்வு அறைக்கு வெளியில் வைத்துவிட்டு வரவேண்டும்.

தேர்வுக் கூடத்தில் உங்களிடம் பிட் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டாலோ அல்லது காப்பி அடிப்பது தெரிந்தாலோ நீங்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டீர்கள். எனவே, குறுக்கு வழிகள் வேண்டாம்!

உங்களுக்கு வினாத்தாள் கொடுக்கப்பட்டதும் பரபரப்பாக உடனே விடைகளை எழுதத் தொடங்கி விடாதீர்கள். தெரியாத அல்லது கடினமான வினாக்களைப் பார்த்து  சோகமாகி விடாதீர்கள்.  வினாத்தாளை முழுமையாக படித்துப் பார்த்துவிட்டு முதலில், தெரிந்த வினாக்களுக்கு விடை எழுதத் தொடங்குங்கள்.

விடைத்தாளில் தேர்வுத்துறையினர் குறிப்பிட்டுள்ள இடத்தைத் தவிர வேறு இடங்களில் தேர்வு எண்ணையோ, பெயரையோ எழுதக் கூடாது. விடைத்தாளில் தேர்வு எண்ணை சரியாக எழுதியிருக்கிறோமா என்பதை ஒரு முறைக்கு இருமுறை சரிபார்த்துக் கொள்ளவும்.

தேர்வு அறையில் மற்ற மாணவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்க்காதீர்கள். விடைகளை எழுதுவதில் மட்டுமே முழுமையான கவனம் இருக்கட்டும்.

ஒவ்வொரு வினாவுக்கும் விடை அளிக்க எவ்வளவு நேரம் என்று திட்டமிட்டுக்கொண்டு விடைகளை எழுத வேண்டும். இதனால், சில வினாக்களுக்குப் பதில் தெரிந்தும் நேரம் இல்லாமல் போய், விடை எழுதாமல் விட்டுவிட வேண்டிய சூழ்நிலை ஏற்படாது. சில வினாக்களுக்கு விடை எழுத அதிக நேரம் பிடிக்கலாம். அதுபோன்ற நிலையில், அடுத்து எழுதும் விடைகளில் அந்த நேரத்தைச் சரிசெய்துகொள்ள வேண்டும்.

விடை   எழுதும்போது தேவையான இடங்களில் வரைபடங்களை வரைய வேண்டும். அதற்காக  நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளக்கூடாது.

தேர்வு நேரத்தில் ஏதாவது சந்தேகம் ஏற்பட்டால் தேர்வுக்கூடக் கண்காணிப்பாளரிடம் மட்டுமே கேட்க வேண்டும். பக்கத்தில் உள்ள மாணவர்களிடம் கேட்கக்கூடாது.

ஆரம்பம் முதல் இறுதி வரை கையெழுத்து சீராக இருக்கட்டும். அதற்காக மெதுவாக எழுதி நேரத்தை வீணடிக்கவும் தேவையில்லை. கூடிய வரை அடித்து அடித்து எழுதுவதைக் தவிர்க்கவும்.

எந்த வினாவுக்கும் அரைகுறையாக விடையளிக்க வேண்டாம். சுருக்கமாகவாவது முழுமையாக விடை எழுத முயலுங்கள். ஏதேனும் ஒரு வினாவுக்கு விடை நன்கு தெரிகிறதே என்று நேரம் போவது தெரியாமல் தேவைக்கு அதிகமாக நீட்டி முழக்கி எழுதிக் கொண்டிருக்காதீர்கள். அப்புறம், மற்ற வினாக்களுக்கு விடை எழுத நேரம் இல்லாமல் போய்விடும் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.

விடைகளை எழுதும்போது வினா எண்ணை சரியாக எழுத வேண்டும். விடைகளை எழுதி முடித்த பிறகு வினா எண்களை சரிபார்ப்பதுடன் எழுதிய விடைகளையும்  சரிபார்க்க வேண்டும்.

தேர்வு நேரம் முடிய சிறிது நேரமே இருக்கிறது என்றால், எழுத வேண்டிய விடைகளை சுருக்கமாக எழுதி, உரிய நேரத்திற்குள் முடிக்கப் பார்க்க வேண்டும்.

தேர்வு நேரம் முடிவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்னதாகவே எழுதி முடித்துவிட்டு, எழுதிய விடைகளை சரிபார்ப்பது நல்லது. தெரியாத வினாக்களுக்கு விடைகளை எழுதவும் இந்த நேரத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

தெரிந்த அனைத்து வினாக்களுக்கான விடைகளை எழுதி முடித்துவிட்டு, பின்னர் தெரியாத வினாக்களுக்கான விடைகளை நினைவுக்குக் கொண்டுவந்து எழுத முயற்சிக்க வேண்டும்.


விடைத்தாளை, தேர்வு எழுதிய மேஜையிலேயே வைத்துவிட்டு வெளியேறக்கூடாது. விடைத்தாளை தேர்வுக்கூடக் கண்காணிப்பாளரிடம் கொடுத்துவிட்டுதான் வெளியேற வேண்டும்.

விடா முயற்சியும் கடின உழைப்பும் வெற்றிப் பாதைக்கு வழிகாட்டிகள். தன்னம்பிக்கையுடன் தேர்வு எழுதுங்கள், வெற்றி நிச்சயம்!
 

7 ஆவது ஊதியக் குழுவின் விதிமுறைகள் என்ன? Cabinet approved Terms of Reference of 7th Central Pay Commission (CPC)

The Union Cabinet today gave its approval to the Terms of Reference of 7th Central Pay Commission (CPC) as follows:-
a) To examine, review, evolve and recommend changes that are desirable and feasible regarding the principles that should govern the emoluments structure including pay, allowances and other facilities/benefits, in cash or kind, having regard to rationalization and simplification therein as well as the specialized needs of various Departments, agencies and services, in respect of the following categories of employees:-
i. Central Government employees-industrial and non-industrial;
ii. Personnel belonging to the All India Services;
iii. Personnel of the Union Territories;
iv. Officers and employees of the Indian Audit and Accounts Department;
v. Members of regulatory bodies (excluding the Reserve Bank of India) set up under Acts of Parliament; and
vi. Officers and employees of the Supreme Court.
b) To examine, review, evolve and recommend changes that are desirable and feasible regarding principles that should govern the emoluments structure, concessions and facilities/benefits, in cash or kind, as well as retirement benefits of personnel belonging to the Defence Forces, having regard to historical and traditional parities, with due emphasis on aspects unique to these personnel.
c) To work out the framework for an emoluments structure linked with the need to attract the most suitable talent to Government service, promote efficiency, accountability and responsibility in the work culture, and foster excellence in the public governance system to respond to complex challenges of modern administration and rapid political, social, economic and technological changes, with due regard to expectations of stakeholders, and to recommend appropriate training and capacity building through a competency based framework.
d) To examine the existing schemes of payment of bonus, keeping in view, among other things, its bearing upon performance and productivity and make recommendations on the general principles, financial parameters and conditions for an appropriate incentive scheme to reward excellence in productivity, performance and integrity.
e) To review the variety of existing allowances presently available to employees in addition to pay and suggest their rationalization and simplification, with a view to ensuring that the pay structure is so designed as to take these into account.
f) To examine the principles which should govern the structure of pension and other retirement benefits, including revision of pension in the case of employees who have retired prior to the date of effect of these recommendations, keeping in view that retirement benefits of all Central Government employees appointed on and after 01.01.2004 are covered by the New Pension Scheme (NPS).
g) To make recommendations on the above, keeping in view:
i. the economic conditions in the country and need for fiscal prudence;
ii. the need to ensure that adequate resources are available for developmental expenditures and welfare measures;
iii. the likely impact of the recommendations on the finances of the State Governments, which usually adopt the recommendations with some modifications;
iv. the prevailing emolument structure and retirement benefits available to employees of Central Public Sector Undertakings; and
v. the best global practices and their adaptability and relevance in Indian conditions.
h) To recommend the date of effect of its recommendations on all the above.
The Commission will make its recommendations within 18 months of the date of its constitution. It may consider, if necessary, sending interim reports on any of the matters as and when the recommendations are finalised.
The decision will result in the benefit of improved pay and allowances as well as rationalization of the pay structure in case of Central Government employees and other employees included in the scope of the 7th Central Pay Commission.
Background
Central Pay Commissions are periodically constituted to go into various issues of emoluments’ structure, retirement benefits and other service conditions of Central Government employees and to make recommendations on the changes required
- PIB

