தினமலர்' நாளிதழ் செய்தியின் எதிரொலியாக, "கல்லூரி நிர்வாக இடஒதுக்கீட்டின் கீழ் பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கான இலவச கல்வியில், பழைய முறையே தொடரும்' என, அரசாணை ?வளியிடப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் நலத் துறையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் ?வளியிடப்பட்ட அரசாணையின் படி, "கல்லூரிகளில் பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு, இலவச கல்வி வழங்கப்படும். நூலகம், பயிற்சி, மாணவர் சங்கம் உள்ளிட்ட, எந்த கட்டணத்தையும் கட்ட தேவையில்லை' என, அறிவிக்கப்பட்டது. ஆனால், கடந்த மாதம் ?வளியிடப்பட்ட அரசாணையின்படி, சுயநிதி கல்லூரிகளில், கல்லூரி நிர்வாக இட ஒதுக்கீட்டின் கீழ் சேரும் மாணவர்களுக்கு, பாதி தொகை மட்டுமே வழங்கப்படும் என, அறிவித்தது. இதனால், தமிழகம் முழுவதும், 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவானது. இத்திட்டத்தில் பழைய முறையே, தொடர வேண்டும் என, மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து, "தினமலர்' நாளிதழில் விரிவான செய்தி ?வளியானது. இதைத் தொடர்ந்து, நேற்று ?வளியிட்டுள்ள அரசாணையில், பழைய முறையே தொடரும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முதலே, அரசாணை அமலுக்கு வரும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment