Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Wednesday, 26 February 2014

சங்கராபுரம் அரசு பள்ளியில் 10 மாணவருக்கு 2 ஆசிரியர்

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

சங்கராபுரம் அருகே அரசு பள்ளியில் 10 மாணவர்களுக்கு 2 ஆசிரியர்கள், ஒரு சமையலர், ஒரு இரவு காவலர் என 4 பேர் பணியாற்றுகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அடுத்த சமத்துவபுரம் காட்டுகொட்டாய் பகுதியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளிக்கு சமத்துவபுரம், நரிக்குறவர்கள் காலனி, நெடுமானூர் காட்டுகொட்டாய் ஆகிய பகுதியில் இருந்து மாணவ, மாணவிகள் படித்து வந்தனர். இந்நிலையில், கடந்த சில வருடங்களாக மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகின்றது. தற்போது அந்தப் பள்ளியில் வருகைப் பதிவேட்டில் 35 மாணவர்கள் பெயர்கள் இருக்கிறது. ஆனால் வருவதோ 10 மாணவர்களேதான். இந்த 10 மாணவர்களுக்கு 2 ஆசிரியர்கள், ஒரு சமையலர், ஒரு இரவுக் காவலர் ஆகிய 4 பேர் இந்த பள்ளியில் பணியாற்றும் அவல நிலையும் உள்ளது.

இது குறித்து அப்பகுதி மாணவர்களின் பெற்றோர்கள் கூறுகையில், இந்த பள்ளியில் மாணவர்களுக்கு சரியான கல்வி வழங்குவது கிடையாது. ஆசிரியர் குறித்த நேரத்தில் பள்ளிக்கு வருவது கிடையாது. இதனால் அங்கு படிக்கும் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. இந்த பள்ளியில் இருக்கும் மாணவர்களை அருகில் உள்ள அரசுப் பள்ளியில் சேர்க்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment