ஸ்மிரிதி இரானி - மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர்
மோடியின் அமைச்சரவையில் யார், யாருக்கு என்னென்ன துறை கிடைக்கும் என்ற தகவல் கிடைத்துள்ளது. அதன் விவரம்
வருமாறு,
1. ராஜ்நாத் சிங் - உள்துறை 2. அருண் ஜேட்லி - நிதி மற்றும் பாதுகாப்புத் துறை 3. நிதின் கட்காரி - போக்குவரத்து துறை 4. சுஷ்மா ஸ்வராஜ் - வெளியுறவுத் துறை 5. வெங்கையா நாயுடு - நகர்ப்புற மேம்பாட்டுத் துறை, நாடாளுமன்ற விவகாரத் துறை 6. சதானந்த கவுடா - ரயில்வே துறை 7. உமா பாரதி - நீர்வளம் மற்றும் கங்கை சுத்தப்படுத்தும் துறை 8. நஜ்மா ஹெப்துல்லா - சிறுபான்மையினர் நலத்துறை 9. கோபிநாத் முண்டே - ஊரக வளர்ச்சித் துறை 10. ராம்விலாஸ் பாஸ்வான் 11. கல்ராஜ் மிஸ்ரா 12. மேனகா காந்தி - பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை 13. அனந்த் குமார் 14. ரவி சங்கர் பிரசாத் - சட்டம் மற்றும் தொலைதொடர்புத் துறை 15. அசோக் கஜபதி ராஜு - விமான போக்குவரத்து துறை 16. அனந்த் கீதே 17. ஹர்சிம்ரத் கவுர் பாதல் 18. நரேந்திர சிங் தோமார் 19. ஜுவல் ஓரம் 20. ராதா மோகன் சிங் - விவசாயம் 21. தவார் சந்த் கெஹ்லாட்
22. ஸ்மிரிதி இரானி - மனிதவள மேம்பாட்டுத் துறை
23. டாக்டர் ஹர்ஷ்வர்தன் - சுகாதாரம் 24. நரேந்திர மோடி மோடிக்கு நெருக்கமானவர் என்று கூறப்படும் பாஜக தலைவர் அமித் ஷாவுக்கு அமைச்சரவையில் இடம் இல்ல. இந்நிலையில் தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தின் (டிராய்) முன்னாள் தலைவர் ந்ரிபேந்திர மிஷ்ரா மோடியின் முதன்மை செயலாளராக நியமிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள பாஜக எம்பிக்களில் 12 எம்.பி.க்களுக்கு ஒரு கேபினட் அமைச்சர் நியமிக்கப்படுகிறார். சிவசேனா இரண்டு கேபினட் மற்றும் இரண்டு இணை அமைச்சர்கள் பதவி கேட்டது. ஆனால் அதற்கு ஒரு கேபினட் அமைச்சர் பதவியும், ஒரு இணை அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து தங்கள் கட்சிக்கு 3 கேபினட் அமைச்சர் பதவி கேட்டார். ஆனால் அவர் கட்சிக்கு ஒரு கேபினட் அமைச்சர் பதவி மற்றும் ஒரு இணையமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment