Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Sunday, 29 December 2013

மெல்ல கற்கும் மாணவர்களை தேர்ச்சிபெற வைக்க வேண்டும்: பள்ளிக் கல்வி இணை இயக்குநர்

பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி படிக்கும் மாணவர்களில் மெல்ல கற்பவர்களைக் கண்டறிந்து, சிறப்புப் பயிற்சியை அளித்து, தேர்ச்சி பெற வைக்கும் வகையில் ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டும் என்றார்  பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (இடைநிலை) எம். பழனிச்சாமி.
திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற  பள்ளித் தலைமையாசிரியர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று, மேலும் அவர் பேசியது:
பிளஸ்2, எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க வேண்டும். மாவட்ட மற்றும் மாநில அளவில் சிறப்பிடங்களைப் பெற வேண்டும். அரையாண்டுத் தேர்வு முடிந்த பின்னர், தேர்வில்  மாணவ, மாணவிகள் பெறும் மதிப்பெண்களைக் கொண்டு ஆய்வு செய்ய வேண்டும்.
தேர்வில் தோல்வியடையும் மாணவர்களைப் பற்றிய விவரங்களைக் கண்டறிந்து,  அவர்களுக்கு எளிதான பாடங்களைக் கொண்டு அடிக்கடித் தேர்வு நடத்த வேண்டும்.
வகுப்பு ஆசிரியர், பாடஆசிரியர் மெல்ல கற்கும் மாணவர்களையும் கண்டறிந்து  அவர்களை தேர்ச்சி பெறுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.  அதுபோல, ஒவ்வொரு வகுப்பறையிலும் அதிக மதிப்பெண்களைப் பெற்று சிறப்பிடம் பெறும் மாணவ, மாணவிகளைக் கண்டறிந்து, அவர்கள் மாநில அளவில் சிறப்பிடம் பெறுவதற்கான பணிகளை மேற்கொள்வதுடன், அவர்களுக்குச் சிறப்புப் பயிற்சியையும் அளிக்க வேண்டும்.
ஒவ்வொரு 15 நாள்களுக்கு ஒருமுறையும் பாட ஆசிரியர்கள், வகுப்பாசிரியர்களுடன் பள்ளித் தலைமையாசிரியர்கள் மாணவர்களின் கல்வி நிலை குறித்து கலந்து ஆலோசிக்க வேண்டும். இதுபோல பெற்றோரையும் அழைத்து பேச வேண்டும் என்றார் பழனிச்சாமி.
கூட்டத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கே. செல்வக்குமார் மற்றும் பள்ளித் தலைமையாசிரியர்கள் பங்கேற்றனர்

No comments:

Post a Comment