2014 ஜனவரி மாதத்திற்கான விலைவாசிக் குறியீட்டு எண் இன்று வெளியிடப்பட்டது. இதன் படி அகவிலைப்படி 101.71% / 01.07.2014 முதல் அகவிலைப்படி உயர்வு 6% முதல் 7% வரை தான் உயரக்கூடும் என எதிர் பார்க்கப் படுகிறது

AICPIN for the month of January 2014


Consumer Price Index Numbers For Industrial Workers (CPI-IW) January 2014

According to a press release issued by the Labour Bureau, Ministry of Labour & Employment the All-India CPI-IW for January, 2014 declined by 2 points and pegged at 237(two hundred and thirty Seven). On 1-month percentage change, it decreased by 0.84 per cent between December and January compared with the rise of 0.91 per cent between the same two months a year ago.
The largest downward pressure to the change in current index came from Food group contributing -2.78 percentage points to the total change. At item level, Groundnut Oil, Onion, Brinjal Cabbage, Carrot, Gourd, Palak, Peas, Potato, Tomato and other Vegetable items, Sugar etc. are responsible for the decrease in index. However, this was compensated to some extent by Housing Index and the prices of Rice, Wheat, Fish Fresh, Goat Meat, Poultry, Cooking Gas, Electricity Charges, Petrol etc. putting upward pressure on the index.
The year-on-year inflation measured by monthly CPI-IW stood at 7.24 per cent for January, 2014, as compared to 9.13 per cent for the previous month and 11.62 per cent during the corresponding month of the previous year. Similarly, the Food inflation stood at 8.94 per cent against 11.49 per cent of the previous month and 14.08 per cent during the corresponding month of the previous year.
At centre level, Bhilwara recorded the highest decline of 8 points each followed by Kodarma (7 Points), Bokaro and Surat (6 Points each), Varanasi and Munger Jamalpur (5 Points each). Among others, 4 points decrease was registered in 8 centres, 3 points in 13 centres, 2 points in 12 centres and 1points in 9 centres. On the contrary, Amritsar and Quilon centres reported an increase of 4 points followed by Jharia (3 points). Among others, 2 points increase was observed in 6 centres and 1 point in 7 centres. Rest of the 14 centres’ indices remained stationary.
The indices of 38 centres are above All-India Index and other 39 centres’ indices are below national average. The index of Bhilwara centre remained at par with all-India index.
The next index of CPI-IW for the month of February, 2014 will be released on Monday, 31 March, 2014. The same will also be available on the office website www.labourbureau.gov.in.

டிட்டோஜாக் உயர்மட்டக் குழுக் கூட்டம் மார்ச் 3க்கு பதிலாக 4ந்தேதி கூடுகிறது

டிட்டோஜாக்கின் உயர்மட்டக்குழுக் கூட்டம் ஏற்கனவே மார்ச் 3ந்தேதி கூடுவதாக அறிவித்திருந்தது. இந்நிலையில் சென்னையில் அக்கூட்டம் மார்ச் 4ந் தேதி கூடும் என  டிட்டோஜாக் உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் முடிவாற்றி உள்ளதாக டிட்டோஜாக்கின் உயர்மட்டக்குழு உறுப்பினரும்  தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலருமான  செ.முத்துசாமி Ex.MLC அவ்ர்கள் தெரிவித்தார்

நெட் தேர்வில் ஓ.பி.சி.,மாணவர்கள் 55% மதிப்பெண் பெற்றால் போதுமானது

நெட் தேர்வை எழுதும் ஓ.பி.சி., பிரிவு மாணவர்களுக்கு, தேர்ச்சி பெறுவதற்கான விதிமுறையை சற்று தளர்த்தும் செயல்திட்டத்திற்கு யு.ஜி.சி., ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி அவர்கள் இனிமேல் 55% மதிப்பெண் பெற்றால் போதுமானது.

அதுதொடர்பாக கூறப்படுவதாவது: நெட் தேர்வை எழுதும் OBC பிரிவு மாணவர்கள், தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்களாக அறிவிக்கப்பட வேண்டுமெனில், குறைந்தபட்சம் 60% மதிப்பெண்கள் பெற வேண்டும். ஆனால், தற்போதைய புதிய முடிவின்படி, அவர்கள் 55% பெற்றாலே போதுமானது.

இதன்மூலம், SC/ST பிரிவு மாணவர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள 55% மதிப்பெண் சலுகையோடு, இந்த புதிய சலுகையும் இணைந்து, சமமாகிறது. ஆசிரியர் பணியிடங்களில், SC/ST மற்றும் OBC பிரிவினருக்கான பணியிடங்கள் அதிக எண்ணிக்கையில் காலியாக இருப்பதை மனதில் வைத்தே இந்த சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

நாடெங்கிலும் உள்ள மத்தியப் பல்கலைகளில் காலியாக இருக்கும் 40% பணியிடங்களில், அதிகளவில் SC/ST மற்றும் OBC பிரிவினருக்கான பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பிரச்சினை தொடர்பாக, ஏற்கனவே நீதிமன்றம் சென்ற ஒரு வழக்கின் அடிப்படையிலேயே இந்தப் புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் 5% மதிப்பெண் தளர்வு வழங்கியது எதிர்த்து வழக்கு, தமிழக அரசு இன்று பதில் தாக்கல்

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 5% மதிப்பெண் தளர்வு வழங்கியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசின் சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய இன்று வரை கெடு விதிக்கப்பட்டு இருந்தது. இன்று தமிழக அரசும் பதில் மனு தாக்கல் செய்துள்ளது என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எனினும் அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் என்ன விவரங்கள் அடங்கியுள்ளன என்பது பற்றி, வழக்கு அடுத்து விசாரணைக்கு வரும் பொழுது விவரம் தெரியவரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.  

6வது ஊதியக் குழு பரிந்துரைகளில் உள்ள குறைகளை நீக்க மீண்டும் ஒரு குழு அமைக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 6வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தியதில் பல துறைகளில் ஊதிய முரண்பாடுகள் ஏற்பட்டது. இதையடுத்து ஊதிய முரண்பாடுகளை சரிசெய்ய ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தி வந்தன. இதையடுத்து ஊதிய முரண்பாடுகளை நீக்க அரசு நியமித்த குழுக்களினால் பலன் ஏற்படவில்லை. இதனால் ஊழியர்கள் சங்கங்கள் குறைப்படுகளை நீக்க உத்தரவிடக் கோரி சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இவ்வழக்கு விசாரித்த நீதிமன்றம் 2 முதன்மை செயலாளர் அடங்கிய ஒரு புதிய குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மத்திய அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு

50% அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் சேர்க்க மத்திய அமைச்சரவை அனுமதி: மாலைமலர் & THE NEW INDIAN EXPRESS NEWS





The Centre today raised dearness allowance to 100 per cent, from 90 per cent, benefiting its 50 lakh employees and 30 lakh pensioners.
The government also approved the terms of reference of the 7th Pay Commission, a move which would pave the way for merger of 50 per cent DA with the basic pay.
According to an official, now the Commission can suggest the merger in its interim report. The 50 per cent DA merger with basic pay will roughly increase the gross salaries of central government employees by around 30 per cent.
"The Union Cabinet today approved the proposal to release an additional instalment of DA and dearness relief (DR) to pensioners with effect from January 1, 2014, in cash, but not before the disbursement of the salary for the month of March 2014 at the rate of 10 per cent increase over the existing rate of 90 per cent," said an official statement.
Central government employees as well as pensioners are entitled for DA/DR at the rate of 100 per cent of the basic with effect from January 1, 2014, it said.
The increase is in accordance with the accepted formula based on the recommendations of the 6th Central Pay Commission.
The government has estimated that the combined impact on exchequer on account of both DA and DR would be Rs 11,074.80 crore per annum. For a period of 14 months, from January 2014 to February 2015, the impact will be Rs 12,920.60 crore in the next financial year, 2014-15. (March salary gets paid in April, the first month of the new fiscal).
This increase in the dearness allowance by the UPA-2 government comes ahead of the imposition of the model code of conduct by the Election Commission.
The code is likely to come into force within a week or so with the announcement of the schedule for the forthcoming general elections.
It is the second double digit DA hike in a row. The government had announced a hike of 10 per cent taking it up to 90 per cent in September last year, effective from July 1, 2013.

போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு ஒருநாள் சம்பளம் பிடித்தம்

கோரிக்கைகளை வலியுறுத்தி விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 1,300 தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்படவுள்ளதாக, கல்வித்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும், மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான சம்பளம் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சில சங்கங்களைச் சேர்ந்த தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் பிப்ரவரி 25-ஆம் தேதி உள்ளிருப்பு போராட்டமும், பிப்ரவரி 26-ம்தேதி ஒருநாள் விடுப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு ஒருநாள் சம்பளம் பிடித்தம் செய்து நடவடிக்கை எடுக்குமாறு,அனைத்து மாவட்ட தொடக்கல்வி அலுவலர்களுக்கும் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில், சுமார் 1,300 ஆசிரியர்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் பட்டியலை அனுப்புமாறு, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார். பட்டியல் பெறப்பட்டவுடன், சம்பளம் பிடித்தம் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருப்பதாக, கல்வித்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது

SSA சிறப்பாசிரியர்கள் சங்கத்தினர் உண்ணாவிரதம்

அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தில் பணி ஆணை இல்லாமல் பணிபுரியும் சிறப்பாசிரியர்களுக்கு உடனடியாக பணி ஆணை வழங்கவேண்டும் என வலியுறுத்தி திருச்சி ரயில்வே ஜங்ஷன் முன்பு சிறப்பாசிரியர்கள் சங்கத்தினர் வியாழக்கிழமை உண்ணாவிரதம் இருந்தனர்.
இந்த உண்ணாவிரத போராட்டத்துக்கு அச்சங்க மாவட்டத் தலைவர் சேதுராமன் தலைமை வகித்தார். செயலர் ஆல்பர்ட்தாஸ் உண்ணாவிரத போராட்டத்தினை தொடக்கி வைத்தார். பொருளாளர் சகுந்தலா, துணைச் செயலர் ஆரோக்கிய போஸ் உள்ளிட்ட 100க்கு மேற்பட்ட சிறப்பாசிரியர்கள் பங்கேற்றனர்.

பிளஸ் 2 தேர்வு: விடைத்தாள்களை எடுத்துவர புதிய முறை

பொதுத்தேர்வு விடைத்தாள் கட்டுகள் தொலைவதைத் தடுக்க, தபால் துறைக்குப் பதிலாக பள்ளிக் கல்வித் துறை வாகனங்களிலேயே விடைத்தாள்களைக் கொண்டுவர அரசுத் தேர்வுகள் இயக்ககம் முடிவு செய்துள்ளது.
கடந்த ஆண்டு பிளஸ் 2 விடைத்தாள்கள் மற்றும் பத்தாம் வகுப்புத் தேர்வு விடைத்தாள்களை எடுத்துவரும்போது அவை தொலைந்துபோயின. இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க இந்த ஆண்டு தபால் துறைக்குப் பதில் தனியாரை பணியமர்த்தலாமா என்று ஆலோசிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், தபால் துறைக்குப் பதிலாக பள்ளிக் கல்வித் துறையினரின் வாகனங்களிலேயே விடைத்தாள்களை மாவட்டங்களில் உள்ள விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு எடுத்துவர முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த விடைத்தாள்களை எடுத்துவரும் பொறுப்பு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடமே வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் இதற்காக பிரத்யேகமான வாகனங்களை அமர்த்திக்கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜன் கூறியுள்ளார்.
இது தொடர்பான முழுமையான அறிவிப்பு ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியிடப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வினாத்தாள்களை விநியோகிக்கவும் வாகனம்: வழக்கமாக, வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களிலிருந்து தேர்வு மையங்களுக்கு தங்களுடைய சொந்த வாகனங்களில் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் வினாத்தாள்களைத் எடுத்து வருவர்.
இந்த ஆண்டு வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் இருந்து 4,5 தேர்வு மையங்களுக்குச் செல்லும் வகையில் வழித் தடங்களை அமைத்து வினாத்தாள்களை வாகனங்கள் மூலம் எடுத்துச்செல்லலாம் எனவும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன

பள்ளி மாணவி தீக்குளிப்பு : பள்ளி கல்வி இயக்குனரக அதிகாரிகள் ஆசிரியர்களிடம் விசாரணை

திருவொற்றியூரை சேர்ந்த முனியாண்டி மகள் பவித்ரா (14). விம்கோ நகர் ஜெயகோபால் கரோடியா அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கிறார். இவர் கடந்த 25ம் தேதி தீக்குளித்துவிட்டார். உறவினர்கள் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பவித்ராவின் முகத்தில் ஆசிரியை துப்பியதால், அவமானத்தில் தீக்குளித்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் அவரது உறவினர்கள் நேற்று காலை பள்ளிக்கு சென்று, சம்பந்தப்பட்ட ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கும்படி வற்புறுத்தினர். அவர்களை போலீசார் சமாதானம் செய்து அனுப்பினர். இதையடுத்து பள்ளி கல்வி இயக்குனரக அதிகாரிகள், சம்பந்தப்பட்ட ஆசிரியை, தலைமை ஆசிரியர் மற்றும் மாணவ, மாணவிகளிடம் 4 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

பிளாஸ்டிக் ஒழிப்பு பணியில் ஈடுபடும் கிராமங்கள், பள்ளிகள், சுயஉதவிகுழுக்களுக்கு பரிசு


தமிழ்நாட்டினை பிளாஸ்டிக் இல்லா மாநிலமாக மாற்றுவதற்கு உதவியாக பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிப்பதில், மாநிலத்தில் சிறந்து விளங்கும் கிராமங்கள், சுயஉதவிக்குழுக்கள் மற்றும் மூன்று சிறந்த பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.அதன்படி, கிராமங்கள் பிளாஸ்டிக் இல்லாத கிராமமாக இருக்க வேண்டும், பசுமையான, சுத்தமான முன்னோடி கிராமமாக இருக்க வேண்டும். மழைநீர் சேகரித்தல், சூரிய சக்தி தகடுகள் நிறுவுதல், மரம் வளர்த்தல் போன்ற சூழல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள கிராமங்களாக இருக்க வேண்டும். முதல்பரிசு ரூ.5 லட்சம், 2ம் பரிசு ரூ.3 லட்சம், 3ம் பரிசு ரூ.2 லட்சம்.சிறந்த சுயஉதவிக்குழுக்கள், தங்கள் பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிப்பதில் முக்கிய பங்காற்றியிருத்தல் வேண்டும். பிளாஸ்டிக்கிற்கு எதிரான விழிப்புணர்வுப்பணிகள், துணிப்பைகள், காகிதப்பைகள், காகிதக்குவளைகள், சணல் பைகள் போன்றவற்றை தயாரித்து விற்பனை செய்தல் போன்ற சூழல் நடவடிக்கைகளை மேற்கொண்டிருத்தல் வேண்டும். 

முதல்பரிசு ரூ.5 லட்சம், 2ம் பரிசு ரூ.3 லட்சம், 3ம் பரிசு ரூ.2 லட்சம்.பசுமையான, சுத்தமான பள்ளிகள், பிளாஸ்டிக் இல்லாத பசுமை மற்றும் சுத்தமான பள்ளிகளாக இருக்க வேண்டும். கருத்தரங்குகள், நடைப்பயணம், பேரணி, முகாம், பள்ளி வளாகத்தை தூய்மையாக வைத்திருத்தல் போன்ற பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டிருத்தல் வேண்டும். முதல்பரிசு ரூ.5 லட்சம், 2ம் பரிசு ரூ.3 லட்சம், 3ம் பரிசு ரூ.2 லட்சம்.மேலும் தகவல்களை www.environment.tn.nic.in என்ற இணையதள முகவரியை பார்த்து தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பங்கள் அடுத்த மாதம் 31ம் தேதிக்குள் வந்து சேர வேண்டும்.

பிளஸ்2, எஸ்எஸ்எல்சி தேர்வு பணிச்சுமை தலைமை ஆசிரியர்களுக்கு தேர்தல் பணியில் விலக்கு அளிக்க வேண்டும்


பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்க உள்ளதால் உயர்நிலை மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, நாடாளுமன்ற தேர்தல் பணியில் இருந்து விலக்கு அளிக்க பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.பிளஸ் 2 தேர்வு மார்ச் 3ம் தேதி தொடங்கி 25ம் தேதி முடிகிறது. அத்தேர்வை, சுமார் 8 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். அதேபோல பத்தாம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 26ம் தேதி தொடங்கி ஏப்ரல் 9ம் தேதி முடிகின்றன.இந்த தேர்வை சுமார் 10 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். தற்போது மேற்கண்ட இரண்டு வகுப்புகளுக்கும் செய்முறைத் தேர்வுகள் நடந்து வருகின்றன. இதற்கான மதிப்பீடுகளை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் தயார் செய்து, ஆன்லைன் மூலம் தேர்வுத்துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

பின்னர், எழுத்து தேர்வுகள் தொடங்கும் முன்னதாக தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு ஹால்டிக்கெட்டுகள் வழங்குதல், தேர்வு மையங்களில் பதிவுஎண் வாரியாக அறைகள் ஒதுக்கீடு செய்வது, கேள்வித்தாள் எடுத்து வந்து தேர்வு நேரத்தில் வினியோகம் செய்தல், விடைத்தாள்களை கட்டுப்போட்டு திருத்தும் மையங்களுக்கு அனுப்புதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களே செய்ய வேண்டும் என்று தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.அதனால் தலைமை ஆசிரியர்கள் பொதுத் தேர்வுக்கான பணிகளை செய்து வருகின்றனர்.இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களை ஈடுபடுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. அதற்கான பட்டியல்களை அந்தந்த பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் தயாரித்து வருகின்றனர். 

தேர்தல் பணிக்கு தலைமை ஆசிரியர்களை ஈடுபடுத்தினால் பள்ளித் தேர்வுப் பணிகள் பாதிக்கப்படும் என்று தலைமை ஆசிரியர்கள் பள்ளிக் கல்வித்துறைக்கு தெரிவித்துள்ளனர்.மேலும், தேர்தல் பணியில் இருந்து தங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளனர்.இதையடுத்து தேர்வுத் துறை நடத்தும் தேர்வுக்கான ஆய்வுக் கூட்டத்தில் இது குறித்து பரிசீலனை செய்து தலைமை ஆசிரியர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்க பள்ளிக் கல்வித்துறை மற்றும் தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது. தேர்தல் பணிகள் தொடர்பான கூட்டம் இன்று அந்தந்த தாலுக்காக்களில் நடக்கிறது. இந்த கூட்டத்திலும் தலைமை ஆசிரியர்கள் தங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கேட்க உள்ளனர்.

'அங்கன்வாடி செயல்பாட்டை கண்காணிக்க வேண்டும்'

குழந்தைகளுக்கான அங்கன்வாடி மையங்கள் காலமுறைப்படி, முறையாக செயல்படுவதை கண்காணித்து, உறுதி செய்ய வேண்டும் என, தமிழ்நாடு சமகல்வி இயக்க நிர்வாகிகள் கோரிக்கை விடுத்தனர்.தமிழ்நாடு சமகல்வி இயக்கத்தின், சென்னை மாவட்டம் சார்பாக, அங்கன்வாடி மேம்பாட்டிற்கான, கருத்தரங்கம் நடந்தது. அதில், அங்கன்வாடி மையங்களின் மேம்பாட்டிற்காக, நிர்வாகிகள் விடுத்து உள்ள கோரிக்கைகள்: சென்னை மாவட்டத்தில், வாடகை கட்டடங்களிலும், ஓடு வேய்ந்த கட்டடங்களிலும் செயல்படும், அங்கன்வாடி மையங்களுக்கு சொந்த கட்டடம், அமைத்து தர வேண்டும்; அங்கன் வாடியில் வழங்கப்படும் உணவை, ஊழியர்கள் உண்டு, பரிசோதித்த பின்னரே, குழந்தைகளுக்கு வழங்க வேண்டும்; அனைத்து அங்கன்வாடி மையங்களிலும், மின் இணைப்பு வழங்கி, குழந்தைகளுக்கான வசதிகளை மேம்படுத்த வேண்டும். உணவுப்பொருள் விலையேற்றத்திற்கு தகுந்தாற் போல், குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவுத்தொகையை, இரண்டு மடங்காக உயர்த்த வேண்டும்; ஆசிரியர் மற்றும் உதவியாளர்களின், பணியிடங்களை பூர்த்தி, செய்ய வேண்டும்; புதிய மையங்களை, திறக்க வேண்டும்; காலமுறைப்படி, செயல்படுவதை அனைத்து மையங்களும் செயல்படுவதை, உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த ஆசிரியர் அதிரடி கைது


நாமக்கல் அருகே, பள்ளி மாணவியை, பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியரை, போலீஸார் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் அடுத்த சப்பையாபுரம் அரசு உயர் நிலைப்பள்ளி சமூக அறிவியல் ஆசிரியர் அருண்குமார், 27. அவர், கடந்த டிசம்பர் மாதம், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர் மற்றும் மாணவியை அழைத்துக் கொண்டு, நாமக்கல் தனியார் கல்லூரியில் நடந்த கருத்தரங்குக்குச் சென்றார்.
கருத்தரங்கு முடிந்தவுடன், மாணவரை பள்ளிக்கு அனுப்பி விட்டு, மாணவியை, கொசவம்பட்டியில் உள்ள அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அங்கே, ஆசை வார்த்தை கூறி, மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தார். அதிர்ச்சியடைந்த மாணவி, இரண்டு மாதங்களாக, பள்ளிக்கு ஒழுங்காக செல்லாமல், அடிக்கடி விடுப்பு எடுத்து வந்தார். சந்தேகமடைந்த பெற்றோர், மகளிடம் விசாரித்த போது, ஆசிரியர் அருண்குமார், பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த பெற்றோர், தலைமை ஆசிரியை அனுசியாவிடம் புகார் தெரிவித்தனர். இருப்பினும், ஆசிரியர் அருண்குமார் மீது நடவடிக்கை எடுக்காமல், அவருக்கு ஆதரவாக பேசி வந்தார் தலைமை ஆசிரியை. அதனால், மாவட்ட குழந்தைகள் நல குழுமத்தில், மாணவியின் பெற்றோர், புகார் செய்தனர். குழுமத் தலைவர் சிவகாமிவள்ளி, உறுப்பினர்கள் சதீஷ்பாபு, ஜெயபால் ஆகியோர், நேற்று பள்ளிக்குச் சென்று, ஆசிரியர் அருண்குமார் மற்றும் தலைமையசிரியை அனுசியா ஆகியோரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர். அதையறிந்த பெற்றோர், உறவினருடன் பள்ளியை முற்றுகையிட்டனர்.
குழந்தைகள் நல குழுமத்தினர், ஆசிரியர் அருண்குமாரை, வெண்ணந்தூர் போலீஸில் ஒப்படைக்க, பள்ளியை விட்டு வெளியே அழைத்து வந்தனர். ஆவேசமடைந்த பெற்றோர் சரமாரியாக தாக்கினர். குழுமத்தினர், அவர்களிடம் இருந்து, ஆசிரியரை விடுவித்து, வெண்ணந்தூர் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் வழக்கு பதிவு செய்து, ஆசிரியர் அருண்குமாரை கைது செய்தார். விசாரணையில், 2009ம் ஆண்டு, ஒரு பெண்ணை ரகசியமாக பதிவு திருமணம் செய்து கொண்டதும், 2013ம் ஆண்டு, பெற்றோர் சம்மதத்துடன் அதே பெண்ணை முறையாக திருமணம் செய்து கொண்டதும் தெரிய வந்தது. 

