Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Wednesday, 28 May 2014

மழை நீர் சேகரிப்புத் திட்டம் அனைத்துப் பள்ளிக் கட்டிடங்களிலும் ஜூன் 30-ம் தேதிக்குள் அமைக்க வேண்டும்-அமைச்சர் வீரமணி


பள்ளி திறக்கும் நாளிலேயே எல்லா மாணவர்களுக்கும் இலவச பாட புத்தங்கள் மற்றும் சீருடைகளை வழங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் கே.சி.வீரமணி அறிவுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து தமிழக அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 
பள்ளிக் கல்வித் துறை செயல்பாடுகள், திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம், அமைச்சர் கே.சி.வீரமணி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடந்தது. பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் சபிதா, அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி, அரசு துணைச் செயலர் பழனிச்சாமி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர். பள்ளி திறக்கும் நாளான ஜூன் 2-ம் தேதியே அனைத்து மாணவர்களுக்கும் விலையில்லா பாடப் புத்தகம், பாடக்குறிப்பேடு, சீருடை ஆகியவற்றை வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார். அதேபோல மடிக்கணினி, மிதிவண்டி உள்ளிட்ட அரசின் அனைத்து நலத்திட்டங்களையும் மாணவர்களுக்கு விரைந்து வழங்கவும் அறிவுறுத்தப்பட்டது. மழை நீர் சேகரிப்புத் திட்டம் அனைத்துப் பள்ளிக் கட்டிடங்களிலும் ஜூன் 30-ம் தேதிக்குள் அமைக்க வேண்டும். ஜூன் 2-வது வாரத்தை மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு வாரமாக கடைபிடிக்க வேண்டும். 100 சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு தெரிவிக்க வேண்டும். 2014-15ம் கல்வியாண்டில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் 100 சதவீத தேர்ச்சி பெறும் வகையில் தலைமையாசிரியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளித்து இலக்கை அடைய நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து தனியார் பள்ளி களிலும் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்விச் சட்டத்தின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை முழுமையாக நடப்பதை முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் ஆய்வர்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் கூட்டத்தில் வலியுறுத்தப் பட்டது.

No comments:

Post a Comment