Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Saturday, 31 May 2014

ஜூன் 2-ல் பள்ளிகள் திறப்பு: இதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை; பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவிப்பு

கோடை விடுமுறைக்குப் பின்னர் பள்ளிகள் ஜூன் 2-ம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை ஏற்கெனவே அறிவித்துவிட்டது.

இதற்கிடையே, தற்போது நிலவும் கடுமையான வெயில் காரணமாக, பள்ளிகள் காலதாமதமாக திறக்கப்படலாம் என்று மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் தகவல் பரவிய வண்ணம் உள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட படி, கோடை விடுமுறை முடிந்து அனைத்துப் பள்ளிகளும் ஜூன் 2-ம் தேதி (திங்கள்கிழமை) திறக்கப்படும். இதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை.

பள்ளி திறக்கும் முதல் நாள் அன்றே, மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள், நோட்டுகள், சீருடைகள் வழங்கப்படும். 5 கோடி புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன. இதன்மூலம் தமிழகம் முழுவதும் ஒரு கோடியே 30 லட்சம் மாணவ-மாணவிகள் பயன்பெறுவார்கள்.

இவ்வாறு ராமேஸ்வர முருகன் கூறினார்.

DA HIKE STATUS: அரசு ஊழியர்களுக்கு 01.07.2014 முதல் அகவிலைப்படி 7% முதல் 8% வரை உயர வாய்ப்பு?


தொடக்கப் பள்ளிகளில் 30 மாணவர்கள் இருந்தால் போதும் ஆங்கில வழி கல்வி; அரசு உத்தரவு

தொடக்கப் பள்ளிகளில் குறைந்தபட்சம் 30 மாணவர்கள் இருந்தாலே போதும், ஆங்கில வழி கல்வியை தொடங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் செயல் படும் அனைத்து தொடக்க, உயர்நிலைப் பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி பிரிவுகளை தொடங்க வேண்டும் என்று கடந்த ஆண்டு அரசு உத்தரவிட்டது. அதன்படி கடந்த ஆண்டில் முதல் வகுப்பு மற்றும் 6ம் வகுப்புகளில் ஆங்கில வழி கல்வி பிரிவுகள் தொடங்கப்பட்டன. மாணவர்கள் எண்ணிக்கை 30க்கும் மேல் உள்ள தொடக்கப் பள்ளிகளில் 3 ஆசிரியர்கள் பணியாற்றினால் அந்த பள்ளிகளிலும் ஆங்கில வழி கல்வி தொடங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. 

அதேநேரத்தில் 30 மாணவர்களுக்கு கீழ் உள்ள இரண்டு ஆசிரியர்கள் பணியாற்றும் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி பிரிவுகள் தேவை இல்லை என்றும் முடிவு செய்யப்பட்டது. இந்த ஆண்டு அனைத்து பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வியை தொடங்க வேண்டும் என்று அரசு கண்டிப்பாக தெரிவித்துவிட்டது. இதனால் இரு ஆசிரியர்கள் உள்ள பள்ளிகளிலும் ஆங்கில வழிப் பிரிவு வருவதில் தடையேதும் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. 

30 மாணவர்களுக்கு குறைவான மாணவர்கள் இருந்தால் அந்த பள்ளிகளில் 30 மாணவர்களை  தலைமை ஆசிரியர்கள் சேர்த்து ஆங்கில வழிக் கல்வியை தொடங்க வேண்டும் என்றும் இணை இயக்குநர்கள் தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் ஆங்கில வழிக் கல்வி வகுப்புகளை தொடங்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகின்றனர்.

1 முதல் 5 ஆம் வகுப்பு வரையில் பள்ளி திறப்பு ஒத்திவைப்பு? தினமலர் திருச்சி பதிப்பு 12 ஆம் பக்க செய்தி


கோவை கல்வி மாவட்டத்தில், நடப்பு கல்வியாண்டில் (2014-15) 92 தொடக்கப்பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள்!


கோவை கல்வி மாவட்டத்தில், நடப்பு கல்வியாண்டில் (2014-15) 92 தொடக்கப்பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் துவங்க உள்ளதாக, தொடக்க கல்வி அலுவலர் (பொறுப்பு) காந்திமதி தெரிவித்தார்.
அரசு பள்ளிகளின் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்க பள்ளிக்கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆங்கிலத்தின் மீது கொண்ட மோகத்தால், தனியார் பள்ளிகளை நாடும் பெற்றோர்களை கவரும் வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக, அரசு பள்ளிகளில் ஆங்கிலவழிக்கல்வி செயல்படுத்தப்பட்டு வருகிறது.கடந்த கல்வியாண்டில், மாநிலம் முழுவதும் 3000 பள்ளிகளில் ஆங்கிலவழிக்கல்வி துவங்கப்பட்டது. நடப்பு கல்வியாண்டில், இரண்டு ஆசிரியர்கள் உள்ள பள்ளிகளிலும் மாணவர்கள் சேர்க்கை 50 ஆக இருந்தால், ஆங்கில வழிக்கல்வியை துவக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தில், 249 பள்ளிகளில் ஆங்கிலவழிக்கல்வி துவங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை மே முதல் வாரத்திலேயே துவங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்க, ஆசிரியர்கள் நேரடியாக வீடுகளுக்கு சென்று விழிப்புணர்வு பிரசாரங்களில் ஈடுபட்டுள்ளனர்.மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் (பொறுப்பு) காந்திமதி கூறுகையில்,''கோவையில் ஆங்கில வழிக்கல்வியில் மாணவர்கள் சேர்க்கை நடந்து வருகிறது. நடப்பு கல்வியாண்டில், 92 பள்ளிகளில் புதிதாக ஆங்கில வழிக்கல்வி துவங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் சேர்க்கை சார்ந்த தகவல்கள், பள்ளிகள் திறந்து ஓரிரு நாளில் அறிவிக்கப்படும்,'' என்றார்.

பள்ளிகளில் மாணவனின் பெயர் / பிறந்த தேதி / தந்தை பெயர் /சாதி மற்றும் முகப்பெழுத்து திருத்தம் குறித்து இயக்குநரின் அறிவுரைகள்

பள்ளிகல்வி இயக்குநரின் செயல்முறைகள் -ந .க .எண் 28192/எம்/இ3/2014.நாள்-09.05.2014-திருத்தம் குறித்து இயக்குநரின் அறிவுரைகள் -




10 ஆயிரம் தனியார் பள்ளிகளின் கட்டண விவரங்கள் வெளியீடு

புதிய பள்ளிகள், மேல்முறையீடு செய்த பள்ளிகள் உள்பட 10 ஆயிரத்து 55 தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணய விவரங்கள் தமிழக அரசின் www.tn.gov.in என்ற இணையதளத்தில் வியாழக்கிழமை வெளியிடப்பட்டன.
நீதிபதி எஸ்.சிங்காரவேலு குழு, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு கடந்த ஆண்டு கட்டணம் நிர்ணயம் செய்தது. 2013-14, 2014-15, 2015-16 ஆகிய மூன்று கல்வியாண்டுகளுக்கும் சேர்த்து இந்தக் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டன.
இந்தக் கட்டண நிர்ணயத்தை எதிர்த்து நூற்றுக்கணக்கான தனியார் பள்ளிகள் நீதிபதி சிங்காரவேலு குழுவிடம் மேல்முறையீடு செய்தன. அதே போல், பல தனியார் பள்ளிகள் நீதிமன்றத்திலும் வழக்குகளைத் தொடர்ந்தன.
இந்தப் பள்ளிகளுக்கும் புதிதாகத் தொடங்கப்பட்ட பள்ளிகளுக்கும் கட்டணம் நிர்ணயிக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்தப் பணிகள் நிறைவடைந்ததையடுத்து இப்போது தமிழக அரசின் இணையதளத்தில் கட்டண நிர்ணய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இது தொடர்பாக கட்டண நிர்ணயக் குழு வட்டாரங்கள் கூறியது:
மேல்முறையீடு செய்த பள்ளிகள் மற்றும் நீதிமன்றம் சென்ற பள்ளிகள், புதிய பள்ளிகள் ஆகியவற்றின் எண்ணிக்கை குறைவுதான். இந்தப் பள்ளிகளுக்கான புதிய கட்டண நிர்ணயத்தோடு, ஏற்கெனவே கட்டணம் நிர்ணயிக்கப்பட்ட பள்ளிகளின் கட்டண விவரங்களும் சேர்த்து இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
பள்ளிகள் திறப்பதற்கு முன்பாக அந்தந்த தனியார் பள்ளிகள் தங்களது கட்டண நிர்ணயத்தை வெளியிட வேண்டும். அவ்வாறு பள்ளிகள் வெளியிடவில்லையென்றாலும், அந்தப் பள்ளிகளின் கட்டண விவரங்களைப் பெற்றோர்கள் இணையதளத்தின் மூலமாக அறிந்துகொள்ளலாம்.
5 பள்ளிகள் மீது நடவடிக்கை: நிர்ணயிக்கப்பட்டதை விட அதிகமாக கட்டணம் வசூலித்ததாக 5 பள்ளிகளின் மீது புகார்கள் வந்தன. இந்தப் பள்ளிகளின் மீது நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட இயக்குநர்களுக்கு கட்டண நிர்ணயக் குழு பரிந்துரையை அனுப்பியுள்ளது.
அதே போல் கட்டண நிர்ணயக் குழு சார்பில் பள்ளிகளில் வசூலிக்கப்படும் கட்டண விவரங்களை
தானாகவே முன்வந்து ஆய்வு செய்யும் வகையில், குழுவில் கண்காணிப்புப் பிரிவு ஏற்படுத்த அனுமதி கோரி அரசுக்கு பரிந்துரையும் அனுப்பப்பட்டுள்ளது. இப்போதைய நிலையில் குழுவுக்கு அதிகக் கட்டண வசூல் தொடர்பாக புகார்கள் வந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

திட்டமிட்டபடி ஜூன் 2-இல் பள்ளிகள் திறக்கப்படும்: பள்ளி கல்வித் துறை

கோடை விடுமுறைக்குப் பிறகு அனைத்துப் பள்ளிகளும் திட்டமிட்டபடி ஜூன் 2-ஆம் தேதி திறக்கப்படும் என பள்ளி கல்வித் துறை இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன் கூறினார்.
கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறப்பது சில நாள்கள் தாமதமாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், திட்டமிட்டவாறு பள்ளிகளை ஜூன் 2-ஆம் தேதியே திறக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.
பள்ளி கல்வித் துறையின் கீழ் உள்ள பள்ளிகளுக்கு ஏப்ரல் 23-ஆம் தேதியிலிருந்தும், தொடக்கக் கல்வித் துறையின் கீழ் உள்ள பள்ளிகளுக்கு மே 1-ஆம் தேதியிலிருந்தும் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது.
4.2 கோடி புத்தகங்கள்: பள்ளிகள் திறக்கும் நாளான ஜூன் 2-ஆம் தேதியே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இலவசப் புத்தகங்கள் விநியோகிக்கப்பட உள்ளன. 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும் சேர்த்து 4.2 கோடி புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன.
ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை முதல் பருவத்துக்காக 2.2 கோடி புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு 2 கோடி புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன.
இதில் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான புத்தகங்கள் மட்டும் சில மாவட்டங்களில் போதிய அளவில் இல்லை என தமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்துக்கு தகவல்கள் வந்தன.
இதையடுத்து, அந்த மாவட்டங்களுக்கான கூடுதல் புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. இந்தப் புத்தகங்கள் அனைத்தும் சனிக்கிழமை மாலைக்குள் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
தனியார் பள்ளிகளுக்கான புத்தகங்கள் மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர்கள் மூலம் 22 வட்டார விற்பனைக் கிடங்குகளிலிருந்து நேரடியாக விநியோகிக்கப்பட்டு வருகின்றன. வரும் ஜூன் 2-ஆம் தேதிக்குள் இந்தப் புத்தகங்களும் முழுமையாக விநியோகிக்கப்படும் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள் 57 லட்சம் பேரும், அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் 33 லட்சம் பேரும் உள்ளனர்.
இவர்களுக்கான இலவச புத்தகங்கள், சீருடை விநியோகத்தைக் கண்காணிப்பதற்காக ஒவ்வொரு மாவட்டத்துக்கும் பள்ளி கல்வி இணை இயக்குநர் அளவிலான அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

போலி உத்தரவில் ஆசிரியர்கள் நியமனம் உதவி தொடக்க கல்வி அலுவலர் சஸ்பெண்ட்

கோவை மாவட்டத்தில் 1,142 தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இதில், 15 வட்டாரங்களில் மாவட்ட உதவி தொடக்க கல்வி அதிகாரிகள் உள்ளனர். இந்நிலையில், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 7 ஆசிரியர்கள் 2010க்கு முன் பணியில் சேர்ந்ததாக பதிவேடு தயாரித்து, பணி நியமனம் முறைகேடு நடந்தது என தகவல் பரவியது. இதையடுத்து, கோவை மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் ரகசிய விசாரணையை நடத்தி, அந்த அறிக்கையை சென்னைக்கு அனுப்பிவைத்தனர்.
இதில் ஆசிரியர் பணி நியமனத்தில் முறைகேடு நடந்ததை தொடக்க கல்வி இயக்குனரகம் உறுதி செய்தது. இதையடுத்து, வால்பாறை உதவி தொடக்க கல்வி அலுவலர் காளிமுத்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். விதியை மீறி பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் 7 பேரிடமும் விளக்கம் கேட்டு கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.கோவை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஞானகவுரி கூறுகையில், வால்பாறை உதவி தொடக்க கல்வி அலுவலர் அரசு பள்ளிகளில் முறைகேடான ஆசிரியர் நியமனத்திற்கு துணை போனது, முதல் கட்டமாக தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்த கல்வி அதிகாரியை கல்வித்துறை சஸ்பெண்ட் செய்துள்ளது என்றார்.

ஆசிரியர் தகுதி தேர்வு விடுபட்டவர்களுக்கு ஜூன் 10ல் சான்றிதழ் சரிபார்ப்பு

ஆசிரியர் தேர்வு வாரி யம் சார்பில் ஆசிரியர் தகுதி தேர்வுகள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 17, 18 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டது. இதற்கான விடைகள் கடந்த நவம்பர் 5ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மாவட்டம் வாரியாக நடைபெற்றது. இதுவரை சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கா மல் விடுபட்டவர்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது. ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் ஜூன் 10ம் தேதி முதல் 13ம் தேதி வரை மதுரை, சேலம், திருச்சி, விழுப்புரம் ஆகிய 4 மையங்களில் மட்டும் சான்றிதழ் சரிபார்ப்பை நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்காக தேர்வர்கள், ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் இருந்து சான்றிதழ் சரிபார்ப்புக்கான அழைப்பு கடிதம் மற்றும் பயோடேட்டா போன்றவற்றை பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சான்றிதழ் சரிபார்ப்பு கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு மதுரை ஒசிபிஎம் பெண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெற உள்ளது. இதனை போன்று ஜெயராணி பெண்கள் மேல்நிலை பள்ளி சேலம், பிஷப் ஹெர்பர் மேல்நிலை பள்ளி புதூர்& திருச்சி, காமராஜ் முனிசிபல் ஆண்கள் மேல்நிலை பள்ளி விழுப்புரம் ஆகிய இடங்களிலும் அந்தந்த பகுதி மாவட்டங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ளது. இதற்காக தனியே அழைப்பு கடிதங்கள் அனுப்பி வைக்கப்படமாட்டாது என்றும் ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்றிய கல்விக்குழு கூட்டம் முறையாக நடத்தப்படுவதில்லை: கல்வியாளர்கள் புகார்

கிராமங்களில் கல்வித்தரத்தை மேம்படுத்துவதற்கான ஒன்றிய கல்விக்குழு கூட்டம், பெரும்பாலான ஊராட்சி ஒன்றியங்களில் முறையாக நடத்தப்படுவதில்லை என புகார் எழுந்துள்ளது. 

ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள், மாணவர்களின் கல்வித்தரம், அடிப்படை வசதிகளை மேம்படுத்த, ஒன்றிய கல்விக்குழு செயல்படுகிறது. ஒவ்வொரு மாதமும், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், ஒன்றிய கல்விக்குழு கூட்டம் நடத்தப்பட வேண்டும். இக்கூட்டத்தில், ஒன்றியக் குழுத் தலைவர், உதவி தொடக்க கல்வி அலுவலர், வார்டு கவுன்சிலர்கள், கல்வியாளர்கள், பள்ளி தலைமையாசிரியர்கள் பங்குபெற வேண்டும். ஒன்றியத்திலுள்ள பள்ளிகளின் மேம்பாடு குறித்த நடவடிக்கைகள், அடிப்படை வசதிகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு தீர்மானம் நிைறவேற்றப்படும். ஆனால், பெரும்பாலான ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றிய குழு கூட்டம் நடத்தப்படுவதில்லை என புகார் எழுந்துள்ளது. 

உடுமலை ஒன்றியத்தில் 98 துவக்கப்பள்ளிகள், 22 நடுநிலைப்பள்ளிகள் 16 உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பல ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளிகளின் வளர்ச்சி, தேவையான வகுப்பறை, மாணவர்களின் கற்றல் திறன், ஆசிரியர்களின் கற்பிக்கும் திறன், சத்துணவு மையங்கள், உள்கட்டமைப்பு வசதிகள் குறித்த அனைத்து விவரங்களும் அனைவருக்கும் கல்வி இயக்க பணியாளர்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். இத்தகைய செயல்பாடுகளை அறிவதற்கே ஒன்றிய கல்விக்குழுக்கள் செயல்படுகிறது. கல்விக்குழுக்களின் கூட்டத்தில் பள்ளிகளுக்கு தேவையான வசதிகள் பற்றி குழு உறுப்பினர்களின் மூலம் அனைவருக்கும் கல்வி இயக்க ஆசிரியர்கள் தெரிந்துகொண்டு, மாவட்ட கல்வித்துறைக்கு பள்ளி மேம்பாடுகளுக்கான விவரங்களை அனுப்ப வேண்டும். இதன் மூலமே பள்ளி மற்றும் மாணவர்களின் தேவைக்கு மாநில, மத்திய அரசின் மூலம் உதவிகள் கிடைக்கும். 

இத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததாக ஒன்றிய கல்விக் குழுக் கூட்டம் உடுமலை ஒன்றியத்தில் முறையாக நடத்தப்படுவதில்லை என புகார் எழுந்துள்ளது. இதனால் பள்ளிகளுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் தேவையான வசதிகள் கேள்விக்குறியாகிறது என உடுமலை கல்வியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மாணவர்களின் கல்வி தரம் உயரவும் இக்குழு எந்தவித செயல்பாடுகளும் நடத்தவில்லை என புகார் எழுப்புகின்றனர். அனைவருக்கும் கல்வி இயக்க ஆசிரியர்கள் மட்டுமின்றி அக்குழுவில் உறுப்பினர்களாக பங்கேற்க வேண்டிய ஒன்றியத் குழு தலைவர், கல்வியாளர்கள் உள்ளிட்ட பலரும் குழு செயல்படுவது குறித்து ஆர்வம் இல்லாமல் உள்ளனர். ஏராளமான ஒன்றியப் பள்ளிகள் மேம்பாட்டு வசதிகள் எதுவுமின்றி மாணவர் எண்ணிக்கையை இழந்துள்ளது. மாணவர்களின் கல்வித்தரம் கேள்விக்குறியாகி வருகிறது. ஒன்றியப் பள்ளிகளின் நிலையை மாற்ற இக்குழு விரைவில் செயல்பட வேண்டும் என கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்த புகார் மனுவும் தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. 

பள்ளி திறப்பு நாளில் நோட்டு, புத்தகம் வழங்காத பள்ளிகள் மீது நடவடிக்கை: இணை இயக்குனர் எச்சரிக்கை

பள்ளி திறக்கும் நாளில், விலையில்லா நோட்டு, புத்தகங்களை வழங்காத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்று பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் ஸ்ரீதேவி எச்சரிக்கை விடுத்துள்ளார். தஞ்சாவூர் வருவாய் மாவட்டத்தில் உள்ள பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு கூட்டம், தஞ்சாவூர் தூய அந்தோணியார் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. இதில், பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் ஸ்ரீதேவி பேசியதாவது: பள்ளி திறக்கும் போது, அனைத்து மாணவர்களுக்கும், தமிழக அரசால் வழங்கப்படும் விலையில்லா பொருட்களான புத்தகம், நோட்டு ஆகியவை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. படிப்படியாக மற்ற விலையில்லா பொருட்களான சீருடை, எழுது பொருட்கள் வழங்கப்படும். தமிழக அரசின் விலையில்லா நோட்டு, புத்தகங்களை, பள்ளி திறக்கும் நாளில் வழங்காத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். எல்லா பள்ளிகளிலும், மழை நீர் சேகரிப்பு தொட்டி அவசியம் இருக்க வேண்டும். ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள இலவச பஸ் பாஸை, மாணவர்கள் ஆகஸ்ட் மாதம் வரை பயன்படுத்திக் கொள்ளலாம். புதிதாக இலவச பஸ் பாஸ் பெற தகுதியுள்ள மாணவர்களுக்கு, தாமதம் இன்றி பாஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். முதன்மை கல்வி அலுவலர் தமிழரசு, அனை வருக்கும் கல்வி இயக்க முதன்மை கல்வி அலுவலர் மாரிமுத்து, மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர் ரெங்கராஜன், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் கண்ணையன், மாவட்ட கல்வி அலுவலர்கள் ஜெயராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

ஓய்வுபெற்ற துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சம்பளக் கமிஷன் பரிந்துரைப்படி சலுகை: ஐகோர்ட் உத்தரவு

ஓய்வுபெற்ற துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, ஐந்தாவது சம்பளக் கமிஷன் பரிந்துரைப்படி மாற்றியமைக்கப்பட்ட சம்பளம், ஓய்வூதியப் பலன்கள் வழங்க, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
கன்னியாகுமரி ராஜாதங்கம் உட்பட, நான்கு பேர், மதுரை ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு: அரசு துவக்கப் பள்ளிகளில், தலைமை ஆசிரியர்களாக பணிபுரிந்து, ஓய்வு பெற்றோம். துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, ஐந்தாவது சம்பளக் கமிஷன் பரிந்துரைப்படி, மாற்றியமைக்கப்பட்ட சம்பள விகிதம், 1988 ஜூன் முதல் அமல்படுத்தப்பட்டது. எங்கள் பணிக்காலத்தில் இடைநிலை ஆசிரியர்களிலிருந்து, தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்ட, 174 பேருக்கு, சம்பளக் கமிஷன் பரிந்துரைப்படி, சம்பள விகிதத்தை மாற்றியமைக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டது. எங்களுக்கு இடைநிலை ஆசிரியர்களுக்கான சம்பளம் வழங்கப்படுகிறது. சம்பளக் கமிஷன் பரிந்துரைப்படி சம்பள விகிதம், ஓய்வூதியப் பலன்களை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் குறிப்பிட்டு இருந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன், பிறப்பித்த உத்தரவில், மனுதாரர்களின் மனுவை, பள்ளிக் கல்வித்துறை செயலர் மற்றும் இயக்குனர் பரிசீலித்து, தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு, உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

தேர்ச்சி விகிதம் குறைவு: ஆசிரியர்களை மாற்ற முடிவு

பிளஸ் 2, பத்தாம் வகுப்பில் தேர்ச்சி விகிதம் குறைந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய கல்வித்துறை முடிவுசெய்துள்ளது.
சமீபத்தில் வெளியான பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளில் தனியார் பள்ளிகளை விட, அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. சில அரசு பள்ளிகள் 42 சதவீதம் மட்டுமே பெற்றுள்ளன. இதையடுத்து, நாகர்கோவில் மாவட்டத்தில் சில தலைமை ஆசிரியர்கள் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். இதற்கு ஆசிரியர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியதால், 'சஸ்பெண்ட்' நடவடிக்கையை கல்வித்துறை நிறுத்தியது. இந்நிலையில், தேர்ச்சி விகிதம் குறைந்த பள்ளியின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய கல்வித்துறை முடிவுசெய்துள்ளது. இதையடுத்து, 60 சதவீதத்திற்கு கீழ் தேர்ச்சி விகிதம் பெற்ற பள்ளிகளின் பட்டியலை கல்வித்துறை அதிகாரிகள் தயாரித்து வருகின்றனர். 'ஆசிரியர்கள் இடமாறுதல், பதவிஉயர்வுக்கான 'கவுன்சிலிங்' துவங்குவதற்கு முன், இடமாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால், தேர்ச்சி விகிதம் குறைந்த பள்ளிகளின் ஆசிரியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

20 ஆயிரம் மாணவர்கள் 10ம் வகுப்பு தேர்வை எழுதுவதில் சிக்கல்: கணக்கெடுப்பில் கல்வித்துறை அதிகாரிகள் தீவிரம்

தமிழ் அல்லாத பிற மொழியை, முதல் பாடமாக படிக்கும் மாணவர்கள், 20 ஆயிரத்தை தாண்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள், 2016ல், 10ம் வகுப்பு பொது தேர்வு எழுதுவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இது குறித்த விவரங்களை, ஒவ்வொரு பள்ளி வாரியாக சேகரிக்க, மெட்ரிக் பள்ளி இயக்குனரகம்,உத்தரவிட்டுள்ளது.
கட்டாயம் தமிழ் படிக்கும் சட்டத்தின் கீழ், 2016, மார்ச் - ஏப்ரலில் நடக்கும் 10ம் வகுப்பு பொது தேர்வை, அனைத்து மாணவ, மாணவியரும், முதல் பாடமாக, தமிழ் தேர்வை எழுத வேண்டும். தற்போது, எட்டாம் வகுப்பை முடித்துள்ள மாணவர்கள், 2016ல், 10ம் வகுப்பு தேர்வை எழுதுவர்.தமிழகத்தின் எல்லை மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் பிற மாவட்டங்களில் உள்ள தனியார் பள்ளிகளில், ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர், முதல் பாடமாக, தமிழ் அல்லாத பிறமொழி பாடத்தை தேர்வு செய்து, படித்து வருகின்றனர்.இவர்கள், '2016ல், தமிழ் தேர்வை எழுதியே ஆக வேண்டும்' என, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர், பிச்சை, திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார். இதனால், பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது.தமிழக அரசின் கிடுக்கிப்பிடி உத்தரவு காரணமாக, தமிழ் அல்லாத பிற மொழியை, முதல் பாடமாக எடுத்து படித்து வரும் மாணவ, மாணவியரின் பெற்றோர், கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.சென்னை உட்பட, பல மாவட்டங்களில், இந்தியை முதல் பாடமாக படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை, கணிசமாக இருப்பதாக, கல்வித்துறை வட்டாரம் தெரிவித்தது.
இதுகுறித்து, மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்களுக்கு, இயக்குனர், பிச்சை அனுப்பியுள்ள சுற்றறிக்கை:கடந்த, 2006 - 07ல், முதல் வகுப்பில், தமிழ் படிக்க ஆரம்பித்த மாணவ, மாணவியர், 2015 - 16 தேர்வில், மொழிப் பாடமாக, தமிழ் தேர்வை எழுத வேண்டும்.இதுகுறித்த விவரங்களை, அனைத்து மெட்ரிகுலேஷன் மற்றும் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி தாளாளர்களின் கவனத்திற்கு, மீண்டும் கொண்டு செல்ல, மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள், நடவடிக்கை எடுக்க வேண்டும்.நடந்து முடிந்த (2013 - 14) ஆண்டில், அனைத்துப் பள்ளிகளிலும், எட்டாம் வகுப்பு வரை, தமிழ் கட்டாய பாடமாக அமல்படுத்தப்பட்டதா என்பதை உறுதி செய்து, இயக்குனரகத்திற்கு, அறிக்கை அளிக்க வேண்டும்.இதர மொழியை, முதல் பாடமாக அமல்படுத்தும் பள்ளியின் பெயர்; வகுப்பு வாரியாக, எந்தெந்த பிற மொழிகளில், பாடம் நடத்தப்படுகிறது; வகுப்பு வாரியாக, பிற மொழியை, முதல் பாடமாக எடுத்து படிக்கும் மாணவ, மாணவியர் எண்ணிக்கை ஆகியவற்றை சேகரித்து, இயக்குனரகத்திற்கு அனுப்ப வேண்டும்.இவ்வாறு, சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.இதையடுத்து, பிற மொழியை, முதல் பாடமாக படிக்கும் மாணவ, மாணவியர் விவரங்களை சேகரிக்கும் பணியில், மாவட்ட கல்வி அதிகாரிகள், தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.பிற மொழியை, முதல் பாடமாக படிக்கும் மாணவ, மாணவியர் எண்ணிக்கை குறித்த, சரியான புள்ளி விவரம், ஜூன், 10 தேதிக்குள் கிடைத்து விடும் என, துறை வட்டாரம் தெரிவித்தது.
சட்டத்தை மதிக்காதபள்ளிகளுக்கு 'நோட்டீஸ்!'
'கட்டாயம் தமிழ் படிக்கும் சட்டத்தை மதிக்காத பள்ளிகளுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பி, விளக்கம் கேட்கப்படும்' என, கல்வித் துறை வட்டாரம், நேற்று தெரிவித்தது.கடந்த, 2006 - 07ல், சட்டம் அமலுக்கு வந்தபோதும், இதை, தனியார் பள்ளிகள், முழுமையாக அமல்படுத்தவில்லை. தி.மு.க., ஆட்சி காலத்திலேயே, பள்ளிகள், சட்டத்தை கண்டுகொள்ளாமல் இருந்தன. இதை, அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை.பள்ளி நிர்வாகங்கள், இடங்கள் நிரம்பினால் போதும் என, அலட்சியமாக செயல்பட்டன. தற்போதுள்ள குளறுபடிகளுக்கு, பள்ளி நிர்வாகங்களும், அவற்றை கண்காணிக்காமல், கோட்டை விட்ட அதிகாரிகளும் தான் காரணம்.இந்த விவகாரம் குறித்து, கல்வித்துறை வட்டாரம் நேற்று கூறுகையில், 'சட்டத்தை மீறிய பள்ளிகளுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பி, விளக்கம் கேட்கப்படும். விளக்கத்தின் அடிப்படையில், உரிய நடவடிக்கைஎடுக்கப்படும்' என, தெரிவித்தது.
தனியார் பள்ளிகள் விவரம்:
ஆரம்பப் பள்ளிகள்:6,304
நடுநிலைப் பள்ளிகள்:946
உயர்நிலைப் பள்ளிகள்:1,868
மேல்நிலைப் பள்ளிகள்:2,247
மொத்தம்:11,365

முடிந்த தேர்வில் 24 ஆயிரம் பேர்!
நடந்து முடிந்த, 10ம் வகுப்பு தேர்வில், 24 ஆயிரம் மாணவர்கள், தமிழ் அல்லாத பிற மொழி பாடத்தை, முதல் பாடமாக எழுதி உள்ளனர்.கடந்த, 23ம் தேதி ?வளியான, 10ம் வகுப்பு தேர்வு முடிவில், பிற மொழிப் பாடத்தை, முதல் பாடமாக எடுத்து, தேர்வெழுதிய மாணவர்கள் எண்ணிக்கை:
இந்தி:9,898
தெலுங்கு:4,554
பிரெஞ்ச்:2,512
மலையாளம்:2,017
உருது:3,479
அரபிக்:714
கன்னடம்:853
சமஸ்கிருதம்:676
குஜராத்தி:6
மொத்தம்: 24,709

'பள்ளி தாளாளர்கள் முதல்வர்களே பொறுப்பு':
மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர், பிச்சை, நேற்று, மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:தமிழை முதல் பாடமாக கட்டாயம் நடத்த வேண்டும் எனவும், இல்லையெனில், 2016 பொதுத்தேர்வில், பிரச்னை ஏற்படும் எனவும், தனியார் பள்ளி தாளாளர்களுக்கு, ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது.அதையும் மீறி, பல பள்ளிகள், தமிழ் அல்லாத பிற மொழியை, முதல் பாடமாக நடத்துவது தெரிய வந்துள்ளது. இது, கடுமையான விதி மீறல். அரசின் சட்டத்தை மீறி, பள்ளிகள் செயல்படுவது, அங்கீகார விதிகளை மீறும் செயல்.மேலும், சட்டம் குறித்து அறியாத பெற்றோரையும், மாணவர்களையும் ஏமாற்றும் செயல். சட்டத்தை அறியாமல், 10ம் வகுப்பு வரை, ஒரு குழந்தை, வேறு மொழிப்பாடத்தை படித்து, 2016 பொது தேர்வில், ஏற்கனவே படித்த மொழிப்பாடத்தில் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டால், அதற்கான முழு பொறுப்பும், சம்பந்தப்பட்ட பள்ளி தாளாளரையும், பள்ளி முதல்வரையுமே சாரும்.உடனே, வேறு மொழியை, முதல் பாடமாக கற்பிப்பதை நிறுத்தி விட்டு, தமிழை, முதல் மொழிப்பாடமாக கற்பிக்க வேண்டும். இது குறித்த அறிக்கையை, ஜூன், 10ம் தேதிக்குள், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் சமர்ப்பிக்க வேண்டும். மீறும் பள்ளிகளின் அங்கீகாரம், திரும்பப் பெற, நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Friday, 30 May 2014

பள்ளி சான்றிதழ்கள் தொலைந்து போனால் என்ன செய்ய வேண்டும்?