காலி பணியிடங்களால் கல்வி தரம் பாதிப்பு


மாற்றுத் திறனாளிகள் நலத்துறையில், பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், மாற்றுத் திறனாளி மாணவர்களின் கல்வித் தரம், பாதிக்கப்படும் அபாய சூழல் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில், 9 அரசு சிறப்பு பள்ளிகள்; வாய்பேச முடியாத, காது கேளாதோருக்கான, 9 சிறப்பு பள்ளிகள்; கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு, ஒரு சிறப்பு பள்ளி; மனவளர்ச்சி குன்றியோருக்கு, ஒரு சிறப்பு பள்ளி என, மொத்தம், 20 சிறப்பு பள்ளிகள் உள்ளன. இவற்றில், 150 சிறப்பு ஆசிரியர் பணியிடங்கள், மூன்று ஆண்டுகளாக, காலியாக உள்ளன. ஆசிரியர் அல்லாத அலுவலக பணியாளர் உள்ளிட்ட, 120 பணியிடங்களும், காலியாக உள்ளன. குறிப்பாக, சென்னை, பூந்தமல்லி அரசு சிறப்பு பள்ளியில் மட்டும், 16 சிறப்பாசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. பூந்தமல்லியில் உள்ள, பார்வையற்றோருக்கான வட்டார பிரெய்லி அச்சகத்தில், 21 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், மூன்று ஆண்டுகளாக, அச்சகம் செயல்படுவதில் சிக்கல் உள்ளது. பார்வையற்றோருக்கான பிரெய்லி புத்தகங்களை, தயாரிக்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் முன்னேற்ற சங்க தலைவர், தங்கம் கூறுகையில், ""இப்பிரச்னையால், மாற்றுத் திறனாளி மாணவர்களின் கல்வி மட்டுமின்றி, எதிர்காலமும் பாதிக்கப்படும் நிலை, உள்ளது. எனவே, தமிழக அரசு, காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்,'' என்றார்.

தேர்வுக்கு தயாராகும் மாணவருக்கு பயனுள்ள ஆலோசனைகள்

பிளஸ் 2 தேர்வு இன்னும் சில தினங்களில் துவங்க உள்ளது. அடுத்ததாக, 10 ம் வகுப்பு தேர்வுகளும் வர உள்ளன. அரசுத் தேர்வு எழுதும் மாணவர்கள், தேர்வை எளிதாக எதிர்கொள்ள இப்போதில் இருந்தே, சிறப்புக் கவனம் செலுத்துவது நல்லது.

மாணவர்களுக்கான, ஆலோசனைகள்.....இதோ:

ஒவ்வொரு பாடத்திற்கும் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி படிக்க வேண்டும். நன்றாக படித்த பாடங்களுக்கு குறைந்த நேரமும், அதிகம் படிக்காத பாடங்களுக்கு, அதிக நேரமும் ஒதுக்க வேண்டும்.
கணக்கு, வரைபடங்களுக்கு, தினமும் தனியாக நேரம் ஒதுக்குவது நல்லது. படிப்பின் இடையே, டீ, பிஸ்கட், வெள்ளரி, பேரீச்சம்பழம் சாப்பிடலாம்.
தேர்வுக்கு முந்தைய பத்து நாட்கள், படிப்பில் மட்டுமே முழு கவனம் செல்ல வேண்டும். 
படித்ததை எழுதிப் பார்க்க வேண்டும். ஒரு முறை எழுதுவது, 16 முறை படிப்பதற்கு சமம்.
கிரிக்கெட் விளையாடுவது, "டிவி' பார்ப்பதை கைவிடுவது நல்லது; அப்போது தான் அதிக மதிப்பெண் பெற முடியும்.
தேர்வு காலத்தில் சளி, காய்ச்சல் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வெயில் காலம் என்பதால் அடிக்கடி தண்ணீர் குடிப்பது நல்லது.
தேர்வுக்கு தயார் செய்யும் நேரத்தில், தியானம் செய்வது, பிடித்த விளையாட்டு விளையாடுவது பதற்றத்தை தணிக்கும்.
தேர்வுக்கான நுழைவுச் சீட்டு, எழுது பொருட்களை ஒரே இடத்தில் வைத்திருக்க வேண்டும். தேர்வுக்குச் செல்லும் முன், தேவையான அனைத்தும் உள்ளதா என, சோதித்து பின், அறைக்குள் செல்ல வேண்டும்.
தேர்வுக்கு முந்தைய அரை மணி நேரத்தில் எதையும் படிக்க வேண்டாம்.
தேர்வில், ஒரு மதிப்பெண் பதில்களை முதலில் எழுதிவிட வேண்டும்; பின், மற்ற கேள்விகளுக்கு பதில் எழுதலாம். கடைசி நேரத்தில் தெரியாத பதில்களை எழுதலாம்.
தேர்வு முடிய, இரண்டு நிமிடத்திற்கு முன் தேர்வு எழுதுவதை நிறுத்தி விட வேண்டும்.


முழு மதிப்பெண் அள்ளுவது எப்படி? : கடந்தாண்டு சாதனை மாணவி ராஜேஸ்வரியின் "டிப்ஸ்'


என்ன வியூகம் வகுத்து, பிளஸ் 2 தேர்வை எதிர்கொண்டால், முழு மதிப்பெண் பெறலாம் என, தனது கடந்தாண்டு அனுபவங்களை 'டிப்ஸாக' தருகிறார், 2013ம் ஆண்டில், பிளஸ் 2வில், மதுரை மாவட்டத்தில் முதல் 'ரேங்க்' பெற்ற சி.இ.ஓ.ஏ., பள்ளி மாணவி ராஜேஸ்வரி: பொதுவாக, அரசு தேர்வு என்ற டென்ஷனை முதலில் மூட்டை கட்டிவிட வேண்டும். மனதை ரிலாக்ஸாக வைத்துக்கொண்டு, தேர்வு அறைக்குள் மாணவர்கள் நுழைந்தாலே, பாதி வெற்றி உறுதி. ஒரு மார்க் வினாக்களுக்கு வேகமாக எழுதுவதன் மூலம், நெடுவினாவிற்கு தேவைப்படும் கூடுதல் நேரத்தை சரிக்கட்டலாம். எனவே, முடிந்த வரை இப்பகுதியை விரைவில் முடிக்க வேண்டும். இப்பகுதியில், முழு மதிப்பெண் பெறுவது மிக முக்கியம்.
ஒவ்வொரு பாடத்திலும் கடின பகுதி என்பதை முன்கூட்டியே முடிவு செய்துகொள்ள வேண்டும். அதை, அதிகாலை எழுந்தவுடன் படித்தால், வினாத்தாளில் கடின பகுதி வந்து விடுமோ என்ற கவலை, பயம் இருக்காது. குறைந்தது ஐந்து ஆண்டுகளில் கேட்கப்பட்ட, வினாவங்கியில் இடம் பெற்ற, கேள்விக்கான விடையை முழுமையாக படித்து வைத்திருக்க வேண்டும். குறிப்பாக, பழைய வினாத்தாள்களில் இருந்தே, அதிக ஒரு மார்க் கேள்விகள் இடம்பெறுகின்றன. வினாத்தாள் 'புளு பிரிண்ட்' அமைப்பை, ஒவ்வொரு மாணவரும் தெரிந்து வைத்திருந்தால், அவர்கள் தேர்வுக்கு தயாராவதில், திட்டமிட முடியும். புளு மை பேனாவால் எழுதும் மாணவர்கள், முக்கிய பகுதியை கருப்பு மை பேனாவால் எழுதினால், நல்லது. புளு, கருப்பு மை பேனாக்கள் தவிர வேறு கலரை தவிர்க்க வேண்டும். கையெழுத்து தெளிவாக இருக்க வேண்டும். ஒருசிலரது கையெழுத்து சுமாராக இருக்கும். அவர்கள் அடித்தல் திருத்தல் இல்லாமல் எழுத வேண்டும். ஒரு பக்கத்தில், 20 வரிகள் எழுதினால் போதும். அப்போதுதான் திருத்துவோருக்கு நல்லெண்ணம் ஏற்படும்.
முதலில், நன்றாக தெரிந்த வினாக்களுக்கு விடை எழுதுவது நல்லது. ஒருசிலர் நெடு வினாவில் இருந்து எழுத துவங்குவார்கள். ஒருசிலர் ஒரு மார்க் பகுதியில் இருந்து எழுதுவார்கள். இதுவரை நீங்கள் பின்பற்றிய அந்த அந்த முறைப்படியே, இத்தேர்விலும் தொடருவது நல்லது. படிக்கும் போது தூக்கம் வந்தால், முகத்தை கழுவி அதை விரட்டியடிக்கக் கூடாது. நன்றாக தூங்கிவிட்டு, பின் படிக்க துவங்குங்கள். தேர்வு நேரத்தில், இரவு பல மணிநேரம் கண் விழித்து படித்தால், தேர்வு அறையில் உடல் சோர்வடைந்து விடும். தேர்வு நேரத்தில் முழு வயிற்றுக்கு சாப்பிடுவதையும், துரித உணவு வகைகளை சாப்பிடுவதையும் தவிர்ப்பதன் மூலம், தேவையில்லாத உபாதை பிரச்னைகளில் இருந்து தப்பிக்கலாம். கொடுக்கப்பட்டுள்ள மூன்று மணி நேரத்தை திட்டமிட்டு செலவிட வேண்டும். பத்து நிமிடங்களுக்கு முன்பே தேர்வு எழுதி முடித்துவிட்டு, ஒரு முறை எழுதியதை திருப்பி பார்ப்பது முக்கியம்.கடந்தாண்டுகளின் வினா வங்கியில் இருந்து, அவ்வப்போது ஒரு வினாத்தாளை எடுத்து, தேர்வு எழுதிப் பார்க்கலாம். இதை அடிக்கடி செய்தால், தேர்வு சிரமமாக இருக்காது.

