ஆசிரியர் தகுதித் தேர்வில் லட்சக்கணகில் பணத்தைப் பெற்றுக் கொண்டு வேவை வாங்கித் தருவதாகக் கூறியிருந்த இடைத்தரகர்கள், அந்த பணத்தை அந்தந்த ஆசிரியர்களிடமே திரும்ப ஒப்படைத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகம் முழுவதும் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய வேண்டுமென பட்டதாரி ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் வெளியிடப்பட்ட ஆசிரியர் தேர்வுப் பட்டியலில் குறைந்த மதிப்பெண் பெற்ற பலரது பெயர்கள் இடம் பெற்றுள்ளதாகச் குற்றசாட்டு வெளியானது.
மேலும் பணி நியமன உத்தரவு பெற்றுத்தருவதாகக் கூறி பலர் இடைத்தரகர்களாக செயல்பட்டு வருகின்றனர் என்று ஆசிரியர்கள் தரப்பில் புகார் கூறப்பட்டது,
சேலத்தைச் சேர்ந்த ஒருவரும், கோவையில் உள்ள ஒருவரும் இடைத்தரகர்களாக செயல்படுகின்றனர் என கலை ஆசிரியர்கள் நலச் சங்கம் சார்பில் சென்னையில் காவல் துறை, மாவட்ட ஆசியரகம், லஞ்ச ஒழிப்புத் துறை ஆகியவற்றில் கடந்த 15 ம் தேதி புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து அன்றைய தினமே தி இந்து வில் செய்தி வெளியானது.
இதைத் தொடர்ந்து இணையதளங்கள் மற்றும் நாளிதழ்களில் இந்த செய்தி வெளியானது. இந் நிலையில் கடந்த 17ம் தேதி முதல் ஆசிரியக்ளிடம் இருந்து பெற்ற பணத்தை இடைத்தரகர்கள் திருப்பி ஒப்படைத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பணத்தை கொடுத்துவிட்டு தங்களது தவல்களை வெளியே கூறக்கூடாது. எங்களுக்கும், உங்களுக்கும் சம்பந்தமில்லை என இடைத்தரகர்கள் எழுதி வாங்கிச் செல்கின்றனர்.
இது குறித்து ஈரோட்டைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் கூறியதாவது
தகுதி தேர்வில் நான் பெற்ற மதிப்பெண் 91, எனது மதிப்பெண் மிகக் குறைவாகவே இருந்தது. மார்ச் முதல் வாரம் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி ரூ 10 இலட்சம் பெற்றனர். ஆனால், செப் 17ல் எனது முழு பணத்தையும் திருப்பித் தந்துவிட்டனர்,
இவ்வளவு நாள் வேலை கிடைக்கும் என நம்பிக்கையில் இருந்தேன். பணத்தைக் கொடுக்கும் போது, எங்களுக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமிலை என எழுதி கொடுக்க வற்புறுத்தினனர் என்றார்.
நாமக்கல் மாவட்டம் வாழப்பாடியில் ரூ 65 லட்சம் வரை இடைத்தரகர்கள் திருப்பிக் கொடுத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது
இடைத்தரகர்கள் கொடுத்த காசோலையும் வெளியாகியுள்ளது.
No comments:
Post a Comment