          

மாணவர்களிடம் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை: கல்வி அலுவலர் எச்சரிக்கை

பள்ளிகளில் சேரும் மாணவர்களிடம், கட்டணம் வசூலித்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன், கடும் எச்சரிக்கை விடுத்தார்.
கடந்த கல்வியாண்டில், எஸ்.எஸ்.எல்.ஸி., மற்றும் ப்ளஸ் 2 தேர்வில், ஈரோடு மாவட்டம், மாநில அளவில் தேர்ச்சி சதவீதத்தில் முதலிடம் பெற்றது. இதனால், அனைத்து அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளி தலைமையாசிரியர்களுக்கான பாராட்டு விழா, ஈரோடு, அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் பேசியதாவது: தலைமையாசிரியர்கள், ஆசிரியர்களின் ஒத்துழைப்பால், ஈரோடு மா வட்டம், எஸ்.எஸ்.எல்.ஸி., மற்றும் ப்ளஸ் 2 தேர்வில், தேர்ச்சி விகிதத்தில், மாநில அளவில் முதலிடத்தை பெற்று, சாதனை படைத்தீர்கள். இந்த பாராட்டையும், பரிசையும் தொடர்ந்து தக்க வைப்பதும், மற்றவர்களுக்கு விட்டுக் கொடுப்பதும், தலைமையாசிரியர்கள் கைகளில் தான் உள்ளது. ஜூன், இரண்டாம் தேதி பள்ளி துவங்குகிறது. அன்றைய தினம், மாணவர்களுக்கு ஒரு செட் யூனிஃபார்ம், நோட்டு, புத்தகங்கள் கண்டிப்பாக வழங்க வேண்டும், என, அரசு உத்தரவிட்டுள்ளது. அதுபற்றி சந்தேகம் இருந்தால், தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.
பள்ளி திறக்கும்போது, வகுப்பறைகள், காம்பவுண்ட் சுவர், கழிவறை, பெஞ்ச், டேபிள் அனைத்தும், சுத்தமாக இருக்க வேண்டும். புதர் மண்டியோ, குப்பை கூளமாகவோ இருக்கக்கூடாது. மாணவர்கள், பள்ளிக்கு வந்த பின்பு, தூய்மைப்பணிகளை செய்யக்கூடாது. முன்கூட்டியே, செய்து முடிக்க வேண்டும். சென்னையில் இருந்து ஆய்வு அலுவலர் தர்மராஜேந்திரன், பள்ளிகளின் சுகாதாரம் குறித்து, ஆய்வு செய்வதற்காக வருகை புரிகிறார்.
எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வு முடிவுகளை பொரு த்தவரை, உயர்நிலைப்பள்ளிகளை காட்டிலும், மேல்நிலைப்பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் குறைவாகவே இருக்கிறது. ப்ளஸ் 2, எஸ்.எஸ்.எல்.ஸி,க்கு தனித்தனி ஆசிரியர்கள் இருக்கும்போது, தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது. அடுத்த முறை, அதிக தேர்ச்சிக்கு முயற்சிக்க வேண்டும்.
பள்ளிகளில், மாணவர்களின் சேர்க்கையின்போது, கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வருகின்றன. அட்மிஷன் துவக்கத்தில், நுகர்வோர் குழு மூலம், கண்காணிக்கப்படுவதால், தகவல்கள் வருகிறது. கட்டணம் வசூலிப்பதாக புகார் வரும் பள்ளியின் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

புத்தகங்கள் படிக்கும் சிறுவர்களை பாராட்டுங்கள்: தொடக்க கல்வி இயக்குனர் சுற்றறிக்கை


பள்ளி மாணவர்களுக்கு கற்றல் திறனை மேம்படுத்த,அதிக புத்தகங்கள் படிக்கும் சிறுவர்களை,பள்ளியிலே பாராட்டுங்கள், என, தலைமை ஆசிரியர்களை, தொடக்க கல்வி இயக்குனர் கேட்டு உள்ளார். ஆரம்ப, நடுநிலைப்பள்ளிகளில் படிக்கும் சிறுவர், சிறுமியர்கள் பலரும், கம்ப்யூட்டர், மொபைல் போன்களில் கேம்ஸ் விளையாடுவது, "டிவி' யில் சிறுவர்களுக்கான சேனல்களை பார்த்தே, நாள் முழுவதும் முழ்கி போவது போன்ற காரணங்களால், வாசிப்பு திறன் குறைவாக காணப்படுகிறது. இதுபோன்ற குறைபாடுகளால், எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் கூட, தாய்மொழியை சரளமாக வாசிக்க முடியாமல், திணறுகின்றனர். இந்நிலையில், அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும்,உதவி கல்வி அலுவலகம் மூலம், தொடக்க கல்வி இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில், தொடக்க பள்ளிகளில், மாணவர்கள் வாசிப்பு திறனை மேம்படுத்திட, அனைவருக்கும் கல்வி திட்டம் மூலம் வழங்கப்பட்டுள்ள புத்தகங்களை, மாணவர்கள் படிக்கும் வகையில் சூழ்நிலைகளை ஏற்படுத்தி தரவேண்டும். 



மாணவர்களின் கைகளுக்கு எட்டும் வகையில், வகுப்பறையில் புத்தங்களை தொங்க விடவேண்டும். மதிய உணவு இடைவேளையின் போது, புத்தகங்களை படிக்க ஊக்கு விக்க வேண்டும். புத்தகங்களை படித்து அதன் கருத்துக்களை ,மாணவர்களுக்குள் பகிர்ந்து கொள்ள, வாய்ப்புகளை உருவாக்கி கொடுக்க வேண்டும். அதிக புத்தங்களை வாசிக்கும் மாணவ, மாணவியர்களை, திங்கள் கிழமை தோறும் நடைபெறும் காலை வழிபாட்டில்,தலைமை ஆசிரியர் பாராட்ட வேண்டும். பள்ளி ஆய்வுக்கு செல்லும் உதவி கல்வி அலுவலர்கள், மாணவர்கள் புத்தங்கள் எடுத்து படிப்பதை ஆய்வு செய்யவேண்டும், என குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் நாட்டில் ஏன் உயர் நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படவில்லை? மத்திய அரசு அறிக்கை

பாட புத்தகத்தில் என் வாழ்க்கையை சேர்க்க வேண்டாம்: மோடி வேண்டுகோள்

குஜராத் மாநில முதல்– மந்திரியாக இருந்த நரேந்திர மோடி பிரதமராகி விட்டார். இதன் மூலம் குஜராத் மாநில மக்கள் மோடி தங்கள் மாநிலத்துக்கு பெருமை சேர்த்துள்ளதாக மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதையடுத்து மோடிக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவரது வாழ்க்கை வரலாறை குஜராத் மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் பாடமாக சேர்க்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இந்த தகவலை மாநில கல்வி மந்திரி புபேந்திரசிங் சுடாசமா தெரிவித்தார். குஜராத் மாநிலத்தில் அடுத்த ஆண்டு முதல் மோடி வாழ்க்கை வரலாறு அனைத்து ஆரம்ப பள்ளிகளில் பாடமாக சேர்க்கப்படும்.
அவரது பிறப்பு மற்றும் இளமைக் காலத்தில் அவரது குடும்ப சூழ்நிலை, பள்ளி நாட்கள், வாழ்க்கையில் பல்வேறு காலங்களில் அவரது போராட்டங்கள், வாழ்க்கை தரம், நாட்டின் மிக உயர்ந்த பதவியை அடைதல் வரை இடம் பெற்று இருக்கும் என்று அவர் கூறினார்.
இதே போல் மத்தி பிரதேச மாநிலத்திலும் மோடி வாழ்க்கை வரலாறு பள்ளிகளில் பாடமாக இடம் பெறும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
இதற்கிடையே தனது வாழ்க்கை வரலாறை பள்ளிகளில் பாடமாக சேர்க்க வேண்டாம் என்று குஜராத் மற்றும் மத்திய பிரதேச மாநில அரசுகளுக்கு பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:–
குஜராத், மத்திய பிரதேசம் ஆகிய மாநில அரசுகள் எனது வாழ்க்கை வரலாற்றை பள்ளிகளில் பாடமாக சேர்க்கப்போவதாக பத்திரிகைகளில் செய்தி வந்திருப்பதை பார்த்தேன். எனது வாழ்க்கையே போராட்டம்.
அது மாணவர்களுக்கு பாடமாகாது. இந்தியாவுக்கு ஏராளமான வரலாறுகள் உண்டு. தியாகசீலர்கள் பலர் இந்தியாவை உருவாக்கி இருக்கிறார்கள்.
அவர்களைப் பற்றிய வரலாறுகள் தான் இளைஞர்களிடம் போய்ச் சேரவேண்டும். மேலும், வாழ்ந்து கொண்டு இருப்பவர்களின் வரலாறும், தனிப்பட்டவர்களின் வரலாறும் பாடம் ஆகாது என்பது எனது உறுதியான கருத்து எனவே அதை பாடமாக சேர்க்க வேண்டாம்.
இவ்வாறு கூறியுள்ளார்.

50 மாணவர்கள் உள்ள தொடக்கப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி தொடங்க அரசு உத்தரவு

50 மாணவர்களும், அதற்கு மேலும் உள்ள இரு ஆசிரியர்கள் பணிபுரியும் தொடக்கப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியை நிகழாண்டில் தொடங்கிட அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் தொடக்க, உயர்நிலைப் பள்ளிகளில் தமிழக அரசு ஆங்கில வழிக்கல்வியை கடந்தாண்டு தொடங்கியது. இதில், கடந்தாண்டு முதல் வகுப்பு, 6-ஆம் வகுப்புகளில் மட்டும் ஆங்கில வழிக்கல்வி தொடங்க கட்டாயமாக்கப்பட்டது.
மேலும், மூன்று ஆசிரியர்கள் பணிபுரியும் தொடக்கப் பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வி வகுப்புகளை தொடங்க கல்வித் துறை உத்தரவிட்டது.
இரு ஆசிரியர்கள் பணிபுரியும் தொடக்கப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி தொடங்க கட்டாயமில்லை என்றும் அறிவிக்கப்பட்டது.
ஆனால், நிகழ் கல்வியாண்டில் கடந்த ஆண்டு விடுபட்டத் தொடக்கப் பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வி வகுப்புகள் தொடங்கிட தொடக்கக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களும் தங்களுக்கு கீழ் உள்ள உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களிடமும் இதைச் செயல்படுத்திட உத்தரவிட்டுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள், தங்கள் ஒன்றியத்தில் பணியாற்றும் இரு ஆசிரியர்கள் மட்டும் பணிபுரியும் தொடக்கப் பள்ளிகளின் தலைமையாசியர்களிடம் ஆங்கில வழிக் கல்வி தொடங்க ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
அதில் இரு ஆசிரியர்கள் பணிபுரியும் தொடக்கப் பள்ளிகளில் 50 மாணவர்களும், அதற்கும் அதிகமாக மாணவர்கள் இருந்தால் அந்தப் பள்ளிகலில் கட்டாயம் ஆங்கில வழிக் கல்வியை தொடங்கிட கல்வி அலுவலர்கள் உத்தரவிட்டுள்ளனர். அதேபோல, 50 மாணவர்களுக்கும் குறைவாக இருக்கும் தொடக்கப் பள்ளிகளில் அந்தந்தப் பள்ளி ஆசிரியர்கள் விரும்பினால் ஆங்கில வழிக் கல்வியை தொடங்கி கொள்ளவும் கல்வி அலுவலர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

01.01.2014 நிலவரப்படி முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு பெற தகுதியான வணிகவியல் / பொருளியியல் பட்டதாரி ஆசிரியர்களின் பட்டியல்

மத்திய அரசு ஊழியர்கள் சார்பில் இறுதி கோரிக்கைகள் முடிவு செய்யப்பட்டு, 7வது ஊதியக்குழுவிடம் ஒப்படைக்கப்படவுள்ள கேள்வி, விடைகள் அடங்கிய தொகுப்பு

TNTET தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் எத்தனை பேர் பணி நியமனம்? பணிநிரவலுக்குப் பின்னரே தெரியும்!!

