தொடக்க கல்வித் துறையைச் சேர்ந்த, 12 ஆயிரம் ஆசிரியர், நேற்று, விடுப்பு எடுத்து, போராட்டம் நடத்தினர். இவர்களுக்கு, இரண்டு நாள், சம்பளம், "கட்' செய்வதுடன், துறை ரீதியாக, பல நடவடிக்கைகள் எடுக்கப்படும் என, இயக்குனரக வட்டாரம் தெரிவித்தது. இயக்குனரக வட்டாரம், மேலும் கூறியதாவது:
ஆசிரியர் பயிற்றுனர்கள் மற்றும், "டெபுடேஷன்' முறையில், கூடுதல் ஆசிரியர்களை நியமித்து, மாணவர் பாதிக்காத வகையில், நடவடிக்கை எடுக்கப்பட்டது. போராட்டம் நடத்திய, 2 நாளுக்கும், சம்பளம், "கட்' செய்யப்படும். மேலும், துறை ரீதியாக, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, இயக்குனரக வட்டாரம் தெரிவித்தது. சங்கத்தின் பொதுச்செயலர், ரங்கராஜன் கூறுகையில்,""55 ஆயிரம் ஆசிரியர், போராட்டத்தில் பங்கேற்றனர். சங்கத்தின் செயற்குழுவை கூட்டி, அடுத்தகட்ட போராட்டம் குறித்து, முடிவு எடுப்போம்,'' என்றார்.
No comments:
Post a Comment