பத்தாம் வகுப்புத் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்கள் 23,445 பேர் 500-க்கு 450 மதிப்பெண்ணுக்கும் (90 சதவீதம்) பெற்றுள்ளதாக பள்ளிக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன் கூறினார்.
தமிழகம் முழுவதும் 88,840 மாணவர்கள் 400 மதிப்பெண்ணுக்கும் அதிகமாக பெற்றுள்ளனர். அதேபோல், முழுத் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை இந்த ஆண்டு கணிசமாக உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டு 482 பள்ளிகளில் நூறு சதவீத தேர்ச்சி இருந்தது. இந்த ஆண்டு 887 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியைப் பெற்றுள்ளன.
அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் விவரம்:
401 - 410 மதிப்பெண் வரை 14,347
411 - 420 மதிப்பெண் வரை 13,847
421 - 430 மதிப்பெண் வரை 12,705
431 - 440 மதிப்பெண் வரை 12,229
441 - 450 மதிப்பெண் வரை 11,267
451 - 460 மதிப்பெண் வரை 9,666
461 - 470 மதிப்பெண் வரை 7,658
471 - 480 மதிப்பெண் வரை 4,865
481 - 490 மதிப்பெண் வரை 2,017
491 - 500 மதிப்பெண் வரை 239
மொத்தம் 88,840
அரசுப் பள்ளி மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுத்துள்ளது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன் மேலும் கூறியது:
இந்த ஆண்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டன. கற்றலில் குறைபாடு உள்ளவர்களுக்கு வழிகாட்டி புத்தகங்கள் தயாரித்து வழங்கப்பட்டன.
அதேபோல், மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறும் வகையில் அரசுப் பள்ளிகளில் உள்ள ஒவ்வொரு பாட ஆசிரியர்களுக்கும் மதிப்பெண்ணை அதிகரிப்பது தொடர்பாகவும் பயிற்சிகள் வழங்கப்பட்டன.
இந்தக் காரணங்களால் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் 90 சதவீத மதிப்பெண் பெற்றுள்ளதோடு, அரசுப் பள்ளிகளில் முழுத் தேர்ச்சியும் இந்த ஆண்டு அதிகரித்துள்ளது என்றார் அவர்.
No comments:
Post a Comment