டிஇடி ஆசிரியர் தேர்வில் பட்டதாரிகள் அளவில் தமிழ் 9,853, ஆங்கிலம் 10,716, கணக்கு 9,074, இயற்பியல் 2,337, வேதியியல் 2,667, விலங்கியல் 405, வரலாறு 6,210, புவியியல் 526 ஆகியோர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் மொத்தம் 12,000 ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்போவதாகபள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சான்று சரிபார்ப்பு நடந்து முடிந்துள்ள நிலையில் உடனடியாக ஜூன் மாதம் பணி நியமன ஆணைகள் வழங்கப்படும் என்று பட்டதாரிகள் எதிர்பார்த்தனர். ஆனால், நேற்று முன்தினம் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், உபரி ஆசிரியர்கள் பட்டியல்தயாரிக்க கூறியதால், அதற்கான பணி நடக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் மே மாத இறுதியில் அரசுப் பள்ளிகளில்பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பொது இட மாறுதல் கவுன்சலிங் மற்றும் பதவி உயர்வு கவுன்சலிங்நடத்தப்படுவது வழக்கம். அதற்கு பிறகு தான் புதிய ஆசிரியர்கள் நியிமிக்கப்படுவார்கள்.ஆனால் கடந்த 2013ல் எடுக்கப்பட்டஉபரி ஆசிரியர்கள் பட்டியலில் உள்ளபடி இடமாறுதல், பதவி உயர்வு, பணி நிரவல் செய்ய வேண்டியுள்ளது. இந்த மே மாதம்நடக்கும் என்று ஆசிரியர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், இப்போது உபரி ஆசிரியர்கள் பட்டியலை அமைச்சர் எடுக்கச் சொல்லியதால் 2014ம் ஆண்டு பட்டியலும் சேர்ந்தால், அதிக அளவில் இடமாறுதல் வழங்க வேண்டி வரும். அப்படி செய்தால் டிஇடி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் எத்தனை பேர் பணி நியமனம் பெற முடியும் என பணிநிரவலுக்குப் பின்னரே தெரியும்!!

அரசிடம் அனுமதி கிடைத்தவுடன் மாறுதல் கலந்தாய்வு பணிகள் தொடங்கும்: தொடக்கக்கல்வி இயக்குனர்


நேற்று காலை 11மணியளவில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலர் திருமிகு.செ.முத்துசாமி,Ex.MLC., அவர்கள் தலைமையில் மாநில பொறுப்பாளர்கள் தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களுடனான சந்திப்பு நடைபெற்றது. இச்சந்திப்பின் போது மாநில பொருளாளர் திரு.அலெக்சாண்டர்,மாநில துணைத் தலைவர்கள் திரு.கே.பி.ரக்‌ஷித், திரு.முருகேசன் மற்றும் தலைமை நிலைய செயலர் திரு.க.சாந்தகுமார் ஆகியோர் உடனிருந்தனர். அப்போது பொதுமாறுதல் கலந்தாய்வு எப்போது நடைபெறும் என கேட்கப்பட்ட பொழுது, இயக்குனர் அவர்கள் கலந்தாய்வுக்கான நாட்கள் குறித்து அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளதாகவும்,அனுமதி கிடைத்தவுடன் கலந்தாய்வுக்கான அட்டவனை மற்றும் உரிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு, பதவி உயர்வு மற்றும் மாறுதல் கலந்தாய்வும்,பணிநிரவலும் நடைபெறும் என தெரிவித்தார்

ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ளாதவர்களுக்கு 10.6.2014 முதல் 13.62014 வரை சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ளுவதற்கான கடைசி வாய்ப்பு

இடவசதி இல்லாமல் 800 தனியார் பள்ளிகள் அங்கீகாரம் புதுப்பிக்க முடியாமல் தவிப்பு

தர்மபுரி மாவட்ட தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியின் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தர்மபுரியில் நடந்தது. கூட்டத்தில் தமிழ்நாடு தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு மாநில செயலாளர் இளங்கோவன் கலந்து கொண்டு பேசியதாவது: பள்ளி கல்வித்துறை தனியார் பள்ளிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஒருபள்ளியில் நான்கு பிரிவுக்கு (செக்ஸன்) மேல் கூடுதலாக வகுப்பு துவக்கினால் கல்வித்துறையில் முன் அனுமதி பெற வேண்டும். ஆண்டுக்கு ஒருமுறை வாகனங்கள் எப்சி செய்து, வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கட்டாயமாக அனுமதிபெற வேண்டும். 10 ஆண்டு அனுபவம் பெற்ற டிரைவர்களை நியமித்து பள்ளி வாகனங்கள் ஓட்டவேண்டும். பள்ளிகளுக்கு பரவலான இடங்கள் வேண்டும் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நகரம் மற்றும் மாவட்ட தலைநகரத்தில் 8 கிரவுண்ட் நிலமும், மாநகரப் பகுதியில் 6 கிரவுண்ட் நிலவும், கிராமத்தில் 3 ஏக்கர் நிலமும் பள்ளி துவங்க தேவை என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கு தேவையான இட வசதி இல்லாமல், தமிழகத்தில் 800 தனியார் பள்ளிகள் அங்கீகாரத்தை புதுப்பிக்க முடியாமல் தவித்து வருகின்றன. இதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் 400 பள்ளிகள் அங்கீகாரம் கிடைக்காமல் தவிக்கின்றன. 20 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட பள்ளிகளுக்கு விதிமுறைகள் திருத்தம் செய்து அங்கீகாரம் வழங்க வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அமைச்சர், அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என்றார்.

பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டு - சீருடை 2ம் தேதி முதல் கிடைக்கும்

பள்ளி மாணவர்களுக்கு ஜூன் 2ம் தேதி முதல் புத்தகம், நோட்டு, சீருடைகள் உள்ளிட்ட அனைத்து இலவச பொருட்களையும் வழங்க வேண்டுமென மாநில கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. பள்ளிகள் திறக்கும் நாளில் மாணவர்களுக்கு அரசு சார்பில் இலவசமாக வழங்கப்படும் 14 வகை பொருட்களில் பெரும்பாலானவற்றை வழங்கிட மாநில பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதன்படி பள்ளிகள் திறக்கப்படும் ஜூன் 2ல், ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு இலவச புத்தகம், ஒன்றாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு சீருடை, 10ம் வகுப்பு வரை நோட்டுக்கள், செருப்பு, பேக், பஸ் பாஸ் வழங்க அனைத்து நடவடிக்கைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.இதற்காக அந்தந்த மாவட்டங்களில் உள்ள புத்தக இருப்பு மையங்களில் இருந்து, பள்ளிகளுக்கு இலவச புத்தகம், நோட்டு உள்ளிட்ட பொருட்களை அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்பணிகளை கண்காணிக்க ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு இணை இயக்குநர் வீதம் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பிளஸ் 2 படிக்காத மாணவி பிஎட் தேர்வு எழுத அனுமதி

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையைச் சேர்ந்த சங்கரேஸ்வரி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:நான் 10ம் வகுப்பு முடித்து, பிளஸ் 2 படிக்காமல் கம்ப்யூட்டர் டெக்னாலஜியில் டிப்ளமோ படித்தேன். தொடர்ந்து பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து பட்டம் பெற்றேன். பின்னர் குமாரலிங்கபுரத்தில் உள்ள கல்வியியல் கல்லூரியில் கடந்த 2013ல் பிஎட் படிப்பில் சேர்ந்தேன். அனைத்து விதமான கட்டணங்களையும் செலுத்தி விட்டேன். செய்முறைத் தேர்விற்கு சென்றபோது பிளஸ் 2 படிக்காததால் கலந்து கொள்ள முடியாது என கூறினர். தேர்வுக்கு பின் தகுதியில்லை என தெரியவந்தால் எனது பிஎட் படிப்பை ரத்து செய்து கொள்ளலாம் என பிரமாண வாக்குமூலம் எழுதிக் கொடுத்தேன்.இதை வாங்கி கொண்டு செய்முறை தேர்வுக்கு என்னை அனுமதித்தனர்.
நாளை (இன்று) முதல் எழுத்து தேர்வு துவங்குகிறது. இதற்கான ஹால் டிக்கெட் இன்னும் எனக்கு வழங்கப்படவில்லை. இதுகுறித்து கேட்டபோது ஏற்கனவே கூறிய காரணத்தையே மீண்டும் தெரிவித்தனர். அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் டிப்ளமோ படிப்பு, பிளஸ் 2 படிப்புக்கு சமமானது என கூறப்பட்டுள்ளது. எனவே, எழுத்து தேர்வில் கலந்து கொள்ள என்னை அனுமதித்து நீதிமன்றம் உத்தரவிடவேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இதேபோன்ற மனுவை விருதுநகரைச் சேர்ந்த செல்லம்மாள் என்பவரும் தாக்கல் செய்திருந்தார். இரு மனுக்களையும் நீதிபதி ஆர்.கருப்பையா விசாரித்தார். மனுதாரர்கள் தரப்பில், அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் டிப்ளமோ படிப்பு, பிளஸ் 2 படிப்புக்கு சமமானது என வாதிடப்பட்டது. இதையடுத்து, இருவரும் பிஎட் தேர்வு எழுதலாம் என அனுமதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

வரதட்சணை வாங்கினால் அரசு ஊழியர்கள் டிஸ்மிஸ்: கேரள முதல்வர்

கேரள முதல்வர் உம்மன்சாண்டிக்கு அதிகாரபூர்வ பேஸ்புக் கணக்கு உள்ளது. இதில் நேற்று அவர் சில கருத்துக்களை வெளியிட்டிருந்தார். நாட்டில் வரதட்சணை கொடுமை தலைவிரித்தாடுகிறது. அரசு ஊழியர்களுக்குத் தான் எப்போதும் திருமண மார்க்கெட்டில் டிமாண்ட் அதிகமாக உள்ளது. இவர்களுக்கு கேட்ட தொகை வரதட்சணையாக கிடைக்கும். எனவே வரதட்சணைக் கொடுமையை நிறுத்த வேண்டுமென்றால் முதலில் அரசு ஊழியர்களுக்குத் தான் மூக்குக் கயிறு போடவேண்டும். வரதட்சணை வாங்குபவர்களை தண்டிக்க சட்டத்தில் இடம் உள்ளது. அரசு ஊழியர்கள் வரதட்சணை வாங்கி திருமணம் செய்தால் அவர்களின் வேலை பறிபோகும் ஆபத்தும் உள்ளது. எனவே திருமணம் செய்யும் அரசு ஊழியர்கள் தங்களது துறை தலைவ ருக்கு, தான் வரதட்சணை வாங்கவில்லை என ஒப்புதல் வாக்குமூலம் அளிக்க வேண்டும். மேலும் அரசு ஊழியரின் மனைவி மற்றும் மாமனார் ஆகியோர் அந்த ஒப்புதல் வாக்குமூலத்தில் கையெழுத்து போடவேண்டும். இவ்வாறு அவர் பேஸ்புக்கில் குறிப்பிட்டுள்ளார்.

பத்தாம் வகுப்பில் தமிழ் கட்டாயம்: மெட்ரிக் பள்ளிகளுக்கு கிடுக்கிப்பிடி: பிற மொழி மாணவர்கள் தவிப்பு!

