Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Tuesday, 31 December 2013

புத்தாண்டு வாழ்த்து கூறுவதாக கேலி, கிண்டல் செய்தால் காப்பு

குடிபோதையில் வாகனம் ஓட்டினாலும், புத்தாண்டு கொண்டாடம் என்ற பெயரில், பெண்களை கேலி, கிண்டல் செய்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, போலீசார் எச்சரித்து உள்ளனர். குடிபோதையில் வாகனம் ஓட்டுவோர், அதிவேகமாக செல்வோர், இரண்டு பேருக்கு மேல் இருசக்கர வாகனத்தில் சென்றால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். புத்தாண்டு வாழ்த்து கூறுவதாக, பெண்களை கேலி, கிண்டல் செய்தல், கையைப் பிடித்து இழுத்தல் கூடாது; மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் கூடும் இடங்களில் பட்டாசு வெடிக்கக்கூடாது. இழிவான முறையில் கேலி, கிண்டல் செய்வோர், வர்ண பொடிகள் தூவுதல், வர்ணம் கலந்த தண்ணீர் அடித்தல் போன்றவற்றை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். கடலில் விளையாடுதல், படகுகளில் ஏறி கடலுக்குள் செல்வது கூடாது. இருசக்கர வாகனங்களில், ரேஸ்களில் ஈடுபடுவதை கண்காணிக்க, தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இவை, போலீசாரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


போக்குவரத்து மாற்றம் : இரவு, 8:00 மணிக்கு மேல், கடற்கரை உட்புற சாலைக்குள் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. உட்புற சாலையில் உள்ள வாகனங்கள், இரவு, 8:00 மணி வரை ?வளியே அனுமதிக்கப்படும்.காந்தி சிலை முதல், போர் நினைவுச் சின்னம் வரை, இன்று இரவு, 8:00 முதல், நாளை அதிகாலை, 2:00 மணி வரை வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படும். எந்த வாகனமும் கடற்கரை சாலையில் இருந்து, காமராஜர் சாலைக்கு அனுமதிக்கப்படாது. ராஜாஜி சாலை, எலியட்ஸ் கடற்கரை சாலையிலும் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.


திருச்சி: ஹோட்டல்களில் இன்று இரவு புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு மாநகர போலீஸ் தடை விதித்துள்ளது.
இதுகுறித்து திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலக செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:
புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் இன்று இரவு, இளைஞர்கள் குடி போதையில் பைக்குகளில், அதிக எண்ணிக்கையில் அமர்ந்து கொண்டு படுவேகமாக சென்று மக்களுக்கு இடையூறு செய்தல், பெண்களிடம் அத்துமீறி நடப்பது போன்ற சம்பவங்களில் ஈடுபடக்கூடாது.
குடி போதையில் டூவீலர் ஓட்டுபவர்கள், இரண்டு நபர்களுக்கு மேல் செல்பவர்கள், அதிவேகமாக ஓட்டுபவர்கள் ஆகியோரை தடுக்க, போலீஸார் பல குழுக்களாக பிரிந்து மாநகர் முழுவதும் வாகன தணிக்கையில் ஈடுபடவுள்ளனர். இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
மாநகரில் அனைத்து போலீஸ் ஸ்டேஷன் எல்லைகளிலும், போலீஸார் தீவிர ரோந்து பணியில் ஈடுபடவுள்ளனர். புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் அனைத்து ஹோட்டல்களிலும் நடனங்கள் நடத்துவது, ஹோட்டலுக்கு வெளியில் பார்ட்டி என்ற பெயரில் கும்மாளம் அடிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது. பொது இடங்களில் புத்தாண்டு வாழ்த்து கூறுவதாக சொல்லி பெண்களை கேலி, இழிவு படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். மக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக வாகனங்களை நிறுத்தி, அநாகரீக முறையில் மது அருந்துதல், வெடி வெடித்தல் போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் அனைத்து ஹிந்து கோவில்கள், முஸ்லிம் மசூதிகள், கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு போதுமான பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் யாராவது மக்களுக்கு இடையூறு செய்தால், போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு, 100 என்ற டெலிஃபோனில் எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

No comments:

Post a Comment