Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Thursday, 27 February 2014

பொது தேர்வு தொடர்பாக, எந்த புகாரோ, சர்ச்சைகளோ வரக்கூடாது: பள்ளிக் கல்வி அமைச்சர், வீரமணி எச்சரிக்கை


""பொது தேர்வு தொடர்பாக, எந்த புகாரோ, சர்ச்சைகளோ வராத அளவிற்கு, சுமுகமாக நடத்த வேண்டும்,'' என, கல்வித்துறை அதிகாரிகளுக்கு, அமைச்சர் வீரமணி, எச்சரிக்கை விடுத்தார்.
பொது தேர்வு தொடர்பான ஆலோசனை கூட்டம், நேற்று முன்தினம், சென்னையில் நடந்தது. பள்ளிக் கல்வி அமைச்சர், வீரமணி தலைமையில் நடந்த கூட்டத்தில், துறை முதன்மை செயலர், சபிதா உட்பட, பலர் கலந்து கொண்டனர்.

இதில் அமைச்சர் பேசியதாவது: எவ்வித புகாருக்கும் இடம் தராமல், சர்ச்சை வராத அளவிற்கு, தேர்வை, சுமுகமாக நடத்த, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்வு மையம் முதல், விடைத்தாள்களை கையாள்வது வரை, அனைத்துப் பணிகளையும், கவனமுடன் மேற்கொள்ள வேண்டும்.
கடந்த ஆண்டு, விடைத்தாள் கட்டு, சேதமானது மற்றும் காணாமல் போன விவகாரம், பெரும் சர்ச்சையை எழுப்பியது. அது போன்ற சம்பவங்கள், வரும் தேர்வில் நடந்து விடக் கூடாது. அதிகாரிகள் அனைவரும் இணைந்து, விழிப்புடன் தேர்வை நடத்த வேண்டும். இவ்வாறு, அமைச்சர் பேசினார்.

No comments:

Post a Comment