Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Thursday, 26 December 2013

தலைமையாசிரியை -அங்கன்வாடி பொறுப்பாளர் தகராறு : பள்ளி கதவை மூடியதால் வெயில் வாடிய குழந்தைகள்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளம் அருகே பிடானேரியில் உள்ள துவக்க பள்ளி தலைமயாசிரியர், அங்கன்வாடி பொறுப்பாளர் தகராறு காரணமாக பள்ளி கேட் மூடப்பட்டதால், காலையிலிருந்து மாலை வரை பள்ளிக்கு வெளியே குழந்தைகள் வெயிலில் தவித்துக்கொண்டிருந்தன. 
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளம் அருகே பிடானேரியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இங்கு தலைமயாசிரியராக நாசரேத்தை சேர்ந்த அனபாய் செல்வம் பணியாற்றி வருகிறார். இதே பள்ளியில் இவரது கணவர் பிரபாகரன் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த பள்ளிக்கு அருகே அங்கன்வாடி மையம் உள்ளது. இங்கு பொறுப்பாளராக பிடானேரியை சேர்ந்த சரஸ்வதி பணியாற்றி வருகிறார். பள்ளியும், அங்கன்வாடியும் அருகே இருப்பதால், இரு கட்டடங்களுக்கும் சேர்த்து தற்போது சுற்றுச்சுவர் கட்டப்பட்டு கதவு போடப்பட்டுள்ளது. மெயின் கதவு பூட்டப்பட்டு, இரு சாவியில் ஒன்று துவக்கப்பள்ளி தலைமையாசிரியையிடமும், மற்றொரு சாவி அங்கன்வாடி பொறுப்பாளரிடமும் இருந்தது. 
புது பூட்டு: அங்கன்வாடி பொறுப்பாளர் சரஸ்வதிக்கும், தலைமையாசிரியை அனபாய் செல்வத்திற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த தலைமையாசிரியை கட்டடத்தின் மெயின் கேட்டிற்கு புதிய பூட்டு போட்டு விட்டு, கடந்த 23ம் தேதி சென்று விட்டார். கிறிஸ்துமஸ் பண்டிகையால் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. 24ம் தேதி காலையில் கதவை திறக்க வந்த சரஸ்வதி பள்ளி கேட்டில் புதிய பூட்டு இருந்ததால், அங்கன்வாடி மையத்திற்கு செல்ல முடியவில்லை. அங்கன்வாடி குழந்தைகளுக்கு விடுமுறை இல்லாததால், பள்ளிக்கு வந்தனர். கேட் மூடப்பட்டிருந்ததால் குழந்தைகள் வெயிலில் பள்ளிக்கு வெளியே அமர்ந்து விட்டனர். 

சாவியை தர மறுப்பு: அங்கன்வாடி மையத்திற்கு குழந்தைகள் செல்ல முடியாத நிலை இருந்ததால், சம்பந்தப்பட்ட தலைமையாசிரியை அனபாய்செல்வத்தை கிராம மக்கள் தொடர்பு கொண்டனர். அவர் சாவியை தர மறுத்துவிட்டார். இது குறித்து மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்க மாநில அமைப்பாளர் இசக்கி முத்து இது குறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார். 

பள்ளி முன்பு சமையல்: பள்ளி கேட் மூடப்பட்டதால் கிராம மக்கள் தற்காலிகமாக பள்ளிக்கு வெளியே அடுப்பு அமைத்து சமையல் செய்து, அங்கன்வாடி குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கினர். அதிகாரிகள் சமரசம்: சம்பவம் அறிந்த வருவாய் ஆய்வாளர் அகிலா, கிராம நிர்வாக அலுவலர் ராஜி, வட்டார குழந்தைகள் நலத்திட்ட அலுவலர் சாரதா ஆகியோர் தலைமையாசிரியையிடம் பள்ளி கேட் சாவியை வழங்கும் படி கேட்டனர். தலைமையாசிரியை அனபாய் செல்வம் சாவியை தர மறுத்து விட்டார். கிராம மக்கள் பள்ளி முன் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர். இதனை தொடர்ந்து நேற்று முன் தினம் மாலை 5 மணிக்குத்தான் பள்ளி கேட் சாவியை அனபாய் செல்வம் வழங்கினார். 

நடவடிக்கை எடுப்பார்களா: இது போன்ற தனது விருப்பு வெறுப்புக்காக பள்ளி கேட்சாவியை எடுத்து சென்ற அனபாய் செல்வம் மீது கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என அந்த கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


No comments:

Post a Comment