கட்டாய தமிழ் படிக்கும் சட்டத்தின்படி, வரும், 2015 - 16ல் நடக்கும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை, அனைத்து மாணவ, மாணவியரும், தமிழை, முதல் பாடமாக எழுத வேண்டும். தமிழ் அல்லாத இதர மொழியை, தாய்மொழியாகக்கொண்ட மாணவ, மாணவியருக்கும், இந்த விதிமுறை பொருந்தும்,'' என, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் பிச்சை உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆனால், பெரும்பாலான தனியார் பள்ளிகளில், கட்டாய தமிழ் படிக்கும் சட்டத்தை அமல்படுத்தாததால், தமிழ் அல்லாத பிற மொழியை தாய்மொழியாக கொண்ட மாணவர்கள், அவர்களது மொழிப் பாடத்தை, முதல் பாடமாக படித்து வருகின்றனர். இவர்கள், எப்படி, தமிழை, பொது தேர்வாக எழுதுவர் என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தில், தற்போது வரை, தமிழை ஒரு பாடமாக படிக்காமலேயே, பத்தாம் வகுப்பு பொதுதேர்வை எழுத முடியும் என்ற நிலை இருக்கிறது. மொழிப்பாடமாக, பிரெஞ்ச், இந்தி, ஜெர்மன், உருது, மலையாளம் ஆகிய பாடங்களை, முதல் பாடமாகவும், இரண்டாவது பாடமாக, ஆங்கிலத்தையும் தேர்வு செய்கின்றனர். கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களை, மற்ற மாணவர்களைப் போல் படிக்கின்றனர்.

கட்டாய தமிழ் சட்டம் அமல்: 
'இந்த நிலையை மாற்ற வேண்டும், குறைந்தபட்சம், பத்தாம் வகுப்பு வரையாவது, அனைத்து மாணவ, மாணவியரும், தமிழை, ஒரு பாடமாக கட்டாயம் படிக்க வேண்டும்' என, கருதி, முந்தைய தி.மு.க., அரசு, நடவடிக்கை எடுத்தது. அதன்படி, கட்டாய தமிழ் படிக்கும் சட்டத்தை, 2006ல் அமல்படுத்தியது. 2006- 07ல், முதல் வகுப்பிற்கு, தமிழ் பாடம் கட்டாயமாக்கப்பட்டது. இது, ஒவ்வொரு ஆண்டும், படிப்படியாக, அடுத்தடுத்த வகுப்புகளுக்கு, நீட்டிப்பு செய்யப்பட்டது. அதன்படி, 2006 - 07ல், முதல் வகுப்பில் சேர்ந்த மாணவ, மாணவியர் அனைவரும், வரும், 2015 - 16ல் (வரும் பொதுத்தேர்வுக்கு, அடுத்த பொதுத்தேர்வு), பத்தாம் வகுப்பு பொது தேர்வை எழுதுவர்.
அமல்படுத்தாத பள்ளிகள்: 
இச்சட்டத்தின்படி, 2006 - 07ல், முதல் வகுப்பில் சேர்ந்த மாணவர்கள், ஒவ்வொரு ஆண்டும், தமிழை படிக்கின்றனரா என்பதை, அதிகாரிகள் ஆய்வு செய்யவில்லை. தனியார் பள்ளிகளும், சட்டத்தை கண்டுகொள்ளவில்லை. இதனால், தமிழ் அல்லாத பிற மொழியை, தாய் மொழியாக கொண்ட மாணவ, மாணவியர், தமிழை படிக்க முடியாமல், அவர்களின் தாய்மொழி பாடத்தையே, ஒரு பாடமாக படித்து வருகின்றனர். குறிப்பாக, கிருஷ்ணகிரி, தேனி, வேலூர் உள்ளிட்ட, தமிழகத்தின் எல்லை மாவட்டங்களில் உள்ள மாணவ, மாணவியர், தமிழை படிக்க முடியாமல், மலையாளம், தெலுங்கு, உருது, கன்னடம் ஆகிய மொழிகளில், மொழிப்பாடத்தை படித்து வருகின்றனர். இப்போது, '2015 - 16ல் நடக்கும் பொது தேர்வில், தமிழை, முதல் பாடமாக கண்டிப்பாக எழுத வேண்டும்' என, கல்வித்துறை, உத்தரவு பிறப்பித்துள்ளது.
அமைச்சர் கூட்டத்தில் விவாதம்: 
கடந்த, 27ம் தேதி, சென்னையில் நடந்த கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு கூட்டத்தில், இந்த விவகாரம் குறித்து, விவாதிக்கப்பட்டது. அதில் பேசிய மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர், பிச்சை, 'கட்டாய தமிழ் படிக்கும் சட்டத்தின்படி, 2016 பொது தேர்வில், தமிழை, முதல் பாட தேர்வாக, அனைத்து மாணவர்களும் எழுத வேண்டும்' என, தெரிவித்துள்ளார்.
இயக்குனர் பேட்டி: 
இது குறித்து, இயக்குனர், பிச்சை, நேற்று கூறியதாவது: கட்டாய தமிழ் படிக்கும் சட்டத்தின்படி, 2014 - 15 கல்வி ஆண்டில், 9ம் வகுப்பு மாணவர்கள், தமிழை, ஒரு பாடமாக படிப்பர்.இவர்கள், 2015 16ல் நடக்கும் பொது தேர்வில், தமிழை, முதல் பாட தேர்வாக, கண்டிப்பாக எழுத வேண்டும். தமிழ் அல்லாத, இதர மொழியை தாய்மொழியாகக் கொண்ட மாணவ, மாணவியருக்கும், இந்த விதிமுறை பொருந்தும். இதனால், எல்லை மாவட்டங்களில் உள்ள மாணவ, மாணவியர் பாதிப்பர் என, கூறுகின்றனர். ஆனால், சட்டத்தின்படி, அவர்கள், தமிழை, முதல் பாட தேர்வாக எழுதி தான் ஆக வேண்டும். தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என, ஐந்து தேர்வுகளை எழுத வேண்டும். இதை, சுற்றறிக்கையாக, அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும், இப்போதே தெரியப்படுத்தி உள்ளோம். இவ்வாறு, பிச்சை கூறினார்.
கோர்ட்டுக்கு செல்வோம்: 
தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் பள்ளிகள் சங்க பொதுச்செயலர், நந்தகுமார் கூறுகையில்,''கட்டாய தமிழ் படிக்கும் சட்டத்தால், எல்லையோர மாவட்ட மாணவர்கள், கடுமையாக பாதிக்கப்படுவர். இந்த விவகாரத்தை, கோர்ட்டுக்கு கொண்டு செல்வோம்,'' என்றார்.
'தேர்வெழுத அனுமதி கிடையாது': 
விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், ஜெயக்குமார் கூறியதாவது: தமிழ், முதல்பாடமாக கட்டாயம் இருக்க வேண்டும் என, முன்னர் அமல்படுத்தப்பட்ட திட்டம், படிப்படியாக அடுத்தடுத்த வகுப்புகளுக்கு கொண்டு வரப்பட்டு, அடுத்த கல்வியாண்டில், பத்தாம் வகுப்பில் அமல்படுத்தப்படுகிறது. தமிழ் முதல்பாடமாக இருந்தால் மட்டுமே, அப்பள்ளி மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத முடியும். மாறாக, மலையாளம், இந்தி, தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதம் உள்ளிட்டவற்றை முதல்பாடமாக எடுத்தால், அவர்கள் கண்டிப்பாக தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். தமிழ் பாடத்தை கட்டாயமாக்கும் நோக்கிலேயே இவ்வாறு கூறப்பட்டது. தற்போது, பிற மொழியை, முதல் பாடமாக எடுத்து படிக்கும் மாணவர்கள், 500க்கு 500 பெற்றாலும், அவர்களுக்கு, மாநில, 'ரேங்க்' தரப்படுவதில்லை. இவ்வாறு, ஜெயக்குமார் கூறினார்.

மே 30, 31 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் பள்ளிகள் செயல்படும்: கடலூர் முதன்மைக் கல்வி அலுவலர்

கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் இன்று முதல் மூன்று நாட்கள் மணவர்கள் பள்ளிக்கு நேரில் சென்று புத்தகம், சீருடைகளை பெற்றுச் செல்லலாம் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த தலைமை ஆசிரியர்களின் கூட்டம் கடலூரில் நடந்தது. மாவட்டக் கல்வி அலுவலர்கள் வடிவேல், மல்லிகா, மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் பிச்சை, சி.இ.ஓ., பி.ஏ., ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், முதன்மைக் கல்வி அலுவலர் ஜோசப் அந்தோணிராஜ் தலைமை தாங்கி பேசுகையில், "30, 31 மற்றும் 1 ஆகிய தேதிகளில் பள்ளிகள் செயல்படும். இந்த மூன்று நாட்களில் பள்ளி மாணவர்கள் பள்ளிக்குச் சென்று சீருடை, பாடபுத்தகங்கள், மேலும் பள்ளிகளில் வழங்கப்படும் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்' என்றார். மேலும் கூட்டத்தில், பள்ளிகளில் ஏற்கனவே அமைக்கப்பட்டிருக்கும் மழைநீர் சேகரிப்பு தொட்டிகளை சீரமைக்க வேண்டும். மாணவர்களுக்கு மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு கட்டுரை, ஓவியப்போட்டிகள் நடத்தப்பட வேண்டும். இதற்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் கட்டாய கல்வி சட்டம்: பள்ளி கல்வி துறை பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சி.பி.எஸ்.இ., எனும், மத்திய இடைநிலை கல்வி வாரிய பள்ளிகளில், கட்டாய கல்வி சட்டத்தை அமல்படுத்த, உரிய பிரிவுகளை கொண்டு வர கோரிய மனுவிற்கு பதிலளிக்க, பள்ளி கல்வித் துறை சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையை அடுத்த, திருமுல்லைவாயிலைச் சேர்ந்த, ஏ.வி.பாண்டியன் என்பவர், தாக்கல் செய்த மனு: இலவச மற்றும் கட்டாய கல்விச் சட்டத்தை, மத்திய அரசு கொண்டு வந்தது. 2010, ஏப்ரலில், அமலுக்கு வந்த இச்சட்டப்படி, சி.பி.எஸ்.இ., பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து பள்ளிகளும், மாநில அரசின் அங்கீகாரம் பெற வேண்டும்.
அமல்படுத்த முடியவில்லை:
அதற்கு, மாநில விதிகளில், உரிய பிரிவுகளை சேர்த்திருக்க வேண்டும். ஆனால், மாநில விதிகளில் உரிய பிரிவுகள் இல்லாததால், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், மத்திய சட்டம், விதிகளை அமல்படுத்த முடியவில்லை. கல்வி பெறும் உரிமை சட்டம் அமல்படுத்துவதை கண்காணிக்க, மாநில அளவிலும், மாவட்ட அளவிலும், உரிய அதிகாரியை நியமிக்க, பள்ளி கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துஇருந்தது. சி.பி.எஸ்.இ., உள்ளிட்ட அனைத்து பள்ளிகளிலும், ஏழை, எளிய மாணவர்களுக்கான, 25 சதவீத ஒதுக்கீட்டை நிரப்புவது குறித்தும், உத்தரவிட்டிருந்தது. மாநில அரசைப் பொறுத்தவரை, சி.பி.எஸ்.இ., பள்ளிகளிலும், மத்திய அரசு சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதை, புரிந்துள்ளது. ஆனால், மாநில விதிகளில், உரிய பிரிவுகள் சேர்க்காததால், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், அமல்படுத்த முடியவில்லை.
உரிய பிரிவுகள்:
எனவே, இலவச கட்டாய கல்வி சட்டத்தை, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் அமல்படுத்த, உரிய பிரிவுகளை கொண்டு வர, மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது. இம்மனு, நீதிபதிகள் அருணா ஜெகதீசன், வைத்தியநாதன் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் ஜி.சங்கரன், கல்வி துறை சார்பில், கூடுதல் அரசு பிளீடர் சஞ்சய்காந்தி ஆஜராகினர்.
'டிவிஷன் பெஞ்ச்' உத்தரவு:
மனுவுக்கு, மூன்று வாரங்களில் பதிலளிக்கும்படி, பள்ளி கல்வித் துறைக்கு, 'டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டு உள்ளது.