இவ்வாறு அவர் கூறினார். 

ஒரு பக்கம் சலுகை; மறுபக்கம் மதிப்பெண் பறிப்பு: டி.இ.டி., தேர்வர்கள் குமுறல்

ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,), தேர்ச்சிக்குரிய மதிப்பெண்ணில், 5 சதவீத குறைப்பு சலுகையை வழங்கிவிட்டு, மறுபக்கம், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் அளவில், 3 மதிப்பெண்ணை குறைத்திருப்பது, தேர்வர்கள் மத்தியில், குமுறலை ஏற்படுத்தி உள்ளது.

55 சதவீதம்:




டி.இ.டி., தேர்வில், மொத்தம் உள்ள, 150 மதிப்பெண்ணில், தேர்ச்சி பெற, 60 சதவீதமான, 90 மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற விதிமுறை முதலில் இருந்தது. சமீபத்தில், இந்த அளவை, இட ஒதுக்கீடு பிரிவினருக்கு, 55 சதவீதமாக குறைத்து, முதல்வர் அறிவித்தார். 5 சதவீத சலுகையினால், 82 மதிப்பெண் பெற்றவரில் இருந்து, அனைவரும், தேர்ச்சி பெற்றனர். டி.இ.டி., தேர்வில் எடுக்கும் மதிப்பெண், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் அடிப்படையில், 60க்கு கணக்கிடப்படுகிறது. பிற கல்வி தகுதிகளில் எடுக்கும் மதிப்பெண், 40க்கு கணக்கிடப்படுகிறது. இரண்டையும் சேர்த்து, 100க்கு, தேர்வர் வாங்கிய மதிப்பெண் அடிப்படையில், வேலைக்கான தேர்வுப் பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) தயாரிக்கிறது. இதில், டி.இ.டி., தேர்வில் எடுக்கும் மதிப்பெண் கணக்கிட்டு, அரசாணை வௌ?யிட்டதில், தேர்வர்களுக்கு, மூன்று மதிப்பெண் குறைத்து வழங்கப்பட்டு உள்ளது.

டி.இ.டி., தேர்வுக்கான, 150 மதிப்பெண், 60க்கு கணக்கிடப்படுகிறது. அதன் விவரம்:

* 90 - 100 சதவீத மதிப்பெண் எடுத்தால், 60 மதிப்பெண் (முழுமையாக வழங்கப்படுகிறது)

* 80 - 90 சதவீதம் வரை - 54 மதிப்பெண்

* 70 - 80 சதவீதம் வரை - 48

* 60 - 70 சதவீதம் வரை - 42

* 55 - 60 சதவீதம் வரை - 36

இவற்றில், முதல் நான்கு நிலை வரை, 10 சதவீதம் இடைவெளி அளவில், ஒவ்வொரு நிலைக்கும், 6 மதிப்பெண் வித்தியாசத்தில், படிப்படியாக மதிப்பெண் குறைத்து வழங்கப்பட்டுள்ளது.


பாதிப்பு:




ஆனால், கடைசி நிலையில், 55 சதவீதம் முதல் 60 சதவீதம் வரையிலான, ஐந்து சதவீத இடைவெளிக்குள் மதிப்பெண் எடுப்பவர்களுக்கு மட்டும், 36 மதிப்பெண் மட்டுமே ஒதுக்கப்பட்டு உள்ளது. பத்து சதவீத இடைவெளியில் வருபவர்களுக்கு, 6 மதிப்பெண் வித்தியாசம் எனில், 5 சதவீத இடைவெளிக்குள் இருப்பவர்களுக்கு, மூன்று மதிப்பெண் வித்தியாசம் வர வேண்டும். அதன்படி, 39 மதிப்பெண் வழங்க வேண்டும். ஆனால், மூன்று மதிப்பெண் குறைத்து, அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. இதனால், வேலைக்கான ஒட்டுமொத்த தேர்வு பட்டியலில், இட ஒதுக்கீடு பிரிவினருக்கு, பாதிப்பு ஏற்படும். ஒரு பக்கம், சலுகையை அறிவித்துவிட்டு, மறுபக்கம், இப்படி மதிப்பெண் குறைப்பது, எந்த வகையில் நியாயம் என, தேர்வர் கேள்வி எழுப்புகின்றனர். தேர்வு வாரிய வட்டாரம் கூறுகையில், 'இந்த விவகாரத்தில், நாங்கள் எதுவும் கூற முடியாது. முறையாக பார்த்தால், கடைசி நிலை தேர்வர்களுக்கு, 39 மதிப்பெண் வழங்க வேண்டும். ஆனால், இதை, நாங்கள் கூற முடியாது. அரசு தான் முடிவு எடுக்க வேண்டும்' என, தெரிவித்தது. மதிப்பெண் சலுகையின் பின்னணியில் உள்ள பாதிப்பை, முதல்வர் விசாரித்து சரி செய்ய வேண்டும் என, தேர்வர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இன்று தேசிய அறிவியல் தினம்


அறிவியல் இந்த ஒற்றை வார்த்தையில் தான் உலகமே அடங்கியிருக்கிறது. நமது அன்றாட நடவடிக்கைகள், ஒவ்வொன்றிலும் அறிவியல் மறைந்திருக்கிறது. தமிழகத்தை சேர்ந்த சி.வி.ராமன், "ராமன் விளைவு' என்ற ஒளி சிதறல் நிகழ்வை 1928 பிப்., 28ம் தேதி கண்டுபிடித்தார். "நீர், காற்று போன்ற தடையற்ற ஊடகத்தில் ஒளி ஊடுறுவும் போது, சிதறல் அடைந்து, அலை நீளம் மாறுகிறது. அதிகமாக சிதறல் அடையும் நீல நிறம் தண்ணீரில் தோன்றுகிறது' என்பதை கண்டுபிடித்தார். இந்த நாளே இந்தியாவில் தேசிய அறிவியல் தினமாக கொண்டாடப்படுகிறது. மாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தை ஏற்படுத்துவதே இதன் நோக்கம்.

எல்லாம் அறிவியலின் பயன்: இருளை விரட்டிய மின்விளக்கு, தூரத்தில் இருந்தாலும் உரையாட தொலைபேசி, என்ன வேலைகளையும் செய்வதற்கு கம்ப்யூட்டர், மரங்களில் நிழல்களை தங்கிய மனிதனுக்கு உயர்ந்து நிற்கும் வானளாவிய கட்டடங்கள், எங்கு வேண்டுமானாலும் செல்ல விரும்பிய மனிதன் கடலுக்கு நடுவே கூட பாலங்களை அமைத்தது; காலால் நடந்த மனிதன் கால்மணி நேரத்தில் வேறு நாட்டிற்கே (வாகனங்கள்) செல்கிறான். வெள்ளத்தில் இருந்த பாதுகாத்துக்கொள்ள அணைகள், மேலே இருந்து தகவல்களை தருவதற்கு சாட்டிலைட், அறிவியல் ரீதியாக சந்ததியை கண்டுபிடிக்க மரபணு, இலை தழைகளை உடுத்திய மனிதன் தற்போது பல வண்ணங்களில் வடிவங்களில் ஆடைகளை உடுத்துகிறான். பச்சை காய்கறிகளையும், பச்சை மாமிசங்களையும் சாப்பிட்ட மனிதன்; தற்போது உணவை தேர்வு செய்ய நீண்ட பட்டியலை பார்க்கிறான். இதற்கு காரணம் அறிவியல் தான்.

