Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Tuesday, 25 February 2014

கற்றல் குறைபாடு (DYSLEXIA) சாபமல்ல வரம்


துரு துரு கண்கள் மழழை ததும்பும் சொற்கள், அத்தனை கேள்விகள், அத்தனை குறும்புகள், இப்படித்தான் தொடங்குகிறது ஒவ்வொரு குழந்தையின்  வாழ்க்கையும் குழந்தைகளின் மீதான ஆச்சரியங்கள் குறைவதற்குள்ளாகவே அவர்களை பள்ளிக்கு அனுப்புகிறோம். கற்றல் குறைபாடு உள்ள  குழந்தைகள் பற்றி பள்ளி சென்ற பின்னர் தான் தெரிந்து கொள்ள முடிகிறது. 


வாசித்தல், எழுதுதல், மற்றும் கணிதத்தில் குறைபாடுகள் கண்டறியப்பட்டாலும் இதற்கான காரணத்தை அறிய பெற்றோர் முயற்சிப்பதில்லை. காரணம்  இதை பெரும்பாலான பெற்றோர் சாபமாக கருதுகின்றனர். சரியான வயதில் கண்டறிந்து சரி செய்து விட்டால் அந்தகுழந்தைகளின் மற்ற திறன்களை  அழகாக மேம்படுத்திக் கொள்ள முடியும் என்கிறார் உளவியல் நிபுணர் தேவிப்பிரியா. 

தேவிப்பிரியா கூறுகையில் "மூளையின் இரண்டு பாகங்கள் அதன் எதிர் எதிர் பக்க தசை இயக்கங்களை கட்டுபடுத்துகின்றன. டிஸ்லெக்சியா  எனப்படும் கற்றல் குறைபாடு உள்ளவர்கள் வலது பக்க மூளை செயல்பாடுகளில் தீவிரம் கொண்டவர்களாக இருப்பார்கள். இதனால் இவர்கள்  வழக்கமான செயல்பாடுகளை வேறுகோணத்தில் பார்க்கும் நிலை உருவாகிறது கூடுதல் திறன்களின் அதிகளவு ஆர்வம் காட்டுகின்றனர். ஆர்வத்துடன்  உணர்ச்சி மேம்பட்ட நிலையிலும் இந்த குழந்தைகள் காணப்படுவதுண்டு. 

படிப்பது மொழித்திறன், எழுத்துகளை இணைத்து கோர்வையாக்குவது, கணிதப்பயன்பாடு, சிந்தித்தல், நினைவாற்றல், கவனித்தல், ஒருங்கிணைத்தல்  மற்றும் நடத்தையிலும் கற்றலில் சிரமம் உள்ள குழந்தைகள் சவால்களை சந்திக்கின்றன. இந்த வயதுக்குழந்தைகள் அதிக நேரம் பள்ளியில்  இருப்பதால் அவர்களது செயல்பாடுகளிலும் சிரமத்தை வெளிபடுத்துகின்றனர். செயல் பாடுகளில் தவறுதல், தொடர்ச்சியின்மை, சோம்பேரி போல  இருப்பது, குறைவான கவனம் செலுத்துதல், நான்கு நாட்களுக்கு முன்னர் நடந்த விஷயங்களை தாமதமாக நினைவுக்கு கொண்டு வருவதையும்  பார்க்கலாம். தன்னுடைய பொருட்களைத் தொலைத்தல், படிக்கும் திறனில் பிரச்சனைகள் வந்தாலும் புரிந்து கொள்ளலாம்.

கவனக்குறைவு உள்ள குழந்தைகளை ஆறு வயதில் இருந்தே கண்டறிய முடியும். கவனச்சிதறல் உள்ள குழந்தைகள் கற்றல் குறைபாடு  உள்ளவர்களாக இருக்கவும் வாய்ப்புள்ளது. படித்ததை மீண்டும் நினைவுக்கு கொண்டு வருவதிலும் இவர்கள் பிரச்சனைகளை சந்திக்கின்றனர். இது  போல் தடுமாற்றம் உள்ள குழந்தைகளுக்கு அதற்கென உள்ள அசஸ்மெண்ட் டெஸ்ட் மூலம் கற்றல் குறைபாடு உள்ளதா? எதில் உள்ளது? எந்தளவு  பாதிக்கப்பட்டடுள்ளது என்பதையும் புரிந்து கொள்ளலாம்.

எந்தத் திறனில் குறைபாடு உள்ளதோ அதற்கு ஏற்ப மேம்பாட்டுத் திட்டங்களை வழி வகுத்து குறைபாடுகளை  சரி செய்ய முடியும். மேலும்  அவர்களின் தனித்திறன்களை கண்டறிந்து மேம்படுத்த வாய்ப்பளிக்கப்பட வேண்டும். கற்றலுடன் கைகலுக்கும், சிந்தனைக்கும் சிறகு அளிக்கும்  வகையில் விளையாட்டு மற்றும் தொழில் சார்ந்த பயிற்சிகள் மூலம் தன்னம்பிக்கையை அதிகரிக்க முடியும். மற்ற திறன்களுடன் கற்றலிலும்  குழந்தைகள் ஈடுபாடு காட்டுவார்கள். மூளையின் செயல்பாட்டை தூண்டுவதன் மூலம் கற்றல் குறைபாடு பிரச்சனை மோசம் ஆகாமல் அவர்களை  கற்றலில் திருப்திகரமாக மாற்ற முடியும். கற்றலில் சிரமப்படுவதை உணர்ந்து சரி செய்தால் அது வரமாக மாறும் என்கிறார்.

No comments:

Post a Comment