வேலையை பார்த்து தகுதியை முடிவு செய்யுங்க: ஸ்மிருதி இரானி பதிலடி

       


என் கவனத்தை திசை திருப்பவே, கல்வித்தகுதி தொடர்பான சர்ச்சையை, காங்கிரசார் எழுப்பியுள்ளனர். எனக்கான அமைச்சர் பொறுப்பை, நான் எப்படி கவனிக்கிறேன் என்பதைப் பார்த்து, அந்தப் பதவிக்கு நான் தகுதியானவளா, இல்லையா என்பதை, மக்கள் தீர்மானிக்க வேண்டும்,'' என, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர், ஸ்மிருதி இரானி கூறினார்.

மனிதவளத்துறை:

'மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை கட்டுப்பாட்டில் தான், கல்வி இலாகா வருகிறது. அப்படிப்பட்ட நிலையில், பட்டப்படிப்பை கூட முடிக்காத, ஸ்மிருதி இரானி யை, அந்தத் துறையின் அமைச்சராக நியமித்துள்ளது வேடிக்கையாக உள்ளது. இது தான் மோடி அமைச்சரவை' என, காங்கிரஸ் மூத்த தலைவர், அஜய் மேக்கன் கிண்டலடித்திருந்தார். இதற்கு, மத்திய அரசு தரப்பிலும், பா.ஜ., தரப்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டது. மற்றொரு மத்திய அமைச்சரான உமாபாரதி, காங்கிரஸ் தலைவர் சோனியாவின் கல்வித்தகுதி குறித்தும் கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்நிலையில், தன் கல்வித்தகுதி தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு, அமைச்சர் ஸ்மிருதி இரானி நேற்று பதில் அளித்தார்.

அவர் கூறியதாவது:

எனக்கு கொடுக்கப்பட்ட அமைச்சக பணியிலிருந்து, என் கவனத்தை திசை திருப்பவே, கல்வித்தகுதி தொடர்பான சர்ச்சையை, காங்கிரசார் எழுப்பி உள்ளனர். என் திறமையை மதிப்பிட்டே, பா.ஜ., மேலிடம், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை பொறுப்பை வழங்கி உள்ளது. எனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை, நான் எப்படி கவனிக்கிறேன் என்பதைப் பார்த்து, இந்தப் பதவிக்கு நான் தகுதியானவளா, இல்லையா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும். இதற்கு மேல், நான் எதையும் சொல்ல விரும்பவில்லை. இவ்வாறு, ஸ்மிருதி இரானி கூறினார்.

செயல்திறன் அடிப்படையில் ஊக்கத்தொகை: மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்க திட்டம்

மத்திய அரசு ஊழியர்களுக்கு செயல்திறன் அடிப்படையிலான ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, அமல்படுத்தலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பாக, மத்திய அரசு அதிகாரிகள் கூறியதாவது: 'மத்திய அரசு ஊழியர்களுக்கு, அவர்களின் திறமை மற்றும் செயல்திறன் அடிப்படையில், ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை அமல்படுத்தலாம்' என, ஆறாவது சம்பள கமிஷன் பரிந்துரை செய்தது. இதை, மன்மோகன் சிங் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, ஏற்றுக் கொண்டாலும், கொள்கை அளவில் மட்டுமே ஒப்புதல் அளித்தது. இந்த செயல்திறன் அடிப்படையிலான ஊக்கத்தொகை குறித்து, பிரதமர் நரேந்திர மோடியிடம், மத்திய பணியாளர் நலத்துறை அதிகாரிகள், விரைவில் விளக்கம் அளிக்க உள்ளனர். அப்போது, ஊக்கத் தொகை திட்டத்திற்கு மோடி ஒப்புதல் அளித்து விட்டால், விரிவான வழிகாட்டிக் குறிப்புகள் தயார் செய்யப்படும். ஏற்கனவே இதுதொடர்பாக, முந்தைய ஆட்சியில், வரைவு வழிகாட்டிக் குறிப்புகள் தயார் செய்யப்பட்டுள்ளன. இந்த வரைவு வழிகாட்டிக் குறிப்புகளுடன், மோடி தெரிவிக்கும் யோசனைகளின் அடிப்படையில், புதிய விதிமுறைகள் இடம் பெறும். நாடு முழுவதும், மத்திய அரசு ஊழியர்கள், 50 லட்சம் பேர் உள்ளனர். அவர்களை சிறப்பாக செயல்பட வைத்து, மக்களுக்கு அதிகபட்ச நலன் கிடைக்க, மத்திய பணியாளர் நலத்துறை, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும். இந்தச் செயல்திறன் அடிப்படையிலான ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் அமலுக்கு வந்தால், ஒவ்வொரு ஆண்டும், ஊழியர்களின் செயல்பாடுகளுக்கு ஏற்ற வகையில், மாறுபட்ட சம்பளம் வழங்கப்படும். இந்தத் திட்டம், தனி நபர்கள் என்ற அளவிலோ அல்லது ஒரு குழு என்ற அளவிலோ அமல்படுத்தப்படும். இவ்வாறு, மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
எப்படி இருக்கும்?
* உதாரணமாக, ஒரு போலீஸ் அதிகாரி, குற்றங்களை குறைப்பதில் சிறப்பாக செயல்பட்டால், அவருக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.
* ஊக்கத்தொகை வழங்கப்படுவதால், வழக்கமான சம்பள உயர்வு, பதவி உயர்வில் பாதிப்பும் ஏற்படாது.
* ஊக்கத்தொகை, ஒவ்வொரு ஆண்டின் செயல்பாட்டில் வழங்கப்படும்.
* இதற்காக, துறை வாரியாக ஆவணம் தயார் செய்யப்படும்.
* திறமையான அதிகாரிகளுக்கு கூடுதல் சம்பளம் நிச்சயம்.
* ஏற்கனவே இம்முறை பல தனியார் நிறுவனங்களில் பல ஆண்டுகளாக திறம்பட பின்பற்றப்படுகிறது.
* ஆறாவது சம்பள கமிஷன், நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் அமைக்கப்பட்டது.
ஊழியர் சங்கம் எதிர்ப்பு:
''உற்பத்தியில் ஈடுபடாத, சேவை நோக்கை மட்டுமே கொண்ட, மத்திய அரசுத் துறை ஊழியர்களுக்கு, பணி திறன் அடிப்படையிலான ஊக்கத் தொகை திட்டம் பொருந்தாது; சாத்தியமும் இல்லை,'' என, மத்திய அரசு ஊழியர்கள் சம்மேளனம் கூறியுள்ளது.
இதுகுறித்து, சம்மேளனத்தின் பொருளாளர், சுந்தரமூர்த்தி கூறியதாவது: மத்திய அரசில், 110 துறைகள் உள்ளன. இவற்றில், 32 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். ஒரு துறையின் செயலர் முதல் கடைநிலை ஊழியர் வரை, ஒன்றிணைந்து தான், வேலை செய்ய முடியும். இவர்களில், யாரையும் தனித்து ஒரு வேலைக்கு மதிப்பிட முடியாது. ஆறாவது ஊதியக் குழுவின், பணி திறன் அடிப்படையிலான ஊக்கத் தொகையை, ஏற்கனவே எதிர்த்துள்ளோம். மத்திய அரசுத் துறைகள் லாப நோக்கில் செயல்படுவதில்லை. எந்த உற்பத்தியையும் மேற்கொள்வதில்லை. மக்கள் நலனுக்கான சேவையை செய்து வருகின்றனர். உற்பத்தியை மையமாகக் கொள்ளாத அரசு துறைகளில், பணி திறனை எப்படி கணக்கிட முடியும் என, தெரியவில்லை. பணித் திறன் அடிப்படையிலான ஊக்கத் தொகை என்பது, மூத்த அதிகாரிகளின் விருப்பு, வெறுப்புகளுக்கு உட்பட்டதாக முடியும். மேலும், அதிகாரிகளை திருப்தி செய்பவர்களுக்கு, ஊக்கத் தொகை அளிப்பதாக அமையும். இதனால், ஊழியர்கள் மத்தியில் தேவையற்ற பிரிவினையை ஏற்படுத்தும். எனவே, பணி திறன் அடிப்படையிலான ஊக்கத் தொகைத் திட்டத்தை, மத்திய அரசு ஊழியர்கள் சம்மேளனம் எதிர்க்கிறது. இத்திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம்.
எது செயல்திறன் அடிப்படை?
செயல்திறன் அடிப்படையிலான சம்பளம் என்பது, ஒவ்வொரு ஆண்டும் அல்லது குறிப்பிட்டகால இடைவெளியில் வழங்கப்படும். ஒவ்வொரு தனி நபரின் அல்லது குழுவினரின் செயல்பாடுகளுக்கு ஏற்ற வகையில், மாறுபட்ட வீதத்தில் வழங்கப்படும். ஐந்தாவது சம்பள கமிஷன், தன் பரிந்துரையில், 'மிகச்சிறப்பாக செயல்படுவோருக்கு கூடுதல் சம்பள உயர்வு வழங்கலாம் என, தெரிவித்துள்ளதோடு, சிறப்பாக செயல்படாத நபர்களுக்கு, வழக்கமான சம்பள உயர்வை மறுக்கலாம்' என்றும் கூறியுள்ளது.

மழைநீர் சேகரிக்கும் பள்ளிக்கு பரிசு!


மழைநீர் சேகரிப்பு திட்டத்தை சிறந்த முறையில் செயல்படுத்தும் பள்ளிக்கு பரிசு வழங்கப்படும்' என பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளது.பள்ளிகல்வித்துறை முதன்மை செயலர் சபீதா அனுப்பியுள்ள சுற்றறிக்கை:மாநில குடிநீர் வினியோகம் தொடர்பான ஆய்வுக்கூட்டம், முதல்வர் ஜெ., தலைமையில் நடத்தப்பட்டது. அதில், 'அனைத்துப்பள்ளிகளிலும், ஜூன் 30க்குள், மழைநீர் சேகரிப்பு அமைப்பை ஏற்படுத்த வேண்டும்' என, முதல்வர் உத்தரவிட்டார். ஏற்கனவே மழைநீர் சேகரிப்பு அமைப்பு உள்ள பள்ளி கட்டடங்களில், ஜூன் 30க்குள், மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டுவரவேண்டும். அதற்காக, மாணவர்களைக்கொண்டு ஊர்வலங்கள் நடத்த வேண்டும். மழைநீர் சேகரிப்பு தொடர்பாக, பள்ளி வளாக சுவர்களில், வாசகங்கள், கரும்பலகையில், தினம் ஒரு தகவல் எழுத வேண்டும். பள்ளிகளில், இறைவணக்கத்தின் போது, மழைநீர் சேகரிப்பு உறுதிமொழி எடுக்க வேண்டும்.குடிநீர் வடிகால் வாரிய இன்ஜினியர்கள் மூலம், அத்திட்டத்தின் அவசியம் தொடர்பாக, மாணவர்களுக்கு வகுப்பு எடுக்க வேண்டும். மேற்கண்ட வழிமுறைகளை கையாண்டு, மழைநீர் சேகரிப்பு திட்டத்தை சிறந்த முறையில் செயல்படுத்தும் பள்ளிக்கு விருது வழங்கப்படும். 'மழைநீர் சேகரிப்பு' என்ற தலைப்பில், வண்ணம் தீட்டுதல்
உள்ளிட்ட போட்டிகளை, அனைத்து பள்ளிகளிலும் கிராம அளவில் துவங்கி நடத்த வேண்டும். இப்பணி தொடர்பாக, இயக்குனர்கள், களப்பணி அதிகாரிகள் மூலம் வாரம் ஒருமுறை ஆய்வுக்கூட்டம் நடத்தி, துறைக்கு, அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஓரிரு நாளில் விடைத்தாள் நகல்தேர்வு துறை இயக்குனர் தகவல்