இரண்டும் கலந்ததே:




எந்த ஒரு அறிவியல் கண்டுபிடிப்பிலும் நன்மை, தீமை சேர்ந்தே இருக்கும். அதற்காக அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு தடை விதிக்கக் கூடாது. அறிவியலை ஆக்கப்பூர்வ விஷயங்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஒரு காலத்தில் "அணுகுண்டால்' உருக்குலைந்த ஜப்பான், இன்று அதே அணுசக்தியால் முன்னேற்றம் கண்டுள்ளது. இதற்கு காரணம் அந்நாட்டின் விஞ்ஞானிகள். நமது நாட்டிலும் மாணவர்கள் வெறும் புத்தக அறிவோடு நின்று கொள்வது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அவர்கள் ஆராய்ச்சிகளில் ஈடுபடுத்த அரசு முயற்சிக்க வேண்டும். அறிவியல் ஆர்வத்தை பள்ளி மாணவர்களிடம் இருந்து ஏற்படுத்த வேண்டும். இதற்கு அறிவியல் பாடப்புத்தகத்தில் தியரியுடன், செய்முறைப்பயிற்சியையும் இணைக்க வேண்டும். செய்முறைக்குத் தேவையான அறிவியல் ஆய்வு உபகரணங்கள் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

லோக்சபா தேர்தல் பணியில், "வெப் கேமராக்களை' இயக்கும் பணியில் மாணவர்களை ஈடுபடுத்த முடிவு


நீலகிரி லோக்சபா தேர்தல் பணியில், "வெப் கேமராக்களை' இயக்கும் பணியில் மாணவர்கள் ஈடுபடுத்தப்படுவர்' என, மாவட்ட கலெக்டர் தெரிவித்தார். நீலகிரி மாவட்ட கலெக்டர் சங்கர் கூறியதாவது: நீலகிரி மாவட்டத்தில், லோக்சபா தேர்தல் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. மாவட்டம் முழுக்க ஓட்டுச் சாவடிகளில் பணிபுரிய, 3,060 ஊழியர்கள் தேவைப்படுகின்றனர்; இருப்பினும், கூடுதலாகவே பணியாளர்கள் உள்ளனர். தவிர, 62 தேர்தல் ஓட்டுச்சாவடி அலுவலர்கள், 9 பறக்கும் படை, 9 கண்காணிப்புப் படை அலுவலர்கள் பணியில் நியமிக்க உள்ளனர். தேர்தல் பணியாற்ற உள்ள அதிகாரிகள், அலுவலர்களுக்கு பல கட்டமாக பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. தவிர, ஓட்டுப்பதிவை கண்காணிக்க 305 வெப் கேமராக்கள் தயாராக உள்ளன; கூடுதலாக, 318 மேராக்கள் வரவழைக்கப்பட உள்ளன. வெப்கேமராக்களை இயக்கும் பணியில் கல்லூரி மாணவ, மாணவியர் ஈடுபடுத்தப்படுவர். இவ்வாறு, கலெக்டர் சங்கர் கூறினார்.

பள்ளியின் முதல்வர் முதல் ஓ.ஏ., வரை தேர்வு மையத்தில் யாருக்கும் அனுமதி கிடையாது : தனியார் பள்ளிகளுக்கு, தேர்வு துறை, "செக்'


கடந்த காலங்களில், தேர்வு மையத்தின், முதன்மை கண்காணிப்பாளராக, பள்ளியின் முதல்வரே இருப்பார். மேலும், தேர்வு அலுவலர்களுக்கு உதவுவதற்காக, பள்ளியின், உதவியாளர் (ஓ.ஏ.,) இருப்பார்.
தற்போது, பள்ளி முதல்வரில் இருந்து, ஓ.ஏ., வரை, எவருக்கும் அனுமதி கிடையாது. வேறு பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர், முதன்மை கண்காணிப்பாளராக நியமிக்கப்படுவார். தேர்வு துவங்குவதற்கு முன், பள்ளி வளாகத்திற்குள், நிர்வாகத்தைச் சேர்ந்த ஒருவர் கூட, நுழைய அனுமதி கிடையாது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை : "தேர்வு மையங்களாக அமைக்கப்பட்டுள்ள தனியார் பள்ளிகளுக்குள், பள்ளி முதல்வர் முதல், ஓ.ஏ., வரை, ஒருவரும் நுழையக் கூடாது' என, தேர்வுத்துறை, கிடுக்கிப்பிடி உத்தரவை பிறப்பித்து உள்ளது. தேர்வில், சிறு அளவிற்கு கூட, முறைகேடு நடக்கக் கூடாது என்பதில், தேர்வுத்துறை, கவனமாக உள்ளது. இதற்காக, பல, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, துறை எடுத்து வருகிறது.
பிளஸ் 2 தேர்வு, 2,238 மையங்களிலும்; ??ம் வகுப்பு தேர்வு, 3,183 மையங்களிலும் நடக்கின்றன.
இவற்றில், பெரும்பாலான மையங்கள், தனியார் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த காலங்களில், பல முறைகேடுகள், தனியார் பள்ளிகளில் தான் நடந்துள்ளன. இரண்டு ஆண்டுகளுக்கு முன், திருவண்ணாமலையில் உள்ள, மவுன்ட் செயின்ட் ஜோசப் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில், பெரும் அளவிற்கு முறைகேடு நடந்தது. இதேபோல், பல பள்ளிகளில் நடக்கிறது. ஆனால், ஒருசில மட்டுமே, அதிகாரிகளின் கவனத்திற்கு வருகிறது. பெரிய தனியார் பள்ளிகளில், நுழைவாயில், "கேட்'டுக்கும், "போர்டிகோ'விற்கும், 200 அடி மற்றும் அதற்கும் மேலும், நீளமாக இருக்கும். நுழைவாயில், "கேட்'டில், பள்ளியைச் சேர்ந்த, காவலர் தான், பணியில் இருப்பார்.

"செக்' : பறக்கும்படை குழு வந்தால், "கேட்'டை திறப்பதற்கே, பள்ளி நிர்வாகத்திடம் அனுமதி கேட்பார். அனுமதி கிடைத்து, தேர்வு அறைகளுக்கு, பறக்கும் படை குழு செல்வதற்குள், "உஷார்' நடவடிக்கைகள் முடிக்கப்பட்டிருக்கும். இதுபோன்ற சம்பவங்கள், கடந்த காலங்களில் நடந்துள்ளன. தற்போது இயக்குனராக உள்ள, தேவராஜன், தேர்வுத் துறையில், நீண்டகாலம் பணியாற்றிய அனுபவம் வாய்ந்தவர்.
அதனால், தனியார் பள்ளிகளுக்கு, "செக்' வைக்கும் வகையில், அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
இது குறித்து, இயக்குனரக வட்டாரம் கூறுகையில், "தேர்வு முடிந்து, விடைத்தாள்கள் சேகரிக்கப்பட்டு, "சீல்' வைத்து, அங்கிருந்து எடுத்துச் சென்ற பிறகே, பள்ளி அலுவலர்கள், பணியாளர்கள் அனுமதிக்கப்படுவர்' என, தெரிவித்தது. தேர்வுத்துறையின், இந்த அதிரடி நடவடிக்கையால், தனியார் பள்ளிகள், அதிர்ச்சி அடைந்துள்ளன.

Thursday, 27 February 2014

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழகம் -உண்மை தன்மை அறிய ரூ 500 செலுத்தவேண்டும் - தேர்வு கட்டுபாட்டு அலுவரின் கடிதம்

டி.இ.டி., சிறப்பு தேர்ச்சி பெயர் பட்டியல் வெளியீடு



ஐந்து சதவீத சலுகை அடிப்படையில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்களின் பெயர் பட்டியலை மாவட்ட வாரியாக, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. டி.ஆர்.பி.,யின் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் டி.இ.டி., முதல் தாள் (இடைநிலை ஆசிரியர்), இரண்டாம் தாள் (பட்டதாரி ஆசிரியர்) ஆகியவற்றில், தேர்ச்சி பெற்றவரின் பெயர் பட்டியல் 32 மாவட்டங்களுக்கும் தனித்தனியே வெளியிடப்பட்டுள்ளது.

