Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Thursday, 27 February 2014

தனியார் பள்ளிகளில் முன்கூட்டியே மாணவர் சேர்க்கை விறுவிறுப்பு : 25 சதவீத இட ஒதுக்கீடு கேள்விக்குறி


முன்னணி தனியார் பள்ளிகளில், அரசு விதிமுறைக்கு மாறாக, முன்கூட்டியே, மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இதை தடுக்க, மெட்ரிக் பள்ளி இயக்குனரகம், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முன்கூட்டியே, இடங்களை நிரப்பி விட்டால், இலவச மற்றும் கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ், ஏழை, எளிய குழந்தைகளுக்கு, 25 சதவீத இடங்களை தர, "சீட்'டே இருக்காது என்ற நிலையும் உருவாகி உள்ளது.

"சீட்'டே இருக்காது : "மாணவர் சேர்க்கை பணிகளை, ஏப்ரலில் துவக்கி, மே மாதத்தில் முடிக்க வேண்டும்' என, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. ஆனால், முன்னணி தனியார் பள்ளிகள், முன்கூட்டியே, 
பிரீ - கே.ஜி., மற்றும் எல்.கே.ஜி., - யு.கே.ஜி., இடங்களை நிரப்பி வருகின்றன.
சமீபத்தில், சென்னை, கல்லூரி சாலையில் உள்ள, ஒரு மெட்ரிக் பள்ளியில், எல்.கே.ஜி., விண்ணப்பம் வாங்க, பெற்றோர் கூட்டம் நிரம்பி வழிந்த விவகாரம், இயக்குனரகத்தின் கவனத்திற்கு சென்றதும், மாணவர் சேர்க்கை பணி, தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது. ஆனால், நாமக்கல் உள்ளிட்ட, சில மாவட்டங்களில் உள்ள முன்னணி பள்ளிகளில், மாணவர் சேர்க்கை, தீவிரமாக நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதை, மாவட்டங்களில் உள்ள, மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் உள்ளிட்ட, எந்த அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழ்நாடு நர்சரி, பிரைமரி மெட்ரிக் பள்ளிகள் சங்க பொதுச் செயலர், நந்தகுமார் கூறுகையில்,
""நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பெரிய பள்ளிகளில், மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது; இது, அதிகாரிகளுக்கும் தெரியும். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்காமல், மவுனம் காக்கின்றனர்,'' என்றார்.
முன்கூட்டியே, மாணவர் சேர்க்கை நடந்தால், இலவச மற்றும் கட்டாயக் கல்வி சட்டத்தின் (ஆர்.டி.இ.,) கீழ், தனியார் பள்ளிகளில், ஏழை, எளிய, பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு, முதல்நிலை வகுப்புகளில், (பிரீ - கே.ஜி., அல்லது எல்.கே.ஜி., அல்லது முதல் வகுப்பு), 25 சதவீத இடங்களை ஒதுக்கீடு செய்ய, "சீட்'டே இருக்காது என்ற நிலையும் உருவாகி உள்ளது. 

அரசின் எண்ணத்திற்கு... : கடந்த ஆண்டு, ஆர்.டி.இ., சட்டத்தின் கீழ், 20 ஆயிரம் இடங்களை, தனியார் பள்ளிகள் வழங்கின. வரும் ஆண்டில், இந்த எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என, அரசு கருதுகிறது.
ஆனால், அரசின் எண்ணத்திற்கு, வேட்டு வைக்கும் விதமாக, தனியார் பள்ளிகள், முன்கூட்டியே இடங்களை நிரப்பி வருகின்றன.

No comments:

Post a Comment