''பிளஸ் 2 விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு, ஓரிரு நாளில், விடைத்தாள் நகல், தேர்வுத் துறை இணையதளத்தில், பதிவேற்றம் செய்யப்படும்,'' என, துறை இயக்குனர், தேவராஜன் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:பிளஸ் 2, விடைத்தாள் நகல் கேட்டு, 80 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்தனர். மறுகூட்டல் கேட்டு, 3,000 பேர் விண்ணப்பித்தனர்.விடைத்தாள் நகல் கேட்ட மாணவர்களின், விடைத்தாள்கள், சென்னைக்கு கொண்டு வரப்பட்டு, அவை, 'ஸ்கேன்' செய்யப்பட்டு வருகின்றன.
இந்தப் பணி, மிக விரைவில் முடிவடையும். அதன்பின், ஓரிரு நாளில், ஜூன், 2ம் தேதிக்குள், விடைத்தாள் நகல்கள், தேர்வுத் துறை இணையதளத்தில், பதிவேற்றம் செய்யப்படும். ஒரே நாளில், 80 ஆயிரம் பேருக்குமான நகல்கள், பதிவேற்றம் செய்யப்படாது.பாட வாரியாக, வெவ்வேறு தேதிகளில், விடைத்தாள் நகல்கள், பதிவேற்றம் செய்யப்படும். மறு மதிப்பீட்டில், மதிப்பெண் குறையவும் வாய்ப்பு உள்ளது.எனவே, மாணவர்கள், தங்கள் பாட ஆசிரியரிடம், நன்றாக ஆலோசித்து, அதன்பின் விண்ணப்பிக்க வேண்டும்.இவ்வாறு, தேவராஜன் தெரிவித்தார்.

Thursday, 29 May 2014

குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம்-12.06.2014-உறுதிமொழி-தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குனர் செயல்முறை.


தொடக்கக்கல்வி துறையில் இந்தாண்டு பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு இல்லை?


தொடக்கக்கல்வி துறையில் இந்தாண்டு பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நடத்துவதற்கான அறிவிப்பு இது வரை அரசால் வெளியிடப்படவில்லை.

பள்ளிகல்வித்துறை இடைநிலை ஆசிரியர்களுக்கான பதவியுயர்வு தேர்ந்தோர்] பட்டியல் தயாரிப்பதற்கு செயல் முறை வெளியிடப் பட்ட நிலையில் தொடக்கக்கல்வி துறையில் பதவி உயர்வு சம்மந்தமாக செயல் முறைகள் இது வரை வெளியிடவில்லை .\



இத்தகைய சூழ்நிலையில் நேரடி நியமனம் மட்டுமே நடைபெறும் எனவும் பதவியுயர்வு கலந்தாய்வுக்கான அறி குறிகள் மிக மிக குறைவாகவே இருப்பதாக கூறபடுகின்றன .

தொடர்ந்து இடைநிலை ஆசிரியர்களின் பதவியுயர்வு புறக்கணிக்கபடுவதால் மிகுந்த மனவேதனையும் அதிர்ச்சியும் அடைந்துள்ளனர்.

பாரதியார் பல்கலையில் அஞ்சல் வழி எம்.எட். சேர சலுகை

கோவை பாரதியார் பல்கலைக் கழகம் இந்த ஆண்டு தொலைதூரக் கல்வியில் எம்.எட். படிப்பை அறிமுகப்படுத்துகிறது. இதற்கான விண்ணப்ப படிவங்கள் வழங்கப் பட்டு வருகின்றன. பி.எட். முடித்து 2 ஆண்டு ஆசிரியர் அனுபவம் உள்ளவர்கள் எம்.எட். படிப்பில் சேரலாம். அரசு பள்ளியிலோ, அரசு உதவி பெறும் பள்ளியிலோ அல்லது அங்கீகாரம் பெற்ற தனியார் பள்ளியிலோ தற்போது பணியில் இருக்க வேண்டும்.
பி.எட். படிப்பில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என்று முன்பு கல்வித் தகுதி நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. தற்போது, 55 சதவீத மதிப்பெண் என் பது 50 சதவீதமாக மாற்றப்பட்டிருப் பதாக பல்கலைக்கழக பதிவாளர் பி.கே.மனோகரன் அறிவித்துள் ளார். எம்.எட். படிப்புக்கு ஜூலை 4-ம்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். நுழைவுத்தேர்வு ஜூலை 20-ம் தேதி நடைபெறுகிறது.

மறையட்டும் பொறியியல் படிப்பு மாயை!

பொறியியல் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் 2.50 லட்சம் அச்சிடப்பட்டு, விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் வரை 2.20 லட்சம் விண்ணப்பங்கள் விற்றுள்ளன. பூர்த்தி செய்த 1.75 லட்சம் விண்ணப்பங்கள் வந்துசேர்ந்துள்ளன. இந்த விண்ணப்பங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் கலந்தாய்வுக்கானவை. இவை தவிர, நிர்வாக ஒதுக்கீட்டில் சுமார் 1 லட்சத்துக்கும் மேலான மாணவர்கள் சேர்கிறார்கள்.
இதில் ஆறுதலான விஷயம் என்னவென்றால், மாணவர்களிடையே பொறியியல் படிப்புக்கான ஆர்வம் சற்று குறைந்திருப்பதுதான். கலந்தாய்வு மூலம் பொறியியல் படிப்புகளில் சேர, கடந்த ஆண்டைவிட 15,000 பேர் குறைவாகவே விண்ணப்பித்திருக்கிறார்கள் என்பதிலிருந்து பி.இ. படிப்பின் மீதான மோகம் குறைந்து வருவது தெரிகிறது.
பத்தாண்டுகளுக்கு முன்பு, இளங்கலை வரலாறு, தமிழ், கணிதம், வேதியியல், இயற்பியல் என பல்வேறு பிரிவுகளில் பட்டம்பெற்ற இளைஞர்கள் எவ்வாறு அவர்கள் படித்த படிப்புக்குத் தொடர்பில்லாத துறைகளில் வேலைக்கு சேர்ந்தார்களோ அதே போன்ற சூழல் தற்போது பொறியியல் கல்வி படித்து வெளிவரும் மாணவர்களுக்கும் நேர்ந்து வருகிறது. அவர்கள் படித்த படிப்புக்கும் பார்க்கும் தொழிலுக்கும் தொடர்பில்லாமல் இருக்கும் நிலைமை பரவலாகி வருகிறது.
கணினி பாடத்தில் பொறியியல் படித்து முடித்த மாணவர் பி.பி.ஓ. நிறுவனத்தில் வேலைக்குச் செல்கிறார். இந்த வேலையைச் செய்ய அவருக்கு நான்கு ஆண்டு பொறியியல் படிப்பு அவசியமே இல்லை. யார் வேண்டுமானாலும், எந்தத் துறையில் பட்டம் பெற்றவரும் சில நாள்களில் கணினி நிறுவனங்களின் பி.பி.ஓ. வேலைகளைப் பழகிக்கொள்ள முடியும். அப்படியிருக்க எதற்காகப் பொறியியல் பட்டம்?
மேலும், இயந்திரத் தொழில் சார்ந்த நிறுவனங்கள் மற்றும் கட்டுமான நிறுவனங்கள் பொறியியல் பட்டம் பெற்ற மாணவர்களைக் காட்டிலும், பட்டயப் படிப்பு (டிப்ளமோ) முடித்த மாணவர்களைப் பணியமர்த்துவற்கே முன்னுரிமை தருகின்றன. உதாரணமாக, ஒரு கட்டுமான நிறுவனத்தின் வேலைக்காக, பாலிடெக்னிக்கில் சிவில் பிரிவில் பட்டயம் பெற்ற மாணவரும் பொறியியல் (சிவில்) மாணவரும் விண்ணப்பித்தால், பட்டயப் படிப்பில் வந்த மாணவருக்கே முன்னுரிமை தருகின்றனர். பட்டயப் படிப்பை முடிக்கும் மாணவர்களுக்குக் களப்பணி அனுபவம் இருப்பதுதான் அதற்குக் காரணம். அவர்கள் இறங்கி வேலை செய்வார்கள், பொறியியல் படிப்பு முடித்த மாணவர்கள் சட்டை அழுக்காவதை விரும்ப மாட்டார்கள் என்பது ஒரு காரணமென்றால், பட்டயம் பெற்ற மாணவருக்கு சம்பளத்தை குறைத்துக் கொடுக்க முடியும் என்பதும் மற்றொரு காரணம்.
இதனால் மூன்று விதமான இழப்புகள்: முதலாவது, ஒரு குறிப்பிட்டத் துறையில் திறனுறு ஊழியர்களை உருவாக்கும் நோக்கத்துடன் அதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்க மத்திய மாநில அரசுகள் செலவிடும் மக்கள் பணம் வீணாகிறது. இரண்டாவது, மாணவர்கள் சுமார் நான்கு ஆண்டுகளை வீணாக்குகிறார்கள். மூன்றாவது, அந்த மாணவரின் குடும்பம் செலவழிக்கும் பெருந்தொகை பயனற்றுப் போவதால், பல குடும்பங்கள் மனமுடைந்து வேதனைப்படுகின்றன.
ஆகவே இன்றைய சூழ்நிலையில், தொழில்துறைக்கு தேவையான ஊழியர்களை உருவாக்க வேண்டும் என்றால், நாட்டுக்கோ குடும்பத்துக்கோ நட்டம் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றால் இரண்டு விஷயங்களை தமிழக அரசும் இந்திய அரசும் செய்தாக வேண்டும்.
முதலில், தனியார் பொறியியல் கல்லூரிகளை ஊக்குவிப்பதைவிட, அதிக அளவில் பாலிடெக்னிக்குகளை ஊக்குவிக்க வேண்டும். பத்தாம் வகுப்பு முடித்தவுடனேயே மாணவர்கள் பாலிடெக்னிக்கில் சேர்ந்து, பட்டயப் படிப்பை படிக்கவும் அதற்கு மேலாக அவர்கள் பொறியியல் பட்டம் பெற விரும்பினால், தொடர்ந்து அடுத்த மூன்று ஆண்டுகளில் பொறியியல் பட்டம் பெறவும் வழிகோல வேண்டும்.
இரண்டாவதாக, கலைக்கல்லூரிகளில் பி.எஸ்சி. கணிதம், பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயன்ஸ் இருப்பதைப் போல, இயற்பியல் மற்றும் வேதியியல் துறைகளில் கூடுதல் படிப்புகளாக பல பாடத் திட்டங்களைப் புகுத்தி நான்கு ஆண்டு பொறியியல் படிப்புக்கு இணையான இளங்கலை படிப்புகளை உருவாக்கினால் செலவு பாதியாகக் குறையும்; வேலைவாய்ப்பும் சுலபமாகக் கிடைக்கும்.
தகுதியும் திறமையும் இல்லாவிட்டாலும், பொறியியல் படித்தால் மட்டுமே வருங்காலம் என்கிற எண்ணம் புரையோடிக் கிடக்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் படித்து வெளியே சென்ற மாணவர்களின் தகவல்கள் பல்கலைக்கழகத்தில் இருக்கிறது. அவர்களைத் தொடர்பு கொண்டு, அவர்கள் நிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டால் மட்டுமே பொறியியல் மாயை மறையும்!