நாளைய (28.02.2014) மத்திய மந்திரிசபைக் கூட்டத்தில் என்னென்ன முடிவுகள் மேற்கொள்ளப்படும்? - Cabinet Meet on Friday to Clear Populist Measures

Published: 27th February 2014 09:04 PM
Last Updated: 27th February 2014 09:04 PM
The Union Cabinet tomorrow will decide on a series of populist measures and some ordinances on anti-graft and protection of rights bills at a meeting possibly the last before the model code of conduct could come into force for coming Lok Sabha polls.

A proposal to increase the poll expenditure cap up to Rs 70 lakh per contestant from Rs 40 lakh now is also on the table of the cabinet meeting.

The cabinet will also decide on hiking dearness allowance to 100 per cent from existing 90 per cent, benefiting 50 lakh employees and 30 lakh pensioners.

The hike in DA would be effective from January 1 this year.

Another proposal which will bring cheers to pensioners is to ensure Rs 1,000 minimum monthly pension under the pension scheme run by retirement fund body EPFO, which would immediately benefit 28 lakh pensioners.

The cabinet is likely to consider a clarification on the decision for supply of 12 subsidised LPG cylinders per household in a year.

The government had last month raised the cap on supply of cheaper LPG from 9 to 12 cylinders of 14.2-kg each. It was inferred that this meant one cylinder in a month.

The ministry has proposed to the cabinet that consumers should have the freedom to book a refill after 21 days with an overall cap of 12 subsidised bottles in a year.

When the model code of conduct goes into force with the announcement of the election schedule, no populist measure can be made public and any policy decision can be announced only with the clearance of the Election Commission.

Sources said the cabinet may also consider raising the retirement age of government employees from 60 to 62 years.

The raising of superannuation age was originally a part of the Terms of Reference of the Seventh Pay Commission.

Since the Commission report is expected not before 2017, a decision on raising the retirement age cannot happen before that.

So, the reference to retirement age has been removed from the ToR of the 7th Pay Commission and it is speculated that the same may be brought as a supplementary agenda.

Sources have not ruled out a proposal before the cabinet to provide 'special category' status to Andhra Pradesh for development of Seemandhra region on the ground of revenue loss following the bifurcation.

The sources said Planning Commission's Deputy Chairman Montek Singh Ahluwalia had met Rural Development Minister Jairam Ramesh recently to fine tune the proposal.

The cabinet could also approve six ordinances on bills pending in Parliament.

Three ordinances which had lapsed last month could also be re-promulgated.

Three anti-corruption bills -- Prevention of Corruption (Amendment) Bill, Right of Citizens for Time-Bound Delivery of Goods and Services and Redressal of their Grievances Bill and the Public Procurement Bill -- are likely to be approved as ordinances.

Along with these, the SC/ST (Prevention of Atrocities) Amendment Bill, Rights of Persons with Disability Bill, Security Laws (Amendment) Bill, ordinances on Medical Council of India and another which gives Election Commission limited powers to make changes in Scheduled Caste and Scheduled Tribe constituencies, where some castes have been either excluded or included between the 2001 census and May 2012, are also likely to be approved by the cabinet.

An ordinance seeking to enhance the pecuniary jurisdiction of civil suits of the Delhi High Court from existing Rs 20 lakh to Rs 2 crore will also come up.

The Delhi High Court (Amendment) Bill, 2014, introduced in the Rajya Sabha recently, aims at reducing workload of the Delhi High Court by transferring thousands of civil suits, valued up to Rs 2 crore, to the nine district courts in Delhi.

முகத்தில் ஆசிரியை துப்பியதால் 9ம் வகுப்பு மாணவி தீக்குளிப்பு


சக மாணவர்கள் எதிரில், முகத்தில் ஆசிரியை எச்சில் துப்பியதால், மனமுடைந்த மாணவி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். அவருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இச்சம்பவம் திருவொற்றியூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவொற்றியூர் அப்பர்சாமி கோயில் தெருவை சேர்ந்தவர் முனியாண்டி. தனியார் கம்பெனி ஊழியர். இவரது மனைவி ஷோபனா. அதே பகுதியில் உள்ள மாநகராட்சி அம்மா உணவகத்தில் வேலை பார்க்கிறார். இவர்களுக்கு பார்த்திபன் என்ற மகனும், பவித்ரா (14) என்ற மகளும் உள்ளனர். விம்கோ நகர் அருகே உள்ள ஜெயகோபால் கரோடியா அரசு மேல்நிலைப்பள்ளியில் பவித்ரா 9ம் வகுப்பு படித்து வருகிறார்.

நேற்று முன்தினம் மாலை வீட்டுக்கு பவித்ரா வந்ததும், சாப்பிட சொல்லிவிட்டு ஷோபனா வேலைக்கு சென்றுள்ளார். வீட்டில் யாரும் இல்லாத நிலையில், பவித்ரா திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார். அவரது அலறல் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து தீயை அணைத்து பவித்ராவை மீட்டனர்.தகவலறிந்து திருவொற்றியூர் இன்ஸ்பெக்டர் பிரபு வந்து பலத்த தீக்காயம் அடைந்த பவித்ராவை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.அதில், நேற்று முன்தினம் பள்ளியில் பவித்ராவுக்கு ரேங்க் கார்டு வழங்கப்பட்டது. அப்போது, யார் அதிக மதிப்பெண் பெற்றுள்ளனர் என கேட்டு, சக மாணவர்களுடன் பவித்ரா பேசியுள்ளார். அந்த நேரத்தில் வகுப்பில் இருந்த ஆசிரியை, பவித்ராவை அழைத்து திட்டியுள்ளார். மேலும், அவர் சாப்பிட்டு கொண்டிருந்த திராட்சையை, பவித்ராவின் முகத்தில் துப்பியுள்ளார்.

சக மாணவர்கள் முன்னிலையில் ஆசிரியை, தனது முகத்தில் எச்சில் துப்பியதால், வகுப்பறையில் பவித்ரா அழுது கொண்டிருந்தார். வீட்டுக்கு வந்தபோது தாயுடன் பேசாமல் இருந்துள்ளார். அதைப்பற்றி, ஷோபனா கேட்டபோது, எதுவும் கூறவிலை.இதைதொடர்ந்து தாய் வெளியே சென்றதும் தீக்குளித்துள்ளார் என தெரியவந்துள்ளது.இதுகுறித்து ஷோபனாவின் உறவினர்கள், சம்பந்தப்பட்ட ஆசிரியை மீது போலீசில் புகார் செய்துள்ளனர். புகாரின்பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.பள்ளி மாணவர்களை மென்மையாக நடத்த வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆனால், இதுபோன்று சில ஆசிரியைகள் கடினமாக நடந்து கொள்வதால், ஆசிரியர்கள் அனைவருக்கும் கெட்ட பெயர் ஏற்படுகிறது. இந்த புகாரை போலீசார் பதிவு செய்ய மெத்தனம் காட்டுகின்றனர். மாணவி உயிருக்கு ஆபத்து நேர்ந்தால் மட்டுமே, ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்திய பிறகு நடவடிக்கை எடுப்பார்கள் என அப்பகுதியினர் தெரிவித்தார்.

+2 மாணவர்கள் பெல்ட் அணிய தடை

10 ஆம் வகுப்புக்கு முப்பருவ முறை கல்வித் திட்டம் இல்லை


ஆசிரியர் தகுதித்தேர்வில் 5 சதவீத மதிப்பெண் தளர்வு 42647 பேர் தேர்ச்சி


ஆசிரியர் தகுதித்தேர்வில் 5 சதவீத மதிப்பெண் தளர்வு வழங்கப்பட்டுள்ள நிலையில், தாள் 1 ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வரும் மார்ச் 12ம் தேதி முதல் சான்றிதழ் சரிபார்க்கும்பணி துவங்கவுள்ளது.தற்போது 5 சதவீத மதிப்பெண் தளர்வு வழங்கப்பட்டுள்ள நிலையில் 42647 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

TNTET 2013 - Provisional List of Candidates called for Certificate Verification due to 5% Relaxation in the qualifying marks.