பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுத 1 லட்சத்து 26 ஆயிரம் தனித் தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளனர். தொடர் மின் தடை காரணமாக அவர்களில் 80 ஆயிரம் பேர் இன்னும் தேர்வுக் கட்டணம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இன்று மாலைக்குள் கட்டணம் செலுத்தாத விண்ணப்பங்களை தேர்வுத் துறை நிராகரிக்க முடிவு செய்துள்ளது. பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் 2014 மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடக்க உள்ளது. பள்ளிகள் மூலம் தேர்வு எழுத உள்ள மாணவர்கள் தவிர, ஏற்கனவே தேர்வு எழுதி தோல்வி அடைந்தவர்கள், வீட்டில் இருந்தே நேரடியாக தேர்வு எழுத விரும்புவோரை தனி தேர்வர்களாக தேர்வு துறை வைத்துள்ளது.
இவர்கள் பொதுத் தேர்வு நேரங்களில் விண்ணப்பித்து தேர்வு எழுத விண்ணப்பிக் கும் போது பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இதற்காக தேர்வுத்
துறை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. ஆனாலும், தனியார் கம்ப்யூட்டர் மையங்கள் மூலம் தேர்வு விண்ணப்பங்களை ஆன்லைனில் அனுப்பும்போது பல்வேறு தவறுகளை அந்த கம்ப்யூட்டர் மையங்கள் செய்து விடுகின்றன.
இதனால் பல மாணவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன. சில மாணவர்கள் தேர்வு எழுதினா லும் அவர்கள் கொடுத்த தவறான தகவல்களின் அடிப்படையில் அச்சிடப் படும் மதிப்பெண் பட்டியலில் ஏற்படும் குறைகளை சரி செய்ய தேர்வுத் துறைக்கு படையெடுக்கின்றனர். இதை கருத்தில் கொண்டு அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரி (டிஇஓ) அலுவலகங்களில் இருந்தே தேர்வு விண்ணப்பங்களை அனுப்ப 88 மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த மையங்களிலேயே விண்ணப்பிக்கலாம், போட்டோ எடுத்துக் கொள்ளலாம், கட்டணமும் செலுத்திவிடலாம். மாணவர்கள் அங்கும் இங்கும் அலையத் தேவையில்லை. இந்த பணிகளை செய்ய தேர்வுத்துறையை சேர்ந்த அலுவலர்கள் ஒவ்வொரு மையத்திலும் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வுத் துறை பணியாளர்களே விண்ணப்பங்களை பூர்த்தி செய்வ தால் பிழைகள் ஏற்பட வாய்ப்பில்லை.
இதையடுத்து பிளஸ் 2 தேர்வு எழுத தமிழகம் முழுவதிலும், நேற்று வரை 56 ஆயிரத்து 781 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் ஏற்கெனவே தேர்வு எழுதி தோல்வி அடைந்தவர்கள் 38 ஆயிரத்து 932 பேர். பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்தபடியே படித்து நேரடியாக தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளவர்கள் 15 ஆயிரத்து 978 பேர். மொத்த மாணவர்களில் 17 ஆயிரத்து 644 பேர் மட்டுமே இதுவரை கட்டணம் செலுத்தியுள்ளனர்.
சென்னையில் 5210 பேர் விண்ணப்பித்துள்ளனர். 2160 பேர் மட்டுமே கட்டணம் செலுத்தியுள்ளனர். பத்தாம் வகுப்பு தேர்வு எழுத மொத்தம் 69 ஆயிரத்து 941 பேர் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் 28 ஆயிரத்து 344 பேர் மட்டுமே கட்டணம் செலுத்தியுள்ளனர். சென்னையில் 4049 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் 1450 பேர் மட்டுமே கட்டணம் செலுத்தியுள்ளனர்.
இந்நிலையில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும், கட்டணம் செலுத்தவும் இன்று கடைசி நாள். ஆனால், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வுகளுக்கு தனித் தேர்வர்களாக விண்ணப்பித்துள்ள 1 லட்சத்து 26 ஆயிரத்து 722 பேரில் நேற்று வரை 80 ஆயிரத்து 734 பேர் தேர்வுக் கட்டணம் செலுத்தவில்லை. இதனால் அவர்கள் விண்ணப்பங்களை தேர்வுத் துறை நிராகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அப்படி நிராகரிக்கப்பட்டால் ஒரு ஆண்டு வரை மாணவர்கள் காத்திருக்க வேண்டியதுதான்.
இன்று இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பல மாணவர் களால் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும், கட்ட ணம் செலுத்த முடியாமல் போனதற்கு மின்தடைதான் காரணமாக கூறப்படுகிறது. 9 மணி நேரம் மின் தடை ஏற்பட்டுள்ளதால் கம்ப்யூட்டர்களை இயக்க முடியவில்லை என்று டிஇஓ அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
டிஇஓ அலுவலகங்களில் நேற்று வரை பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்களில், தேர்வுத் துறைக்கு ஆன்லைன் மூலமே அனுப்ப மின்சாரம் இருந்தால் தான் முடியும். நேற்று மொத்த விண்ணப்பங்களில் 57 ஆயிரத்து 347 விண்ணப்பங்கள் மட்டுமே தேர்வுத்துறைக்கு வந்து சேர்ந்துள்ளன. தவிரவும், ஆன்லைனில் விண்ணப்பிக்க உருவாக்கப்பட்ட 88 மையங்கள் போதாது.
தமிழகத்தில் உள்ள 400 ஊராட்சி ஒன்றியங்களிலும் தலா ஒரு மையம் ஏற்படுத்த வேண்டும் என்றும் மாணவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. எனவே மின்தடையை கருத்தில் கொண்டு விண்ணப்பிக்கும் தேதியை நீட்டிக்க வேண்டும் என்றும் மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர். தேர்வுத் துறை நடவடிக்கை எடுக்குமா?
No comments:
Post a Comment